Tuesday, May 31, 2016

பசுந்தாள் உரங்களை பயன்படுத்தி மண்ணின் அங்ககச்சத்தினை கூட்டுங்கள் - USE GREEN MANURES TO INCREASE HUMUS


பசுந்தாள் உரங்களை 

பயன்படுத்தி மண்ணின் 

அங்ககச்சத்தினை 

கூட்டுங்கள் 

 - USE GREEN MANURES

TO INCREASE

HUMUS IN SOIL

  • தன்னை முழுவதுமாக இன்னொரு பயிருக்கு உரமாக தரும் பயிர்களுக்கு பசுந்தாள் உரங்கள் என்று பெயர், 
  • தனது வேர், தண்டு, இலை தழை என்று தன்னையே தியாகம் செய்கின்றன இவை.
  • இவை முக்கியமாக இரண்டு காரியங்களைச் செய்கின்றன.
  • ஒன்று, பயிர்களுக்கு தேவையான அங்ககச் சத்தையும் ஊட்டச்சத்துக்களையும் அளிக்கிறது. 
  • இரண்டு, பயிருக்கு கிடைக்காத நிலையில் உள்ள சத்துக்களை கிடைக்கும்படி செய்யும் நுண்ணுயிர்களுக்கு உறங்க இடமும் ஊண்ண உணவும் அளிக்கின்றன.
  • இந்த பசுந்தாள் உரங்கள் அனைத்தும் வேர்களில் வேர்முடிச்சுகளை உருவாக்கும் அவரை குடும்பத்தைச் சேர்ந்தவை. 
11. மணிலா அகத்தி ( SESBANIA ROSTRATA)
  •      மணிலா அகத்தி ஒரு பசுந்தாள் உரப்பயிர்.
  •      வேர், தண்டு என இரண்டிலும் வேர் முடிச்சுக்களை உடையது.
  •      குறைவான காலத்தில் அதிகமான பசுந்தாள் உரத்தை தரக்கூடியது.
  •      பல நாடுகளில் இதனை பசுந்தாள் உரமாக பயன்படுத்துகின்றனர்.
  • இதன் தாவரவியல் பெயர் செஸ்பேனியா  ரோஸ்ட்ரேட்டா( SESBANIA        ROSTRATA)
  •      இதனை தமிழில் மணிலா அகத்தி என்றழைக்கிறார்கள்.
  •      களர், உவர் நிலங்கள் இதற்கு ஏற்றதல்ல.
20 டன் பசுந்தாள் உரம்
  • பருவம்: வெப்பமான பகுதிகளுக்கு ஏற்றது.
  • விதைப்பு: விதைகளை சுடுநீரில் முக்கி எடுத்து கடினத் தன்மையை போக்கி விதைக்கலாம்.
  • சீராக நெருக்கமாக விதைகளை விதைக்க வேண்டும
  • விதை அளவு: பசுந்தாள் உரமாக பயன்படுத்த, எக்டருக்கு 40 கிலோ விதை தேவை.
  • கரணைகள்: குச்சிகளை கரணைகளாகவும் நடவு செய்யலாம்.
  • மறுதாம்பு: மறுதாம்பாகவும்; பயிரிடலாம்.
  • 10 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
  • மகசூல: ஒரு எக்டரில்; 20 டன் பசுந்தாள் உரம.


சிறப்புகள்:
  • கூடுதலான வேர் முடிச்சுக்களை உருவாக்குகிறது.
  • கூடுதலான தழைச்சத்தை நிலைப் படுத்துகிறது.
  • இதிலுள்ள கச்சாப்புரதம் (RAW PROTEIN).
  • பயன்படுத்தத் தயார் நிலையில் உள்ளது. 
  • உபரி தகவல்கள்
  • முதன் முதலாக –பசுந்தாள் உரமாக கண்டறிந்தவர்கள செனிகல். நாட்டினர்.
  • பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள சர்வதேச நெல் ஆராய்ச்;சி நிலையம், 1980 ஆம் ஆண்டு இதனை வெளியிட்டது.
  • இதன் சொந்த ஊர்  ஆப்பிரிக்காவிலுள்ள செகல்.
சித்தகத்தி

12. சித்தகத்தி (SESBANIA SPECIOSA)
  • பருவம்: எல்லா பருவங்களும்
  • மண்வகை: எல்லா மண்வகைகளும்.
  • விதை அளவு: 20 முதல் 40 கிலோ.
  • தாவரவியல் பெயர்: செஸ்பேனியா ஸ்பீஸியோசா. (SESBANIA SPECIOSA )

