இயற்கை விவசாயம்
வேம் மற்றும் இஎம்
உயிர் உரங்கள்
ORGANIC
VAM & EM
BIO MANURES
வேம் - வெஸிக்குலர் அர்பஸ்குலர் மைக்கொரைசா
- தாவரங்களின் வேர்ப் பகுதியில் உண்டு உறங்கி உருப்படியான காரியங்களை ஆற்றுகிறது.
- வேம்(VAM) என்பது இதன் சுருக்கமான பெயர்.
- வெஸிக்குலர் அர்பஸ்குலர் மைக்கொரைசா (VESICULAR ARBUSCULAR MYCORHIZA)
- தாவரங்களின் வேர்களுக்கும் மண்ணிற்குமிடையே பாலமாக பணி செய்கிறது.
- பயிர்சத்துக்களை எடுத்துக் கொள்ள உதவியாக இருக்கிறது.
- மணிச்சத்து தரக்கூடிய – பாஸ்பரஸ் என்னும்; கந்தக சத்தை எடுத்துக் கொள்ள உதவுகிறது.
- பாஸ்பரஸ் சத்து குறைவாக உள்ள நிலங்களில் பசுமைப் பொருட்களை ( BIOMASS ) மேம்படுத்த உதவுகிறது.
- மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்த “ வேம் “ உதவுகிறது.
- வேர்களைத் தாக்கும் பூசண நோய்களைக் கட்டுப்படுத்துகிறது.
- நூற்புழுக்களின் தாக்குதலைக் குறைக்கிறது.
- வேர்த் தூவிகளின் எண்ணிக்கையைக் கூட்டுகிறதுஇ
- வேர்ப் பரப்பினை அதிகரிக்கிறது.
- வறட்சியைத் தாங்கும் சக்தியை அளிக்கிறது.
- இவை அடுத்தடுத்த பயிர்களுக்கும் தொடர்ந்து கிடைக்கும்.
- நெல் போன்றஇ தேங்கி நிற்கும் தண்ணீரில் வளரும் பயிர்களுக்கு இது உதவாது.
- இரும்பு மற்றும் துத்தநாக சத்துக்களையும் இது பயிர்களுக்கு எடுத்துத் தருகிறது.
இ.எம். வீரிய நுண்ணுயிர் கூட்டுரம் (EFFECTIVE MICRO ORGANISM)
- வீரிய நுண்ணுயிர் கூட்டுரம்
- நுண்ணுயிர்களின் சகல கலா வல்லவன்.
- நமக்கு அறிமுகம் ஆன மற்றும் அறிமுகம் ஆகாத –நுண்ணுயிர்களின் கூட்டு இது.
- விவசாயம் கால்நடை வளர்ப்பு மீன் வளர்ப்பு கழிவுநீர்க் குழாய்களை சுத்தம் செய்ய குப்பைக் கூலங்களை விரைவாக மக்க வைக்க இது ஒரு வரப்பிரசாதம்.
- இஃபெக்டிவ் மைக்ரோ ஆர்கானிசம்(EFFECTIVE MICRO ORGANISM ) இதன் ஆங்கிலப் பெயர்.
- இதனை ஒரு முறை காசு கொடுத்து வாங்கினால் போதும்.
- நாமே பெருக்கிக் கொள்ள முடியும்.
- மிகக் குறைவான செலவில் மண்வளத்தைக் கூட்டி விவசாயத்தை லாபகரமாக மாற்றும்.
- சுற்றுச்சூழலுக்கும் பருவ நிலை மாறுபாட்டுக்கும் பாதுகாப்பானது.
இ.எம். தரும் பயன்கள்
- விதை நேர்த்தி முளைப்புத் திறனை கூட்டும்.
- தொடர்ந்து 3 ஆண்டுகள் நிலத்தில் இட்டால் மண்கண்டம் பொன்கண்டமாக மாறும்.
- தீமை செய்யும் நுண்ணுயிர்களை மண்ணிலிருந்து விரட்டும்.
- நோய்கள் தாக்காதவாறு பயிர்களை கேடயமாக பாதுகாக்கும்.
