பக்கிங்காம் கால்வாய் பஞ்சநிவாரணப்பணி தந்த நீர்வழிப்போக்குவரத்து
BUCKINGAM CANAL
WATERWAYS MADE OFFAMINERELIFE FUNDS
‘தாது வருஷ பஞ்சம்’ என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் அதுபற்றி வேறு விவரம் எனக்குத் தெரியாது. அதனைத் தாது வருஷக் கருப்பு என்றும் சொல்லுகி றார்கள்.
1876 மற்றும் 1877 ஆம் ஆண்டுகளில்தான் இதே பஞ்சம் ஏற்பட்டது. அதுமுதல் 1906 ஆம் ஆண்டுவரை 23 பஞ்சங்கள் மக்களை காவு கொண்டதாக சொல்கிறார்கள். இதில் தாது வருஷ பஞ்சம் ஐந்தாவது பஞ்சம்.
கிராமத்து மக்கள் தங்கள் வீடு வாசல்களை விட்டுவிட்டு மூட்டை முடிச்சுக்களோடு சென்னை நகரில் வந்து குவிந்தார்கள். ஆனால் சென்னையில் மக்கள் பசி பட்டினி என்று துடித்து உயிர்விட்ட காட்சிகள் கல் நெஞசத்தையும் கரைத்துவிடும் என்று எழுதுகிறார் ‘சென்னை மாநகரம’; புத்தக ஆசிரியர்.
இந்தக் காலக்கட்டத்தில் பஞ்ச நிவாரண வேலையாக கிழக்கு கரையோரக் கால்வாய் (நுயளவ உழயளவ உயயெட) வெட்டப் பட்டது. அதுதான் 261 மைல் நீளமானதாக வடக்கே பெத்த கஞ்சம் என்ற இடம் முதல் தெற்கே மரக்காணம் வரை பக்கிங்காம் கால்வாயாக மாறியது. இதன் வேலை 1801 ஆம் ஆண்டு தொடங்கி 1876 முதல் 1878 வரை அதற்கு ஆன செலவு 55 லட்ச ரூபாய். பஞ்ச காலத்தில் இதற்கென 30 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டது. அதில் மக்களுக்கு கூலியாக வழங்கப்பட்டது மட்டும் 22 லடசம் ரூபாய். பக்கிங்காம் என்ற வெள்ளைக்காரர் ஆளுநராக இருந்த போது வெட்டப்பட்டதால் இது பக்கிங்காம் கால்வாய் ஆனது.
கோதாவரி கழிமுகத்திற்கும், ஆற்றுமுகத்திற்கும், கிருஷ்ணா பக்கிங்காம் கால்வாய்க்கும் இடையே படகுப் போக்குவரத்து நடந்து வந்தது. இதனால் பயணிகள் மரக்காணத்திலிருந்து காஞ்சிபுரத்திற்கு நீர்வழித்தடத்தில் பயணம் செய்ய முடிந்தது. சென்னை நகரில் இந்த கால்வாய் வடக்கு ஆற்றுடன், கூவம் ஆற்றில் கலந்து சேப்பாக்கத்தின் இடையே அடையாற்றை அடைகிறது.
இதன் அகலம் 30 அடியும் ஆழம் 3 முதல் 4 அடியும் இருக்குமாறு வெட்டப்பட்டது. இந்த கால்வாய் சாமான்களை படகின்மூலம் ஏற்றிச்செல்லப் பயன்பட்டது. அரிசி கிளிஞ்சல் உப்பு, மீன், விறகு போன்றவற்றை படகுகளில் ஏற்றிச் சென்றனர். தென்புறம் திருப்போரூர், மாமல்லபுரம், சதுரங்கப:பட்டினம் போன்ற ஊர்களுக்கும், வலப்புறம் மூலக்கொத்தலம், எண்ணூர், பழவேற்காடு, கரிமணல், ஸ்ரீஹரிகோட்டை, போன்ற இடங்களுக்கும் படகுகள் மூலம் மக்கள் பயணம் செய்தனர்;.
ஒருபக்கம் கெட்டது நடந்தால் இன்னொரு பக்கம் நல்லது நடக்கும் என்பார்கள். அதுபோல ஐந்தாவது பஞ்ச காலத்தில்தான் பக்கிங்காம் கால்வாய் வெட்டப்பட்டது எனப் பார்த்தோம் .
தொடர்ச்சியான மழையின்மை, அதனால் ஏற்படும் வறட்சி, விவசாயம் பொய்த்துப் போவது இதுதான் எந்த ஒரு பஞ்சத்திற்கும் காரணமாக இருந்துள்ளது..
1646 - 47 முதல் 1906 ஆம் ஆண்டு முடிய 22 பஞ்சங்கள் ஏற்பட்டதாக சொல்லுகிறார்கள். அதில், முதலாவது பஞ்சம் தோன்றியது 1646 - 47 ம் ஆண்டில். 1647 ஜனவரி வரை 3,000 பேரும், பழவேற்காட்டில் 15000 பேரும், சாந்தோம் பகுதியில் அதற்கு சமமான நபர்களும் இந்தப்பஞ்சத்திற்கு பலி ஆயினர்.
பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370. மின்னஞ்சல்:gsbahavan@gmail.com
No comments:
Post a Comment