Tuesday, May 31, 2016

அசட்டோ பேக்டர் & அசோஸ்பைரில்லம் உயிரியல் உரங்கள் - USE AZATOBACTOR AND AZOSPYRILLUM


அசட்டோ பேக்டர் & அசோஸ்பைரில்லம் 

உயிரியல் உரங்கள்

AZATOBACTOR AND AZOSPYRILLUM 

LEARN TO USE BIO FERTILIZERS -

 

  • அசட்டோ பேக்டர் ஒரு விதமான நுண்ணுயிர்.
  •     காற்றிலுள்ள நைட்ரஜன் சத்தை நிலைப் படுத்துகிறது.
  •      பயிர்கள் எடுத்துக் கொள்ளுமாறு   நைட்ரஜனை மாற்றித்      தருகிறது.
  •      மண்ணின் வளத்தை கூட்டுகிறது.
  •      பயிரின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
  •      அமில மண்ணைத் தவிர இதர மண் வகைகளில் நல்ல பயனைத் தரும்.
  •      மானாவாரி நிலங்களில்  24  ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கும்.
  •      தனித்து வாழும்  தன்மை உடையது.
  •      என்சைம்கள் உதவியுடன் நைட்ரஜன் -ஐ  நிலைப்படுத்துகிறது.
  •      காட்மியம், மெர்க்குரி, லெட், ஆகியவற்றிலிருந்து      மண்ணைப்       பாதுகாக்கிறது.  
  •      மருந்து தயாரிப்பு மற்றும் உணவு தயாரிப்பில், உதவுகிறது.
  •      அறிவியல் பெயர்: அசட்டோபேக்டர் குருகாக்கம்.
  •      தாவரகுடும்பம்: அசட்டோபேக்ட்டரேசியே
  •      டச்  நாட்டின் விஞ்ஞானி –மார்ட்டீனஸ் பீஸரின்த் என்பவர் முதன்முதலாக இதனைக் கண்டுபிடித்தார்.
  •     விவசாயிகளிடையே பிரபலமாக விளங்கும் உய்pர் உரம்.
  •     காற்றில் உள்ள நைட்ரஜன்; சத்தை கிரகித்துக் கொடுக்கும் அற்புதம்.
  •      மானாவாரி மற்றும் புழுதிகால் பயிர்களுக்கு       வறட்சியை தாங்கும் சக்தியைக் கொடுக்கும்.
  •     இந்த நுண்ணுயிர் பயிரின் வேர் மீது தனது வீட்டை அமைத்துக் கொள்ளும்.
  •    அங்கிருந்தபடி நைட்ரஜனை இழுத்துப் பிடித்து பயிர்களுக்கு தரும்
  •    விதை நேர்த்தி
  •   அரிசி கஞ்சி 3 லிட்டர் ஐ  தயார் செய்யுங்கள்.
  •    தயார் செய்த அரிசி கஞ்சியை ஆற வையுங்கள்.
  •    ஒரு எக்டருக்கான 3 பாக்கெட் ( 600 கிராம். ) அசோஸ்பைரில்லம் தேவை.
  •  ஆறிய அரிசி கஞ்சியுடன் 600 கிராம் அசோஸ்பைரில்லம் சேர்த்துக் கலக்குங்கள்.
  •  இந்த கலவையுடன்  ஒரு ஏக்கருக்கான  100 கிலோ நெல் விதைகளைப் போடுங்கள்.
  • விதைகளின் மீது இந்தக் கலவை நன்கு பூசிக்கொள்ளும் வகையில் கலக்குங்கள்.
  • இப்படி விதை நேர்;த்தி செய்த விதைகளை 30 நிமிடம் நிழலில் உலர்த்துங்கள்.
  • நிழலில் உலர்த்திய பின்னர் உடனடியாக விதையுங்கள்.
  • இதனால்; பயிர்கள் வறட்சியைத் தாங்கும்.
  • மேலும் தழைச்சத்தையும் நிலைப்படுத்தும்.
  • நெல் நடவு வயலில் இடும் முறை
  • ஒரு எக்டருக்கான 600 கிராம் அசோஸ் பைரில்லத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அதனை தொழு உரத்துடன் கலந்து ஒரு எக்டர் நிலப்பரப்பில்        சீராகத் தூவுங்கள்.
  • பாக்கெட்டுகளை பார்த்து வாங்குங்கள்.  
  • அசோஸ்பைரில்லம் பாக்கெட்டுக்களை வாங்கும்போது   காலாவதி ஆனதா ?  என்று பார்க்கவும்.
  • எந்த தேதிவரை அதனை உபயோகிக்கலாம்? –என்பதை பாருங்கள்.
  • கிழிந்துபோன, நைந்துபோன பாக்கெட்டுக்களை வாங்காதீர்கள்.
  • இதர பயிர்களுக்கு
  •  காய்கறி பயிர்களுக்கும் விதைநேர்த்தி செய்யலாம்.
  •   நாற்றின் வேரில் நனைத்து நடலாம்.
  •   நடவு வயலில் இடலாம்.
  •   பழமரக் கன்றுகளுக்கு 2 முதல் 5 கிலோ இடலாம்.
  •   வளர்ந்த மரங்களுக்கு 5 முதல் 10 கிலோ இடலாம்.
  •   அசோஸ்பைரில்லத்தை இதர நுண்ணுயிர் உரங்களுடன் சேர்த்து இடலாம்.
  •    மறந்தும் ரசாயன உரங்களுடன் சேர்த்து இடக்கூடாது.

22. அசிட்டோபெக்டர்  (யுஉநவழடியஉவநச) அல்லது கருப்பு யூரியா
  • இது தனித்து செயல்படும்.
  • கருப்பு யூரியா என்பது இதன் செல்லப் பெயர்.
  • இது கரும்பு மகசூலை 3 முதல் 5 டன் கூடுதலாக்கும்.
  • இது கரும்புக்கு மட்டுமே சிபாரிசு செய்யப் படுகிறது. 
  • கரணை நேர்த்தி
  •   அசிட்டோபேக்டர் 5 கிலோ எடுத்துக் கொள்ளுங்கள்.
  •    அதனை 100 லிட்டர் தண்ணீருடன் கலக்குங்கள்.
  •    இந்த கரைசலில் ஒரு ஏக்கருக்கான கரும்புக் கரணைகளை முக்கி எடுக்கவும்.
  •  முக்கி எடுத்த கரணைகளை; உடன்  நடவு செய்யலாம்.

  • கரும்பு நடவு வயலில்
  • ஒரு ஏக்கருக்கு 5 கிலோ அசிட்டோபேக்டரை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அதனை 10 லிட்டர் நீரில் கரைத்துக் கொள்ளுங்கள்.
  • இந்த கரைசலை 70 முதல் 80 கிலோ தொழு உரத்துடன்     நன்கு கலக்குங்கள்.
  • இந்தக் கலவையை கரும்புக் கரணைகளின் மீது நட்டபின் தூவுங்கள். 

அசிடொபேக்டர் (Image Courtesy: Thanks Google)


No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...