Monday, July 31, 2017

ஆர்கானியா என்னும் ஆட்டுத்தழை மரம் மற்றும் அழகு சாதன மரம் - ARGANIA - COSMETIC TREE OF MOROCO



                             
ஆர்கானியா  என்னும் ஆட்டுத்தழை மரம் மற்றும் அழகு சாதன மரம்
ARGANIA - COSMETIC TREE OF MOROCO
                  தாவரவியல் பெயர்:  ஆர்கானியா ஸ்பினோசா (ARGANIA SPINOSA )
                               தாவரக் குடும்பம்: சப்போட்டேசியே  (SAPOTACEAE)
 `````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
ஆர்கன் எண்ணெய் உங்கள் சருமத்தைப் பாதுகாக்கும்; உங்கள் தலை முடியை  கன்டிஷன் செய்யும்; உதிராமல் பராமரிக்கும்; உங்கள்விரல் நகங்களை அழகாக பராமரிக்கும்;  வயது  எத்தனை ஆனாலும்  பரவாயில்லை 'ஆர்கனை"  தடவுங்கள்; உங்கள் உடல் தோல்  சுருங்காது; முகத்தில் தோன்றும் முகப்பருக்கள் கூட யோசனை செய்யும்; சோரியாசிஸ், எக்சிமா  தோல்  சம்மந்தமான நோய்கள் கூட தொலைதூரத்தில் நிற்கும்; இப்படியாக 'ஆர்கன்" எண்ணெய்க்கான வியாபார விளம்பரம் வியாசர்பாடிவரை  நீட்டி முழக்குகிறது.

இந்த ஆர்கானியா  மரம் ஒரு ஆட்டுத் தீவனமரம்.  மொரோக்கோ நாட்டு மரம்;  இது வட ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்று; முஸ்லிம்கள் அரசாளும் நாடு; 

மரங்கள் 8 முதல் 10  மீட்டருக்கு மேல் வளராத குட்டை மரங்கள்; இதன் கிளைகள் தரையில் தாழப் பரவி வளரும்.  அதனால் ஆடுகள், இந்த மரங்களில் ஏறி நின்று மேய  அனுமதிக்கும் மரம் அநேகமாய் ஆர்கானியா மரம் மட்டுமாகத்தான் இருக்கும்; இதன் வயது  200 ஆண்டுகள்.

மரத்தின் உயரம் இருபது இருபத்தைந்து  அடியாக இருந்தாலும், கிளைகள்; 23 அடிக்கு பரவி இருப்பது ஆச்சரியமான செய்தி;  ஒரே மரத்தில் பத்திருபது  ஆடுகள் கூட ஏறி மேய்வதற்கு  விஸ்தாரமாக வளர்ந்து வளைந்து நிற்கிறது ஆர்கானியா. 

இதன் கொட்டையிலிருந்து எடுக்கும் எண்ணெய்க்கு ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், ஏகப்பட்ட கிராக்கி; அவ்வளவு  ஏன் ..?  ஆர்கன் எண்ணெய்  சென்னை அண்ணாநகரில்கூட கிடைக்கிறது என்கிறார்கள்; ஆன்லைனில் ஆர்டர் கொடுத்தால், வீட்டிலேயே கூட கொண்டுவந்து சப்ளை  செய்வார்கள். 

ஆர்கானியா ஒரு பாலைவனப்பயிர்; இஸ்ரேலின் நெகேவ் பாலைவனத்தில் கூட வளர்கிறது இப்போது இருக்கும் வறட்சியான சூழலில்  மொராக்கோ’வைவிட தமிழ்நாட்டில் நன்றாக வளரும்; குறிப்பாக அரேபிய  மணல் பிரதேசங்களில்  ஆர்கானியாவை நட்டு வளர்க்கலாம்;  வளர்க்க  அற்புதமான  பிரியாணி மரம் ! 

ஆர்கானியா எண்ணெய் உற்பத்தி செய்வதில் மொரோக்கோவின்  பெண்கள்  கூட்டுறவு  அமைப்புக்கள் தீவிரமாக ஈடுபட்டு  வருகின்றன. 

ஆழமான  வேர் அமைப்பு கொண்ட இந்த மரம் மண் அரிப்பைத் தடுக்கிறது; பாலைவனத்தில் வளரும் இந்த மரங்கள்  பாலைவனம் மேலும் பரவாமல் தடுக்க உதவியாக உள்ளது;  அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு  வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்கிறது;

பாலைவனப் பகுதியின உயிர்ச்  சூழலை  மேம்படுத்த உதவுவதால்; யுனெஸ்கோ ஆர்கானியா மரத்தை  வேல்ட்  ஹெரிட்டேஜ் (WORLD HERRITAGE) பட்டியலில்  சேர்த்துள்ளது.

அழகுசாதனப் பொருட்களும்,  மருத்துவ பொருட்களும்  தயாரிக்க, இந்த எண்ணெய் உதவுவதால், பலநூறு  ஆண்டுகளாக மொராக்கோ பெண்கள் ஆர்கானியா எண்ணெய் தயாரிப்பில் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இஸ்ரேல் நாட்டில் ஒரு லிட்டர் ஆலிவ்எண்ணெய் விலை 4 யு.எஸ். டாலர்; ஆனால் ஆர்கானியா எண்ணெய் விலை 43 யு.எஸ். டாலர்; கிட்டத் தட்ட 10 மடங்கு அதிகம்; அங்கு சுமார் 20000 ஆர்கானியா மரங்கள் உள்ளன.

வைட்டமின் ‘இ ’ அதிகம் இருப்பதால் இருதய நோய்களைக் குறைக்கும் சக்தி உடையது என்கிறார்கள்; அதுமட்டுமில்லாமல் ஆபூர்வமான, அழகு சாதனமாகப் பயன்படும் எண்ணெயும் கூட.

தார்ப் பாலைவனம்  இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயுள்ள இயற்கையாக அமைந்த எல்லை; இதன் மொத்தப் பரப்பு 2 லட்சம் சதுர கிலோ மீட்டர் ;  தார்ப் பாலைவனத்தின்  ஆண்டு சராசரி மழை 25 கி.மீ.;   அதிகபட்சமான  வெப்பநிலை  39  முதல்   50 டிகிரி சென்டிகிரேட். அங்கு கூட ஆர்கானியா அம்சமாய் வளர்கிறது.

பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370, மின்னஞ்சல்: gsbahavan@gmail.com


FOR FURTHER READINGON RELATED TOPICS

TREES OF OTHER 

COUNTRIES (37 TREES)


1. சிங்கப்பூர்செர்ரி  பல்லுயிர்  வாழ்வாதார   மரம் -      SINGAPORE  CHERRY  A BIODIVERSITY TREE – Date of Posting; 07.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/singapore-cherry-biodiversity-tree.html

2. மங்கிபஸ்சில் -  தென் அமெரிக்காவின்  அதிசய   மரம் -  MONKEY PUZZLE - TREE OF SOUTH AMERICA – Date of Posting; 06.02.2020  / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/monkey-puzzle-tree-of-south-america.html

3. டிரேவலர்ஸ் பாம் - ஒரு வித்தியாசமான அழகுமரம்  - TRAVELLER’S PALM -  IS A DIFFERENTLY  BEAUTIFUL TREE– Date of Posting; 03.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/travellers-palm-is-differently.html

4. ரபில்ட்டு  பேன்  பாம்  அங்கீகரிக்கப்பட்ட அழகு மரம்  RUFFLED  FAN PALM   ORNAMENTAL TREE – Date of Posting; 03.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/ruffled-fan-palm-ornamental-tree.html

5. பொகைன்வில்லா -  அலங்கார மரம் -  BOUGAINVILLA - DECORATIVE TREE – Date of Posting; 31.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/bougainvilla-decorative-tree.html


6. சிலோன் செர்ரி    மேஜை நாற்காலி மரம்  - CEYLON CHERRY TREE OF FURNITURES – Date of Posting; 20.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/ceylon-cherry-tree-of-furnitures.html


7. ஊறுகாய்க்கு உகந்த மரம் சிலோன்  ஆலிவ் மரம் - CEYLON OLIVE BEST  PICKLE TREE – Date of Posting; 18.01.2020/ https://vivasayapanchangam.blogspot.com/2020/01/ceylon-olive-best-pickle-tree.html

8. சைனிஸ்  பிரிஞ்சி  மரம் -  நேர்த்தியான  பூமரம்   -    FRINGE TREE -RAVING BEAUTY  OF CHINA – Date of Posting; 17.01.2020 https://vivasayapanchangam.blogspot.com/2020/01/fringe-tree-raving-beauty-of-china.html

9. நீலச்சடை செடார் மரம் - காற்றுத்தடை அழகு  மரம் - BLUE ATLAS CEDAR - SHELTER BELT TREE – Date of Posting; 11.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/blue-atlas-cedar-shelter-belt-tree.html

10. ஜப்பானிய மேப்பிள் -  இலையழகு மரம்   JAPANESE MAPPLE - DECORATIVE  FOLIAGE TREE – Date of Posting; 09.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/japanese-mapple-decorative-foliage-tree.html

11. சூபாபுல் - தீவன  மரங்களின்  ராஜா  - SUBABUL  - WORLD LEADER OF FODDER TREES – Date of Posting; 01.01.2020  / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/subabul-world-leader-of-fodder-trees.html

12. மல்பெரி -  விரியன் விஷத்தை  முறிக்கும்  பட்டு மரம்  MULBERRY - CAN CURE SNAKE BITE – Date of Posting; 01.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/mulberry-can-cure-snake-bite.html

13. பாட்டில்பனை -  கியூபா நாட்டின் அலங்கார மரம் -  BOTTLE PALM - CUBAN ORNAMENT  TREE – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/bottle-palm-cuban-ornament-tree.html


14. பேரீச்சம் -   ஈராக் நாட்டின்   வணிக மரம்    DATE PALM - A BUSINESS  TREE OF IRAQ – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/date-palm-business-tree-of-iraq.html

15. மரூலா மரம் - ஆப்ரிக்காவின்  சிறுதொழில் மரம்  - MARULA - ENTREPRENEUR  FRIENDLY AFRICAN  TREE  – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/marula-entrepreneur-friendly-african.html

16. ஜக்ரந்தா - பிரேசில் நாட்டின் அழகு பூமரம் -  JACRANDA - PLEASING BEAUTY OF BRAZIL – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/jacranda-tree.html


17. மாதுளை- ஈரான்  நாட்டு பிரபலமான  பழ மரம்  -  POME GRANATE -   FRUIT TREE OF  IRAN  – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/pome-granate-fruit-tree-of-iran.html


18. ஆப்ரிக்க  ட்யூலிப் ட்ரீ -  அழகிய பூமரம்    AFRICAN TULIP -  BEAUTIFUL FLOWERING TREE  – Date of Posting; 25.12.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/12/african-tulip-beautiful-flowering-tree.html


19. திவிதிவி   தோல் பதனிட உதவும்   மெக்சிகோ நாட்டு   மரம்  -   DIVI DIVI   TREE TANNERY OF  MEXICO – Date of Posting; 09.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/divi-divi-tree-tannery-of-mexico.html


20. கறிப்பலா - தெற்கு பசிபிக்கின்  காய்கறி மரம்  -  BREAD FRUIT -  A  VEGETABLE TREE  – Date of Posting; 09.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/bread-fruit-vegetable-tree.html


21. பேவோபாப் ட்ரீ -   ஆப்ரிக்காவின்   பலநோக்கு மரம்     BAO BAB -   MULTIUSE   TREE OF   AFRICA– Date of Posting; 07.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/bao-bab-multiuse-tree-of-africa.html


22. துரியன் குழந்தை  பாக்யம் தரும்  பழமரம் - DURIAN  FERTILITY  FRUIT TREE – Date of Posting; 31.07.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/07/durian-fertility-fruit-tree.html


23. டிராகன் பிளட் ட்ரீ -  சோகோத்ரா தீவின்   மருத்துவ மரம்  -   DRAGON BLOOD - HERBAL TREE OF SOCOTHRA  – Date of Posting; 08.02.2018 / https://vivasayapanchangam.blogspot.com/2018/02/dragon-blood-herbal-tree-of-socothra.html


24. பீமா என்னும்   திசுவளர்ப்பு  ராட்சச    மூங்கில் ரகம்  -   BEEMA -  HIGH BIOMASS  BAMBOO – Date of Posting; 21.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/beema-high-biomass-bamboo.html


25. மேய்டன்   ஹேர் ட்ரி -  அபூர்வ   மூலிகை   மரம்   - MAIDEN HAIR TREE CHINESE HERB  – Date of Posting; 18.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/maiden-hair-tree-chinese-herb.html


26. அம்ப்ரல்லா தார்ன் -  இஸ்ரேலியரின்  தெய்வீக மரம் -  UMBRELLA THORN A DIVINE TREE OF ISREALIS – Date of Posting; 15.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/royal-poinciana-red-beauty-of-madagaskar.html


27. கிளைரிசிடியா - பல பயன்தரும்  மெக்சிகோ நாட்டு  மரம்          -                             GLYRICIDIA    MULTIUSE    MEXICAN TREE – Date of Posting; 12.01.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/glyricidia-multiuse-mexican-tree.html


28. பாட்டில் பிரஷ்  ஆஸ்திரேலிய  அழகு மரம் - BOTTLE BRUSH AUSTRALIAN  BEAUTY – Date of Posting; 10.12.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/bottle-brush-australian-beauty.html

29. பாட்மின்டன் பால்  -   அழகூட்டும்   அலங்கார மரம்    BATMINTON BALL TREE OF     MALASIYA – Date of Posting; 12.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/batminton-ball-tree-of-malasiya.html


30. டெசெர்ட்  டேட் ட்ரீ - பாலைவன  மூலிகை மரம்    DESERT DATE  -    AFRICAN MEDICINAL  TREE – Date of Posting; 09.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/desert-date-african-medicinal-tree.html


31. சோழவேங்கை -        புனிதமான சீனமரம்   -  BISHOPWOOD -  SACRED TREE OF CHINA & TAIWAN – Date of Posting; 07.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/bishopwood-sacred-tree-of-china-taiwan.html


32. கலா பேஷ்  ட்ரி - திருவோட்டு சுரைக்காய் மரம்   CALABASH  -  WONDER TREE  – Date of Posting; 29.09.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/09/calabash-wonder-tree.html

33. தெபுபுயா -   சாலைகளை    அலங்கரிக்கும்   அழகு மரம்    TEBUBUYA - AVENUE  BEAUTY  OF MEXICO  – Date of Posting; 29.09.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/09/tebubuya-avenue-beauty-of-mexico.html

34. எல்லோ பெல்ஸ் - வீட்டுக்கு வீடு இருக்கும்  தென்அமெரிக்க மரம் -  YELLOW BELLS - BEAUTIFUL TREE   – Date of Posting; 28.09.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/09/yellow-bells-beautiful-tree.html

35. சாசேஜ் ட்ரீ - அழகு தரும் ஆப்ரிக்க  அடையாளம்  SAUSAGE TREE - AWESOME SYMBOL OF AFRICA – Date of Posting; 28.09.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/09/sausage-tree-awesome-symbol-of-africa.html

36. ஆர்கானியா  என்னும் ஆட்டுத்தழை மரம் மற்றும் அழகு சாதன மரம் - ARGANIA - COSMETIC TREE OF MOROCO – Date of Posting; 31.07.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/07/argania-cosmetic-tree-of-moroco.html

36. ராயல் பாய்ன்சியனா  -   சிவப்பழகு     மடகாஸ்கர் மரம்                                                         ROYAL POINCIANA -  RED BEAUTY OF MADAGASKAR – Date of Posting; 14.10.2017 / https://vivasayapanchangam.blogspot.com/2017/10/royal-poinciana-red-beauty-of-madagaskar.html

ஆத்தி பாரம்பரிய தமிழ் மரம் AATHI - TRADITIONAL TREE OF TAMILNADU



                                                                           
ஆத்தி  பாரம்பரிய 
தமிழ் மரம்

AATHI  - TRADITIONAL TREE OF TAMILNADU

             தாவரவியல் பெயர்:  பாஹினியா  வேரிகேட்டா (BAUHINIA VARIEGATA)
                       தாவரக் குடும்பம்: சிசால்ஃபீனியேசியே  (CESALPINIACEAE )
                         ஆங்கிலப் பெயர்: கேமல் ஃபூட் ட்ரீ (CAMAL FOOT TREE )
---------------------------------------------------------------------------------------------------------------------

இந்தியாவிலேயே அழகான, பத்து மரங்களுள் ஒன்று மந்தாரை என்னும் ஆத்தி ;  மிக அழகான பூக்களைத் தரும்  மரம்; இதில் இரண்டு வகைகள் உள்ளன; ஒன்று சிவப்பு நிற பூக்களைத் தரும்; இரண்டு  ஊதா நிறப் பூக்களைத் தரும்;   இதன் இலைகளின் தோற்றத்தை வைத்துத்தான் ஆங்கிலத்தில் இதனை ஒட்டகக்கால் மரம் என்கிறார்கள்;   

சங்ககாலத்தில் இதன் பெயர் ஆத்தி; அவ்வைக்கு பிடித்த பூமரம்; இல்லை என்றால் தனது நூலுக்கு ஆத்திச்சூடி என்று பெயர் வைத்திருப்பாரா ? ; தமிழ் கலாச்சாரத்துடன் நெருங்கிய தொடர்புடையது, மந்தாரை என்னும் ஆத்தி.

