Tuesday, May 31, 2016

இயற்கை விவசாயம் - பொக்காஷி கம்ப்போஸ்ட் தயாரிக்கும் முறை - ORGANIC POKASHI COMPOST PREPARATION

 

இயற்கை விவசாயம்

பொக்காஷி 

கம்ப்போஸ்ட் 

தயாரிக்கும் முறை

 

ORGANIC POKASHI 

COMPOST 

PREPARATION

  • நெல்உமி, மீன் தூள், மற்றும் புண்ணாக்குடன் இ.எம் சேர்த்து    தயாரிக்கும் உரத்தின் பெயர் “ பொக்காஷி கம்ப்போஸ்ட் “ 
  • இதனை 4 நாட்களில் தயாரித்து விடலாம்.
  • காற்றோட்டமான நிலையில்
தயாரிக்கப்படும் முறை இது.
  • தேவைப்படும்  பொருட்கள்.
  • நெல் உமி   100 கிலோ.
  • புண்ணாக்கு        25 கிலோ.
  • மீன் தூள்         25 கிலோ.
  • இ.எம்.           150 மில்லி.
  • ரசாயனம் சேர்க்காத வெல்லம்  150 கிராம்.
  • குளோரின் சேர்க்காத தண்ணீர்   15 லிட்டர்.
செயல்முறை
  • நெல் உமி, புண்ணாக்கு, மீன் தூள், வெல்லம் ஆகியவற்றை நன்றாக கலக்குங்கள்.
  • பின்னர் இ.எம். 150 மில்லி'ஐ அத்துடன் கலக்குங்கள்.
  • அடுத்து 15 லிட்டர் தண்ணீரையும், இ.எம். இரண்டாம்நிலை        கரைசலையும் ஊற்றி சீராக சேர்க்கவும்.
  • இந்தக் கலவையை நிழல் உடைய சிமெண்ட் தரையில் குவித்து    வைத்து ஈரச்சாக்கினால் மூடி வையுங்கள்.
  • சரியாக இது 4–வது நாள் கம்ப்போஸ்ட் உரமாக மாறிவிடும்.
  • கண் இமைக்கும் கால அளவில் (4 நாள்) தயாரிப்பதுதான் பொக்காஷி கம்ப்போஸ்ட்.
  • பொக்காஷி கம்ப்போஸ்ட் தயாரான பிறகு 14 -ஆம் நாள் இதனை    இடலாம்.
பொக்காஷி கம்ப்போஸ்ட் இடும் முறை.
  • இந்த கம்ப்போஸ்ட்  பொம்மை செய்யும் களிமண் பதத்தில் இருக்க வேண்டும்.
  • இதனை 1 ஏக்கருக்கு 100 கிலோ இட வேண்டும்.
  • சிறிய செடிகளுக்கு 0.5  கிலோ முதல் 2 கிலோ வரை இடலாம்.
  • பழ மரங்களுக்கு வயதுக்கு ஏற்ப 5 முதல் 10 கிலோ வரை இடலாம்.
  • இதற்கு பிரகாசமான  எதிர்காலம் உண்டு 
  • நம் நாட்டில் இப்போதுதான் இ.எம். பிரபலம் ஆகிவருகிறது.
  • பல துறைகளில் பயன்படுத்த ஏற்ற இ.எம். ஐ பயன்படுத்தினால் நமக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது.
  • விவசாயிகளுக்கும்  பேருதவியாக இருக்கும்.
பொக்காஷி கம்போஸ்ட் தயாரிப்பு 

 Image Courtesy: Thanks Google

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...