  • இடைவெளி: சீராக நெருக்கமாக விதைக்க வேண்டும்.
  • பாசனம்: 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை.
  • அறுவடை: பசுந்தாள் உரமாக பயன்படுத்த 40 முதல் 60 நாள்.
  • மகசூல: பசுந்தாள் உரம் 1 வெறக்டருக்கு  15 முதல் 18 டன்.
தக்கைப்பூண்டு
13. தக்கைப்பூண்டு  (DAINCHA)
  • ஏற்ற பருவம்:  எல்லா பருவங்களிலும் பயிரிடலாம்.
  • மண்வகை: எல்லாவிதமான மண் வகைகளும் ஏற்றவை.
  • விதைப்பு: சீராக நெருக்கமாக விதைக்க வேண்டும.;                                       
  • பாசனம்: 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை.
  • அறுவடை: 40 முதல் 60 நாட்களில்.
சணப்பை
14. சணப்பை (SESBANIA)
  •  பருவம்: எல்லா பருவங்களிலும் பயிரிடலாம்.
  • மண்வகை: இருமண் பாடான மண் மிகவும் ஏற்றது.
  • தாவரவியல் பெயர்: குரோட்டலேரியா ஜன்சியா.  (CROTALARIA JUNCEA)
  • விதையளவு: 1 எக்டருக்கு 25 – 35 கிலோ.    
  • விதை நேர்த்தி: 5 - பாக்கெட ரைசோபியம் நுண்ணுயிரை விதையுடன்     கலந்து விதைக்க வேண்டும்.
  • இடைவெளி: நெருக்கமாக மற்றும் சீராக .   . விதைக்க வேண்டும்.
  • பாசனம்: 30 நாட்களுக்கு ஒரு முறை.
  • அறுவடை: விதைத்த 45 – 60 வது நாள் மடக்கி உழவு செய்ய     வேண்டும்.
  • மகசூல்: ஒரு எக்டருக்கு 13 – 15 டன்.
பில்லிபயறு

     15. பில்லி பயறு. (PILLEPHESERA)
  • அற்புதமான பசுந்தாள் உரம். அருமையான கால்நடை தீவனம்.
  • இது கொடி வகை பசுந்தாள் உரம.;
  • தாவரவியல் பெயர்:பேசியோலஸ் ட்ரைலோபஸ்( PHASEOLUS TRILOBUS )
  • பருவம்: எல்லா பருவங்களிலும் 
  • மண்: நெல் தரிசு மற்றும் களிமண் 
  • விதையளவு: ஒரு எக்டருக்கு 10 – 15 கிலோ.   
  • இடைவெளி: சீராக நெருக்கமாக விதைக்க வேண்டும்.
  • பாசனம்:25 – 30 நாட்களுக்கு ஒரு முறை.
  • அறுவடை: விதைத்த 60 ஆம் நாள் மடக்கி உழவு செய்வதற்கு முன் 2 அல்லது 3 முறை கொடிகளை வெட்டி பயன்படுத்தலாம்.
  • மகசூல:1 எக்டருக்கு  6  முதல் 7 டன்.
அவுரி

16. அவுரி (WILD INDICO)
  • கால்நடைகளால் மேயாதது.
  •  இரண்டு முதல் நான்கு பருவங்களில் விதைத்தால் போதும். 
  •  பிறகு தானாக முளைத்துவிடும்.
  •  இது வறட்சியை தாங்கும்.
  •  கோடை தரிசில் விதைக்கலாம்.
  •  தாவரவியல் பெயர்:  டெப்ரோசியா பர்புரியா (TEPROSIA PURPUREA)
  •  பருவம்: எல்லா பருவங்களும்.
  • மண் வகை: மணற்பாங்கான மண்ணைத்தவிர மற்ற எல்லா மண் வகைகளும்.
  • விதையளவு: எக்டருக்கு 15 – 20  கிலோ.     
  • விதை நேர்த்தி: வெது வெதுப்பான நீரில் 15 – 20 நிமிடம் விதைகளை ஊறவைத்து விதைக்க வேண்டும்.
  • இடைவெளி: நெருக்கமாகவும் சீராகவும் விதைக்கவும்.
  • பாசனம்: 30 நாட்களுக்கு ஒரு முறை.
  • அறுவடை: விதைத்த 60 நாட்களுக்குள்.
  • மகசூல்: ஒரு எக்டருக்கு 6 – 7 டன்.  
 Images Courtesy: Thanks Google

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...