Tuesday, May 31, 2016

கோழிக்கழிவில் மண்புழு உரம் தயாரிப்பது எப்படி ? MAKE POULTRY WASTE AS VERMI COMPOST



Image Compost: Thanks Google

கோழிக்கழிவில்  
மண்புழு உரம்
தயாரிப்பது எப்படி ?

MAKE POULTRY 

WASTE AS

VERMI COMPOST


  • கோழிக் கழிவைக் கொண்டும் மண்புழு உரம் தயரிக்கலாம்
  • பசும் சாணத்திற்கு பதிலாக மக்கிய கோழிக் கழிவை உபயோகிக்கலாம்.
  • பொட்டாசியம் கால்சியம் மக்னீசியம் போன்ற நுண்;சத்துக்கள் இதில் உள்ளன.
  • நைட்ரஜன், பாஸ்பரஸ், கால்சியம் ஆகியவை மற்ற இயற்கை எருக்களில்  இருப்பதைவிட அதிகம் உள்ளது.                                                           
  • மண்ணில் கரிம சத்தை அதிகரிக்கிறது.
  • நீர் உறிஞ்சும் தன்மை மேம்படுகிறது.
  • பிராணவாயுவைக்  கூட்டுகிறது..
  • உவர் மற்றும் களர்  நிலங்களை  சீர்திருத்துகிறது.

தேவைப்படுபவை                 

  • மரத்தடியில் நிழல் உடைய ஒரு இடம் அல்லது ஒரு சிறு கொட்டகை
  • 1000 முதல் 1500 மண்புழுக்கள், மக்கிய கோழி எரு                                   
  • போதுமான தண்ணீர்.
  • பசுந்தழைகள, புற்கள் மற்றும் இலைச்சருகுகள்.

செயல் விளக்கம்

  • மூன்றரை அடி அகலம் 10 அடி நீளமும் கொண்ட இடத்தில் புழுப்படுக்கை அமையுங்கள். 
  • புழுப்படுக்கை என்பது மண்புழுக்களுக்கு உண்ணவும் உறங்கவுமான இடம்.     
  • மூன்றரை அடி அகலம் 10 அடி நீளத்திற்கு  அரை அடி ஆழுத்திற்கு பள்ளம் எடுக்கவும்.
  • அந்த அரை அடி ஆழமான பள்ளத்தில் 2 அங்குல உயரத்திற்கு மணலை பரப்புங்கள்.
  • மணல் பரப்பின் மீது  தேங்காய் உறி மட்டைகளை அதன் முதுகுப்புறம் கீழே இருக்குமாறு அடுக்கவும்.
  • இப்படி அடுக்குவதற்கு 400 முதல் 500 உறிமட்டைகள் தேவைப்படும்.
  •  உறி மட்டைகளின் மீது 6 அங்குல உயரத்திற்கு மக்கிய கோழி உரத்தினை பரப்புங்கள்.
  • அதன்மீது  2 அல்லது 3 குடம் தண்ணீர் தெளியுங்கள்.
  • தண்ணீரை தெளித்தப் பின்  சேகரித்து வைத்திருக்கும் பசுந்தழைகளை ஒரு அடி உயரத்திற்கு பரப்பவும்.
  • இலை தழைகளைப் போடும்போது  பெரிய கிளைகளைத் தவிர்க்க வேண்டும்.
  • இலை தழை மற்றும் சருகுகளை பரப்பிய பின்னால் அதன்மீது சாணக் கரைசலை  சோரத் தெளிக்க வேண்டும்.
  • அதன்மீது மறுபடியும் 6 அங்குலம் மக்கிய கோழிக்கழிவை  போடவும்.
  • மீண்டும் 1 அடி பசுந்தழை  மற்றும் சருகுகள்  சாணக்கரைசல் தெளிப்பு   என்று இரண்டாவது  அடுக்கையும்  போடவும். 
  • இப்படியாக 2 அல்லது 3 அடுக்குகள் போட்டு போதுமான தண்ணீர் தெளிக்கவும். 
  • சுமார் 3 அல்லது 4 அடி உயரம்வரை    புழுப் படுக்கையை தயார் செய்த பின்னால்  மண்புழுக்களை விடவும். 
  • கடைசியாக  புழுப்படுக்கையை  ஈர சாக்கு கொண்டு மூடி வைக்கவும்.
  • பின்னர் தினசரி புழுப்படுக்கையின் மீது போதுமான தண்ணீர் தெளிக்கவும்.
  • ஐம்பது முதல் 60 நாட்களில் புழுப்படுக்கையில்  இடப்பட்ட கழிவுகளை முழுமையான உரமாக மாற்றிவிடும்.
  • பின்னர் தண்ணீர் தெளிப்பதை நிறுத்திவிட்டு  புழுப்படுக்கையின் மேல்பகுதியில் இருக்கும் மண்புழு உரத்தை  மட்டும் சேகரிக்கலாம். 
  • மண்புழுக்கள் புழுப்படுக்கையின் அடிப்பகுதிக்குச் சென்றுவிடும்.
  • இப்போது புழுப்படுக்கையில் கிட்டத்தட்ட 2 மடங்கு மண்புழுக்கள் அதிகரித்திருக்கும்.
  • அதே புழுப்படுக்கையை பயன்படுத்தி மீண்டும் மீண்டும் மண்புழு உரம்          தயாரிக்கலாம்.                                             

