விருட்சாயுர்வேதம்
மரம் செடிகொடிகளுக்கான பாரம்பரிய வைத்தியம்
VRIKSHAYURVEDA TRADITIONAL PLANT PROTECTION SYSTEM
- விருக்ஷாயுர்வேதம் என்றால் தாவர ஆயுர்வேதம்.
- அதாவது தாவரங்களுக்கும் பயிர்களுக்குமான வைத்திய நூல்.
- அர்த்தசாஸ்திரம் எழுதிய கௌடில்யர்தான் அந்த பெயரை முதன் முதலில் நாமகரணம் செய்தவர். வராஹமிஹி;ரா என்பவர், ப்ரஹத்; சம்ஹிதா என்ற பெயரில் முதன்முதல் ஒரு புத்தகம் எழுதி தாவர வைத்தியத்திற்கு பிள்ளையார் சுழி போட்டார்.
- சுரபலா மற்றும் சவுந்தர்யா என்ற இருவர் 11 மற்றும் 12 ஆம் நுற்றண்டுகளில், பற்றிய இரண்டு நூல்களை இதுபற்றி எழுதினர்.
- சாளுக்கிய அரசர் சோமேஷ்வர்தேவா இதையே கொஞ்சம் விஸ்தாரமாக ஒரு கலைக் களஞ்சியமாக தொகுத்தார்.
- அதன் பெயர் மானசொல்லாசா
- 12 ஆம் நூற்றாண்டில் இது எழுதப்பட்டது.
- இவற்றின் தொடர்ச்சியாக உபவனவினோதா என்ற பெயரில், சாரங்கதாரா என்பவர் தோட்டக்கலை பற்றி எழுதினார். அவர், ஹம்மிரா அரசனின் அரசவை அறிஞர் (COURTIER).
- 1577 கி.மு. ல் சக்ரபாணி மிஸ்ரா என்ற அறிஞர் விஸ்வவல்லபாஎன்ற பெயரில் எழுதியதும் சுரபலா எழுதியது மாதிரிதான். ஆனால் இதில் கூடுதலான தகவல்கள் இருந்தன. இவர் மவறாராஜா மவறாராணா பிரதாப்என்பவரின் அரசவை அறிஞர்.
- சிவதத்வரத்னாகரா என்ற கன்னட நூலை தொகுத்தவர் மகாராஜா பசவராஜா. தற்போது கர்நாடகாவிலுள்ள கேளடி என்ற பகுதியில் ராஜாவாக இருந்தவர். இந்த நூலின் ஒரு அத்தியாயம் முழுக்க விருக்ஷாயூர்வேதம்தான்;.
- இதுதான் விருக்ஷாயூர்வேதம் குறித்த ஒரு சின்ன சரித்திரம்.
- என்னவெல்லாம் இந்த தாவர ஆயூர்வேதத்தில் சொல்லப் பட்டிருக்கிறது ?
- நிலத்தடிநீர்; கண்டுபிடித்தல், மரங்கள் வளர்க்க இடைவெளி, பயிர்ப் பரவல் முறை, நடவுக்குழிகளின் அளவு, விதைநேர்த்தி, பயிர்களுக்கு ஊட்டச்சத்து அளித்தல், பயிர்ப் பாதுகாப்பு, இத்துடன் தொடர்புடைய செய்திகள்தான், விருக்ஷாயூர்வேதத்தின் பொருளடக்கம்.
4.1. தாவர இயற்கை வைத்தியம்
- விருட்சாயுர்வேதம், நம் சித்த மருத்துவம் மாதிரி இதுவும் ஒரு இயற்கை வைத்தியம்.
- ஆனால் இது தாவரங்களுக்கான பழமையான வைத்திய முறை.
- இது தாவரங்களை தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும்.
- நமது முன்னோர்கள் எழுதிய விருட்சாயூர்வேதம் குறித்த நூல்களில் அது தயாரிக்கும் முறைகள் தரப்பட்டுள்ளன.
- சமீப காலத்தில் இயற்கை விவசாயத்தில், பஞ்சகவ்யம் பிரபலமான உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து.
4.2. பஞ்சகவ்யம் (PANCHAKAVYAM)
- பசுவிலிருந்து கிடைக்கும், சாணம், கோமியம், பால், தயிர், நெய், ஆகிய ஐந்து பொருட்களிலிருந்து தயாரிக்கப் படுவதுதான் பஞ்சகவ்யம்.
- இது உரத்திற்கு உரமாகும், மருந்துக்கு மருந்தாகும்.
