முருங்கை சாகுபடி முறைகள்
MURUNGAI CULTIVATION METHODS
Image Courtesy: Thanks Google |
1. தெரிந்து கொள்ளுங்கள்
இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் - ஏ சத்து வுடையது.
ஒரே வருடத்தில் காய்க்கக் கூடிய செடிமுருங்கை ரகமும் உண்டு.
2. எங்கு பயிரிடவாம் ..?
எல்லாமண் வகைகளிலும் பயிரிடலாம்.
மணல் கலந்த வண்டல்மண்.
3. என்ன ரகம் போடலாம் ..?
ஜாப்னா ரகம் 60 -- 90 செ.மீ. நீளமுள்ள சதைப்பற்றான காய்கள்.
சாவக முருங்கை
மிகவும் நீளமான காய்கள் 90 -- 120 செ.மீ.
செம்முருங்கை
காய்களின் நுனி சிவந்து இருக்கும். ஆண்டு முழுவதும் காய்க்கும்.
காட்டு முருங்;கை
காய்கள் குட்டையானவை. சதைப்பற்று இல்லாத காய்கள்;.
பால் முருங்கை
சதைப்பற்று அதிகம் வுள்ளது.
கொடிக்கால் முருங்கை
காய்கள் 15 -- 20 செ.மீ. நீளம்.
குடுமியான் மலை ( கே. எம். -- 1 )
காய்கள் குட்டையானவை.
20 செ.மீ. நீளமும், சுவையும், சதைப்பற்றும் உள்ளவை.
500 காய்கள் தரும்.
பி.கே.எம்.1 (பெரியகுளம் 1)
செடி முருங்கை ரகம். 5 மீட்டர் உயரம் வளரும்.
100 நாட்களில் பூக்கும் 100 நாட்களில் அறுவடை .
65--70 செ.மீ. நீளமுள்ள காய்கள் தரும்.
சதைப்பற்றுள்ளவை.
4. நிலத்தை உழுது எரு போடுங்கள்
நிலத்தை 3 - 4 முறை நன்கு வுழவும்.
5. தேவைக்கு ஏற்ப இயற்கை உரம் இடுங்கள்.
6. நீர்பாசனம் கொடுங்கள்
விதைப்பதற்கு முன் குழிகளுக்கு நீர் பாய்ச்சவும்.
விதை முளைக்கும் வரை 10 --15 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சலாம்.
மண்ணில் ஈரம் குறைந்தால் பூக்கள் உருவாவது குறையும்.
7. ஊடு பயிர் செய்யலாம்.
நடவு செய்த 3 -- 4 மாதங்கள் தட்;டைப்பயறு, உளுந்து, பாசிப்பயறு, வெண்;;டை , கீரை பயிரிடலாம்.
8 மாதத்திலிருந்து அறுவடை செய்யலாம்
பல ஆண்டு மரம். 6 முதல் 9 மாதங்களில் அறுவடைக்குவரும்.
கன்றுகளின் மூலம் இனப்பெருக்கம் செய்தால் இரண்டாம் ஆண்டு 80 -- 90 காய்கள் கிடைக்கும். மாதத்திற்கு 500 -- 600 காய்கள் கிடைக்கும்.
செடி முருங்கை ஆறாவது மாதம் அறுவடைக்கு வரும்.
9. உங்கள் கவனத்திற்கு
15 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய மரங்களை நடலாம் அல்லது 0.3 -- 0.4 மீட்டர் அளவு விட்டு வெட்டி விடவும்.
மரம் ஒன்றிற்கு ஒவ்வொரு வருடமும் 25 கிலோ மட்கிய தொழு வுரம், தழை , மணி, சாம்பல் சத்து இடுங்கள்.
Image Courtesy: Thanks Google |
No comments:
Post a Comment