இமய மலையில் தொடங்கி, குமரிவரை  பரவலாக தென்படுகின்றன ஆத்தி மரங்கள்.

சுமார் 10 மீட்டர் உயரம் வளரும் நடுத்தரமான மரம் இது;  இதன் கிளைகள் பெரும்பாலும் மெல்லியதாக இருக்கும்;  பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதங்களில் பூக்கள் அதிகம் காணப்படும்;  நுனிக் கிளைகளில் பூக்கள் அடர்ந்திருக்கும்; இதன் இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாகும்; இதன் பூக்கள் தேனீக்களுக்கு உணவு தரும்;  வேளாண் கருவிகள் செய்ய மரம் தரும்; பூக்கள், பட்டை, வேர், அனைத்தும் மருந்து தரும்;  இதன் தழைகள்  10 முதல் 15 சதம் வரை புரதம் தரும்.

இதன் முற்றிய இலைகளில், டேனின் சத்து அதிகம் இருப்பதால், இதன் இளம் இலைகளையே கால்நடைகளுக்கு தீவனமாகப் பயன்படுத்துவர்;   சிலசமயம் கன்று ஈன்ற பின்னர், நச்சுக்கொடி தாய்ப்பசுவின் வயிற்றுக்குள்ளேயே தங்கிவிடும்; அவற்றிற்கு  ஆத்தி இலையைக் கொடுத்தால், நச்சுக்கொடி  இயல்பாக வெளியேறிவிடும்.

ஆத்தி இலைகளை பீடி சுற்றுவதற்கும் பயன்படுத்துகிறார்கள்; சில வகைகளின் இலைகள் அகலமாக உள்ளன;  அவற்றை ஹோட்டல்களில் பொட்டலங்கள் கட்டுவதற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்;   தையல் இலைகள் தயாரிக்கக்கூட இது பயன்படுகிறது;   பட்டைகளில் டேனின் சத்து அதிகமிருப்பதால், தோல் பதனிடலாம், சாயமேற்றலாம்.  மரங்களின் பட்டையிலிருந்து, நார் உரித்தெடுக்கவாம்; ஆத்தி மரங்கள் அதிகமிருந்தால், அங்கே தேனிப் பெட்டிகள் வைத்து, தேன் உற்பத்தி செய்யலாம்;  சிலர் இதன் பூக்களை சமைத்து சாப்பிடுகிறார்கள்.

ஆத்தி மரங்கள்,  சிறு குன்றுகளின் சரிவுகளிலும், ஏரி ஓரங்களிலும், தோட்டங்களிலும், பொது இடங்களிலுள்ள வீடுகள் அல்லது இதர கட்டிட முகப்புக்களில்,  அழகூட்டுவதற்காக நடவு செய்கிறார்கள்.

செஞ்சரளை மண், சுண்ணாம்பு நிலங்கள், இருமண்பாடான நிலங்கள், போன்ற எல்லா நில வகைகளிலும் ஆத்தியை நட்டு வளர்க்கலாம்;  ஆனால் வடிகால் வசதி மட்டும்  இருக்கும்படியாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

நீளம்குறைந்த நெற்றுக்கள், ஆழ்ந்த காவி வண்ணமுடையதாக இருக்கும்; இவை வெடித்துச்சிதறும் முன், இதை பறித்து விதைகளை சேகரிக்கலாம்;    விதைகள் நீளமான வட்ட வடிவில், காவி வண்ணத்தில் இருக்கும்;   ஒரு கிலோ எடையில் 2800 முதல் 3,800 விதைகள் வரை இருக்கும்;   100 விதைகளை விதைத்தால், 95 விதைகள் அப்;பழுக்கு இல்லாமல் முளைக்கும்;   தண்ணீரில் ஊறவைத்து விதைத்தால், அவை; விரைவாக முளைக்கும்;   ஆனால்  முளைப்பு  முப்பது நாள்வரை நீடிக்கும்;   ஆத்தி மரக் கன்றுகளை நட்டு வளர்ப்பதைவிட, விதைகளை விதைப்பதே சிறந்தது.

பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370, மின்னஞ்சல்: gsbahavan@gmail.com

பவளமல்லி வீட்டு தோட்ட அழகு மரம் - PAVAZHAMALLI TREE OF GARDEN BEAUTY

                                          

 பவளமல்லி 

வீட்டு தோட்ட 

அழகு மரம் 

 

PAVAZHAMALLI

TREE OF GARDEN

BEAUTY

                           தாவரவியல் பெயர்: நிக்டேன்தஸ் ஆர்பட்டிரிஸ்டிஸ்
                                                         (NICTANTHUS ARBORTRISTIS)
                                     தாவரவியல் குடும்பம்: ஓலியேசியே (OLEACEAE)
                                 ஆங்கிலப் பெயர்: ட்ரீ ஆஃப் சாரோ (TREE OF SORROW)
----------------------------------------------------------------------------------------------------------------

பவளவல்லி என்னும் பெயரால் பரவலாக அறியப்படும்
பாரிஜாத மரத்தின் நதிமூலம் சொல்லுகிறேன் கேளுங்கள்

ஒரு ஊரில் ஒரு அரசகுமாரி இருந்தாள்; அழகான அரசகுமாரிகள் அரிதாக இருந்த காலம்அது;;;;  அவள் பெயர் பாரிஜாதம் !

அவனி அம்பத்தாறு தேசத்தின் அரசகுமாரர்களும் அந்த
அதி ரூபினியான அந்த அரசகுமாரியைக் காதலித்தார்கள் !

ஆனால் அவளோ ஆயிரம் கிரணம் அணிந்து 
ஆகாயத்தில் பயணிக்கும்; ஆதவனைப் பார்த்து மயங்கினாள்

அருணன் ஓட்டிய அழகு ரதத்தில் ஆதவன் அனுதினமும் பயணம் செய்தான்
அணையா அனலையும் தணலையும் அழகாய் மூட்டிச் சென்றான், அவள் மனதில்

பாரிஜாதம் தன் மனதில் ஆசையை விதைத்தாள்;  விதை முளைவிட்டு கிளைவிட்டு காதலாய் முகிழ்த்தது; விரைவாய் முகிழ்த்த காதல் ராட்சசமாய் வளர்ந்தது.

“பாரிஜாதம் நீ அழகின் சிகரமாக இருக்கலாம். ஆனால் என் மனதில் நீ ஒரு மண்மேடாகக் கூட இல்லை” என்றான் ஆதவன் ஒரு நாள்; அவள் மனதில் இடியாய் இறங்கியது அந்த சேதி.

பாரிஜாதம,; அழுது புரண்டாள்; வெடித்து விம்மினாள்; அவள் காதல் கானல் நீரானது; ஒரு தலையாய் தொடர்ந்த காதல் ஒன்றுமே இல்லாமல் போனது;; மனம் உடைந்த அந்த மகாரூபினி மரணத்தின் கரம் பற்றினாள்;  அவள் அது ஆனாள் .

அவள் அஸ்தியிலே அதிசயமாய் முளைத்தது ஒரு அபூர்வ மரம்;; அந்த அபூர்வமே பாரிஜாதம் ஆனது; பவளமல்லியும் ஆனது.

மரமாக ஜனித்த பாரிஜாதம் அர்த்த ராத்திரியில் பூ பூப்பாள்; அடுத்த நாள் ஆதவன் முகம் காட்டும் முன்னால் அத்தனையும் உதிர்த்துவிட்டு நிற்பாள்.

அவள் கரம்பற்ற மனம் இன்றி கைவிட்ட ஆதவனின் முகம் பார்க்க விரும்பாமல் முகிழ்த்த பூக்கள் அத்தனையும் முற்றாக உதிர்ப்பாள்; உதிர்த்து பூமிக்கு பூச்சூட்டுவாள்.

இதுதான் பாரிஜாத மரத்தின் சோக சரித்திரம் !

பாரிஜாத மரத்தின் பூக்கள் மல்லிகையாய் வாசம் தரும்
நாசியை மிரட்டாத சுவாசம் தரும் !

பாரிஜாத மரங்களை வீட்டின் முகப்பில் நடலாம்; வீதியின் முகத்தில் நடலாம்
கும்பிடும் கோயிலில் நடலாம்; மகிழ்வாய் மசூதியில் நடலாம்; தேடிப்பிடித்து தேவாலயத்தில் நடலாம்.

இந்த தேவ விருட்சத்தின் விதை எடுத்தும் விருப்பமாய் நடலாம்; வெட்டி எடுத்த போத்தையும் நடலாம்.

வளர்ந்த செடியை வெட்டிவிட்டால் குட்டிப் புதராய் குறுகி வளரும்;; வெட்டாமல் விட்டாலும் சிறு மரமாய் சிக்கனமாய் வளரும.; 

காசு மண்டலமே கதி என ஆனதனால் காற்று மண்டலமே தூசு மண்டலமானது;பசுமை இல்ல வாயு பலமாய் சேர்ந்து அது மாசு மண்டலமானது.

