மண்புழு
உரம் தயாரிப்பில்
என்ன சந்தேகம் ?
உரம் தயாரிப்பில்
என்ன சந்தேகம் ?
CLEAR YOUR DOUBTS
IN VERMI COMPOSTING
கேள்வி: 1. மண்பழு உரம் தயாரிக்கவிரும்பும் விவசாயிகள் முதலில் என்ன செய்ய வேண்டும் ?
- மண்புழு உரம் தயாரிப்பில் பல முறைகள் உள்ளன.
- இதில் எந்த முறையில் செய்தால் செலவு குறையும் என்று பாருங்கள்.
- கூடுமானவரை நம் கைவசம் உள்ள பொருட்களை பயன்படுத்துங்கள்
- பக்கத்து கிராமங்களில் யாராவது மண்புழு உரம் தயார் செய்கிறார்களா? என்று பாருங்கள்.
- அவர்களுடைய அனுபவங்களை கேட்டுக் கொள்ள வேண்டும்.
- குவியல் முறை, தொட்டி முறை, பெட்டி முறை குழி முறை, மரத்தடியில் தயாரிக்கும் முறை, திறந்தவெளியில் தயாரிக்கும் முறை என்று அனைத்து முறைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.
2. மண்புழு தயாரிப்பில் என்னென்ன மண்புழு வகைகளை பயன்படுத்தலாம் ?
உலகம் முழுவதும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளவை 6000 வகை. இவை 20 குடும்பங்களைச் சேர்ந்தவை. இந்தியாவில் இருப்பவை மட்டும் 500 வகை. தமிழ்நாட்டில் அதிகம் உர உற்பத்திக்காக வளர்க்கப்படுபவை சுமார் மூன்று வகை. இந்திய மண்புழு, ஐரோப்பிய மண்புழு, மற்றும் ஆஃப்ரிக்க மண்புழு
இந்திய மண்புழு
(PERIONYX EXCAVATUS)
இது நம்ம ஊர் மண்புழு. இமயமலைப்பகுதி இதன் தாயகம். வட அமெரிக்காவில்இது ரொம்ப பிரபலம். வியாபார ரீதியாக வகை இது . வெப்பமண்டலம் மற்றும் மித வெப்ப மண்டலம் பகுதிக்கு ஏற்றது. புழுக்கள் மெல்லியதாக இருக்கும். செம்புழுக்களைவிட வேகமாக ஊர்ந்து செல்லும். ஈரம் குறைவாகவும் வெப்பம் அதிகமாகவும் இருக்கும் இடங்களில் கூடுதலாக உரத்தை உற்பத்தி செய்யும். சமையலறைக் கழிவு, பண்ணைக்கழிவு, கழிவு நீர் கால்வாய் ஆகியவற்றில் வசிக்கும். இதன் அறிவியல் பெயர் பெரியோனிக்ஸ் எஸ்கவேட்டஸ்
2. ஐரொப்பிய செம்புழு
(EISENIA FETIDA)
அழுகிக் கொண்டிருக்கும் தாவரக் கழிவு, கம்போஸ்ட் மற்றும் எருக்களில் வசிக்கும்.பரவலாக உர உற்பத்திக்கு ஏற்றவை. ஐரோப்பா இதன் தாய் மண். பல நாடுகளில் இவை அறிமுகம் ஆகி உள்ளன. புழுக்களை அழுத்திப் பிடித்தால் அவற்றின் உடலில் ஒருவித மோசமான வாடை வீசும் திரவம் சுரக்கும். மண்கண்டத்தின் மேல் பகுதிலேயே வசிக்கும். அதற்கு பிடிக்காது பகல் வெளிச்சம். பிடித்தமானது இருட்டு. தினசரி சாப்பிடுவது, தன் உடல் எடையைப் போல் இரண்டு மடங்கு. எண்ணிக்கையில பெருக்கம் அடைவது, 90 நாட்களில் இரு மடங்கு. ஐசினியா ஃபெட்டிடா, இதன் அறிவியல் பெயர்
3. ஆப்ரிக்க மண்புழு
(EUDRILUS EUGENIAE)
மேல் பகுதி மண்கண்டத்தில் வசிக்கும் மண்புழுக்களில் ஒன்று. மேல் மட்ட மண்புழுக்கள்தான் அதிக மண்புழு உரத்தை உற்பத்தி செய்யும்.மிக வேகமாக இனப்பெருக்கம் ஆகும்.8 முதல் 10 வாரங்களில் முழு வளர்ச்சி அடையும்.
