Image Coutesy: Thanks Googleஜாதி மல்லிசாகுபடிJATHIMALLICULTIVATION |
- ஜாதி மல்லிக்கு எப்பொழுதும் மார்க்கெட்டில் அதிகவிலை கிடைக்கும்.
- அதனால் நீங்கள் ஜாதிமல்லி சாகுபடி செய்தால் நல்ல வருமானம் பெறலாம்.
- இதை பிச்சிப்பூ என்றும் சொல்வார்கள்.
1. எங்கு பயிரிடலாம் ..?
- வெப்பமான பகுதிகள் ஏற்றவை.
- வடிகால்வசதியுள்ள இருமண்பாடான நிலங்களில் பயிரிடுங்கள்.
2. என்ன ரகம் போடலாம் ..?
- கோ 1 பிச்சிப் பூ
- கோ 2 பிச்சிப் பூ
- ஏதாவது ஒன்றைப் பயிரிடுங்கள்
- இரண்டையும் கூட பயிரிடலாம்
3. எப்போது போடலாம் ?
- ஜுன்;; , ஜுலை , ஆகஸ்ட்; , செப்டம்பர் , அக்டோபர், நவம்பர்
- மாதங்களில் பயிரிடுங்கள்.
4. செடிகள் நட குழிகள் எடுங்கள்
- 30 செ.மீ. நீளம் ,30 செ.மீ. அகலம் , 30 செ.மீ. ஆழம். இந்தஅளவில் குழிகள் எடுங்கள்.
- ஒரு குழிக்கும், இன்னொரு குழிக்கும் 1.5 மீட்டர் இடைவெளிகொடுங்கள்.
- ஓரு குழி வரிசைக்கும், இன்னொரு குழி வரிசைக்கும் 2மீட்டர் இடைவெளி கொடுங்கள்.
- ஒரு ஹெக்டேர் பரப்பில் 3,350. குழிகள் எடுங்கள்.
5. நடவு செடிகள்
- பதியன் செடிகளை நடவு செய்யுங்கள்.
- வேர்க்குச்சிகளையும் நடவு செய்யலாம்.
6. நீர் பாய்ச்சுங்கள்
- செடிநட்டவுடன் நீர் பாய்ச்சுங்கள்.
- 10 நாட்களுந்கு ஒரு முறை பாசனம் கொடுங்கள்.
- மண்ணின் தன்மைக்கு ஏற்ப நீர் பாய்ச்சுங்கள்.
- இயற்கை உரங்களை இடுங்கள்
8. கவாத்து செய்யுங்கள்
- டிசம்பர் மாதத்தில் கடைசி வாரத்தில் கவாத்து செய்யவேண்டும்.
- செடிகளை தரை மட்டத்திருந்து 45 செ.மீ. உயரம் விட்டு வெட்டி விடுங்கள்.
9. பயிர்பாதுகாப்பு
- இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துங்கள்
- இயற்கை பூசணக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துங்கள்
10. ஜாதி மல்லியை தாக்கும் பூச்சிகள்
- மொட்டுப்புழு
- வண்டுகள்
- சிவப்பு சிலந்தி
- கரையான்
11. ஜாதி முல்லையை தாக்கும் நோய்
- இலைப்புள்ளி நோய்
12. எப்போது அறுவடை செய்யலாம் ..?
- மே, ஜுன், ஜுலை , ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்
மாதங்களில் அறுவடை செய்யுங்கள்.விடியற்காலையில் மொட்டுக்களை பறியுங்கள். - விரியாத வளர்ந்த மொட்டுக்களை பறியுங்கள்
- 11,000. கிலோ பூ மொட்டுக்களை ஒரு ஹெக்டரில் அறுவடை செய்யலாம்.
- தாமதம் இல்லாமல் மொட்டுக்களை பறித்தவுடன்மார்க்கெட்டுக்கு விற்பனை செய்ய அனுப்புங்கள்.
Image Courtesy: Thanks Google |
No comments:
Post a Comment