Tuesday, May 24, 2016

அரிப்பதும் எரிப்பதும் அரிப்பதும் எரிப்பதும் வெடிப்பதும் கொல்வதும் நானே - ஹைட்ரஜன் சல்பைட் HYDROGEN SULPHIDE PRIMARY AIR POLLUTER

IMAGES COURTESY: THANKS GOOGLE
நச்சு வாயுவினால் தாக்கப்ட்ட வீரர்கள் - முதல் உலகப்போர்
ரசாயன போர்


அரிப்பதும் எரிப்பதும்  

வெடிப்பதும் கொல்வதும் 

நானே  - ஹைட்ரஜன் சல்பைட்

 

HYDROGEN SULPHIDE

PRIMARY

AIR POLLUTER

தோல்தொழிற்சாலை உள்ள பகுதிகளில் காற்றினை மாசுபடுத்தும் வாயுக்களில் முக்கியமானது, ஹைட்ரஜன் சல்பைட். பிரபலமான அழுகியமுட்டை  வாடையை அடையாளமாகக்  கொண்டது இந்த வாயு. இதன் ரசாயன ஃபார்முலா எச்2 எஸ்.

காற்றைவிட அதிக அடர்த்தியானது. மிகுதியான நச்சுத் தன்மை கொண்டது. அரிப்பதும் எரிவதும் வெடிப்பதும்தான் இதன் சாமுத்திரிகா  லட்சணங்கள்.

ஆக்ஸிஜன் கிடைக்காத நிலையில் அங்ககப்பொருட்கள் அரைகுறையாக அழுகுகின்றன. அதன் மூலமும்  உற்பத்தியாகிறது இந்த    எச் 2 எஸ் வாயு. 
எரிமலை வாயுக்கள்  (VOLCANIC GASES)  இதர இயற்கை  வாயுக்கள்  (NATURAL GASES)  சில கிணற்று நீர்  (WELL WATER)  சில பாறை உப்புக்கள்  (ROCK SALTS) மனித உடல் (HUMAN BODY) ஆகியவை எச். 2 எஸ். ன் உற்பத்திக் கேந்திரங்கள்.

எச்.2 எஸ்’ஐ  1777 ஆம் ஆண்டு  ஸ்வீடன் நாட்டு  விஞ்ஞானி   கார்ல்  வில்ஹெல்ம்  ஷீலி (CARL WILHELM SCHEELE)  என்பவர்தான் முதலில் கண்டுபிடித்தவர். பொதுவாக   எச். 2 . எஸ்.   இயற்கை வாயுக்கள் (NATURAL GASES) ,  பயோ கேஸ்(BIO GAS) மற்றும்   எல். பி. ஜி .(LIQUID PETROLEUM GAS)   ஆகியவற்றிலும் இருக்கும்.

எச்.2 எஸ். மாசு  நமது நரம்பு மண்டலத்தை பாதிக்கும்.  காற்றில் மிகக் குறைவாக கரைந்திருக்கும் போது  இது எந்த தொந்தரவும் கொடுக்காது. 

எச்.2 எஸ்.’ன் மாசு குறைந்து இருந்தால்  கண்எரிச்சல், தொண்டைப்புண், இருமல், குமட்டல் (NAUSEA) குறுநீளமூச்சு(SHORT BREATH)   நுரையீரல் வீக்கம் (LUNG EDEMA) போன்ற பாதிப்புக்கள் நேரிடும்.

நீடித்த குறைந்தமாசு உடல் சோர்வு (குயுவுஐபுருநுNநுளுளு)  பசியிழப்பு(LOSS OF APPETITE) தலைவலி , எரிச்சல்,  (IRRITABILITY)  நினைவிழப்பு          (LOSS OF MEMORY) தலைச்சுற்றல் (DIZZINESS)  போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதிகஅளவு எச். 2. எஸ்.’ ஆல்  பாதிக்கப்படும்போது  கார்டிகல்  சூடோலேமினார் நெக்ரோசிஸ் (CORTICAL PSEUDOLUMINAR NECROCIS)  டிஜெனரேஷன்  ஆப்  தி  கேங்லியா  (DEGENERATION OF THE GANGLIA)  மற்றும்  செரிப்ரல்  எடிமா  (CEREBRAL EDEMA)  போன்ற மூளை தொடர்பான நோய்கள் வரலாம்.  
மூளையின்  கார்ட்டெக்ஸ்  (CORTEX) ல் உள்ள திசுக்கள் இறந்து போவதுதான் கார்டிகல் சூடோலேமினார்  நெக்ரோசிஸ் என்பது. திசுக்கள்  செயலிழப்பதைப் போல  மூளை தொடர்புடைய அடித்தள நரம்புகள்  செயலிழப்பதுதான்  டிஜெனரேஷன் ஆப்  கேங்லியா. அதுபோல் செரிப்ரல்   எடிமா  என்பது  பெரு மூளை வீக்கம். மூளை சம்மந்தமான இந்த நோய்கள் கடுமையாகும்போது  மரணம்கூட சம்பவிக்கும்.