தூசையும் மாசையும் துடைத்து எடுத்து சுத்தமான காற்றை மட்டுமே சுவாசிக்கத் தரும்.

இமயம் முதல் குமரி வரை வளரும் இந்திய மரம்; உயரம் அதிகம் வளராத அகத்தியர் மரம்; சில இடங்களில் குறு மரம்; பல இடங்களில் சிறு மரம்; 
புவள நிறக் காம்பில் சங்கு நிறப் பூக்கள்; ஆண்டு முழுவதும் அயராமல் பூக்கும்; மழை வந்தால் மரம் நிறைய பூக்கும்; ஆசைக்கும் சூடலாம்; பூசைக்கும் சூடலாம்; தைலம் தரும் பூக்கள்; சாயம் தரும் காம்புகள்; முட்டைக்கு மூக்கு வைத்தது போன்ற நீள்வடிவ இலைகள்; பயிர்களுக்கு இட்டால் உரமாகும்; நிலங்களுக்கு இட்டால் அவை தரமாகும்; நட்டு வளர்த்தால் கண்ணுக்கு விருந்தாகும்; கசக்கிப் பிழிந்தால் மருந்தாகும்: பூக்களை கட்டி விற்றால் காசாகும்.

-    பூமி, ஞானசூரியன், செல்பேசி: +918526195370: மின்னஞ்சல்: gsbahavan@gmail.com


Sunday, July 30, 2017

வன்னி மரம் பாலைவன மக்களின் வாழ்வாதாரம் - VANNI LIVELIHOOD TREE OF DESERT PEOPLE


வன்னி மரம் 
பாலைவன மக்களின்  
வாழ்வாதாரம் 

VANNI LIVELIHOOD
TREE OF 
DESERT PEOPLE



                    தாவரவியல் பெயர்; புரசாபிஸ் சினரேரியா (PROSOPIS CINERARIA)
                                        தாவரக் குடும்பம்:  ஃபேபேசியே (FABACEAE)
                                         பொதுப் பெயர்: லூன் ட்ரீ (LOON TREE)
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

உலகிலேயே 363 பேர் உயிர் தந்து  காப்பாற்றிய மரம் இந்த வன்னிமரம். அஞ்சல்தலை வெளியிட்டு பெருமைப் படுத்தப்பட்ட வன்னி மரம்(1988 ல்) 
ராவணனுடன் போர்புரியச் சென்றபோது, ராமன் தொட்டு வணங்கி ஆசிபெற்று சென்ற மரம் வன்னி மரம்.

மகாபாரதத்தில், பாண்டவர்கள் அஞ்ஞாத வாசத்தில், தங்கள் ஆயுதங்களை மறைத்து வைத்த மரப்பொந்து,  வன்னி மரத்திற்;கு சொந்தமானது. மஹாபாரதத்தில் இதன் பெயர் 'ஷாமி விருட்சம்".

இப்படி ஒரு நம்பிக்கை உண்டு;  அரச மரத்தை விட  பிள்ளை பாக்கியத்திற்கு, மகத்துவமானது வன்னி மரம்.

ராஜா ராணி காலத்தில், அரச குடும்பத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது; போருக்கு செல்லும் அரசர்கள் தங்கள் வாளை அடிமரத்தில் வைத்து வணங்கிச் சென்றால், ஆத வெற்றியை உறுதிப்படுத்தும்..!

இது தமிழகத்தின் நம்பிக்கை; பிள்ளையார் சிலை வைக்க வேண்டுமென்றால்,  முன்னதாக அங்கு நட வேண்டியது வன்னி மரம்; வன்னி மரத்தடி பிள்ளையார் வாரித் தருவதில் வள்ளல்!

தமிழகத்தின் கோர்ட்டுக் கூண்டில் ஏற்றப்பட்ட சீமைக் கருவைக்கு ஒன்று விட்ட சித்தப்பா வன்னி மரம்;   சீமைக் கருவைக்கு தாவரவியல் பெயர் புரொசாபிஸ் ஜூலிஃபுளோரா  வன்னிமரத்துக்கு புரசாபிஸ் சினரேரியா.
ராஜஸ்தான் பாலைவனங்களில், பசுமைமாறாமல் இருக்கும் ஒரே மரம்;   ஆடுகளுக்கும் ஒட்டகங்களுக்கும் தீவனம் தரும் மரம்; மனிதர்களுக்கு ரொட்டி சுட்டு சாப்பிட மாவு தரும் மரம் இது.

பாலைவனத்தில் வசிக்கும் மக்கள் வசிக்கத் தோதான சோலைவனமாவது வன்னி மரத்தோப்புகள்தான்.

“வன்னிமர  கொட்டைமாவு, தட்;டுப்பாடு என்றால் கூட, கவலை இல்லை;   அதன் பட்டைகளே போதும்; பஞ்சக் கால சாப்பாடு அதுதானே”  என்கிறார்கள் ராஜஸ்தான் மாநில மக்கள்.  பட்டைகளையம் உலர்த்தி மாவாக்கி  பணியாரம் சுடலாம்;;.
கட்டிடம் கட்ட மரம் வேண்டுமா ..?
விறகு வேண்டுமா ..?
தேரி (மணல்) நிலத்தை சீராக்க  வேண்டுமா ..?
வன்னி மரத்தை நடுங்கள்; அல்லது நாடுங்;கள்; அல்லது தேடுங்கள் ..!

அடிக்கடி  கருச்சிதைவு ஏற்படும் பெண்களுக்கு அற்புதமான மருந்து இது; வன்னிப் பூக்களை இடித்து, சர்க்கரையுடன் சேர்த்துக் கொடுங்கள்; கருச்சிதைவு  என்பது கனவில் கூட  நேராது !

தரிசாக கிடக்கும் நிலங்களில் எல்லாம், நடவு செய்ய, பரிசாக கிடைத்த நம்மஊர் மரம் வன்னி; மேட் இன் இண்டியா"

இந்த வகை மண்ணில் மட்டும்தான் வளருவேன் என்று அடம் பிடிக்காது; நட்ட இடத்தில் வளரும்; ஆனாலும் மணல் பூமிதான் இதற்கு  சொர்க்க  பூமி !
சிறு முள் உடைய மரம் இது; ஓங்கி வளராது; சுமார் 30 அடி உயரத்திலேயே 30 கிளைவிட்டு வளரும்; அதனால் விஸ்தாரமான இடங்களில் நடலாம்;  கோவில்களில் நட்டு வளர்த்தால், பிள்ளையாரின் முழுக்கண் கடாட்சமும் கண்டிப்பாய் சித்தி ஆகும் !

தொழிற்சாலைகள்  வைத்திருப்போர் வன்னியை நட்டால் புண்ணியம் கிடைக்கும்; புகையை வடிகட்டும்; இதர தீ வளிகளின் தீநாக்கு (பசுமை இல்ல வாயுக்கள்) நம்மைத்  தீண்டாமல் பாதுகாக்கும் !

கால்நடை வளர்க்க தீவனம் இல்லை என கவலைப் படுவோர் கவனியுங்கள்; வன்னியை வைத்து தீவன வங்கியை நிலம் இருக்கும் அத்தனை கிராமத்திலும் உருவாக்கலாம். தீவன வங்கி என்றால் தீவனத் தோப்பு .
 
புதற்காடுகளாக  நலிந்து மெலிந்து போன காடுகளை மீட்டெடுக்க கண்கண்ட மரம் இது; அற்புதமான மரம்  மட்டுமல்ல இது;   கிடைப்பதற்கு அரிய வரம் இது!