வளர்ந்த புழு ஒன்று 2.5 கிராம் எடை இருக்கும் உடலில் ஊதா மற்றும் சாம்பல் நிறம் பூசியது போல் இருக்கும். புழுவின் பின்புற உடல் சீராக சரிந்து சென்று கூர்மையாக ழுடிவடையும். இதன் தாய்வீடு மேற்கு ஆப்ரிக்காவின் வெப்பமான பகுதி. வெப்ப மண்டலப் பகுதிகளில் பரவலாக மண்புழு உரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் வகை. யூட்ரில்லஸ் யூஜினியா என்பது இதன் அறிவியல் பெயர்
கேள்வி 3. மண்புழு உரம் தயாரிப்பில் சிக்கனமான செலவு குறைந்த முறை எது ?
குவியல் முறைதான் சிக்கனமானது. எவ்வுளவு சிறிய இடத்திலும் இதனை தயார் செய்ய முடியும். குவியல் முறையில் சிமெண்ட் தொட்டி கட்ட வேண்டாம். காசு செலவில்லா சிக்கன முறை இது. சிறிய வீட்டுத் தோட்டம் கூட இதற்குப் போதும்.
கேள்வி 4. குவியல் முறையில் மண்புழு உரம் தயார் செய்ய என்னென்ன பொருட்கள் தேவை ?
1. பழுப் படுக்கை அமைப்பதற்கு தேவைப்படும் நிழலான ஒரு இடம்
2. சுமார் 1000 அல்லது 2 கிலோ மண்புழுக்கள்
3. சுமார் 500 கிலோ ஆறிய பசும் சாணம்
4. 10 முதல் 12 லிட்டர் குளோரின் கலக்கப்படாத தண்ணீர்
5. சுமார் 500 தேங்காய் உறிமட்டைகள்
6. 100 கிராம் மிளகாய்த் தூள் அல்லது மஞ்சள் தூள்
7. குளோரின் கரைக்காத தண்ணீர் 10 முதல் 15 குடம்
கேள்வி 5. குவியல் முறையில் மண்புழு உரம் தயார் செய்யும் முறையை விளக்கமாக சொல்லுங்கள்.
நிழல் உள்ள இடத்தை தேர்ந்தெடுங்கள். அது கொட்டகை அல்லது மரத்தடியாக இருக்கலாம். 15 அடி நீளம் மற்றும் 3.5 அடி அகலத்திற்கு நிலப்பரப்பை அளந்து முளை அடித்துக் கொள்ளுங்கள். இதுதான் புழுப்படுக்கை. இதன் அகலம் 3.5 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. நீளம் வேறு படலாம். புழுப் படுக்கையில் 0.5 அடி அழத்திற்கு மண்வெட்டியால் வெட்டி மண்ணை எடுத்துவிடவும். அப்படி எடுத்த பள்ளத்தில் அதில் சீராக மணலை நிரப்பவும். பரப்பிய மணலின் மீது தேங்காய் உறி மட்டைகளை முதுகுப்புறம் மணலில் படுமாறு அடுக்கவும். ஏற்கனவே சேகரித்து வைத்திருக்கும் பசும் சாணம் 100 கிலோவை அதன் மீது சீராகப் பரப்பவும். அதன்மீது 4 முதல் 5 குடம் தண்ணீரை சீராக தெளிக்கவும். மீண்டும் 100 கிலோ சாணத்தை புழுப் படுக்கையின் மீது சீராகப் பரப்பவும். அதன்மீது 2 முதல் 3 குடம் தண்ணீரை சீராகத் தெளிக்கவும். இப்படி 5 அடுக்கு சாணத்தை போட்டு 5 முறை சீராகத் தண்ணீர் தெளிக்கவும். இப்போது புழுப்படுக்கையின் உயரம் 2 அடிக்கு மெல் இருக்கக் கூடாது.
பின்னர் கைவசம் உள்ள மண்புழுக்களை புழுப்படுக்கையில் பரவலாக விட வேண்டும். விடப்பட்ட மண்புழுக்கள் சாணப்படுக்கையை துளைத்துக் கொண்டு உட்புறம் சென்று விடும். பின்னர் புழுப் படுக்கையைச் சுற்றிலும் ஒரு அடி இடைவெளிவிட்டு மஞ்சள் தூள் அல்லது மிளகாய் தூளை கோலம் பேடுவது போல போடவும். இதனால் எறும்பு மற்றும் கறையான்கள் புழுப்படுக்கையில் ஏறாமல் தடுக்கலாம்.
கேள்வி 6. மண்புழு உரத்தை எப்போது அறுவடை செய்யலாம் ?
