ஊதா தவளை |
ராஜநாகம் |
முன் கட்டுரை சுருக்கம்
உயிரினங்களின் வேட்டை
தொடர்கதை ஆகியுள்ளது
HUNTING OF
WILD LIFE
BECOMES
A SERIAL
ஐக்கிய நாடுகள் சபை 1972 ஆம் ஆண்டு முதல் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடி வருகிறது. சட்ட விரோதமான வனவிலங்குகள்; வியாபாரத்திற்கு கட்டுப்பாடு என்பதுதான் இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தின் ‘தீம்’ செயல் நோக்கம். சீனா, ஜப்பான், தென் கொரியா, ஏமன், வியட்நாம் ஆகிய நாடுகளில் மருந்துகள் தயாரிக்க, விலை மதிப்பு மிகுந்த பொருட்கள் தயாரிக்க காண்டாமிருகங்களின் கொம்புகள் பயன்படுத்தப்பட்டன. இதன் பொருட்டு ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான காண்டாமிருகங்கள் இரக்கமின்றி கொன்று குவிக்கப் பட்டன. இன்று காணாமல் போகும் முதல் விலங்கு பட்டியலில் இடம்பிடித்துள்ளன காண்டா மிருகங்கள்.
கிரேட் ஏப்ஸ் |
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
பனிச்சிருத்தை |
40 வனஉயிரின சரணாலயங்கள் (WILDLIFE SANCTUARIES) மற்றும் 60 தேசிய பூங்காக்களும் (NATIONAL PARK) இந்தியாவின் வன உயிரினங்களுக்கான கருவூலங்களாக உள்ளன. வன அலுவலர்களின் அனுமதியின்றி எந்தஒரு உயிரினத்தையும் எடுத்துச் செல்லவோ அழித்து விடவோ தடை செய்யப்பட்ட காட்டுப்பகுதிக்கு சரணாலயம் என்று பெயர்.
ஆங்கிலத்தில் ஒய்ல்டு லைஃப் என்றால் வன உயிரினம் என்று பொருள். இது பிராணிகள் மட்டுமின்றி தாவரங்கள் மற்றும் மரங்களையும் குறிக்கும்.
இந்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து 247 வனவிலங்கு சரணாலயங்களையும் 55 தேசிய பூங்காக்களையும், உருவாக்கி பராமரித்து வருகின்றன. கிண்டி, களாக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை, வேடந்தாங்கல், கோடிக்கரை ஆகியவை தமிழ்நாட்டின் முக்கியமான சரணாலயங்கள்.
கிண்டி சரணாலயத்தில் மான் மற்றும் பாம்புகள் ஆகியவை முக்கிய வன உயிரிகள். அதன் பரப்பு 8.7 சதுர கிலோ மீட்டர் ஆகும்.
மீன், காட்டுப்பன்றி, சிங்கவால் குரங்கு, யானை, உடும்பு, கரடி, பாம்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியது களாக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம். யானை, சிறுத்தை, புலி, காட்டு எருமை, கடம்பை மான், புள்ளிமான், காட்டுப்பன்றி, கரடி போன்றவற்றை கொண்டது பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஆனைமலை சரணாலயம். இது 95 சதுர கிலோ மீட்டர் பரபபளவு உடையது.
யானை, சிறுத்தை, புலி, காட்டு எருமை, போன்றவை நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முதுமலை சரணாலயத்தில் 321 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன .
வேட்டையாடுவது மற்றும் வன உயிரினங்கள் போன்றவை தொடர்பான பொருட்களை வியாபாரம் செய்வதால் வனவிலங்குகள் வெகுவாக குறைந்து வருகின்றன. வேகமாக மறைந்துவரும் வன உயிரினங்களை என்டேன்ஜர்டு ஸ்பீஸிஸ் (ENDANGERED SPECIES) என்கிறார்கள்.
அடர்ந்த வனப்பரப்பில் 8 % வனவிலங்குகள் வாழ்வதற்கென, ஒதுக்க வேண்டும் என கோறி வருகிறார்கள் சர்வதேச விஞ்ஞானிகள். நம்; நாட்டில், கடந்த 2000 ஆண்டுகளில் 106 விலங்குகளும், 140 பறவை இனங்களும்,
முற்றிலுமாக காணாமல் போய்விட்டன. தற்போது கிட்டத்தட்ட 300 உயிரினங்கள் அழியும் தறுவாயில் உள்ளன என்கிறார்கள்.