- பூச்சிகளை பயிர்களிடம் அண்ட விடாது.
- சுவையான உணவுப் பொருட்களை உத்திரவாதம்;.
- குப்பைகளை விரைவாக மக்க வைத்து உரமாக மாற்றிவிடும்.
- விதை நேர்த்தி.
- ஒரு மில்லி இ.எம். திரவத்தை 1 லிட்டர் தண்ணீருடன் கலக்குங்கள்.
- இந்த கரைசலில் விதைகளை ஊற வைத்து விதையுங்கள்.
- விதையின் கடினத்தன்மைக்கு ஏற்ப அரை மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை ஊர வைக்கலாம்.
- ஊறவைத்த விதைகளை நிழலில் உலர்த்துங்கள்.
- உலர்த்திய விதைகளை எடுத்து விதையுங்கள்
- கரும்புக் கரணைகளை இந்த கரைசலில் 5 நிமிடம் ஊர வைத்து நடலாம்.
மண்ணில் தெளிக்கும் முறை.
- ஒரு மில்லி இ.எம். திரவத்தை 1 லிட்டர் நீரில் கலக்குங்கள்.
- கரைசலை பயிரின் மீது அல்லது மண்ணிலும் தெளிக்கலாம்.
- மண்ணில் தெளிக்கும் போது கைத்தெளிப்பானை பயன்படுத்துவது நல்லது.
- கைத் தெளிப்பான் விசைத் தெளிப்பான் இரண்டையும் பயிர்களுக்குத் தெளிக்க பயன்படுத்தலாம்.
குப்பைகளை மக்கச் செய்வது எப்படி?
- நீளம் 10 அடி அகலம் 3.5 அடி உடைய பாத்தியில் குப்பைகளை அரை அடி உயரத்திற்கு அடுக்காக போடவும்.
- இ.எம். இரண்டாம் நிலைக் கரைசலை, குப்பை நன்கு நனையுமாறு தெளிக்கவும்.
- மீண்டும் அரை அடி உயரத்திற்கு. குப்பையினை பரப்பவும்.
- இவ்விதம் குப்பைகளை 5 அல்லது 6 அடுக்குகள் பரப்பலாம்.
- ஓவ்வொரு அடுக்கின் மீதும் குப்பைகள் நன்கு நனையுமாறு, இ.எம். கரைசலை தெளிக்கவும்.
- பத்து சதுர அடிக்கு 2 லிட்டர் இ.எம். கரைசல் தேவைப்படும்.
- குப்பைக் குவியலின் உயரம் 3 முதல ;4 அடி உயரம் இருக்கலாம்.
- குப்பைக் குவியலின் மீது தென்னை ஓலை, பனை மட்டை, வாழைச் சருகு, மற்றும் கோணிப்பைகள்; கொண்டு மூடவும்.
- குவியலில் ஈரம் தொடர்ந்து இருக்க வேண்டும்.
- இதற்கு 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் தெளிக்க வேண்டும்.
- குப்பையில் 2 பங்கு பண்ணைக் கழிவுகளும் ஒரு பங்கு சாணக் கழிவும் இருக்க வேண்டும்
- பசுந்தழைகள் அதிகம் இருந்தால் மக்கிய குப்பையில் தழைச்சத்து அதிகம் இருக்கும்.
- இ.எம். கரைசல் தெளிப்பதால் குப்பைகள் விரைவாக மக்கி உரமாகும்.
- முழுவதும் உரமாக மாறிய பின் இதனை பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.
- 2 முதல் 3 டன்னை 1 ஏக்கர் வயலில் இடலாம்.
- காய்கறி, பூப்பயிர் மற்றும் பழச் செடிகளுக்கு செடிகளின் வயதுக்;கு ஏற்ப 2 முதல் 5 கிலோ வரை இடலாம்.
- வயதுக்கு ஏற்ப பழ மரங்களுக்கு 5 முதல் 10 கிலோ வரை போடலாம்.
இ எம் - நுண்ணுயிர் கூட்டுரம் |
(Image Courtesy: Thanks Googlea)
----------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment