Wednesday, May 18, 2016

புவிவெப்பமாதலின் மொத்த வியாபாரி நம் ஃபாசில்ஃபியூல்தான். FOSSIL FUELS ROLE IN GLOBAL WARMING





புவிவெப்பமாதலின் 
மொத்த வியாபாரி 
நம் ஃபாசில்ஃபியூல் 
தான். 



FOSSIL FUELS ROLE IN 

GLOBAL WARMING


தோல் தொழிலகங்களில் மாசுபடுத்தும் வாயுக்களில் நைட்ரஜன் டைஆக்சைடும் ஒன்று. ரோட் டிராஃபிக் மற்றும் ஃபாசில்ஃபியூல்(FOSSIL FUEL) என்னும் படிம எரிபொருள் எண்ணெணய்கள் எரிவினாலும் அதிகம் வெளியேறுகிறது நைட்ரஜன் டை ஆக்சைடு.

இன்று சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பற்றி சொல்லவே வேண்டாம். சென்னை பெங்களுரு மாதிரி பெரு நகரங்களில்  எள் விழுந்தால் எண்ணெய்  ஒழுகும். கார்களின் எண்ணிக்கை ஈசல் மாதிரி பெருகிவிட்டது. டுவீலர்பற்றி சொல்லவே வேண்டாம். பஸ்களில் மக்களை வெற்றிலை மாதிரி அடுக்கிக் கொண்டு போகிறார்கள். பஸ் பயணத்தின் போது கண்ணை மூடிக்கொண்டே ஆங்காங்கே அடிக்கும்  வீச்சத்தை வைத்து நாற்றத்தை வைத்து  எந்த இடத்தில் நாம் இருக்கிறோம் என்று துல்லியமாக சொல்லிவிடலாம். நம் பெரும்பாலானோரின் நாசிகளுக்கு  நல்ல காற்றின் அடையாளமே தெரியாமல் போய்விட்டது. 

பேட்ரோல்புகை, டீசல்புகை, தூசி, மண்துகள்;, பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் வாடை, வாகன ங்களின் பின்குழாய்ப்புகை, மக்கியும்  மக்காத அழுகிய குப்பைகளின் வீச்சம், வேலிமீறிய கிளைமாதிரி கால்வாய் மீறிய சாக்கடை நீரின் குடல்புரட்டும் நாற்றம் இவை அனைத்தும் தான் நமது சாலைபோக்குவரத்தின் சகஜமான வன்கொடை. இவற்றின் மூலமும் முக்கியமாக வெளியேறுகிறது நைட்ரஜன் டைஆக்சைடு.

காற்று மாசுபடுதல் பற்றி தெரிந்துகொள்ளும்போது அதில் ஃபாசில் ஃபியூல் என்னும் படிம எரிபொருள்தான் ஆனாஆவன்னா. ஃபாசில் என்றால் படிமம் ஃபியூல் என்றால் எரிபொருள் என்று அர்த்தம் சொன்னால் அடிக்க வருவீர்கள்.

பலகோடி ஆண்டுகளுக்கு முன்னால் அழிந்தும் இறந்தும் போன தாவரங்கள் மரங்கள் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களின் உடல்களும் பூமிக்கடியில் புதைந்து மிகையானஅழுத்தம் மற்றும் வெப்பத்தினால் உருவானதுதான் இந்த படிமஎரிபொருள்.

அப்படிப்பட்ட படிம எரிபொருட்கள் என்னென்ன ? 

இவை திடப்பொருளாகவும் இருக்கும் . திரவமாகவும் இருக்கும். வாயுவாகவும் இருக்கும்.  இந்த படிமஎரிபொருட்கள் எரியும்போதும் வெளியாகிறது நைட்ரஜன் டைஆக்சைடு. நிலக்கரி, குரூட் ஆயில், இயற்கை எரிவுhயு ஆகியவைதான் இந்த படிம எரிபொருட்கள். 

தொழிற்புரட்சி உலகில் நடந்த பிறகு மனித வர்க்கத்தின் முக்கிய எரிபொருளே இந்த படிமஎரிபொருட்கள்தான். இன்றைக்கு இவை இல்லையென்றால் மனிதனால் ஒரு ஆணியையும் கழற்ற முடியாது. குளோபல்வார்மிங் (GLOBAL WARMING) என்று சொல்லப்படும் புவிவெப்பமாதல் என்ன என்றும் தெரியாமல் போயிருக்கும். 

