வங்காளப் பஞ்சம்
மழை குறைவினால்
மட்டும் வரவில்லை
மழை குறைவினால்
மட்டும் வரவில்லை
BENGAL FAMINE
CAUSED BY
IMPROPER
DATA
புகழ்மிக்க பொருளாதார நிபுணர் அமர்த்தியாசென் தனது பொருளாதார ஞானத்திற்காக நோபல்பரிசு பெற்றவர். 1943 ஆம் ஆண்டு வங்காள பஞ்சம்பற்றி ஆய்வு செய்த அமர்த்தியாசென், அரசிடம் சரியான புள்ளிவிவரம் இல்லாததுதான், வங்காள பஞ்சத்தில் அதிகமான உயிரிழப்புக்கு காரணம் என்று நிரூபித்துள்ளார்.
மேற்கு வங்காளம், ஒடிசா, பீவறார், பங்களாதேஷ் ஆகியவை சேர்ந்ததுதான் அன்றைய வங்காளம்.
அன்றைய வங்காளத்தின் மொத்த மக்கள் தொகை 60.3 மில்லியன்.
1943 ஆம் ஆண்டு வங்காள பஞ்சத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1.5 முதல் 4 மில்லியன் என்கிறார்கள். சிலர் 5 மில்லியன் என்கிறார்கள். சிலர் 3 மில்லியன் என குறிப்பிடுகிறர்ர்கள். அப்படி பார்த்தால் மொத்த மக்கள் தொகையில் பாதிப்பேர் பஞ்சத்தில் மரணமடைந்திருக்கிறார்கள்.
ஒரு குடும்பத்தில் 6 பேர் இருந்தால் அதில் 3 பேர் உயிரிழந்திருப்பார்கள்.
1941 ஆம் ஆண்டு உணவு உற்பத்தியைக் காட்டிலும் 1943 ஆம் ஆண்டு உணவு உற்பத்தி அதிகம் என்று ஆதாரப்பூர்வமாக கூறுகிறார் அமர்த்தியா சென்.
இது எப்படி நிகழ்ந்தது என்று பார்க்கலாம். இரண்டாம் உலகப் போர் தொடங்கிய போதே உணவுத்தட்டுப்பாடு இந்தியாவில் பரவலாக இருந்தது.
1941 ஆம் ஆண்டில் பஞ்சம் உருவாகும் சூழல் ஏற்பட்டது. அரசு விரைந்து எடுத்த நடவடிக்கை. உயிர்ச் சேதங்களைத் தடுத்தது. ஆனால் அது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும் தொடரவில்லை.
1941 ஆம் ஆண்டில் பஞ்சம் உருவாகும் சூழல் ஏற்பட்டது. அரசு விரைந்து எடுத்த நடவடிக்கை. உயிர்ச் சேதங்களைத் தடுத்தது. ஆனால் அது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும் தொடரவில்லை.
ஆனால் 1942 ல் அக்டோபர் குளிர்கால பயிர்களை புயல் கடுமையாக பாதித்தது.
கொந்தளிக்கும் கடலலைகள், வெகுண்டெழுந்த வெள்ளம், மூர்க்கமாக வீசிய காற்று அனைத்தும் சேர்ந்து 4050 சதுர மைல் பரப்பில் இருந்த உணவுப் பயிர்களையும் 1,90,000. கால்நடைகளையும் 14,500 மனித உயிர்களையும் காவு கொண்டது.
அத்துடன் 2.5 மில்லியன் வீடுகளை சின்னாபின்ன மாக்கியது. ‘பட்டகாலிலே படும்; கெட்ட குடியே கெடும்’ என்பது போல பிரவுன் ஸ்பாட் என்ற இலைப்புள்ளிநோய் நெல் பயிரைத் தாக்கி 50 முதல் 95 சதவீத பயிர்களை அழித்தது.