கவனிக்க வேண்டியவை

•    புழுப்படுக்கையில் ஈரம் இவ்லையென்றால் புழுக்கள் இறந்துவிடும்.
•    ஈரம் அதிகம் இருந்தாலும் புழுக்கள் இறந்துவிடும்.
•    புழுப்படுக்கையின் அடியில் போடப்பட்டிருக்கும் தேங்காய் உறி மட்டைகளும் மணலும் அதிகப்படியான நீரை உறிஞ்சிக் கொள்ளும்.
•    புழுப்படுக்கைக்கு நிழல் அவசியம் வேண்டும்.
•    அதிகப்படியான வெப்பத்தை புழுக்கள் தாங்காது.
•    பாம்பு, பறவைகள,; எலி, எறும்புகள,; பிள்ளைப்பூச்சி போன்றவை மண்புழுவை உணவாகக் கொள்ளும்.
அவற்றிலிருந்து நாம் இவற்றை பாதுகாக்க வேண்டும்.

FOR FURTHER READINGON RELATED TOPICS


1. உலகச் சந்தையின்   கதவுகள்   திறந்தே   கிடக்கின்றன -   WORLDWIDE SCOPE FOR VERMI COMPOST – Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/worldwide-scope-for-vermi-compost.html

2. திறந்த வெளிகளில்   மண்புழு உரத் தயாரிப்பு  -  VERMI COMPOSTING   IN OPEN SPACE – Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-composting-in-open-space.html

3. மர நிழலில்   மண்புழு உர   உற்பத்தி  -   VERMI  COMPOSTING  UNDER  TREE SHADE – Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-composting-under-tree-shade.html

4. தொட்டி முறை மண்புழு உர உற்பத்தி - VERMI COMPOSTING IN TANK METHOD  – Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-composting-in-tank-method.html

5. வீடுகளில்   மண்புழு உரம்   தயாரிக்கும் முறை  -   VERMI COMPOSTING   IN HOUSEHOLD   PREMISES – Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-composting-in-household-premises.html

6. மண்புழு   உர உற்பத்தியில்   கவனிக்க வேண்டியவை ஆறு  -   SIX STEPS IN VERMICOMPOSTING  – Date of Posting; 17.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/six-steps-in-vermicomposting.html
7. மண்புழு   உரம் தயாரிப்பில்    என்ன சந்தேகம் ?  -  CLEAR YOUR DOUBTS IN VERMI COMPOSTING  – Date of Posting; 17.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/clear-your-doubts-in-vermi-composting.html


8. உரம் தயாரிப்புக்கு ஏற்ற   மண்புழு வகைகள்    SUITABLE  EARTHWORM  BREEDS FOR  COMPOSTING – Date of Posting; 15.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/suitable-earthworm-breeds-for-composting.html

9. மண்புழு உரத்தின்   ஊட்டச் சத்துக்கள்   ஒரு ஒப்பீடு - VERMI COMPOST  NUTRIENTS STUDY  – Date of Posting; 14.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-compost-nutrients-study.html
10. மண்புழுபற்றி   முதல் புத்தகம்  எழுதிய  மேரி அப்பொலெப் - THE FIRST BOOK ON EARTHWORM BY MARRY APPOLEP – Date of Posting; 13.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/first-book-on-earthworm-by-marry-appolep.html

11. மண்புழு  உரம்   சுற்றுச்சூழலுக்கு   பாதுகாப்பானது    VERMI COMPOST  IS SAFE TO  ENVIRONMENT – Date of Posting; 13.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-compost-is-safe-to-environment.html

12. மண்புழு   உங்கள் மண்ணுக்கு   உயிர் தருகிறது    EARTH WORMS  MAKE  SOIL ALIVE – Date of Posting; 13.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/earth-worms-make-soil-alive.html

13. மண்ணைப்   பொன்னாக்கும்   மந்திரம்     மண்புழுக்கள்   EARTHWORM   ALCHEMISTS  MAKE SOIL  GOLD – Date of Posting; 12.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/earthworm-alchemists-make-soil-gold.html

14. அப்பார்ட்மெண்ட் மற்றும் வீடுகளில் மண்புழு உரம் தயாரித்தல் - VERMI COMPOSTING IN APARTMENTS – Date of Posting; 31.05.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/05/vermi-composting-in-apartments.html





No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...