Wednesday, May 25, 2016

கனகாம்பரம் சாகுபடி - CROSSANDRA CULTIVATION


Image Courtesy: Thanks Google

கனகாம்பரம் 

சாகுபடி  


CROSSANDRA

CULTIVATION

  • டெல்லி கனகாம்பரம் செடியை விற்றே நிறைய பேர் லட்சாதிபதி ஆகியுள்ளனர்.
  • வாடாத கனகாம்பரத்திற்கு எப்போதும் மார்க்கெட்டில்  நல்ல  விலை உண்டு.
1. எங்கு பயிர்  செய்யலாம் ..?

• வெப்பமான பகுதிகள் ஏற்றவை.
• வடிகால் வசதிகொண்ட மணற்பாங்கான இருமண்பாடான நிலத்தில் பயிர்        செய்யுங்கள்.

2. என்ன ரகம் போடலாம் ..?
  • ஆரஞ்சு ரகம் 
  • சிவப்பு ரகம்
  • டில்லி கனகாம்பரம்
  • ஆரஞ்சு சிவப்பு ரகங்கள் உங்களுக்கு அறிமுகமானவை.
  • டில்லி கனகாம்பரம் புதிய ரகம் -  பெரிய பூக்கள்.நீண்ட 
  • பூங்கொத்துக்கள் நிறைய மகசூல் தரும்,  லாபமும்தரும்.

3. புதியவிதைகளை விதையுங்கள்

• விதைப்பதற்கு செடிகளிலிருந்து புதியவிதைகளை
சேகரியுங்கள்.

4. மேட்டுப் பாத்தியில் நாற்றங்கால் போடுங்கள்

• உங்கள் வசதிக்கு ஏற்ற அளவில்;  மேட்டுப் பாத்திகளை
அமையுங்கள்.
• புதிய விதைகளை மேட்டுப்பாத்தியில் விதையுங்கள்.
• ஜுலை , ஆகஸ்ட, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில்
விதையுங்கள்.
• விதைகளை வரிசையாக 15  செ.மீ.  இடைவெளியில்
  விதையுங்கள்.
• ஒரு ஹெக்டருக்கு 5 கிலோ விதை தேவை.
• டில்லி கனகாம்பரம் பயிரிட வேர்க்குச்சிகளை நடுங்கள்.
• பாத்திகளில் தினமும் பூவாளியால்  நீர் தெளியுங்கள்.

5. எங்கு நடுவது ..?

நடவு வயலை மூன்று முறை நன்கு உழவு செய்யுங்கள்.
உழுத வயல்களில் பார்களை 60 செ.மீ. இடைவெளியி;ல்
        அமையுங்கள்.

6. நாற்றுக்கள் நடவுக்குத் தயார்

• 60 நாட்களில் நாற்றுக்கள் நடவுக்குத்தயாராகும்.
• நாற்றுக்களை பாத்தியிலிருந்து பிடுங்கி எடுங்கள்.

7. எவ்வளவு இடைவெளியில் நடவேண்டும்..?

• 30 செ.மீ.  இடைவெளியில் நடுங்கள்.
• டில்லி கனகாம்பரம் செடிகளை 40 செ.மீ. இடைவெளியில் நடுங்கள்.

8. இயற்கை உரம் இடுங்கள்

9. பாசனம் செய்யுங்கள்

•  செடிநட்டவுடன் தண்ணீர் கட்டுங்கள்.
•  பின்னர் வாரம் ஒரு முறை பாசனம் கொடுங்கள்.
•  மண்ணின் தன்மைக்கு ஏற்ப தண்ணீர் பாய்ச்சுங்கள்.

10. பயிர்பாதுகாப்பு

• இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துங்கள்
• இயற்கை பூசணக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துங்கள்

11. கனகாம்பரத்தை தாக்கும் பூச்சிகள்

  • அசுவணி 
  • நூற்புழுக்கள்


12. கனகாம்;பரத்தை தாக்கும் நோய்
     •  வாடல் நோய்

13. அறுவடை செய்யுங்கள்


  • இரண்டு வருடம் வரை மகசூல் தரும்.
  • மூன்றாவது வருடம் மருதாம்பு விடலாம்;;.
  • நடவு செய்த மூன்றாம் மாதத்திலிருந்து பூக்களைப் பறிக்கலாம்.
  • மலர்ந்த புக்களை பறியுங்கள்.
  • இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பறியுங்கள்.
  • ஒரு ஹெக்டரில் ஒரு வருடத்தில்  2,000.  கிலோ பூக்கள் தரும்.
  • டில்லி கனகாம்பரம்  2,800.  கிலோ பூக்கள் தரும்.
  • பூக்களை  பறித்தவுடன் விற்பனைக்கு அனுப்புங்கள்.

Image Courtesy: Thanks Google



                 



No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...