இயற்கை சீற்றத்தினால் அழிந்ததைவிட இந்த இலைப்புள்ளி நோயின் சீற்றத்தினால் ஏற்பட்ட இழப்பு அதிகம் என்கிறார்கள் நிபுணர்கள். ‘வெறல்மின்தோஸ்போரியம் ஒரைசே’ என்பது இந்த நோய் பரப்பும் பூசணத்தின் அறிவியல் பெயர்.
கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் அடித்தட்டில் வசிக்கிற மக்கள் சட்டிப் பானைகளிலும், குதிர்களிலும், கொஞ்சநஞ்சமாய் சேமித்து வைத்திருந்த தானியங்கள், அடித்த மழையிலும், புரண்டோடிய வெள்ளத்திலும், ஒரு மணியும் மீதம் இல்லாமல் அழிந்து ஒழிந்து போனது.
அந்தக்காலக் கட்டத்தில் சுமார் பத்து ஆண்டு காலமாக வங்காளம் உபரியான தனது அரிசித் தேவைக்கு பர்மாவின் இறக்குமதியையே நம்பியிருந்தது.
அப்போது உலக நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதில் முக்கிய நாடாக இருந்தது பர்மா.
இந்த காலக் கடடத்தில் சிங்கப்பூரில் நடந்த போரில் பிரிட்டிஷ் படையை துவம்சம் செய்தது ஜப்பான். அத்தோடு நில்லாமல் தனது படைகளை பர்மாவிற்கு கொண்டுபோய் இறக்கியது.
1942ஆம் ஆண்டு மார்ச்சு மாசம் ஜப்பானியப்படை பர்மாவில் இறங்கி டேரா போட்டது.
இந்தியா சிலோன் போன்ற நாடுகள் என்ன செய்வது என்று புரியாமல் தலையை பிய்த்துக் கொண்டன.
நல்ல நாளிலேயே கிட்டத்தட்ட 15 சதவீத அரிசி இந்தியாவிற்கு பர்மாவிலிருந்துதான் வரும்.
இந்த காலக்கட்டத்தில் கொச்சின், திருவனந்தபுரம், மும்பை, மெட்ராஸ், ஒரிஸா, வங்காளம் போன்ற பகுதிகளில் பஞ்சம் குரூரமான விதைகளை ஊன்றியது. ஏற்பட இருக்கும் பஞ்சத்தின் உண்மையான அளவினை அறிவதற்கான புள்ளி விவரங்கள் ஆட்சியாளர்களிடம் இல்லை.
மிகவும் பிரமாண்டமான உயிரிழப்பைத் தடுத்து நிறுத்துவதற்கான வழிவகைகளை செய்ய முடியாமல் போனதற்கு காரணம் இதுதான் என்கிறார் அமிர்த்தியா சென்.
அதே காலகட்டத்தில் அரசின் பொருப்பில் இருந்த அதிகாரிகளுக்கும், புள்ளியல்துறை வல்லுநர்களுக்கும் இந்த உண்மை அப்போதே தெரியும் என்கிறார் சென்.
இங்கு வசிக்கும் மக்கள் எத்தனை பேர் ? இங்கிருந்து எத்தனை பிரிட்டிஷ் ராணுவத்தினருக்கு உணவு அனுப்ப வேண்டும் ? இப்படி எந்த புள்ளி விவரமும் அரசு புள்ளிகளிடமும் இல்லை. அரசியல் புள்ளிகளிடமும் இல்லை.
புள்ளி விவரங்கள் என்ற பெயரில் அவர்களிடம் இருந்தவை எல்லாம் அள்ளுப்புள்ளி கணக்குகள்தான்.
மழை இல்லாததாலா பஞ்சம் வந்தது ? இல்லை என்கிறார் அமர்த்தியாசென்.
பூமி ஞானசூரியன் - 8526195370
************************************************************************************
துளியின்மை ஞாலத்திற் செற்றென்றே வேந்தன்
அனியின்மை வாழு முயிர்க்கு – குறள் 557
அதிகாரம்: 56, கொடுங்கோன்மை
முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி
ஓல்லாது வானம் பெயல் - குறள் 559
அதிகாரம்: 56, கொடுங்கோன்மை
No comments:
Post a Comment