Friday, May 6, 2016

காற்றை சுத்தப்படுத்த என்ன செய்யலாம் - நாசா ஆராய்ச்சி - HOW TO PURIFY POLLUTED AIR - NASA RESEARCH


காற்றை சுத்தப்படுத்த என்ன

செய்யலாம் - நாசா ஆராய்ச்சி


HOW TO PURIFY

POLLUTED AIR -

NASA RESEARCH


சுமார் 100  சதுரஅடி  பரப்பிற்கு   ஒரு செடி வைத்தால்   போதும்.    எத்தனை  சதுரஅடி   உள்ளதோ அதற்கு ஏற்ப   செடிகளை கணக்கிட   வேண்டும் . உங்கள்வீடு   500    சதுரஅடி   என்றால்    5  செடிவைக்கலாம்.


நாசா (NASA)  என்றால் நேஷனல்  ஏரோநாட்டிக்ஸ்  அண்ட்   ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (NATIONAL AERONAUTICS AND SPACE ADMINISTRATIONS). 

அல்கா  (ALCA)  என்றால் அஸோஸியேட்டட்  லேண்ட்ஸ்கேப்  கான்ட்ராக்டர்ஸ்  ஆஃப்  அமெரிக்கா (ASSOCIATED LANDSCAPE CONTRACTORS OF AMERICA).   

இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து காற்றை  தாவரங்களைக்  கொண்டு சுத்தப்படுத்த  ஒரு ஆராய்ச்சியை நடத்தின.
   
 சாதாரணமாக நாம்  வசிப்பறை  செடிகளிலேயே   சிலவற்றை  இதற்கு  பயன்படுத்தலாம்  என்று  இந்த ஆராய்ச்சி    கண்டுபிடித்தது.

ஃபார்மால்டிஹைட்  ,   ட்ரை குளோரோ எதிலீன் .   பென்சீன்  இவை  எல்லாம்தான் காற்றினை   மாசுபடுத்தும்  விஷவாயுக்கள் .  வீட்டிற்குள் அல்லது   கட்டிடத்திற்குள் தன்  கைவரிசையைக்   காட்டும் .  இந்த விஷ வாயுக்களை விரட்ட   முடியும்.

கட்டியவீட்டிற்குள்  நிலவும்  சுகாதாரமற்ற சூழலின்பெயர்   ‘சிக்  பில்டிங்  சிண்ட்ரோம்” (SICK BUILDING SYNDROME),என்கிறார்கள்.

சுமார் 100  சதுரஅடி  பரப்பிற்கு   ஒரு செடி வைத்தால்   போதும்.    எத்தனை  சதுரஅடி   உள்ளதோ அதற்கு ஏற்ப   செடிகளை கணக்கிட   வேண்டும் . உங்கள்வீடு   500    சதுரஅடி   என்றால்    5  செடிவைக்கலாம்.

தொட்டிச்செடிகளை   வீட்டிற்குள்   வைக்கும் போது அதில்  இருக்கும்   மண்;(POT SOIL) பென்சீனை (BENZENE) உறிஞ்சிவிடுகிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்குள் அல்லது கட்டிடங்களுக்குள்தான் அதிக பென்சீன் இருக்கும்.

பென்சீன் நிறமில்லாத அல்லது இளமஞ்சள்நிற திரவம். கமகமவென வாசைன வீசும். எளிதில் தீப்பற்றிக்கொள்ளும். விரைந்து காற்றில் ஆவியாகும். தாழ்வான நிலப்பரப்பில் அதிகம் இருக்கும். 

பெட்ரோல் பங்க்குகள், சிகரெட்புகை, பெயிண்ட்டுகள், ஒட்டும்பொருட்கள் (ADHESIVES), கார்நிறுத்துமிடங்கள்  ஆகியவைதான் பென்சீன் உற்பத்திக் கேந்திரங்கள்.

பிளாஸ்ட்டிக்குகள், பிசின்கள் (RESINS), நைலான், செயற்கைஇழை (ARTIFICIAL FABRICS), உயவுஎண்ணெய்கள் (LUBRICANTS), ரப்பர், சாயங்கள் (DYES), டிடெர்ஜண்ட்டுகள், மருந்துப்பொருட்கள் (DRUGS),மற்றும் பூச்சிமருந்துகள் தயாரிக்க பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது, பென்சீன்.

பேன்சீன் கலந்த காற்றை சுவாசிப்பவர்களுக்கு புற்றுநோய்,  அனிமியா, தலைவலி, நெக்ரோசிஸ், டிஸ்ஸினெஸ், டிரவ்சினெஸ், குழப்பம், டிரீமர்ஸ், ஞாபகமறதி ஆகிய நோய்கள் வர வாய்ப்பு உண்டு.

பென்சீன்  நச்சினை  கீழ்கண்ட செடிகள் சாமர்த்தியமாக உறிஞ்சக்கூடியவை என்று நாசா–அல்கா  ஆராய்ச்சி கண்டுபிடித்துள்ளது.

 1. இங்கிலிஷ்  ஐவி  (ENGLISH IVY) 

2. டெவில்ஸ்  ஐவி (DEVILS IVY)
   
3. பீஸ்  லில்லி   (PEACE LILY)

4. சைனீஸ்  எவர்கிரீன்  (CHINESE EVERGREEN)
5. வேரிகேட்டட்   ஸ்நேக்  பிளாண்ட்  (VARIEGATED SNAKE PLANT)
  
6. ரெட்  எட்ஜ்டு  டிரசீனா (RED EDGED DRACENA)  

7. கார்ன் ஸ்டாக்   டிரசீனா (CORN STOCK DRACENA)  
  
8. பார்பர்ட்டன்  டெய்சி(ஜெர்பெரா) (BARBERTON DAISY (JERBERA)

9. ஃபுளோரிஸ்ட்  கிரிசாந்திமம் (FLORIST CHRYSANTHEMEUM)

   
10. சோற்றுக் கற்றாழை (ALOE VERA) 
11. ஜேனெட் கிரெய்க் (JANET CRAIG)
  
12. வார்னெக்கி (WARNECKI)



THANKS: www.wikipaedia.org, www.who.int,  (World Health Organization)
www.bt.cdc.gov, www.shutterstock.com
IMAGES COURTESY: THANKS GOOGLE





No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...