ரத்தம், தோல், இறைச்சி, பற்கள், கொம்புகள், உரோமம், அரக்கு , பட்டு, ஆகியவற்றிற்காக உயிரினங்களின் வேட்டை தொடர்கதை ஆகியுள்ளது.
எலிகள் மற்றும் நீர் நாய்கள் மென்மயிர் தோலுக்காகவும் பாம்புகள், மான்கள் புலிகள், தோல்களுக்காகவும் முதலைகள், கருங்குரங்குகள், காண்டாமிருகங்கள் மருந்துகள் தயாரிக்கவும், தந்தத்திற்காக ஆண் யானைகளும், கஸ்தூரி மான்கள்; கஸ்தூரிக்காகவும் வேட்டையாடப் படுகின்றன.
இவை தவிர சிங்கம் காட்டுக்கழுதை, ஒட்டகம், காட்டெருமை, கடமா, சிறுத்தை போன்றவைகளும் வேட்டையாடப்படுகின்றன .
பாம்புகள், குரங்குகள், கரடிகள், போன்றவற்றை வைத்து வித்தை காட்டுவது சட்ட விரோதமானது என தடைசெய்யப் பட்டுள்ளது .
தந்தம், இறைச்சி, தோல்கள், போன்றவைக்காக வேட்டையாடுவது ஒரு பக்கம் இருந்து வந்தது. இன்னொரு பக்கம் வெட்டி பந்தாவுக்காக வேட்டையாடும் பழக்கமும் இருந்து வந்துள்ளது.
“இது எங்க தாத்தா வேட்டையாடின புலி… இதெல்லாம் அவரே சுட்ட கரடி, எருமை என்று சில நண்பர்கள் காட்ட, பல வீடுகளில் மாட்டி வைத்திருக்கும், பதப்படுத்தப்பட்ட புலிகளையும், சிங்கங்களையும் நானே பார்த்து பயந்திருக்கிறேன்.
வெள்ளைக்காரர்கள் ஆட்சிக்காலத்திலும் அதற்குப்பிறகு ஒரு 20 ஆண்டுகள் கழித்தும் வன விலங்குகள் அநியாயத்திற்கு வேட்டையாடப்பட்டன. 1972 ஆம் ஆண்டில் வன பாதுகாப்பு சட்டம் வந்த பின்னால் விலங்கு வேட்டை கணிசமாகக் குறைந்தது.
ஆனால் மரங்களுக்காக மனிதன் நடத்தும் வேட்டையால் காடுகள் கணிசமாகக் குறைந்து விட்டன. அதன் விளைவாக வன விலங்குகள் வசிப்பிடமின்றி கட்டுப்பாட்டுடன் தங்கள் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டன.
இந்தியாவில் அழிந்து வரும் வனவிலங்குகள் என அரசு குறித்திருக்கும் முக்கியமான 10 என்னென்ன என்று பார்க்கலாம். பனிச்சிறுத்தை, வங்காளப்புலிகள், ஆசிய சிங்கங்கள், ஊதாநிறத் தவளை, ராட்சசஅணில், ராட்சசபழந்தின்னி வவ்வால், கிரேட் ஏப்ஸ், ராஜ நாகம், ஆசிய சிறுத்தை, ஊதா தலை வாத்து, ஆகியவைதான் இந்த அழியும் 10 வகை உயிரிகள்.
நமது கண்ணெதிரில் அழிந்து வரும் அரிதான மரவகைகள் என்று பார்த்தால் மூன்று மரங்களைச் சொல்லலாம். ஒன்று சந்தனமரம் இன்னொன்று செஞ்சந்தனம். இன்னொன்று ரோஸ்வுட்.
இந்தியா சுதந்திரம் அடைந்தது 1947. அந்த ஆண்டின் கணக்கின்படி மொத்த நிலப்பரப்பில் 40 சதத்திற்கும் மேல் இருந்தது காடுகளின் பரப்பு. ஆனால் இன்று இருப்பவை 17 சதமா ? 18 சதமா ? என்று பட்டிமன்றம் நடக்கிறது. ஆனால் இதனை 24 சதம் என்றும் சொல்லுகிறார்கள்.
இந்த சமயத்தில் உலக அளவில் வன விலங்குகள் பாதுகாப்புக்காக முதன் முதலில் சட்டம் போட்டது 1887 ல் இந்தியாதான் என்று நாம் பெருமைப்படலாம்; !!!
ஊதாத்தலை வாத்து |
வங்காள புலி
|
ராட்சச பழம்தின்னி வௌவால் |
ஆசிய சிங்கம் Images Courtesy: Thanks Google |
No comments:
Post a Comment