60 நாள் முதல் அறுவடை செய்யலாம். அறுவடைக்கு மூன்று நாட்களுக்கு முன் குவியலில் தண்ணீர் தெளிப்பதை நிறுத்த வேண்டும். புழுக்கள் குவியலின் கீழ்பகுதிக்கு சென்றுவிடும். மேலாக சேர்ந்திருக்கும் மண்புழு உரத்தை அறுவடை செய்யலாம். இதே புழுபடுக்கையை பயன்படுத்தி மீண்டும் மீண்டும் அறுவடை செய்யலாம்.
கேள்வி 7. மண்புழு உரத்தை பயிர்களுக்கு எவ்வளவு இடலாம் ?
ஏக்கருக்கு 2000 கிலோ. பழ மரங்களுக்கு – 10 முதல் 15 கிலோ. இளம் கன்றுகளுக்கு – 1 முதல் 2 கிலோ. தொடர்ந்து இடுவது மிகவும் நல்லது.தொட்டிச்செடிகளுக்கு – 100 கிராம்; முதல் 250 கிராம் வரை போடலாம்
கேள்வி 8. இதனை விற்பனை செய்ய முடியுமா ?
செய்ய வேண்டும். செய்ய முடியும். முடியாதது எதுவும் இல்லை. பாக்கட் செய்து நகரங்களில் விற்கலாம்.ஏற்றுமதிக்குக்கூட வாய்ப்பு உள்ளது.
VERMI COMPOST
Image Courtesy: Thanks Google
FOR FURTHER READING
ON RELATED TOPICS
1.
உலகச் சந்தையின் கதவுகள்
திறந்தே கிடக்கின்றன - WORLDWIDE SCOPE FOR VERMI COMPOST – Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/worldwide-scope-for-vermi-compost.html
2. திறந்த வெளிகளில் மண்புழு உரத் தயாரிப்பு - VERMI
COMPOSTING IN OPEN SPACE – Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-composting-in-open-space.html
3.
மர நிழலில் மண்புழு உர
உற்பத்தி - VERMI
COMPOSTING UNDER TREE SHADE – Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-composting-under-tree-shade.html
4.
தொட்டி முறை மண்புழு
உர உற்பத்தி - VERMI COMPOSTING IN TANK METHOD –
Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-composting-in-tank-method.html
5.
வீடுகளில் மண்புழு உரம் தயாரிக்கும் முறை - VERMI
COMPOSTING IN HOUSEHOLD PREMISES – Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-composting-in-household-premises.html
6.
மண்புழு உர உற்பத்தியில் கவனிக்க வேண்டியவை ஆறு - SIX
STEPS IN VERMICOMPOSTING – Date of Posting; 17.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/six-steps-in-vermicomposting.html
7.
உரம் தயாரிப்புக்கு
ஏற்ற மண்புழு வகைகள் SUITABLE
EARTHWORM BREEDS FOR COMPOSTING – Date of Posting; 15.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/suitable-earthworm-breeds-for-composting.html
8.
மண்புழு
உரத்தின் ஊட்டச் சத்துக்கள் ஒரு ஒப்பீடு - VERMI COMPOST NUTRIENTS STUDY –
Date of Posting; 14.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-compost-nutrients-study.html
9.
மண்புழுபற்றி முதல் புத்தகம் எழுதிய
மேரி அப்பொலெப் - THE FIRST BOOK ON EARTHWORM BY MARRY APPOLEP – Date of Posting; 13.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/first-book-on-earthworm-by-marry-appolep.html
10.
மண்புழு உரம்
சுற்றுச்சூழலுக்கு
பாதுகாப்பானது VERMI
COMPOST IS SAFE TO ENVIRONMENT – Date of Posting; 13.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-compost-is-safe-to-environment.html
11.
மண்புழு உங்கள் மண்ணுக்கு உயிர் தருகிறது EARTH WORMS
MAKE SOIL ALIVE – Date of Posting; 13.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/earth-worms-make-soil-alive.html
12.
மண்ணைப் பொன்னாக்கும் மந்திரம்
மண்புழுக்கள் EARTHWORM ALCHEMISTS
MAKE SOIL GOLD – Date of Posting; 12.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/earthworm-alchemists-make-soil-gold.html
13.
அப்பார்ட்மெண்ட் மற்றும்
வீடுகளில் மண்புழு உரம் தயாரித்தல் - VERMI COMPOSTING IN APARTMENTS – Date of Posting; 31.05.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/05/vermi-composting-in-apartments.html
14.
கோழிக்கழிவில் மண்புழு உரம் தயாரிப்பது எப்படி ? MAKE POULTRY WASTE AS VERMI COMPOST – Date of Posting; 31.05.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/05/make-poultry-waste-as-vermi-compost.html
No comments:
Post a Comment