- இதனை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
4.3. தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்
1. சாணக்கரைசல் --- 500 மி;லி
2. கோமியம் … 300 மி;லி
3. பசும்பால் …. 200 மிலி
4. தயிர் … 200 மிலி
5. நெய் … 100 மி;லி
6. மஞ்சள் வாழைப்பழம் … 2
7. இளநீர் … 300 மிலி
மொத்தம் …. 1200 மி;லி
4.4. தயாரிப்பு முறை
- மேலே குறித்துள்ள 7 பொருட்களையும் ஒரு மண்பானையில் போட்டு, நன்றாக கலந்து, 10 நாட்களுக்கு திறந்தே வைத்து, தினமும் நன்கு கலக்கி வந்தால் 11 வதுநாள் பஞ்ககவ்யம் தயாராகிவிடும்.
- பஞ்சகவ்யம் 500 மில்லிக்கு 10 லிட்டர் நீர் என்ற அளவில் கலந்து பயிரில் தெளிக்கலாம்.
- இதனை உரமாகவும், பூச்சி மற்றும் பூசணக் கொல்லி மருந்தாகவும் உபயோகப்படுத்தலாம்.
- பஞ்சகவ்ய கரைசலை நெல் பயிரில் தெளிக்க, இலைப்புள்ளி நோய் அற்புதமாகக் கட்டுப் படும். இதற்கு 50 மில்லி பஞ்சகவ்யத்தை 1 லிட்டர் நீரில் நன்கு கரைத்துத் தெளிக்க வேண்டும்;.
4.5. குணபஜலா (GUNABAJALA)
- குணபஜலா, பஞ்சகவ்யம் இரண்டும் விருக்ஷாயூர்வேதத்தின் பிரபல தயாரிப்புகள். பயிர்களின் வளர்ச்சி, பூப்பு, காய்ப்பு, பயிர்பாதுகாப்பு ஆகியவற்றிற்கு அற்புதமான இயற்கையின் ஆயுதம் குணபஜலா.
- தேவைப்படும் பொருட்கள்
1. முட்டை 3
2. எலும்புத்தூள் 50 கிராம்
3. தவிடு 100 கிராம்
4. பிண்ணாக்கு 100 கிராம்
5. உளுந்துமாவு 50 கிராம்
6. சாணம் 1 கிலோ
7. கோமியம் 1.5 லிட்டர்
8. தேன் 25 கிராம்
9. நெய் 25 கிராம்
10. பால் 100 மிலி
4.6. தயாரிப்புமுறை
- 3 முட்டை, 50 கிராம் எலும்புத்தூள், 100 கிராம் தவிடு, 100 கிராம் பிண்ணாக்கு, 50 கிராம் உளுந்து மாவு, ஆகிய ஐந்து பொருட்களை 500 மில்லி நீருடன் கலந்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி அதனை குளிர வைக்கவும்.
- பின்னர் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட பாத்திரத்தில் இட்டு, அத்துடன் 1 கிலோ சாணம், 1.5. லிட்டர் கோமியம், 25 கிராம் தேன், 25 கிராம் நெய் மற்றும் 100 மில்லி பால் சேர்த்து மொத்த கொள்ளளவு 10 லிட்டர் வருமாறு நீர் சேர்க்கவும்.
- பாத்திரத்தை ஒரு துணியினால் வேடுகட்டி, மூடி ஒரு நாள் வைத்திருக்கவும். இந்த கால கட்டத்தில் காலை மாலை இருமுறை பாத்திரத்தில் உள்ள கலவையை நன்கு கலக்கிவிட வேண்டும்.
- பின்னர் அத்துடன் மீண்டும் 10 லிட்டர் நீர் கலந்தால் கரைசல் 20 லிட்டராகும். இதனை நன்;கு வடிகட்டி வயலில் தெளிக்கலாம்.
- காற்றுப் புகாத இன்னொரு முறையிலும், இதனை தயாரிக்கலாம்.
- ஏற்கனவே சொன்னதுபோல, கலவையை தயார் செய்து பாத்திரத்தை ஒரு மூடியினால் மூடி தரைக்குள்; புதைத்து வைக்க வேண்டும்.
- பின்னர் அதனைத் தோண்டி எடுத்து அத்துடன் 10 லிட்டர் நீர் சேர்த்தால் 20 லிட்டர் குணபஜலா கிடைக்கும்.
- இதனை நன்கு வடிகட்டி பயிரில் தெளிக்கலாம்.
- இந்த குணபஜலா கலவையை 3 மாதங்களுக்குமேல் கூட புதைத்து வைத்திருந்து, பின்னர் எடுத்தும் பயன்படுத்தலாம்.
- முட்டைக்கு பதில்
- முட்டைக்கு பதில் இறைச்சி என்றால் 200 கிராம். (அ) சோயா மொச்சை 100 கிராம். ( அ ) மீன்தூள் 200 கிராம் (அ) பாலாடைக்கட்டி 200 கிராம், என்ற அளவில் பயன்படுத்தலாம்.
- குணபஜலா, பஞ்சகவ்யம் அளவுக்கு விவசாயிகள் மத்தியில் பரவவில்லை. ஆயினும் அதற்கு சமமான சக்தி படைத்தது குணபஜலா என்கிறார்கள்.
No comments:
Post a Comment