Tuesday, May 31, 2016

பசுந்தழை உரங்கள் மண்வளம் பாதுகாக்கும் - GREEN LEAF MANURES IMPROVE SOIL HEALTH


பசுந்தழை உரங்கள்  மண்வளம் பாதுகாக்கும் - GREEN LEAF MANURES IMPROVE SOIL HEALTH

  • உரத்திற்காக உபயோகப்படுத்த மரங்கள் மற்றும் செடிகளிலிருந்து கழிக்கும் தழைகள்தான் பசுந்தழை உரங்கள். 
  • தழை அதிகம் தரும் எந்த மரத்திலிருந்தும் தழைகளை வெட்டிப் பயன்படுத்தலாம்.
  • ஆனால் சில மரங்கள்தான் வெட்ட வெட்ட துளிர்க்கும் மரங்களாக இருக்கும்வெட்டிக் கெட்டது வேம்பு, வெட்டாமல் கெட்டது பூவரசு என்று பழமொழி உண்டு.
  • வயல் வரப்புகளிலேயே சில விவசாயிகள் மரங்களை வளர்க்கிறார்கள்.
  • உள்ளுரில் கிடைக்கும் தழைகளை வெட்டி இதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.உதாரணத்திற்கு சிலவற்றைப் பார்க்கலாம்.
1. பொன்னாவாரை (அ) மஞ்சள் கொன்றை (CASSIA SCIAMEA)
•    சிறந்த தழை தரும், நிறைய தழை தரும., வெட்ட வெட்ட துளிர்க்கும்.

2. சீத்தா (ANNONA SQUAMOSA)
•    சிறந்த தழை தரும், நிறைய தழை தரும், வெட்ட வெட்ட துளிர்க்கும்,
      இதன் தழை பூச்சி தாக்குதலை குறைக்கும்.

3. வேம்பு (AZADIRACHTA INDICA)

•    சிறந்த தழை தரும், நிறைய தழை தரும், வெட்ட வெட்ட துளிர்க்கும்,
இதன் தழை பூச்சி தாக்குதலை குறைக்கும்.

4. புங்கன் (PONGAMIA GLABRA)
•    சிறந்த தழை தரும், நிறைய தழை தரும், வெட்ட வெட்ட துளிர்க்கும்,
இதன் தழை பூச்சி தாக்குதலை குறைக்கும்.

5. எருக்கு (CALOTROPIS GIGANTEA)
•    சிறந்த தழை தரும், நிறைய தழை தரும், வெட்ட வெட்ட துளிர்க்கும்,
இதன் தழை பூச்சி தாக்குதலை குறைக்கும்.

6. தூங்குமூஞ்சிமரம் (SAMANIA SAMAN)
• சிறந்த தழை தரும், நிறைய தழை தரும், வெட்ட வெட்ட துளிர்க்கும்,வளர்ந்த ஒரு மரம் ஓர் ஆண்டில் 0.5 டன் தழை தரும்;.

7. வாகை மரம் (ALBIZIA LABBECK)
•  சிறந்த தழை தரும், நிறைய தழை தரும், வெட்ட வெட்ட துளிர்க்கும்.

8. வாதநாராயணன் மரம் (DELONIX ELATA)
•  சிறந்த தழை தரும், நிறைய தழை தரும், வெட்ட வெட்ட துளிர்க்கும், மற்ற தழைகளைவிட சீக்கிரம் மக்கும்.

9. சூபாபுல் மரம் (LEUCAENIA LEUCOCEPHALA)

• ஆறு மூட்டை தழை ஒரு மூட்டை அம்மானியம் சல்பேட்டுக்கு சமம், வேகவேகமாக வளர்ந்து நிறைய தழை தரும:, வெட்ட வெட்ட துளிர்க்கும், கொரிய நாட்டில் இந்த தழையில் கம்போஸ்ட் தயாரிக்கிறார்கள்.
Image Courtesy: Thanks Google



No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...