புவிவெப்பமாதலின் மொத்த வியாபாரி நம் ஃபாசில்ஃபியூல் அண்ணாச்சிதான்.   

நைட்ரஜன் டைஆக்சைடு காற்றை மாசுபடுத்துகிறது. இந்த மாசுபட்ட காற்றினை சுவாசிப்பதால் பல அசௌகரியங்கள் ஏற்படுகின்றன. 

முக்கிமாக நுரையீரல் செயல்பாடுகள் (FUNCTIONS OF LUNGS)  பாதிக்கும். மர்ர்;புச்சளியால் கடுமையான அவதிக்கு உள்ளாவர். தொடர் இருமல் தொந்தரவும் தொடரும். பெருமளவில் குழந்தைகளை இவை குறிவைக்கும்;. ஆஸ்துமா இருப்பவர்களை கூடுதலாக கவனிக்கும். ‘போலன்அலர்ஜி’யால் அதிகம் பாதிக்கப்படுவர். ஏற்கனவே இந்த நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து இந்த மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் மரணம் கூட சம்பவிக்கும்.

நமது பகுதியில் ‘போலன்அலர்ஜி’ இருக்கும் ஊர் பெங்களுரு. ‘போலன்அலர்ஜி’யை தமிழில் மகரந்தஒவ்வாமை (POLLEN ALLERGY) என்று சொல்லலாம். மரங்கள், இதர தாவரங்கள் மற்றும் பல்வகை புல்வகைகளும் பூக்கும் பருவங்களில் இது ஏற்படுகிறது. பூக்களின் அதிகப்படியான மகரந்தத்தூள் காற்றில் கலந்து அதனை நாம் சுவாசிப்பதால் ஏற்படும் ஒவ்வாமை இது. 

பெங்களுருவை ஆஸ்துமா சிட்டி என்றுகூட சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். இதுபற்றி ஒரு அமெரிக்க நிறுவனம் 1946 ஒரு ஆய்வினை மேற்கொண்டது. பார்த்தீனியம் (PARTHENIUM) களைச்செடியின் மகரந்தம்; 41 சதமும் ஆவாரை (CASSIA TREES) சம்மந்தமான மரங்களின் மகரந்தம் 21 சதமும் அதிகபட்சமாக காற்றுமாசுக்கு காரணமாக இருந்ததாம்.  

லண்டனில்; ஆண்டுதோறும்; 9500 பேர் நைட்ரஜன் டை ஆக்சைடு மாசுவினால் இறந்துபோகிறார்கள் என்று ஒரு ஆராய்ச்சி குறிப்பு சொல்லுகிறது. நுரையீரல் சம்மந்தப்பட்ட நோய் அவர்களை அதிகம் தாக்குகிறது. இழுப்பு நோயும் அடிக்கடி இருமலும் வரும். பூக்கள் பூக்கும் பருவத்தில் போலன்அலர்ஜி கண்டிபப்பாய் வரும். 

இப்படி வெளியிடங்களிலும் பூட்டிய கதவுடைய வீடுகளுக்குள்ளும்; மாசடைந்த காற்றை சுத்தப்படுத்த ஒரேவழி, தாவரங்கள் மற்றும் செடிகளை நடுவதுதான். நகர்ப்புறங்களிலும் மரங்களை நடுவதுதான். புதிய மரங்களையும் நட வேண்டும். நட்ட மரங்களுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.

 மரங்கள் நடுவது என்றால் அது கிராமங்களுக்கு நேர்ந்துவிட்ட வேலை என்ற மனப்பான்மையை விட வேண்டும். விழாவில் ஆயிரம்  மரங்கள் நடுவதைவிட வீட்டுக்குப் பின்னால் ஒரேஒரு மரம் நட்டு வளருங்கள் !

நகர்ப்புற காடுகளை (URBAN AFFORESTATION) உருவாக்க வேண்டும். நகர்பபுற காடுகள்பற்றி விரிவாக பின்வரும் பகுதிகளில் பார்க்கலாம்.

2.www.greenfact.org – who regional office for Europe
4.http://www.drvparameshvara.com/wpcontent/themes/Digital_Statement/Digital%20Statement/PDF/RS4.pdf       
5. BANGALORE AND BRONCHIAL ASTHMA : AN ENVIRONMENTAL AND POPULATION SURVEY


Image Courtesy:Thanks Google

No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...