Saturday, May 28, 2016

காப்பி சாகுபடி முறைகள் COFFEE CULTIVATION METHODS




Image Courtesy: Thanks Google



காப்பி  சாகுபடி முறைகள் 

COFFEE CULTIVATION METHODS

1. காப்பி எங்கு சாகுபடி செய்யலாம்  ..?
  •   கடல்மட்டத்திற்கு  மேல்  500  முதல்   1500  மீட்டர்  வரை.
  •   அதிக மழை பெறும்  பகுதி.
2. காப்பி   ரகங்கள்
  •   அராபிகா
  •   ரொபஸ்டா
  •   காவேரி
  •   எஸ்.  795.

3. அராபிகா
  • தமிழகத்தின்  வடகிழக்குப்  பகுதியில்   பயிரிடுங்கள்.

4. ரொபஸ்டா
  • சரிவான  நிலங்கள் மற்றும்  சமதளத்திலும்  பயிரிடுங்கள்.

5. விதைகள் தயாரியுங்கள்
  •  பழுத்த சிவப்பு நிற  பழங்களை  பறியுங்கள்.
  •  பழங்களை  நீரில் போட்டு மிதக்கும் பழங்களைஒதுக்குங்கள்.
  •   அடியில் உள்ள பழங்களை எடுங்கள்.
  •   பழங்களிலிருந்து எடுத்து விதைகளை  சாம்பல்தூளில்   கலக்குங்கள்.
  •   பின்னர்  லிதைகளை 5  நாட்கள்  உலர்த்துங்கள்.
  •   பின்னர் விதைகளை  கையில் தேய்த்து உபரி சாம்பலைஉதிருங்கள்
  •   இது அழுகல் நோயைக் கட்டுப்படுத்தும்.
  •   இப்பொழுது  விதைகள் தயார்.

6. நாற்றங்கால் பாத்திகள் அமைத்தல்  :--
  •   வடிகால்வசதி   தேவை.
  •   களிமண்பூமி  நல்லதல்ல.
  •   தாழ்வான நிலங்கள் ஏற்றதல்ல.
  •   மிகப்பெரிய மரங்கள்  இருக்கக்கூடாது.
  •   வருடாவருடம் ஒரே இடத்தில் அமைக்கக் கூடாது.
  •   மேட்டுப்பாத்தி அமையுங்கள்
  •   பாத்திகளின் மேல் பந்தல்அமையுங்கள்
  •   பின்னர் மேட்டுப்பாத்தியில் விதையுங்கள்.
  •   விதைகள் 45 நாட்களில்  முளைக்கும்.
  •   60  நாட்கள் வரை  நாற்றுகள் பாத்தியில் இருக்க
  •   வேண்டும்.
  •   பிறகு பாலித்தீன் பைகளில்  நடவேண்டும்.
  •         
7. பாலித்தீன் பைகளில் நடுதல் :--
  • 60 நாள் வயது நாற்றுக்களை பாலித்தீன் பைகளில் நடவேண்டும்.
  • 25 செ.மீ.  நீளம்,  10 செ.மீ.  அகலம்  உள்ள  பாலித்தீன் பைகள் தேவை.
  • இந்தப் பைகளில் 9 துளைகள் இடவேண்டும். 
  • 3 பாகம் சோலைமண்,  2 பாகம்  குப்பை எரு, 1 பாகம் மணல்  ஆகியவற்றைக் கலக்குங்கள்.
  • இந்தக்கலவையை  நீரில்  நனைத்து பைகளில் நிரப்புங்கள்.
  • தேவைக்கு ஏற்ப நீர் நிரப்புங்கள் .
  • நீர் தேங்கக்கூடாது.
  • இந்தப்பைகளில்  18  மாதம் வரை வளர்க்கலாம்.

8. நடவுக்குழி  --  சில குறிப்புக்கள்.
  • 15 அடி நீளம்,  அகலம் மற்றும்  ஆழத்தில் குழி எடுக்க வேண்டும்.
  • ஒரு குழிக்கும் இன்னொரு குழிக்கும்  1.5 மீட்டர்  இடைவெளி  கொடுங்கள்.
  • குழிகளை இரண்டு மாதம்  ஆறப்போடுங்கள்.
  • 250 கிராம்  தொழுஉ ரத்துடன் குழியிலிருந்த எடுத்த மண்ணைச்சேர்த்து குழியில் நிரப்புங்கள்.
  • 16 முதல்  18  மாதம்  நாள்  வயதான கன்றுகளை  பாலித்தீன் பையிலிருந்து பறித்து எடுங்கள்.
  • கன்றுகளை குழிகளில் நடுங்கள்.
  • குழியைச்சுற்றி  காய்ந்த சருகுகளைப் போடுங்கள்.
  • இதனால்  குழியில் ஈரம் காக்கலாம்.

9. கவாத்து
  • வளர்ந்த செடிகளை 3 அடிக்கு மேல் வெட்டிவிடலாம்.
  • இதற்கு 9 முதல் 12  மாதங்கள்;  ஆகும்.
  • பக்கக்கிளைகள்  அதிகம்  வளர்ந்தால்,  மகசூல்  அதிகம்  கிடைக்கும்.
  • 4 வருடங்களுக்கு ஒரு முறை  கவாத்து செய்யுங்கள். காபி அறுவடை முடிந்ததும் கவாத்து செய்யுங்கள். 

10. செடிகளை பராமரித்தல்
  • காபிச்செடி  நிழலில்  வளரவேண்டும். 
  • இதற்கு 30 அடிக்கு 1 மரம்   நடுங்கள். 
  • கல்யாணமுருங்கை,  சவுக்கு, அத்தி, வாகை, தொண்டி, சந்தன வேம்பு,  தோதகத்தி,  நீலி,  பலா  ஆகிய மரங்கள் நடலாம்.

11. காபியைத் தாக்கும் பூச்சிகள் 
  • மாவுப்பூச்சி 
  • பச்சை செதில் பூச்சி 
  • பழுப்பு நிற செதில் பூச்சி 
  • தண்டு  துளைப்பான்
  • வேரைத்தாக்கும் புழுக்கள்
  • வேர்ப்பாகத்தில்  தோன்றும் நூற்புழுக்கள்
  • சிறுதண்டு துளைப்பான் பூச்சிகள் :
  • இலைகளைத்தாக்கும்  கம்பளிப்புச்சிகள் :


12. காப்பியை தாக்கும் நோய்கள் :
  • துருநோய்
  • காய்ப்புள்ளி  நோய்
  • சிவப்பு வேர் நோய் 
  • கறுப்பு வேர் நோய்
  • பழுப்பு வேர் நோய்

13. இயற்கை மருந்துகளை பயன்படுத்தி பூச்சிகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்துங்கள்.


14. காப்பி அறுவடை
  • நவம்பர் மாதம்  பழுக்க  ஆரம்பிக்கும். 
  • இளஞ்சிவப்பான  பளபளப்பான பழங்களைக் கையினால் பறிக்க வேண்டும்.

15. பழங்களைப் பதப்படுத்துவது  எப்படி ..?
  • இரண்டு முறைகளில் பயன்படுத்தலாம்.
  • ஈரமுறை.
  • உலர்முறை.

16. ஈரமுறை
  • இதற்குத்தேவை தோலுரிக்கும் இயந்திரம்.
  • சுத்தமான தண்ணீர்.
  • பழங்களை நீருள்ள தொட்டியில் போடவும்.
  • மிதக்கும்  பழங்களை நீக்கவும்.
  • அடியிலுள்ள பழங்களை சீராக  இயந்திரத்தில் போ டவும்.
  • பழத்தோல் முழுவதும் நீக்கப்படும்.
  • கொட்டைகள் உ டைபடாமல் வெளியே வரும்.
  • பின்பு கொட்டைகளை கழுவும் இயந்திரத்தில் போடவும்.
  • வழுவழுப்பு நீங்கி  கொட்டை வெளிவரும்.
  • அதை  உலர்த்தி  வைக்கவும்.
  • இதற்கு 72 மணிநேரம் தேவை.

17. உலர்  முறை
  • தண்ணீர்  வசதி இல்லாத இடத்தில் பின்பற்றப்படும்.
  • பழங்கள் பழுக்கும் நிலை அடைய அதைப் பறிக்கவும்.
  • சிமெண்ட் தரையில்பரப்பி உலர்த்தவும்.
  • இரவில் பனிபடாமல்  குவித்து மூடிவிடவும்.
  • காய்;ந்த  காப்பிக்காய்களை   உலுக்கினால் சத்தம் வரவேண்டும்.
  • கொட்டையில் வெள்ளி நிறத்தில் தோல்   இருக்கும்.  அதுவும்
  • நீக்கப்படும்.
  • இப்போழுது கொட்டைகள்  சிறிது  ஊூதா நிறம் கலந்த பச்சைநிறத்தில்  காணப்படும்.
  • இதுதான்  சுத்தமான காப்பி.
  • இந்தக்கொட்டைகள் நன்றாக வறுக்கப்படும்.
  • பின்பு அரைத்து பைகளில் அடைத்து விற்பனைக்கு வரும்.
Image Courtesy: Thanks Google

   
   






     



No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...