-பூமி  ஞானசூரியன், செல்பேசி:+918526195370,  மின்னஞ்சல்: gsbahavan@gmail.com




TO READ  FURTHER MORE

       1.            பாட்டில் மரம் ஏலியன்தீவின் அதிசய மரம் - WONDER TREE OF THE ALIEN ISLAND –  Date of Posting: 07.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/blog-post7.html
       2.            மங்கிபஸ்சில் -  தென் அமெரிக்காவின்  அதிசய   மரம் -  MONKEY PUZZLE - TREE OF SOUTH AMERICA - Date of Posting: 06.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/monkey-puzzle-tree-of-south-america.html
       3.            டிரேவலர்ஸ் பாம் - ஒரு வித்தியாசமான அழகுமரம்  - TRAVELLER’S PALM -  IS A DIFFERENTLY  BEAUTIFUL TREE - Date of Posting: 03.02.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/02/travellers-palm-is-differently.html
       4.            செக்கோயா  உலகின்  உயரமான    மரம் -  KING SEQUOIA  WORLDS' TALLEST TREE Date of Posting: 17.01.2020 / https://vivasayapanchangam.blogspot.com/2020/01/king-sequoia-worlds-tallest-tree.html
       5.            ஒசேஜ் ஆரஞ்சு    மண்ணரிப்பைத் தடுக்க    ரூஸ்வெல்ட்   அதிகம் நட்ட மரம்   -    OSAGE ORANGE     PET TREE OF ROOSEVELT - Date of Posting: 08.01.2020 - https://vivasayapanchangam.blogspot.com/2020/01/osage-orange-pet-tree-of-roosevelt.html
       6.            மரூலா மரம் - ஆப்ரிக்காவின்  சிறுதொழில் மரம்  - MARULA - ENTREPRENEUR  FRIENDLY AFRICAN  TREE - Date of Posting: 25.12.2019 https://vivasayapanchangam.blogspot.com/2019/12/marula-entrepreneur-friendly-african.html
       7.            பேவோபாப் -  கல்லறையாகக்கூட    பயன்பட்ட மரம்    BAO BAB -  ONCE USED CEMETRY - Date of Posting: 07.08.2019 / https://vivasayapanchangam.blogspot.com/2019/08/bao-bab-once-used-cemetry.html
       8.            டிராகன் பிளட் ட்ரீ -  சாக்ரடிஸ் பயன்படுத்திய  மருத்துவ மரம் -   DRAGON BLOOD RARE HERB USED BY SOCRATES - Date of Posting: 08.02.2018 https://vivasayapanchangam.blogspot.com/2018/02/dragon-blood-rare-herb-used-by-socrates.html
       9.            கலா பேஷ் - உலகு துறந்தோருக்கு உணவு பாத்திரம் தரும் மரம்   CALABASH  - BLESS BOWELS TO SAINTS - Date of Posting: 29.09.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/09/calabash-bless-bowels-to-saints.html
   10.            முருங்கை -   பலவீனமான நாடுகளுக்கு ஏற்ற ஊட்டமிகு மரம்     MURUNGAI -   GOOD FOR MAL- NUTRITIONED BABIES  - Date of Posting: 17.09.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/09/murungai-good-for-mal-nutritioned-babies.html
   11.            வேப்ப மரம்  கிராமத்து  மருந்து கடை -   VEPPA MARAM -  VILLAGE PHARMACY  OF THE  WORLD - Date of Posting: 08.09.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/09/veppa-maram-village-pharmacy-of-world.html
   12.            பாலைவன மக்களின்    வாழ்வாதாரம்   -   VANNI LIVELIHOOD  TREE OF   DESERT PEOPLE - Date of Posting: 29.07.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/07/vanni-livelihood-tree-of-desert-people.html
   13.            அணுக்கதிர்களை தடுக்கும் ஒரே மரம்        SENCHANTHANAM ONLY CAN BLOCK ATOMIC RAYS - Date of Posting: 28.07.2017 - https://vivasayapanchangam.blogspot.com/2017/07/senchanthanam-only-can-block-atomic-rays.html

புங்கன் - பயோ டீசல் தரும் மரம் - PUNGAN TREE OF BIO DIESEL


புங்கன் - 

பயோ டீசல் 

தரும் மரம்

 

 PUNGAN

TREE OF

BIO DIESEL


           தாவரவியல் பெயர்: டெர்ரிஸ் இண்டிகா (DERRIS INDICA)
                              தாவரக் குடும்பம்:  ஃபேபேசியே  (FABACEAE)
                                           பொதுப் பெயர்: புங்கம் (PUNGAM)

தமிழ் இலக்கியங்களில் அகம் சார்ந்த பாடல்கள், அந்த புறம் சார்ந்த சுற்றுச் சூழலையும் சேர்த்துப் பிரதிபலிக்கும் என்பார்கள்.

அப்படி ஒரு பாடலில், தலைவனைப் பிரிந்த தலைவி அவனுக்காக காத்திருக்கிறாள்; அப்போது  வேனில் என்ற வெயில் முடிந்து இளவேனில் மழையை வருவிக்கிறது;  ஆறு நிரம்பி ஓடுகிறது ;  கரையோர மரங்களில் மலர்கள் குலுங்குகின்றன;  இதனை கலித்தொகை பாடல் ஒன்று படம் பிடிக்கிறது.

'எரிஉரு  உறழ  இலவம்  மலர
பொறிஉரு  உறழ  புன்குபூ  உதிரப்
புதுமலர்க்  கோங்கம்  பொன்னைத்  தாதூழிப்பத்
தமியார்ப்   பிறந்துஎறிந்து  எள்ளி முனிய வந்து
ஆர்ப்பது   போலும்  பொழுது;   என் அணிநலம் . "

'செவ்லிலவு மரங்கள்  நெருப்பை அணிந்துக் கொண்டிருக்
கின்றன !  பொறியினை  வாரி இறைத்ததைப்         
போல   புங்க மலர்கள்  உதிர்ந்து
கிடக்கின்றன  !  கோங்கம் பூக்கள்  பொன் தூள் போல
சிதறிக்   கிடக்கின்றன ! இந்த  மலர் சூடும்படி  என்னவன்
வரவில்லையே ... " என்று ஏங்குகிறாள் அந்தத் தலைவி.

எனக்கு அரைக்கால் சட்டை வயசிலேயே  அறிமுகமானது புங்கன் கொட்டைகள்தான்;  அவற்றை நான் தாயத்து என்று நினைத்திருந்தேன் ;குழந்தைகள் கழுத்திலும், அரைஞாண் கயிற்றிலும் கட்டிக்கொண்டு இருப்பார்கள்; அதை கட்டிக் கொண்டால் பேய் பிசாசு வராது எனபார்கள். 

யார் சொன்னார்கள் ..?  நான்கு சுவர்களுக்கு இடையேதான் குளிர் சாதனம் செய்ய முடியுமென்று  ..? நான்கு மூலை  ரோட்டில்கூட குளிர்சாதனம் செய்யலாம்;  அய்ந்தாறு புங்கம் மரங்களை நட்டுப் பாருங்கள் ! குளிர்சாதனம் காற்றுக்கு குளிர்ச்சி மட்டும்தான் கொடுக்கும்; ஆனால் இம்மரத்தின் தழை காற்றில் கரைந்திருக்கும் தூசையும், மாசையும் துப்புரவாய் துடைத்துத் தரும் !
அது போல புங்கன் கிளைகள் கோணல் மாணலாய் இருந்தாலும், அழகாய் வளரும்.
  
முழுசாய் பயன்படுத்த்படாத மரங்கள் என்று பட்டியல் போட்டால், அது முன்னூற்றைத்  தாண்டும் !  அதில் பிரதானமான ஒன்று தான்  புங்க மரம் !
இலைகள் தோல் பதனிடும் தொழிலுக்கு உதவும்; பயிருக்கு  உரமாக்கலாம்;  தானியம் குதிர்களில் இலைப்பொடி இட்டு  பூச்சிகள்;  வராமல்  அடித்து விரட்டலாம்.

விதைகளில் வடிக்கும் எண்ணெயில் சோப்பு செய்யலாம்;   தோல் பதனிடலாம்;  டீசல் தயாரிக்கலாம்;   வேம்பு எண்ணெய்ப் போலவே புங்கன் எண்ணெய்யும் பூச்சிகளை விரட்ட புத்திசாலித்தனமாய், உபயோகப்படுத்தலாம்.

புங்கன் கொட்டைகள் பார்க்க அழகாய் இருக்கும்; தொட்டுப் பார்க்க மெத்தென இருக்கும்;  முதிர்ந்த விதைகள் பார்க்க  'லெதர் கோட் '  போட்டது மாதிரி  தெரியும் !

புங்கன் மரத்தை தோட்டத்தைச்  சுற்றிலும் நட்டால் அது காற்றுத்தடுப்பு மரம்; வயலில் நட்டால் அது  தழை உர மரம்; மண்ணில் நட்டால் அது காற்று அரிப்பு தடுப்பு மரம்; சரிவு நிலங்களில் நட்டால் அது மண் அரிப்பு தடுப்பு மரம்; சாலைகளில்  நட்டால்  அது  நிழல்  மரம; பூங்காக்களில் நட்டால் அது பூ மரம்; சாகுபடிக்கு நட்டால் அது எண்ணெய்  மரம்; ஆனால்; எங்கு நட்டாலும் அது பருவகால மாற்றத்திற்கு மருந்து  மரம் ! 

மணல்சாரி, செவ்வல், கரிசல், உவர் இப்படி எத்த்தனை வகை மண்ணாக இருந்தாலும்  புங்கன் சாதனை நிகழ்த்தும் !

உகாண்டா,  கேமரூன், ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில், பாலைவனம் பரவுவதைத் தடுக்கும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக புதிய புங்கன் விதை ஒன்றை தெரிந்தெடுத்திருக்கிறார்கள்; இதன் தாவரவியல் பெயர் மில்லேஷியா  பின்னேட்டா (MILLETIA PINNATA).

