இதர வகை பயிர்பாதுகாப்பு முறைகள்
OTHER ORGANIC PLANT PROTECTIONS
அடுப்பு சாம்பல்
- அடுப்பு சாம்பல்தூள் அல்லது உலர்ந்த சாணத்துகளை காலைநேரத்தில் பனிஈரத்தில் தூவி அவரை அசுவணியைக் கட்டுப் படுத்தலாம்.
- 75 முதல் 100 கிராம் காகிதப்பூச்செடியின் இலை அல்லது வெற்றிலை இலைகளை இடித்து ஒரு லிட்டர் நீரில் ஒரு இரவு ஊரவைத்து அடுத்தநாள் இலைக் கரைசலை வடித்து எடுத்து காய்கறிப் பயிர் நாற்றங்காலில் தெளித்து நாற்றழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
- 100 கிராம் புளியன் இலைகளை இடித்து 1 லிட்டர் நீரில் கலந்;து 24 மணிநேரம் ஊரவைத்து வடித்து அத்துடன் 4 மில்லி காதி சோப்புக் கரைசலை சேர்த்து நன்கு கலக்கி கைத்தெளிப்பான் கொண்டு மாலை வேளையில் நாற்றங்காலில் தெளித்து தக்காளி நாற்றழுகல் நோயைத் தடுக்கலாம்.
- தக்காளிப் பயிரைத் தாக்கும் புள்ளி வாடல் நோயைத் தடுக்க சிறந்தது.
- இதற்கு 100 கிராம் தென்னை ஓலைகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு ஒரு லிட்டர் நீரில் இட்டு 24 மணி நேரம் ஊர வைத்து பின்னர் கரைசலை வடிகட்டி 4 மில்லி காதி சோப்புக் கரைசல் சேர்த்து, கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.
மீன்எண்ணெய்
- மீன்எண்ணெய் திரவசோப் ஒரு கிலோவை ஐம்பது லிட்டர் நீரில் கலந்து தெளித்து மல்லிகை செதில் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.
கண்ணிப்பயிர்
- தட்டைப்பயறு
- நிலக்கடலையுடன் தட்டைப்பயறு பயிரை சேர்த்து விதைப்பதால் தத்துப்பூச்சி இலைப் பேன் மற்றும் அசுவணிப் பூச்சிகள் நிலக்கடலையை தாக்குவது குறையும்.
- இந்தப்பூச்சிகள் அனைத்தும் தட்டைப்பயறு பயிரைத் தாக்கும். நிலக்கடலை தப்பித்துக் கொள்ளும்.
- செண்டுமல்லி
- கோலியஸ் மருந்து பயிரில் வேர்முடிச்சு நூற் புழுக்கள் மகசூலைக் குறைத்துவிடும்.
- இந்த வயல் வரப்புகளில் ஊடுபயிராக செண்டுமல்லியை பயிரிடுவதால், இதன் வேர்களிலிருந்து சுரக்கும் ஒருவகை திரவம் இந்த வேர்முடிச்சு நூற்புழுக்களை அழித்துவிடும்.
- இதே போல் செங்காந்தள் பயிரிடும் வயலில் செண்டுமல்லி பயிர் செய்வதால், இதனைத் தாக்கும் கொண்டைக் கருகல் என்னும் நச்சுயிர் நோயையும் வராமல் தடுக்கலாம்.
- இரவு நேரத்தில் வயலில் விளக்குப் பொறி வைத்து நிலக்கடலை சுருள் பூச்சிகளின் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
- இதனால் சுருள் பூச்சியின் தாக்குதலை கணிசமான அளவில் குறைக்க முடியும்.
- 8 முதல் 10 கிலோ எருக்கன் இலைகளை ஒரு பாத்திரத்தில் இட்டு, அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, 24 மணி நேரத்திற்கு, ஊறவைத்து வடிகட்டி அதனைத் தெளிப்பதன் மூலம் கரையானை தடுக்கலாம்.
பெருங்காயம்.
- பழ மரங்களின் வேர்ப்பகுதியில், பெருங்காயத்தூளை இடுவதன் மூலம், பூக்கள் மற்றும் காய்;கள் உதிர்வதைத் தடுக்கலாம்.
- இரண்டு நாட்களுக்கு முன் சேகரித்த பசுமாட்டின் கோமியம் ஒரு லிட்டருடன் 5 லிட்டர் தண்ணீர் சேர்த்த கரைசலில், முளைவிட்ட 35 கிலோ நெல் விதைகளை 30 நிமிடம் ஊற வைத்து 15 நிமிடம் நிழலில் உலர்த்தி விதைக்க, அந்த நெற்பயிர் இலைப்புள்ளி நோய்க்கு எதிர்ப்புத்திறன் பெறும்.
- கோமியத்தின் அளவு ஊறவைக்கும் நேரம் ஆகியவற்றை அதிகரித்தால் விதைகளின் முளைப்புத் திறன் பாதிக்கும்.
- ஒரு லிட்டர் பாலுடன், 5 லிட்டர் தண்ணீர் கலந்து, அதில் 35 கிலோ முளைவிட்ட நெல் விதைகளை முக்கி வைத்து 30 நிமிடம் ஊறவைத்து, பின் நிழலில் உலர்த்தி விதைப்பதன் மூலம், அந்த பயிருக்கு துங்ரோ நோயைப் பரப்பும் பச்சை தத்துப் பூச்சிகளை எதிர்க்கும் சக்தி கிடைக்கும்.
- புகையிலை நாற்றுக்களை நடுவதற்கு முன், பாலில் விதைகளை நனைத்து நடுவதனால் தேமல் நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது என்பது ஆந்திரா விவசாயிகளின் அனுபவம்.
- 250. கிராம் வசம்புத் தூளை 3 லிட்டர் நீரில் கரைத்து தயாரித்த கரைசலில் 5 லிட்டர் தண்ணீர் சேர்த்து அதில் 35 கிலோ நெல் விதைகளை 30 நிமிடம் ஊறவைத்து பின் 10 நிமிடம் நிழலில் உலர்த்தி விதைப்பதால், அந்த பயிர் நோய்களுக்கான எதிர்ப்புசக்தியை பெறுகிறது.
வசம்பு-பூண்டு-ஆரஞ்சுஇலை
- வசம்பு – பூண்டு – ஆரஞ்சு இலை --- இவற்றின் தூளை, சம அளவு 5 கிராம் கலந்துகொண்டு, அத்துடன் 10 மில்லி கடலையெண்ணெய் ( அ ) விளக்கெண்ணெய் சேர்த்து, சேமிக்கப்படும் 1 கிலோ தானிய பருப்புடன் கலந்து வைத்தால், பூச்சிகள் எதுவும் அருகில் வராது.
- இந்த முறை பழங்குடி மக்களின் பழக்கத்தில் இன்றும் உள்ளது.
No comments:
Post a Comment