Wednesday, June 22, 2016

மர நிழலில் மண்புழு உர உற்பத்தி - VERMI COMPOSTING UNDER TREE SHADE



Image Courtesy; Thanks Google


மர நிழலில் 
மண்புழு உர 
உற்பத்தி 


VERMI 

COMPOSTING 

UNDER 

TREE SHADE


  • கொஞ்சம் மர நிழல், கொஞ்சம் மண்புழு, கொஞ்சம் மக்கிய தொழு உரம் இருந்தால் போதும்.
  • சிக்கனமாக மண்புழு உரம் தயார் செய்ய முடியும்.
  • இதில்; தேவைப்படும் மூலதனம், நம்முடைய ஆர்வம் மற்றும் அக்கறை.

தேவைப்படும் பொருட்கள்:

  1. நிழலுடன் கூடிய மரத்தடி
  2. தேங்காய் உரி மட்டைகள் 500 முதல் 600
  3. மக்கிய தொழு உரம் சுமார் 500 கிலோ
  4. தேவையான அளவு தோட்டத்து மண்
  5. சாக்கு - 4 அல்லது 5
  6. மண்புழுக்கள் சுமார் 2 கிலோ
  7. தண்ணீர் 12 முதல் 15 குடம்


செயல் விளக்கம்:

மரத்தடி நிழலுடன் கூடிய ஒரு இடத்தை தெரிந்தெடுங்கள். மரத்தைச் சுற்றிலும் மூன்று அடி அகலத்திற்கு சமப்படுத்துங்கள். சமப்படுத்திய நிலப்பரப்பு வட்ட வடிவமாக இருக்கட்டும். சமப்படுத்திய  3 அடி விட்டத்திற்கும் 0.5 அடி ஆழத்திற்கும் சிறிய பள்ளம் எடுக்கவும். அந்த பள்ளத்தில்  தேங்காய் உறி மட்டைகளை முதுகுப் பக்கம் கீழே இருக்குமாறு சீராக அடுக்குங்கள். பின்னர் தேங்காய் உறி மட்டைகள்; மறையும்வரை 4 அங்குல உயரத்திற்கு தோட்டத்தின் மண்ணை பரப்புங்கள். அந்த மண் நனையுமாறு சீராக தண்ணீர் தெளியுங்கள். அதன்மீது தொழு உரத்தை அரை அடி உயரத்திற்கு பரப்பவும். மீண்டும் தண்ணீர் தெளியுங்கள். இப்படியாக தொழு உரத்தை நான்கு அடுக்கு போடுங்கள். இந்த அடுக்குகள் இரண்டு அடி உயரத்திற்கு மேல் போகாமல் பரப்புங்கள்.

ஓவ்வொரு அடுக்குக்கும் இரண்டு அல்லது மூன்று  குடம் தண்ணீர் தெளியுங்கள். அதற்கு மேல் இரண்டு அங்குல உயரத்திற்கு மாட்டு சாணம். அதன் மீது சீராக தண்ணீர் தெளியுங்கள். பின்னர் தோராயமாக இரண்டு கிலோ அல்லது 1000 மண்புழுக்களை சாணத்தின் மீது விடவும். விரைவாக சாணத்தைக் துளைத்துக் கொண்டு மண்புழுக்கள் உள்ளே சென்று விடும். பின்னர் மண்புழு படுக்கையை ஈரச் சாக்குகள் கொண்டு மூடவும்.

பராமரிப்பு:

இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை பழுப்படுக்கை மீது சீராக 4 முதல் 5 குடம் தண்ணீரை தெளிக்கவும். தண்ணீர் தெளிப்பதை 50 முதல் 60 நாட்கள் வரை செய்யுங்கள். 15 முதல் 20 முறை தண்ணீர் தெளிக்க வேண்டி இருக்கும்.

அறுவடை:

வழக்கம் போல், தண்ணீர் தெளிப்பை நிறுத்தி, 3 (அ) 4 நாள் கழித்து, மேலாக அறுவடை செய்து, நிழலில் உலர்த்தி, சலித்து, கோணிகளில் சேமித்து, தேவையின் போது பயன்படுத்துங்கள்.


FOR FURTHER READING
ON RELATED TOPICS

1. உலகச் சந்தையின்   கதவுகள்   திறந்தே   கிடக்கின்றன -   WORLDWIDE SCOPE FOR VERMI COMPOST – Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/worldwide-scope-for-vermi-compost.html

2. திறந்த வெளிகளில்   மண்புழு உரத் தயாரிப்பு  -  VERMI COMPOSTING   IN OPEN SPACE – Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-composting-in-open-space.html


3. தொட்டி முறை மண்புழு உர உற்பத்தி - VERMI COMPOSTING IN TANK METHOD  – Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-composting-in-tank-method.html

4. வீடுகளில்   மண்புழு உரம்   தயாரிக்கும் முறை  -   VERMI COMPOSTING   IN HOUSEHOLD   PREMISES – Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-composting-in-household-premises.html

5. மண்புழு   உர உற்பத்தியில்   கவனிக்க வேண்டியவை ஆறு  -   SIX STEPS IN VERMICOMPOSTING  – Date of Posting; 17.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/six-steps-in-vermicomposting.html

6. மண்புழு   உரம் தயாரிப்பில்    என்ன சந்தேகம் ?  -  CLEAR YOUR DOUBTS IN VERMI COMPOSTING  – Date of Posting; 17.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/clear-your-doubts-in-vermi-composting.html


7. உரம் தயாரிப்புக்கு ஏற்ற   மண்புழு வகைகள்    SUITABLE  EARTHWORM  BREEDS FOR  COMPOSTING – Date of Posting; 15.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/suitable-earthworm-breeds-for-composting.html

8. மண்புழு உரத்தின்   ஊட்டச் சத்துக்கள்   ஒரு ஒப்பீடு - VERMI COMPOST  NUTRIENTS STUDY  – Date of Posting; 14.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-compost-nutrients-study.html

9. மண்புழுபற்றி   முதல் புத்தகம்  எழுதிய  மேரி அப்பொலெப் - THE FIRST BOOK ON EARTHWORM BY MARRY APPOLEP – Date of Posting; 13.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/first-book-on-earthworm-by-marry-appolep.html

10. மண்புழு  உரம்   சுற்றுச்சூழலுக்கு   பாதுகாப்பானது    VERMI COMPOST  IS SAFE TO  ENVIRONMENT – Date of Posting; 13.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-compost-is-safe-to-environment.html

11. மண்புழு   உங்கள் மண்ணுக்கு   உயிர் தருகிறது    EARTH WORMS  MAKE  SOIL ALIVE – Date of Posting; 13.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/earth-worms-make-soil-alive.html

12. மண்ணைப்   பொன்னாக்கும்   மந்திரம்     மண்புழுக்கள்   EARTHWORM   ALCHEMISTS  MAKE SOIL  GOLD – Date of Posting; 12.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/earthworm-alchemists-make-soil-gold.html

13. அப்பார்ட்மெண்ட் மற்றும் வீடுகளில் மண்புழு உரம் தயாரித்தல் - VERMI COMPOSTING IN APARTMENTS – Date of Posting; 31.05.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/05/vermi-composting-in-apartments.html

14. கோழிக்கழிவில்    மண்புழு உரம்  தயாரிப்பது எப்படி ?    MAKE POULTRY  WASTE AS VERMI COMPOST – Date of Posting; 31.05.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/05/make-poultry-waste-as-vermi-compost.html





No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...