Monday, May 30, 2016

மூலிகை பூச்சிவிரட்டி மற்றும் குணபஜலா - HERBAL PESTICIDE & GUNABAJALA

மூலிகை பூச்சிவிரட்டி மற்றும் குணபஜலா 

HERBAL PESTICIDE & KUNABAJALA

  • தழுதாழை வேர்த்தூளுடன் கோமியம் சேர்த்து, 3 நாட்கள் கோமியத்தில் ஊறவைத்து, 70 சதத்துடன் 30 மூ குணபஜலா கரைசல் சேர்த்து தெளிக்க, பூசணத்தால் ஏற்படும் இலை மற்றும் தண்டுக் கருகல் நோயைக் (LEAF CUM STEM BLIGHT) கட்டுப்படுத்தும். தாக்குதலுக்கு முன்னதாக தெளிக்க வேண்டும்.
  • தழுதாழை வேர் மற்றும் இலைகளை பொடிசெய்து, கோமியம் சேர்த்து, மூன்றுநாள் நொதிக்க வைத்து, அதில் 60 சதம் எடுத்து அத்துடன் 10 சதம் பாலும், 30 சதம் குணபஜலாவும் சேர்த்து, மொத்தம் 200 லிட்டர் கரைசல் கிடைக்கும் அளவு தண்ணீரில் கலந்து, பயிர்களின்மீது தெளிக்க வைரஸ் நோய் (VIRUS DISEASE) வராது.
  • வைரஸ்நோய் அறிகுறி தோன்றியவுடன்,  வாரம் ஒருமுறை தெளிக்கலாம். அத்துடன் பயிர்களின் (அ) செடிகளின் வேர்ப்பகுதிகளிலும், கரைசலை ஊற்றலாம். வளர்ந்த மரத்திற்கு 5 லிட்டர் வரை,  இரு வாரங்களுக்கு ஒருமுறை ஊற்றலாம்.  

5.5. குணபஜலா - கடுகுத்தூள்
  • கடுகுத்தூள், தேன், பால் மூன்றையும் கோமியத்துடன் சேர்த்து, 3 நாட்கள்  நொதிக்க வைத்து, 70 சதம்  அளவு எடுத்துக்கொண்டு அத்துடன் 30 சதம்  குணபஜாலா கரைசலை சேர்த்து பயிரின் மீது தெளிக்க, இலை அடிச் சாம்பல் நோயை (DOWNY MILDEW) கட்டுப்படுத்தலாம். பயிர்களில் இலைகளை குளிப்பாட்டுவதைப் போல தெளிக்க வேண்டும்.

5.6. குணபஜலா - பால் - தேன் 
  • 68 சதம் பால், 2 சதம் தேன், குணபஜலா 30 சதம் சேர்த்து, பயிர்மீது தெளிக்க சாம்பல் நோய் (POWDER MILDEW) கட்டுப்படும். 
  • இதனை பூக்கும் தருவாயில் 10 நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

5.7. குணபஜலா - வெண்கடுகு
  • 30 சதம் குணபஜலா, 60 சதம் பால், 3 சதம் வெண்கடுகு தூள் சேர்த்து, அத்துடன் 7 சதம்  கோமியமும் சேர்த்து நொதிக்க வைத்து பயிர் இலைகளின்மீது பூக்கும் முன் 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க, துரு நோய் (RUST) கட்டுப்படும். இதனால்; வெண்துரு நோயைக்  கட்டுப்படுத்த இயலாது. 

5.8. வேப்பம்பட்டை - தழுதாழை
  • வேப்பம்பட்டை மற்றும் தழுதாழை இலைகளை பொடித்த தூள் 30 சதமும், அத்துடன் கோமியம் 70 சதமும் சேர்த்து, 3 நாட்கள் நொதிக்க வைத்து, அதில் விதைகளை ஒரு இரவு முழுக்க ஊறவைத்து, எடுத்து நிழலில் உலர்த்தி விதைத்து, வேர்களைத்தாக்கும் நூற்புழுக்களை(ROOT NEMATODES) கட்டுப்படுத்தலாம். 
  • செடிகள் மற்றும் மரங்களுக்கு 5 முதல் 10 லிட்டர் வரை அவற்றின் வயதுக்கேற்ப வேர்ப்பகுதிகளில் ஊற்றலாம். 


5.9. சாணம் கரைசல் 
  • 10 கிராம் சாணத்திற்கு ஒரு லிட்டர் நீர் என்ற அளவில் கரைசல் தயாரித்து, அதில் விதைகளை 10 நிமிடம் ஊறவைத்து நிழலில் உலர்த்தி, விதைத்தால், விதைஅழுகல் மற்றும் நாற்றழுகல், நோயைத் தடுக்கலாம். 

5.10. பால் - கோமியம்
  • 50 சதம் பால், 50 சதம் கோமியம், இரண்டையும் சேர்த்து 3 நாட்கள், நொதிக்கும்படி வைத்திருந்து, அதில் விதைப்பதற்கான விதைகளை ஒரு இரவு முழுக்க வைத்திருந்து, நிழலில் உலர்த்தி விதைப்பதால், விதைமூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

5.11. மூலிகை பூச்சிவிரட்டி (HERBAL PESTICIDE) 

  • முதலில் 5 விதமான இலை தழைகளை தேர்ந்தெடுத்து வகைக்கு 2 கிலோ என 10 கிலோ தழைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 
  • ஆடாதொடா, நொச்சி, புங்கன் போன்ற ஆடு மாடு தின்னாத தழைகளில் ஒன்று, 
  • எருக்கு, வெப்பாலை, ஊமத்தை போன்ற பறித்தால் பால் வருபவற்றில் ஒன்று, 
  • வேம்பு, சோற்றுக் கற்றாழை, போன்ற கசப்பு சுவை உள்ளவற்றில் ஒன்று, 
  • காட்டாமணக்கு போன்ற உவர்ப்பு சுவை உள்ளவற்றில் ஒன்று அல்லது இரண்டு என 5 வகை தழைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
  • இலை தழைகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு அத்துடன்  100 முதல் 200 கிராம் வேப்பங்கொட்டைத் தூளையும் சேர்த்து ஒரு பெரிய பாத்திரத்தில் இட்டு கொதிக்க வையுங்கள்.
  • கொதித்த பின்னர் இறக்கி ஆற வைத்து வடிகட்டி அத்துடன் 100 லிட்டர் நீரையும் 100 மில்லி சோப்புக் கரைசலையும் சேர்த்து கலக்க வேண்டும்.
  • இந்த மூலிகை பூச்சி விரட்டி கரைசலை பயிர்களின் மீது கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். ஒரு ஏக்கரில் தெளிக்க கைத்தெளிப்பான் என்றால் 200 லிட்டரும் விசைத்தெளிப்பான் என்றால் 60 லிட்டரும் தேவை.


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...