நீலப்பச்சை பாசி - அசோலா
USE NEELAPPACHAIPASI & AZOLLA
- நீலமும் பச்சையும் கலந்த கலவையான பாசி நீலப்பச்சைப்பாசி.
- சயனோ பாக்டிரியா – என்னும் பாக்டீரியா குடும்பத்தின் ஒரு அங்கத்தினர்.
- நைட்ரோஜினேஸ் (NITROGENASE) என்னும் என்சைம் தூண்டிலைப் போட்டு, வானவெளி நைட்ரஜனை, வளைத்துப் பிடிக்கிறது.
- பிடித்த நைட்ரஜனை அப்படியே மண்ணில் சேர்க்கிறது.
- மண்ணில் சேர்ந்த நைட்ரஜனை பயிர்கள் பகுமானமாய் உணவாகக் கொள்ளுகின்றன.
- நைட்ரஜன் நிலைப் படுத்துதல் (NITROJEN FIXATION) என்று இதைத்தான் சொல்லுகிறோம்.
- நெல் நடவு செய்த வயலில் 10 நாட்களுக்குள் 4 கிலோ நீலப்பச்சை பாசியை இடுங்கள்.
- அது ஒரு எக்டரில் 25 கிலோ நைட்ரஜனை மண்ணில் சேர்க்கும்.
- நீ.பா இட்ட வயலில் எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்க வேண்டும்.
- இது ஒரு பாசியினால் பின்னிய பாய் போல வயல் நீரில் மிதந்து கொண்டிருக்கும்.
- சுள்' ளென்று வெயில் அடிக்கும் பருவத்தில் நீலப்பச்சை பாசி போஷாக்காய் வளரும்.
- நெல் விவசாயிகளுக்கு நீலப்பச்சைப் பாசி ஒரு பாதுகாப்பான இயற்கை உரம்.
அசோலா
- அசோலா ஒரு இரட்டைவால் குருவி
- நெல் வயலில் போட்டால் அசோலா ஒரு இயற்கை உரம்
- கறவை மாட்டுக்கு போட்டால் அசோலா ஒரு அசத்தலான தீவனம்
- கையளவு நிலமும் கைப் பிடியளவு அசோலாவும்இ இருந்தால் நாமே அசேலாவை தயாரிக்கலாம்.
- இதற்காக கடைக்குப்போய் காசு கொடுத்து கைநீட்ட வேண்டாம்.
- வியட்நாம் நாட்டில் முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது அசோலா.
- உரமாக அறிமுகமான அசோலா இன்று உலகம் முழுவதும் பிரபலமான கால்நடைத் தீவனம்.
உனக்கு நான் எனக்கு நீ
- இருபது நாட்கள் வளர்ந்த அசோலாவை வயலில் மிதித்து விட வேண்டும்.
- முதல் களையெடுப்பின் போது இதனைச் செய்யலாம்
- அசோலா தண்ணீரில் வளரும் பெரணி.
- அனாபீனா என்னும் நீலப்பச்சை பாசி தங்கி இருக்க அசோலா இடம் தருகிறது.
- அனாபீனாவும் அசோலாவும் உனக்கு நான் எனக்கு நீ என வாழ்கின்றன.
- அனாபீனாவுக்கு வாடகை வாங்காமல் இருக்க இடம் தருகிறது. அசோலா.
- அது மட்டுமின்றி அறுசுவை தாது உப்புக்களும் வழங்குகிறது.
- இதற்கு கைமாறாக அனாபீனா காற்றில் இருக்கும் நைட்ரஜன் சத்தை அமுக்கிப் பிடித்து அசோலாவுக்குத் தருகிறது.
- தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறட்டும் என்று அசோலா நைட்ரஜன் சத்தை பயிர்களுக்கு வழங்குகிறது.
- சத்துக்கள் விவரம்
- தழைச்சத்து 5 – 6 சதம்.
- மணிச்சத்து 0.5 –0.9 சதம்.
- சாம்பல்சத்து 2.0 – 4.5 சதம்
- கால்சியம் 0.4 –1.0 சதம்.
- மக்னீசியம் 1.5 – 0.65 சதம்
- இரும்பு 0.06 –0.26 சதம்.
- மாங்கனீசு 0.11 0.26 சதம்.
- கொழுப்பு 3.3 –3.6 சதம்.
- புரதம் 35 –50 சதம்.
- மாவுப்பொருள் 6.54 சதம்
- கரையும் சர்க்கரை 3.5 சதம்.
- சாம்பல் 5.4 10.5 சதம்
- பச்சையம் 0.4 - 0.75
- இதில் உள்ள சத்துக்களை கவனித்தால் கால்நடைத் தீவனமாக பிரபலமான ரகசியம் புரியும்.
- கறவை மாடுகளுக்கு அளித்தால் 15 முதல் 20 சதம் பால் உற்பத்தியை அதிகரிக்கும்
- ஒரு முறை உபயோகப்படுத்தினால் போதும் பிறகு யாரும் மறக்க மாட்டார்கள் அசோலாவை மறக்கமாட்டார்கள்.
நீலப்பைசைப்பாசி (Image Courtesy: Thanks Google) |
2 comments:
மேலும் அசோலா பற்றி அறிய என்ன செய்வது
9597140543
மேலும் நீங்கள் அறிய வேண்டுவது என்ன ? என்னிடம் பேசுங்கள். எனது தொலைபேசி எண் : 8526195370 - ஆசிரியர், விவசாய பஞ்சாங்கம்.
Post a Comment