புங்கன் மரம் ஒரு புதையல் மரம் ! எல்லோரும் சொல்கிறார்கள் இது பயோ டீசல் தரும் என்று ! அங்கொன்றும் இங்கொன்றும் ஆமை வேகத்தில், சில ஆய்வுகள் நடக்கின்றன் இந்த ஆய்வுகள் வெற்றி கண்டால், புங்கன் மரம் 'டீசல் மரம்" என்ற புதிய நாமகரணம் பெறும் !

புங்கன் ஓர் எண்ணெய் மரம்;  இதன் பயோ டீசலில் கார்கள்; ஓட்டலாம்;   உயவு எண்ணெய்யாக உபயோகப் படுத்தலாம்;  பெயிண்ட் மற்றும் வார்னிஷ் செய்யலாம்; சோப்பு செய்யலாம்; சீப்பு செய்ய பிளாஸ்டிக் செய்யலாம்;  பூச்சிகளைக் கொல்ல  மருந்துகளைத் தயாரிக்கலாம்; மனிதர்களைப் பாதுகாக்கவும் மருந்துகளைத் தயாரிக்கலாம்.

ஆராய்ச்சியாளர்களுக்கு ஓர் கேள்வி. ஏப்போது புங்க மரத்தை டீசல் மரமாக அறிமுகம் செய்யப் போகிறீர்கள் ?

பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370, மின்னஞ்சல்: gsbahavan@gmail.com

மஞ்சள் கொன்றை கிராம பலபயன் மரம் - MANJAL KONRAI - MULTIUSE VILLAGE TREE


                                                                

மஞ்சள் கொன்றை 

கிராம பலபயன் மரம்

 

MANJAL KONRAI -

MULTIUSE VILLAGE TREE


                             தாவரவியல் பெயர்: கேசியா சயாமியா (CASSIA SCIAMEA)
                          தாவரக் குடும்பம்: சிசால்பினியேசியே (CESALPINEACEAE )
                                        பொதுப்பெயர்:  மஞ்சள்  சரக்கொன்றை (KASSOD TREE)
=========================================================================
கால்நடைகளால் மேயப்படாத மரம்; விவசாய நிலங்களுக்கு தழைஉரம் தரக்கூடிய மரம்;  சாலை ஓரம், நீர்நிலைகள் ஓரம், வறண்ட பொது இடங்களில் நடுவதற்கு ஏற்ற மரம்; தோண்டிப் போட்ட புது மண்ணிலும் வளர ஏற்ற மரம்  பூங்காக்களில் அழகூட்ட வளர்க்கப் படுவதற்குறிய  மரம்;    அரக்குப்பூச்சி  வளர்க்க உதவும்  மரம். 

வறட்சியான காலங்களில்கூட குறைவான தழை உதிர்த்;து  பசுமையாக தோன்றும் மரம்; சரஞ்சரமாக இளம்பச்சை நிறமான இதன் இலைகள், பார்க்க பரவமூட்டும்;  அடர்த்தியான மஞ்சள் நிற பூக்கள்  இதற்கு மேலும் அழகூட்டும்.
மழை மறைவு பிரதேசங்களில்,  கால்நடைகளின் மேய்ச்சல் தொந்தரவில்லாமல் வளர்ப்பதற்கேற்ற அற்புதமான மரம். 

ஓர் ஆண்டில் ஏறத்தாழ ஒன்பது மாதங்கள், தமது கிளை நுனிகளில், பொன்னிற பூக்களை ஏந்தியபடி, இதன் பூங்கொத்துக்கள், அரையடி நீளத்திற்கு ஆடி அசைந்தபடி இருக்கும்.

இந்திய மரமாக இருப்பினும், ஆப்பிரிக்க நாட்டின் விறகு மரமாக அறிமுகமாகி உள்ளது;   கட்டிடங்களில் தூண்களாக இதன் அடிமரத்தை பயன்படுத்துகிறார்கள். 

நாங்கள் நீர்வடிப்பகுதி திட்டங்களை செயல்படுத்தும்போது கூட, எங்களுக்கு கை கொடுத்தது இந்த மஞ்சள் கொன்றை மரங்கள்தான்;  இதன் இளம் செடிகள்; துளிர்த்து வரும்போது, இதன் இலைச் சரங்கள் மிக அழகாக இருக்கும்.

மஞ்சள்கொன்றை மரங்கள், நடுத்தரமான உயரம் வளரும்;  அதிகபட்சம் 15 மீட்டர் உயரத்திற்கும்,  அடிமர சுற்றளவாக 2 மீட்டரும் வளர்ந்து, அடர்த்தியான தழை அமைப்பைக் கொண்டிருக்கும். 

இதன் கிளைக் கவைகளின் இருபக்கமும் 12 முதல் 18 ஜோடி இலைகளை உருவாக்கும்; இதன் இலைகள் பெரிய அளவில் புளியன்  இலைகளை ஒத்திருக்கும். 

இதன் விதைகள் அரக்கு நிற பொட்டினைப் போன்றது;  ஒருகிலோ எடையில் 30,000. முதல் 40,000. விதைகள் வரை இருக்கும்;  விதைகள் மிகவும் லேசானவை.

வளர்ந்த மரத்தில், மேஜை, நாற்காலி, விவசாயக் கருவிகள், மரச்சுத்திகள், கைத்தடிகள் போன்ற பல, மரச்சாமான்களைச் செய்யலாம்.

கிழக்கு தொடர்ச்சிமலை, மேற்கு தொடர்ச்சிமலை ஆகியவற்றின் அருகமைந்த, சிறு சிறு குன்றுகளிலும், மணல் மேடுகளிலும், மண்ணரிப்பைத் தடுத்த மரங்கள் கொன்றை மரங்கள்தான்;  மஞ்சள் கொன்றை மரம்;  மகத்துவமான மரம். 

சமீபத்தில் ஒரு விவசாயியின் வயலுக்கு சென்றிருந்தேன்.  அப்போது நெல்வயலில், வரப்புகளில் ஏகப்பட்ட மஞ்சள் கொன்றை மற்றும்  புங்கன் மரங்களை நட்டிருந்தார் .அந்த மரங்களெல்லாம் நான்கடி குரோட்டன்ஸ் செடி மாதிரி வெட்டப் பட்டிருந்தது. அடிமரம் பெரிதாய் இருந்தது. நீளமான கிளைகள் இல்லாமல், இலைகள் பந்து மாதிரி போர்த்தி இருந்தன. 

விசாரித்தபோது தெரிந்தது.  அந்த விவசாயி பல ஆண்டுகளாக, இந்த மரங்களின்  தழையை  அறக்கி, நெல் வயலுக்கு உரமாக போட்டிருந்தார்.
ஆப்பிரிக்காவில் 'கானா"  என்ற நாட்டில், விறகுப் பஞ்சத்தை தீர்த்து வைத்தது இந்த மஞ்சள் கொன்றைதான்; வெட்டவெட்ட துளிர்த்து தொடர்ச்சியாக அவர்களுக்கு விறகு விநியோகம் செய்து வருகிறது.

மஞ்கள் கொன்றையை வளர்க்க வேண்டுமென்று முடிவு செய்தால், அதற்கான நிலம் ஆழமான மண்கண்டம் உடையதாக இருக்க வேண்டும்  பரவலாக எல்லா மண் வகைகளிலும் இது வளரும். 

தற்போது தமிழ்நாட்டில், பரவலாக இளைஞர்கள் மரம்நடும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இது பாராட்டிற்குறிய ஒன்று. பல மாவட்டங்களில் விதை பந்துகள் தயார்செய்து, விதைத்து வருகின்றனர்.  அப்படி விதைப் பந்து. 

தயாரிப்பதற்கு ஏற்ற மரவகை இது. ஒரு கிலோ விதை சேகரித்தால், சேதாரம் போக,  இரண்டிரண்டு விதைகளாக  வைத்தால்கூட 15,000 விதைப் பந்துக்களை தயாரிக்கலாம். நல்ல விதையாக இருந்தால், விதைக்கும் விதைகள் 7 முதல் 10 நாட்களில்  முளைத்துவிடும். 

சுற்றுப் புறத்தில், காற்று மண்டலத்தில் நிறைந்திருக்கும், மாசு மற்றும் தூசுகளை நீக்கி, மற்ற இடங்களுக்கு  பசுமை போர்த்தி, அழகூட்டும்  அற்புதமான மரம், மஞ்சள் கொன்றை மரம்.

-    பூமி ஞானசூரியன், செல்பேசி: +918526195370,மின்னஞ்சல்: gsbahavan@gmail.com

கொடுக்காய்ப்புளி ஆட்டுத்தீவன மரம் - KODUKKAIPULI - TREE FODDER OF MEXICO


                                                               

கொடுக்காய்ப்புளி  

ஆட்டுத்தீவன மரம்

 

KODUKKAIPULI -

TREE FODDER

OF MEXICO

 

                                 தாவரவியல் பெயர்:  பித்தசெல்லோபியம் டல்ஸ்                     
                                                          (PITHECELLOBIUM DULCE)
                                 தாவரக் குடும்பம்: மைமோஸியே  (MIMOCEAE)
                              பொதுப்பெயர்: மெட்ராஸ்  தார்ன்  (MADRAS THORN)
          .................................................................................................................................................