இன்னொரு முக்கியமான சரித்திர செய்தி. எச் .2 .எஸ்'ஐ   ரசாயன ஆயுதமாக பிரிட்டிஷ் ஆர்மி  முதல் உலகப்போரில்   பயன்படுத்தியது. வழக்கமாக போர்களில் பயன்படுத்தும் கேஸ் அல்ல   எச் .2 .எஸ்.   மற்ற கேஸ்கள் தட்டுப்பாடு என்பதால்  இதனை பயன்படுத்தினார்கள்.

டெக்லாஸ் மாநிலம் டென்வர் நகரத்தில் 1975 ஆம் ஆண்டு  ஆயில்  டிரில்லிங் செய்து கொண்டிருந்தவர்களில், எச்.2 எஸ் கேஸ் கசிந்ததில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

நச்சுப்பொருள் குப்பைக்குவியலில் இருந்து வெளிNறிய             எச்.2 எஸ்.   கேஸ்  வெஸட் ஆப்ரிக்கன் கோஸ்ட்  ல் அபிட்தான் என்னுமிடத்தில் 17 பேரைக்கொன்றது. அதுமட்டுமில்லாமல் ஆயிரக்கணக்கான மக்களை நோய்வாய்ப்படுத்தியது.

சுமார் 1.3 மில்லியன் பேர் விஷ வாயுக்களால்  முதல் உலகப்போரில் கொல்லப்பட்டனர்.  1915 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 முதல் மே 25 வரை, முதன்முதலாக உலகப்போரில் விஷ வாயுக்கள் பயன்படுத்தப்பட்டன. 
பிரிட்டிஷ் தரப்பில் ஒரு லட்சத்து எண்பதாயிரம் பேர்களும், ரஷ்யர்கள் 5 லட்சம் பேரும் விஷ வாயுவினால் கொல்லப்பட்டனர். போரில் ஈடுபடாத  பெண்கள் மற்றும் குழந்தைகள் கூட கொல்லப்பட்டனர்.

விஷவாயுக்கள் பயன்படுத்துவதால்  போரில் ஈடுபடாத பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவார்கள் என்று தெரிந்தும், எதிரிகளைக் கொல்ல வேண்டும் என்பதால்தான் அதனை பிரயோகித்தோம் என்று தனது நாட்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார் பிரிட்டிஷ்ஃபீல்டு மார்ஷல் சர் டவுக்ளஸ்ஹெய்க்  (SIR DOUGLAS HAIG).

1914 ஆம் ஆண்டிலிருந்து  1918  ஆம் ஆண்டுவரை சுமார் 20 வகையான கேஸ்கள் முதல் உலகப்போரில் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டன.  1916 ஆம்ஆண்டு எச்.2எஸ்.  என்னும்  ஹைட்ரஜன்  சல்பைடு  பயன்படுத்தப்பட்டது.

1915,  ஏப்ரல் 22 ஆம்தேதி  ஜெர்மானிய ராணுவம், 150 டன் குளோரின் கேஸ்  ஐ  பெல்ஜியத்தில்  ஒய்ப்பஸ்  (YPES)  என்னுமிடத்தில் நடந்த போரில் ஃபிரென்ச்  போர்வீரர்களின் மீது பயன்படுத்தினர். 

ஃபிரிட்ஸ் ஹேபர்  (FRITZ HABER)  என்னும் ஜெர்மானிய ரசாயணர்  (GERMAN CHEMIST)  தான் இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர். கெமிக்கல் வார்ஃபேர் (CHEMICAL WAREFARE) என்பதை தொடங்கிவைத்த புண்ணியவான் இவர்தான்.

இவர்தான்  நைட்ரஜன், ஹைட்ரஜன்  ஆகியவற்றைப் பயன்படுத்தி அம்மோனியாவை  உருவாக்கினார்.  அதற்கு ஹேபர் ப்ராசஸ் (HABER PROCESS) என்று பெயர். அதன் அடிப்படையில்தான் அம்மோனியா உரம்  தயாரிக்கப்பட்டது. இதற்காக 1918 ஆம் ஆண்டு அவருக்கு நோபல்  பரிசு  வழங்கப்பட்டது.                   

 தொழிற்சாலை உள்ள நகரங்களில் காற்றுமாசு அதிகம் இருக்கும். அதிலும் வீட்டுக்குள் கட்டிடத்திற்குள் இருக்கும் மாசுக்களின் அடர்த்தி இன்னும் அதிகம். அதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள கீழ்கண்ட 11 செடிகளில் ஏதாவது ஒன்றையோ அதற்கு மேற்பட்ட செடிகளை வீட்டின் உள்ளேயும் வளர்க்கலாம். வெளியேயும் வளர்க்கலாம். 100 சதுர அடிக்கு 1 செடி போதும்.
அரிகா பாம், மணிபிளாண்ட், ஸ்பைடர்பிளாண்ட், பர்பிள் வாஃபிள்பிளணெ;ட், பேம்புபாம், வேரிகேட்டட் வேக்ஸ் பிளாண்ட், லில்லிடர்ஃப், பாஸ்ட்டன்ஃபெர்ன், ட்வார்ஃப் டேட்பாம், மாத் ஆர்கிட்ஸ், பார்பெர்ட்டன் டெய்சி 
செடிகளுக்காக கிள்ளிக் கொடுத்தால் போதும், டாக்டருக்காக அள்ளிக் கொடுக்க வேண்டாம்.
ஹைட்ரஜன் சல்பைட் உலகப்போர் வீரர்களை கொன்றது

















No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...