தேம்ஸ் முதல் கங்கை வரை
FROM THAMES TO GANGES
பூமி ஞானசூரியன் - செல்பேசி: +918526195370, மின்னஞ்சல்: gsbahavan@gmail.com
இந்தியாவும் நீர் ஆதாரங்கள்
குறித்து ஆக்க பூர்வமாக யோசிக்கத்
தொடங்கி உள்ளது. மகிழ்ச்சி. கங்கை நீரை
சுத்திகரிக்கப் போகிறார்கள். மகிழ்ச்சி
அதனை மறு சுழற்சி செய்யப் போகிறார்கள்.
மகிழ்ச்சி. சுத்தம் செய்த கங்கைநீரை
தொழிற்சாலைகளுக்கு வழங்க
தீர்மானித்திருக்றார்கள். மகிழ்ச்சி.
இந்திய நதிகளில் புனிதமான நதி கங்கை.
கங்கையில் குளித்து வந்தால் எல்லா
பாவங்களும் தொலையும் என்பது ஐதீகம்.
கங்கை தீர்த்தம் தலையில் பட்டால் கூட
அனைத்து தோஷமும் நீங்கும். கங்கை
பவித்ரமானது. கங்கை புராண
இதிகாசங்களோடு தொடர்புடையது.
இந்திய கலாச்சாரத்துடன் ஒன்றிப்போனது
கங்கை. ‘கங்கை நதிப்புறத்து
கோதுமைப் பண்டம்’ என பாரதி பாடிய கங்கை.
ஒருநாள் வலைத்தளத்தில் ஆறுகள்
பற்றிய செய்திகளுக்காக மேய்ந்துக்
கொண்டிருக்கும்போது ஒரு செய்தி எனக்கு
அதிர்ச்சி அளித்தது. உலகில் மாசு அடைந்த
நதிகள் பற்றி பார்த்தேன். அதைப் பார்த்ததும்;
மனசு வலித்தது. மாசு அடைந்த நதிகளில்
முதல் நிலை வகித்தது கங்கை.
அடுத்து உலகில் மிகவும் சுத்தமான நதி எது ?
துழாவினேன். முதல் ஆறு எது என்று பார்த்தேன்.
லண்டன் நகரின் ‘தேம்ஸ் என்றிருந்தது.
சமீபத்தில் யூகே சென்ற போது
பலமுறை தேம்ஸ்’ஐ சுற்றிவர வாய்ப்பு
கிட்டியது. நகரத்தின் நடுவே ஓடும்
ஆறுபோல இல்லைதான். புதிதாய்
ஆற்றில் வடிந்த நீர் போல, செம்மண்
நிறத்தில் ஓடிக்கொண்டிருந்தது
தேம்ஸ். வலைத்தள செய்தி
உண்மை தான்.
துழாவினேன். முதல் ஆறு எது என்று பார்த்தேன்.
லண்டன் நகரின் ‘தேம்ஸ் என்றிருந்தது.
சமீபத்தில் யூகே சென்ற போது
பலமுறை தேம்ஸ்’ஐ சுற்றிவர வாய்ப்பு
கிட்டியது. நகரத்தின் நடுவே ஓடும்
ஆறுபோல இல்லைதான். புதிதாய்
ஆற்றில் வடிந்த நீர் போல, செம்மண்
நிறத்தில் ஓடிக்கொண்டிருந்தது
தேம்ஸ். வலைத்தள செய்தி
உண்மை தான்.
இதோ இந்தியாவும்
கோதாவில் இறங்கிவிட்டது. கங்கை
நதிக் கரையிலிருந்து நீர் மறு சுழற்சி
மையங்களை அமைக்கப்போகிறது இந்திய
அரசு. மறு சுழற்சி செய்யப்பட்ட நீரை
பொது நிறுவனங்கள் மற்றும்
தொழிற் கூடங்களுக்கு வழங்க
உள்ளது. 13 ரயில்நிலையங்கள்,
மதுரா ரிபைனரி, 13 பவர் புராஜெக்ட்ஸ்,
ஆகியவை இதில் அடங்கும்.
இந்த செய்தியை ரோட்
டிரான்ஸ்போர்ட், ஹைவேய்ஸ்
அண்ட் ஷிப்பிங் துறைக்கான
அமைச்சர் அரசு சார்பில் (13 .3. 2016 )
அறிவித்துள்ளார்.
இதுகூட நமது, தண்ணீர்
தீர்ப்பதற்கானது அல்ல.
கங்கையை சுத்தப்படுத்தும் திட்டம்; கங்கை நதி நீரின் மாசுவை நீக்கும் திட்டம;. இது சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான திட்டம்; இப்படித்தான் அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment