Tuesday, May 31, 2016

தென்னை நார்க்கழிவு உரம் நீங்களே தயாரிக்கலாம் - COIR WASTE COMPOST -DO IT YOURSELF

தென்னை நார்க்கழிவு உரம் நீங்களே தயாரிக்கலாம்

COIR WASTE COMPOST -DO IT YOURSELF


  • மண்ணின் நீர்பிடிப்புத் தன்மையை அதிகரிக்கிறது.
  • மண்ணின் பௌதீகத் தன்மையை மேம்படுத்துகிறது.
  • இறுக்கமான மண் கண்டத்தை லேசாக மாற்றுகிறது.
  • மண்ணில் அங்கக சத்தினை அதிகரிக்கிறது.
  • பயிர் ஊட்டச்சத்துக்களை மண்ணிற்கு வழங்குகிறது.
  • தென்னை நார் கழிவை உரமாக மாற்றி விடுவதால் சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்கிறது.
  • தட்பவெப்பநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளை குறைக்க உதவுகிறது.

தேவைப்படும் பொருட்கள்

  • நிழலுடைய ஒர் இடம்                  
  • தென்னை நார் கழிவு 1000 கிலோ
  • விதைக்காளான் -புளுரோட்டஸ்-  5 பாட்டில்.    
  • யூரியா  5 கிலோ.        .           
  • போதுமான அளவு தண்ணீர்.  (15 முதல் 20 குடம்)


செயல்முறை விளக்கம்
       .                  
  • நிழலான ஓர் இடத்தை தேர்ந்தெடுங்கள்;
  • அது ஒரு மரத்தடியாகவோ கொட்டகையாகவோ இருக்கலாம்.    .       
  • நீளம்  15 அடி   அகலம்  மூன்றறை அடி  அளவுள்ள நிலப்பரப்பை தெரிவு செய்யுங்கள்.
  • இந்த அளவுள்ள பாத்தியினை 4 முனைகளிலும் 4 குச்சிகளை அடித்து  அடையாளம் செய்யுங்கள்.  
  • தென்னை நார்க்கழிவு 1000 கிலோவை  பத்து  சமமான பகுதிகளாக பிரித்துக் கொள்ளுங்கள்.
  • அதில் ஒரு பகுதியை பாத்தியில் பரப்புங்கள்.
  • அதன்மீது சுமார் 3 குடம் தணணீர்; தெளியுங்கள்.
  • ஈரமான தென்னைநார் கழிவின்மீது பாட்டிலில் இருக்கும் விதைக்காளானை வெளியிவ் எடுத்து சீராகத் தூவுங்கள்.       
  • இப்போது இரண்டாவது பங்கு தென்னைநார் கழிவை-  (100 கிலோ)  பாத்தியில் சீராக பரப்பவும்.
  • அதன் மீது தேவையான அளவு தண்ணீர் தெளியுங்கள்.
  • இரண்டாவது அடுக்கு ஈரமான தென்னை நார்க்கழிவின் மீது ஒரு கிலோ யூரியாவை பரவலாக தூவவும்.
  • இப்போது 2 அடுக்கு தென்னை நார்க்கழிவை பரப்பி ஒரு அடுக்கில் விதைக் காளானையும்  இன்னொரு அடுக்கில் யூரியாவையும்  போட்டுள்ளோம்.
  • இதுபோல இருக்கும் தென்னை நார்க்கழிவை 10 அடுக்குகள் போடவும்.
  • இறுதியாக 5 அடுக்குகளில் விதைக்காளானையும் 5 அடுக்குகளில்  யூரியாவையும் போடவும். 
  • இவற்றை போட்டு  முடித்தப் பின் அதன்மீது கொஞ்சம் தென்னை நார்க்கழிவைப் பரப்பி மூடவும்.
  • மேலாக 2 அல்லது 3 குடம் தண்ணீரை தெளிக்கவும்.
  • அதன் பிறகு தினமும் போதுமான அளவு தண்ணீரை தெளிக்கவும்.
  • இந்த தென்னை நார்க்கழிவு 60 வது நாள் வாக்கில்  முழுவதுமாக  உரமாக மாறி இருக்கும்.
  • பார்ப்பதற்கும் காப்பித்தூள் போல கருப்பு மற்றும் காவி நிறக்கலவையாக மாறி விடும்.

தென்னை நார்க்கழிவு உரம் இப்போது தயார்.
  • நிலப்பரப்பு ஒரு ஏக்கரில்  தென்னைநார் கழிவு உரத்தை  5 டன் -வரை போடலாம்.


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...