Tuesday, May 31, 2016

இயற்கை விவசாயம் தென்னை நார்க்கழிவு உரம் தயாரிப்பு ORGANIC COIR WASTE COMPOST


இயற்கை விவசாயம்

தென்னை நார்க்கழிவு

உரம் தயாரிப்பு

 

ORGANIC

COIR WASTE 

COMPOST


  • நீளம் 10 அடி, 3.5 அடி அகலமுள்ள பாத்தியினை நிழலான இடத்தில் அமையுங்கள்.
  • மரத்தடி நிழலில் இதைச் செய்யலாம்.
  • பாத்தியில் அரை அடி உயரத்திற்கு தென்னை நார்க்கழிவு    அல்லது ஆலைக்கழிவை பரப்பவும்.
  • கழிவுகள் நன்கு நனையுமாறு இரண்டாம் நிலை இ.எம். கரைசலை வாசல் தெளிப்பது மாதிரி, தெளிக்கவும்.
  • இப்படி 5 அல்லது 6 அடுக்கு, கழிவுகளை மீண்டும் மீண்டும் பரப்புங்கள்.
  • ஓவ்வொரு அடுக்கின் மேலும் இ.எம். இரண்டாம் நிலை கரைசலை     தெளியுங்கள்.
  • கடைசியாக இந்த குவியலின் மீது, சாக்கு, தென்னை மட்டை, பனை மட்டை போன்றவற்றை போட்டு மூடவும்.
  • கழிவுக் குவியலில் ஈரம் தொடர்ந்து இருக்க வேண்டும்.;
  • 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் தெளித்து வரவும்.
  • கழிவினை கையில் எடுத்துப் பிழிந்தால், விரல் இடுக்குகளில் தண்ணீர் வடிய வேண்டும்.
  • இ.எம். கரைசலை பயன் படுத்தும் போது, யூரியா மற்றும் புளுரோட்டஸ் காளான் விதை தேவை இல்லை.
  • தென்னை நார்க்கழிவு அல்லது ஆலைக் கழிவுடன் கால் பங்கு ஆட்டெரு அல்லது மாட்டெருவை  கலந்து கொள்ளவும்.
  • கழிவு 750 கிலோவுடன் 250 கிலோ ஆட்டெரு அல்லது மாட்டெருவை  கலந்துக் கொள்ள வேண்டும்.
  • இது ஒரு வாரத்திற்குள் உரமாக மாறிவிடும்.
  • யூரியா மற்றும் புளுரோட்டஸ் காளான் உபயோகப் படுத்தும்போது     உரமாக மாற குறைந்த பட்சம் 60 நாட்களாவது ஆகும்.
இ.எம். தாய் திரவத்தை பெருக்குவது எப்படி?
  • இ.எம். தாய் திரவத்தை பெருக்கினால், செலவு குறையும்.
  • இதற்கு 1 லிட்டர் தாய் திரவம் தேவை.
  • இத்துடன் 100 லிட்டர் தண்ணீர் மற்றும் 5 கிலோ வெல்லத்தையும்     சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும்.
  • இத்துடன் சேர்க்கும் வெல்லம்  சுக்ரோஸ், சந்தனம் அல்லது வேறு ரசாயனம் சேராததாக இருக்க வேண்டும்.
  • இப்படி கூடுதலாக பெருக்கிய தாய் திரவத்தை 30 நாட்களுக்குள் காலி செய்துவிடவேண்டும்
27. இ.எம். இரண்டாம் நிலை திரவம் தயாரிக்கும் முறை
  •  ஒரு லிட்டர் இ.எம். தாய் திரவத்தை  எடுத்துக் கொள்ளுங்கள்.
  • ரசாயனம் சேர்க்கப்படாத ஒரு கிலோ வெல்லத்தை, பொடி செய்யுங்கள்.
  • வெல்லப் பொடியை ஒரு லிட்டர் தண்ணீரில் கட்டி முட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளுங்கள்.
  • வெல்லக் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீரை கலக்குங்கள்.
  • தண்ணீர் குளோரின் இல்லாததாக இருக்க வேண்டும்.
  • இ.எம். தாய் திரவம் 1 லிட்டர் –ஐ ஊற்றி கலக்குங்கள்.
  • இதற்கு சுத்தமான பிளாஸ்டிக் பாத்திரம் வேண்டும்.
  • பிளாஸ்டிக் பாத்திரத்தை காற்றுப் புகாமல் மூடி வைக்கவும்.
  • இதனை நிழலான இடத்தில் ஒரு வாரம் வைத்திருக்கவும்.
  • ஓவ்வொரு நாளும் மூடியை திறந்து வைத்து, வெளியேறும் வாயுவை அனுமதிக்க வேண்டும்.
  • இல்லையென்றால் அந்த பிளாஸ்டிக் பாத்திரம் வெடித்து விடும் வாய்ப்பு உண்டு.
  • இனிப்பும் புளிப்பும் கலந்த வாசனையுடன் இரண்டாம் நிலை இ.எம்.     கரைசல்  ஒரு வாரம் முடிவில் தயாராகிவிடும்.
  • தயாரான இரண்டாம் நிலை இ.எம். கரைசலின் மீது வெண்மையான நுரை மூடியிருக்கும்.
இ எம் 
Image Courtesy: Thanks Google



No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...