 பள்ளிக் குழந்தைகளுக்கு திண்பண்டமாகும் பழம்; ஆடுகளுக்கு தீவனமாகும்  தழை;  தோலை பதனிட உதவும் டேனின் பொருந்தியுள்ள பட்டை;  தேனீக்களுக்கு உபயம் செய்யும்  மகரந்தம்; மேஜை, நாற்காலி, உத்திரம், சட்டங்கள், தூண், ஆகியன தர உதவும் மரம்; மணலிலும் வளரும் திறன்;   எண்ணெய் தரும் கொட்டை; எந்த சூழலிலும் வளரும் தன்மை,  அத்தனையும் நிறைந்தது கொடுக்காய்ப்புளி  மரம்.

இன்றும்கூட கிராமத்துக் குழந்தைகளுக்கு  மகிழ்ச்சி தரும் தின்பண்டம்  கொடுக்காய்ப்புளி.

 ஒரு பெரிய காது வளையத்தைப் போன்ற, இதன் பழங்கள் சிறு குழந்தைகளை வெகுவாக  கவரும்;  சிவப்பு நிறம்கலந்த வெண்ணிற தசை; ஒரு வித்தியாசமான சுவையுடன் விளங்கும் ;   துவர்ப்பும் இனிப்பும் சுவை கலந்த தசை ; தசை இப்பழங்களின் பழத்தின் பெரும்பகுதியை நிறைத்தபடி இருக்கும்;கொட்டைகளின் மேற்பக்கம் அகன்றும், கீழ்ப்பக்கம் குறுகியும் இருக்கும். 

சுமார் 20 மீட்டர் உயரம்வரை வளரும்; நிறைய கிளைகளை விட்டு அடர்ந்த தழையுடன் காணப்படும்; இலைகள் அவ்வப்போது உதிர்ந்தாலும், முழுவதுமாக அவற்றை உதிர்ப்பதில்லை; எப்போதும் பசுமை மாறாத  மரமாக  இது  தென்படும்.

இந்த மரம் ஏறத்தாழ நமது உள்ளுர் மரம் என்றே நினைக்கிறார்கள்; ஆனால் இது உண்மையில் மெக்சிகோ  நாட்டைச் சேர்ந்தது;  மெக்சிகோவில்  இந்தப் பழத்தின் தசையிலிருந்து தயாரிக்கும் ஒருவகையான  பானம், மிகவும் பிரபலமானது.

வட அமெரிக்காவில், வறண்ட மாநிலங்களில், இதன் கனியும் தழையும்  மிகவும் பிரபலமானவை;  தழையை கால்நடைகளுக்கு போடுகிறார்கள்;   கனியை மனிதர்கள் உண்ணுகிறார்கள்.

இந்த மரங்களை தோப்பாக வளர்த்தால், இதன் விதைகளிலிருந்து 13 சதவீதம் எண்ணெய் எடுக்கலாம்;   இதனை சமையலுக்குப் பயன்படுத்தலாம்;  சோப்பு தயாரிக்கலாம்.

எண்ணெய் எடுத்தது போக மீதமுள்ள பிண்ணாக்;கில், கணிசமான அளவு  புரதம் இருப்பதால், கால்நடைகளுக்கு தீவனமாகப் பயன்படுத்தலாம்;   இதன் பிண்ணாக்கில் 37 சதவீதமும்  சதையில் 25 சதவீதமும் புரதச்சத்து  அடங்கி உள்ளது.

வன்னி மரம், சீமைக்கருவை  மரம்,  இவைகளைப்போல  கொடுக்காய்ப்புளி மரங்களையும், மணல் மிகுந்தத்,  தேரிப்பகுதிகளில் மண்ணரிப்பைத் தடுக்க கொடுக்காய்ப்புளி மரக்கன்றுகளை நடவு செய்யலாம்;  தரிசான நிலங்களில் நடவு செய்தும், மண் அரிமானத்தை  தடுக்கலாம்;  கடலோரப் பகுதிகளிலும், உவர் நிலங்களிலும் இது வளரும். 

இப்போதெல்லாம் வெள்ளாடுகளை, கொட்டில்களில் கட்டிப்;போட்டு  வளர்க்கிறார்கள்; இப்படி வளர்ப்பவர்கள் தங்கள் நிலத்திலேயே ஏக்கர் கணக்கில், இந்த மரங்களை நெருக்கி நடுவதன் மூலம் தீவனப் பிரச்சனையை  முழுவதும் தீர்க்கலாம். 

இப்படி தீவன தோட்டத்தை உருவாக்கிய பின்னர் ஆடுகள்  வளர்க்கப்படுவதால், இது  உறுதியான லாபகரமான தொழிலாக இருக்கும்.
போத்துக்களாக வெட்டி நடுவதற்கு ஏற்ற மரம் இது; விதைகளை நேரடியாக விதைக்கலாம்;  வேர்க்குச்சிகள் தயாரித்தும் நடவுசெய்யலாம்.

இதன் பழங்களிலிருந்து விதைகளைப் பிரித்தெடுத்து  உடனடியாகவும் விதைக்கலாம்; ஆறுமாதம்வரை சேமித்தும் விதைக்கலாம்;  ஒரு கிலோ எடையில், 5,500 முதல் 8,800 விதைகள்  வரை  இருக்கும்;  இதன் முளைப்புத்திறன் அதிகபட்சமாக 65  சதவீதம் வரை  இருக்கும். 

பூமி ஞானசூரியன், செல்பேசி: ூ918526195370, மின்னஞ்சல்: பளடியாயஎயn;பஅயடை.உழஅ

சரக்கொன்றை சர்வதேச அளவிலான அழகு பூ மரம் - SARAKONRAI - TREE OF SUPREME FLOWERS


                                            

 சரக்கொன்றை 
சர்வதேச அளவிலான 
அழகு பூ மரம்

SARAKONRAI - TREE OF 
SUPREME
FLOWERS

                              தாவரவியல் பெயர்: கேசியா பிஸ்டூலா (CASSIA FISTULA)
                              தாவரக்குடும்பம்: சீசால் பீனியேசியே (CESALPINEACEAE)
                             பொதுப் பெயர்: கோல்டன் ஷவர் ட்ரீ (GOLDEN SHOWER TREE)
                                                                  சொந்த நாடு:இந்தியா
ழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூ

ஐரோப்பாவின் மிக அழகான மரத்தின் பெயர் ஐரோப்பிய லெபர்னம்; மரங்களின் மஞ்சளழகி சரக்கொன்றையின் சர்வதேசப் பெயர் இந்திய லெபர்னம்; தங்கக் குளியல் எனும் ‘கோல்டன் ஷவர்’ இதன் ஆங்கிலப் பெயர்.  
அளவெடுத்து தைத்த சட்டையைப் போல தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற தகுதியான மரம். 

நெடுநெடுவெனவும்  வளராது ; குறு மரமாகவும் வளராது; நடுத்தரமாக வளரும்.

தலைபருத்த  பஞ்சு மிட்டாய் போல  தழை அமைப்பு கொண்ட  மரம்.

மழைக்காலம்  முடிந்த பின்னால்  பாருங்கள் !  இலைமுழுக்க  உதிர்த்துவிட்டு  எக்ஸ்ரே  மரம்போல  நிற்கும். 

வெய்யில் விஸ்வரூபம் எடுக்கும்  மாதங்களில்தான் சரக்கொன்றை மரத்தில் அரைத்த மஞ்சள் நிறத்தில் பூங்கொத்துக்கள் புறப்பட  ஆரம்பிக்கும்.

ஆங்கிலத்தில் இதனை தங்கக் குளியல் மரம் என அழைத்தாலும்
தமிழில் இதனை பீறிட்டுக் எழும் தங்க ஊற்று எனலாம்.
 
அவற்றைப் பார்த்துக் கொண்டே இருந்தால்; பகல் இரவு  தெரியாது; பார்க்கும்போதே  பாதங்களில்;  வேர் இறங்கினாலும்  பலருக்கும்  தெரியாது. 
 
சரக்கொன்றை மரத்தில் காய்கள் இறங்கிவிட்டால் கரடிகளுக்கும் குரங்குகளுக்கும் கொண்டாட்டம் தான் ;காரணம்  அவைதான் கரடிக்கு குச்சி மிட்டாய் ; குரங்குக்கு குருவி மிட்டாய். 


ஓட்டைகள் போடாத  முரட்டு புல்லாங்குழல் இதன்  நெற்றுகள்;  அதற்குள் அடுக்கிவைத்த  புதிய பத்துரூபாய் காசு மாதிரி  விதைகள்; ஒரு புல்லாங்குழலில்;  ஒரு நூறு இசை  ஒளிந்திருப்பது போல  ஒரு நெற்றில்  ஒரு  நூறு  விதைகள் ஒடுங்கி  இருக்கும் ..!

இலை பூ, காய் நெற்று   மரம் வேர்  அத்தனையும்மருந்துகள்  செய்ய  மகத்தான  சரக்குகள்  என்கிறார்கள் சித்த மருத்துவ  சிறப்பு  அறிஞர்கள்.

கரிசல்  மண் தவிர,  அனைத்து மண் கண்டங்களிலும் சரக்கொன்றை செழித்து வளரும். 

மண் கண்டம்  குறைந்த  கரம்பிலும்  வறண்ட  மணலிலும்கூட  சரக்கொன்றை சரஞ்சரமாய்  பூத்து   சாதனை  செய்யும்.

ரகசியமாய்ச்  சொல்லுகிறேன்  கேளுங்கள் !

அய்நூறு மில்லி  மழைகூட  ஆண்டு  முழுவதும் பார்க்காத 
ராஜஸ்தானத்து   மண்ணில்கூட சரக் கொன்றை சட்டமாய் வளரும். 

விதையாக விசிறி விதைக்கலாம்; நாற்றாக  நடவு செய்யலாம்;  வேர்ச்  செடியாக  எடுத்து நடலாம் !  

'இது வெறும்  மரக்கொன்றை  அல்ல் சரக் கொன்றை"

அழகு தேவைப்படும் அத்தனை இடங்களிலும் சரக்கொன்றையை சகட்டு மேனிக்கு நடலாம். 

பூமி,  ஞானசூரியன், செல்பேசி: +918526195370, மின்னஞ்சல்: gsbahavan@gmail.com

Saturday, July 29, 2017

கல்யாண முருக்கு அம்சமான ஆட்டுத்தீவன மரம் - KALYANAMURUNGAI NUMBER ONE GOAT FODDER TREE



கல்யாண  முருக்கு  
அம்சமான 
ஆட்டுத்தீவன மரம் 

 KALYANAMURUNGAI
NUMBER ONE
GOAT FODDER TREE

                          தாவரவியல் பெயர்: எரித்ரீனா இண்டிகா (ERYTHRINA INDICA)
                                           தாவரக் குடும்பம்:   பேபேஸி  (FABACEAE )

மாப்பிள்ளை முருக்கு என்பதை நாம் கேள்விப்படிருக்கிறோம்; கல்யாண முருக்கு என்பது இதுதான் புதுப்பெயர்; காக்கா பூ மரம், சூடு கொட்டை மரம், தீவன மரம் எல்லாம் இதன் கூடுதலான  பெயர்கள்.

பலவகையான பயன்பாடுகளை இது தந்தாலும், பிரதானமாக இது ஒரு தீவன மரம் ;கிராமங்களில், கல்யாண முருக்கு மரம் எந்த வீட்டில் இருக்கிறதோ, அங்கு கண்டிப்பாக ஆடுகள் இருக்கும்;   ஆடுகள் இதன் தழைகளை அல்வா போல ரசித்து ருசித்து சாப்பிடும்.

எனது பள்ளிப்பருவத்தில், சூடுகொட்டை மரம் என்ற பெயரிலேயே  இதைத்  தெரியும்;  குறும்புக்கார சிறவர்கள் பாக்;கெட்டுக்களில், ஐந்தாறு கல்யாணமுருக்கு கொட்டைகள் இருக்கும்;  அதன் பெயர் சூடுகொட்டை;   சூடுகொட்டையை தரையில் தேய்த்து, நமது உடலில் எந்தப்பதியில் வைத்தாலும், நெருப்பில் சூடு வைத்த மாதிரி இருக்கும்;  இந்த சூடு கொட்டையினால் பள்ளிக்கூடத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்படும்; சில சமயம் ஆசிரியர்கள்,  'செக்யூரிட்டி  செக்கப்' மாதிரி, பையன்களின் பாக்கெட்டுக்களை சோதனையிடுவர்; அதையும் மீறி மாணவர்கள் ரகசியமாக சூடு கொட்டையை எடுத்துச்செல்வர்.

இதன் பூக்கள் இரத்த சிகப்பு நிறத்தில், பெரிய  பூக்களாக, இலைகளே இல்லாமல், மரம் முழுவதும் பூக்களால் அலங்காரம்  செய்ததுபோல்  இருக்கும்;  இந்த  மரங்களின் மீது காகங்கள் அதிகம் அமர்ந்து, நீண்ட நேரம் விளையாடும்;  இந்தப் பூவில் காகங்கள், தேன் குடிப்பதாக சொல்வர்;  அது எந்த அளவிற்கு உண்மையென்று தெரியவில்லை.

கல்யாண முருக்கு  மரங்களில் மொத்தம் மூன்று வகைகள் உள்ளன். மரத்தில் முள் இருப்பது, கரிய நிறத்தில் சிறு சிறு முட்கள் இருப்பது ஒருவகை;  முட்களே இல்லாதது ஒரு வகை; காப்பித் தோட்டத்தில் நிழலுக்காக வளர்ப்பது இது;  இன்னொரு வகையை மிளகுகொடியை ஏற்றுவதற்காக பயன்படுத்துகிறார்கள்; இந்த மரத்தை அழகு மரமாகவும்  பயன்படுத்துவர்;  இது 15  முதல் 17 மீட்டர் வரை உயரம் வளரும்.

இந்தியாவின் சில பகுதிகளில்  வெள்ளை நிற பூக்களையுடைய மரங்கள் உள்ளன.  இதன் நெற்றுக்கள் அதிக பட்சமாக அரை அடி அல்லது ஒரு அடி வரை இருக்கும்;  கறுப்பு நிறத்தில் இருக்கும்;  இளஞ்சிவப்பும் நீலமும் கலந்த ஒரு கவர்ச்சிகரமான நிறத்தில், இதன் விதைகள் இருக்கும்;  விதைகளைப் பார்ப்பதற்கு பெரிய உருவத்தில் பெரி ய, 'பெரும்பயறு' போல  இருக்கும்.

இதன் தழைகளில்  புரதம் 16.37 சதம், மாவுப் பொருட்கள்  37.12 சதம், மற்றும் கொழுப்பு  சத்து  5.38 சதமும்  அடங்கியுள்ளது;  ஆடுகள் மாடுகள் என்று அனைத்து விதமான கால்நடைகளுக்கும்  தீவனம் அளிக்கலாம்.

இம்மரம் வலுவில்லாதது; சரிவர எரியாது; ஆனால், தீக்குச்சிகள் செய்யலாம்;  பெட்டிகள் செய்யலாம்;  இதர தட்டு முட்டு சாமான்கள் செய்யலாம்;  காகிதக்குழம்பு  தயாரிக்கலாம்;   படகுகள், தோணிகள்,  கட்டுமரங்கள் செய்யலாம்.

இந்த மரங்கள் கிராமங்களில், வயல்களில் வேலியாகவும், குளம் மற்றும்  குட்டை, ஏரிக்கரைகளில், வீட்டுத் தோட்டங்களில் வளர்ந்திருக்கும் .

நகரங்களில் அழகு மரமாக, வீடுகளின் முகப்பில், தோடத்தில், சாலை ஓரங்களில், பூங்காக்களில், பெரும் கட்டிட வளாகத்துக்குள்; இதனை  நட்டும்  வளர்க்கலாம்.

ஒரு கிலோ எடையில் சுமார், 2,000. விதைகள் இருக்கும்;  இதன் முளைப்புத்திறன் 50 முதல் 60 சதம்;   விதைகளை நீரில் ஒரு நாள் ஊற வைத்து விதைத்தால்,  நன்கு முளைக்கும்; 6 அடி நீளமுள்ள  போத்துக்களையும் வெட்டி நடலாம்.

தீவனத்திற்காக  நடும்போது, நெருக்கி நட்டு, அவ்வப்போது தழைகளை இறக்கி, கால்நடைகளுக்கு கொடுக்கலாம்.

இதன் இலைகள் மூன்றிலைகளைக் கொண்டு  கொத்து கொத்தாக வளரும்; இந்த மூன்று இலைகளும் மும்மூர்த்திகளை  குறிப்பதாக சொல்வர்; வலப்பக்கம் உள்ள இலை சிவபெருமானையும், நடுப்பக்கம் உள்ள இலை பிரம்மாவையும், இடப் பக்கம் உள்ள இலை விஷ்ணுவையும் குறிக்கும்.

ஆடுமாடுகளுக்கென உருவாக்கும் மரத் தோப்புகளிலும் கிராமங்கள் மற்றும் நகரங்களில் அழகு தரும் மரமாகவும் வளர்க்கலாம.

பூமி ஞானசூரியன், செல்பேசி: ூ918526195370, மின்னஞசல்: gsbahavan@gmail.com

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...