Saturday, May 28, 2016

பூண்டு சாகுபடி - GARLIC CULTIVATION TECHNIQUES

Image Courtesy: Thanks Google

பூண்டு சாகுபடி - 

GARLIC CULTIVATION 

TECHNIQUES


1. எப்படிப்பட்ட நிலம் சாகுபடிக்கு ஏற்றது..?
  • ஈரம் மிகுந்த பருவநிலை.
  • நல்ல வடிகால் வசதி.
  • இருமண் பாட்டு நிலம்.
  • களிமண் நிலம் ஏற்றதல்ல.

2. என்ன ரகம் போடலாம்..?
  • ஊட்டி 1,   ஜி. 41,    ஜி. 50,  மற்றும்   எச். ஜி.  ரகம்.
  • ஊட்டி 1 
  • ஒவ்வொரு பூண்டிலும்  20 - 25  பற்கள் இருக்கும்.
  • நோய் எதிர்ப்புத் திறன் கொண்டது.

3. பூண்டு பயிரிட என்ன செய்ய வேண்டும் ?
  • பூண்டு பயிருக்கு விதைகள் கிடையாது.
  • விதைப்பூண்டுகளை  1 முதல் 2  மாதங்களுக்கு முன்பே சேமித்து வைக்க வேண்டும்.
  • உறக்க நிலை நீக்கப்பட்டு  விதைப்  பூண்டுகளை பயன்படுத்தலாம்.

4. நிலத்தை எப்படி  தயார்  செய்ய வேண்டும் ..?
  • 2  முதல்  3  முறை  உழவு செய்யுங்கள்  அல்லது  ஆழமாக கொத்தி விடுங்கள்.
  • வட்டப்பாத்தியோ அல்லது   பார்களோ  அமைத்துவிடுங்கள்
  • பார்களுக்கு  இடையில்  30 செ.மீ.  இடைவெளி இருக்க வேண்டும். 
  • செடிகளுக்கிடையே   10 செ.மீ.  இடைவெளி   இருக்க வேண்டும்.
  • ஒரு ஹெக்டருக்கு நடவு செய்ய  500 - 600   கிலோ   விதைப் பூண்டு பற்கள் தேவை.

5. எப்படி நடுவது ..?
  • சமவெளிப்பகுதியில் ஆகஸ்ட்  --  செப்டம்பர் மாதங்கள்  விதைக்க ஏற்றது.
  • மலைப்பகுதிகளில் மார்ச்,  ஏப்ரல்   மாதங்கள் ஏற்றது.
  • விதைப்  பூண்டுகளை  24 மணி நேரம் நீரில் ஊற விடுங்கள்.
  • பின்னர் எடுத்து பார்களின்  இருபுறமும்  நடவும்.

6. தேவைக்கு ஏற்ப இயற்கை உரங்களை இடுங்கள்.

7. வாரம் ஒரு தண்ணீர்  கொடுங்கள்
  • நடவு செய்யும் முன்பு லேசான நீர்பாசனம் செய்ய வேண்டும்.
  • நடவு செய்த  3 ஆம்நாள் நீர்  பாய்ச்சுங்கள்.
  • பின்னர் வாரம் ஒருமுறை நீர்ப் பாய்ச்ச வேண்டும்.

8. பிறகு என்ன செய்ய வேண்டும் ..?
  • களைக் கொத்து   கொண்டு களைகளை  நீக்கி சுத்தம் செய்யுங்கள்.

9. இயற்கைமுறையில் பயிர்ப் பாதுகாப்பு செய்யுங்கள்


10. வெள்ளைப்பூண்டை தாக்கும் பூச்சிகள்
  • அசுவணிப்பூச்சி
  • இலைச்   சிலந்தி

11. அறுவடை
  • நடவு செய்த  4 -  6 வாரங்களில் அறுவடைக்கு  தயாராகும்.
  • மண்வெட்டிக் கொண்டு  பூண்டுக்கிழங்குகளைத் தோண்டி எடுக்கவும். 
  • சுத்தம்செய்து  காற்றோட்டமான  இடங்களில் சேமியுங்கள்.
  • ஹெக்டருக்கு  8 -12  டன் மகசூல் கிடைக்கும்.
Image Courtesy: Thanks Google

                    

















 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...