Wednesday, May 11, 2016

சைலின் மற்றும் தொல்யூன் நச்சு நீக்கும் செடிகள் - XYLENE & TOLUNE POLLUTION CONTROL PLANTS


சைலின் மற்றும் 
தொல்யூன் 
நச்சு நீக்கும் 
செடிகள் 

XYLENE TOLUNE 
POLLUTION
CONTROL PLANTS

காற்று மாசு (Image Courtesy:Thanks Google)
சைலீன்  திரவமாகவும் வாயுவாகவும் அவதாரம் எடுக்கக்கூடிய ரசாயனம் சைலீன்(XYLENE) நிறமற்ற நாசிக்கு இணக்கமான மணம் கொண்டது. இதன் ரசாயன செல்லப்பெயர் டைமிதைல் பென்சீன். 

பேட்ரோலியம், நிலக்கரி, வுட்தார் (WOOD TAR); ஆகியவை இதன் இருப்பிடம். விமான எரிபொருள்(AIRPLANE FUEL);, கேசோலைன் (GASOLINE), மற்றும் சிகரெட் புகையிலையில் குறைவான அளவில் உள்ளது சைலீன். பிரிண்ட்டிங், ரப்பர், பெயிண்ட்டிங், தோல்பதனிடுதல், ஆகிய தொழில்களுக்கு சைலீன் கைகொடுக்கிறது.

மருத்துவ தொழில்நுட்பத்தில் ஒரு கரைப்பானாக (SOLVENT) பயனாகிறது டொல்யூன் (TOLUENE). இதன் ரசாயனப்பெயர் மிதைல் பென்சீன்( METHYL BENZENE). இது நீரில் கரையாத நிறமற்ற திரவம். டோல்யூன் கலந்த காற்றை சுவாசிப்பதால் பாதிப்பு ஏற்படும்.  

இதனால் மனிதர்கள் மற்றும் பிராணிகள் நெக்ரோசிஸ் (NACROSIS) என்னும் நோக்கு ஆளாவார்கள். இவர்கள் எப்போதும் சோர்வு (FATIGUE), தூக்கம், குமட்டல்(NAUSEA), தலைச்சுற்றல்(DIZZINESS, தலைவலி, என அவதிப்படுவார்கள்.

இந்த சைலீன் மற்றும் டொல்யூன் நச்சுக்களை சரி செய்ய கீழ்கண்ட 20 செடிகளை உறிஞ்சி  சுத்தப்படுத்தும்  தன்மை  கொண்டவை. இந்தசெடிகளை எங்கு  வைக்கிறோமோ அங்கு சுத்தப்படுத்தும். இதனை அமெரிக்காவின் நாசா மற்றும் அல்கா என்னும் இரண்டு நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ளன.

 இவற்றில் பெரும்பாலானவற்றை வீட்டின் உள்ளேயும் வளர்க்கலாம். வீட்டிற்கு வெளியேவும் வளர்க்கலாம். மாடியில் வளர்க்கலாம். அவை முக்கியமாக இரண்டு காரியங்களைச் செய்கின்றன.

ஓன்று நச்சுப்பொருட்களை உறிஞ்சி எடுத்து காற்றினை சுத்தப்படுத்துகிறது. 
இரண்டு அதிகப்படியான ஆக்சிஜனை வெளியிட்டு காற்றுக்கு அதிகப்படியான உயிரோட்டத்தை அளிக்கிறது.

1. டுவார்ஃப் டேட்  பாம் (DWARF DATE PALM)

2. அரிகா  பாம் (ARECA PALM)

3. போஸ்டன்  பெர்ன் (BOSTERN FERN)

4. கிம்பர்லி   குயின் (KIMBERLY QUEEN)

5. இங்கிலிஷ் ஐவி (ENGLISH IVY)

6. லில்லி டர்ஃப் (LILY TURF)

7. ஸ்பைடர் பிளாண்ட ;(SPIDER PLANT)

8. டெவில்ஸ் ஐவி (DEVILS IVY)

9. பீஸ் லில்லி (PEACE LILY)


10. ஃபிளமிங்கோ லில்லி (FLAMINGO LILY)

11. பேம்பூ பாம் (BAMBOO PALM)

12.பிராட்லீப்  லேடிபாம் (BROAD LEAF LADY PALM)


13. வேரிகேட்டட் ஸ்நேக்பிளாண்ட் (VARIEGATED SNAKE PLANT)


14. ரெட்எட்ஜ்டு   டிரசீனா (RED EDGED DRACENA)

15. வீப்பிங் ஃபிக் (WEEPING FIG)

16. ஃபுளோரிஸ்ட் கிரிசாந்திமம் (FLORIST CHRYSANTHEMUM)

17. டெண்ட்ரோபியம் ஆர்க்கிட்ஸ் (DENDROBIUM ORCHIDS)

18. டம்ப் கேன்ஸ் (DUMB CANES)
19. கிங் ஆஃப் ஹார்ட்ஸ் (KING OF HEARTS)

20. மாத் ஆர்க்கிட்;ஸ் (Moth orchids)

Thanks to www3.epa.gov – Network – Air Toxics website / Tolune
Images: Thanks 
Charming Flowers of  Moth Orchids






No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...