Image Courtesy: Thanks Google |
முந்திரி சாகுபடி தொழில்நுட்பங்கள்
CASHEWNUT CULTIVATION
TECNIQUES
1. எங்கு சாகுபடி செய்யலாம் ..?
2. ஒட்டுக்கன்றுகளை நடுங்கள்.
7 மீட்டர் இடைவெளியில் குழி எடுங்கள்.
3. இயற்கை உரம் இடுங்கள்
4. உங்கள் கவனத்திற்கு சில குறிப்புக்கள்
5. என்ன பூச்சி தாக்கும் ..?
6. என்ன நோய் தாக்கும் ?
7. எப்போது அறுவடை செய்யலாம் ..?
8. மரம் எப்போது அறுவடைக்கு வரும் ?
CASHEWNUT CULTIVATION
TECNIQUES
- மிக மோசமான மண்ணிலும் முந்திரி வளரும்.
- மிகுந்த வறட்சியுள்ள பகுதிகளிலும் வளரும்.
- நல்ல வருமானம் தரும்.
1. எங்கு சாகுபடி செய்யலாம் ..?
- வெப்பமான பகுதி.
- குறைந்த மழை.
- வடிகால் வசதியுள்ள எல்லா நிலத்திலும் வரும்.
- பனிப்பெய்யும் மலைப் பகுதி ஏற்றதல்ல.
2. ஒட்டுக்கன்றுகளை நடுங்கள்.
- ஒட்டுக் கன்றுகள் தோட்டக்கலைத்துறை அலுவலகங்களில் கிடைக்கும்.
- விதை மூலமும் பயிர் செய்யலாம்.
- ஒட்டுக்கன்றுகள் உடனடி மகசூலும், அதிக மகசூலையும் தரும்.
- நிலத்தை நான்கு முறை உழுங்கள்.
7 மீட்டர் இடைவெளியில் குழி எடுங்கள்.
- குழியின் அளவு நீளம் 45 செ.மீ.
- அகலம் 45 செ.மீ. ஆழம் 45 செ.மீ.
- 10 கிலோ தொழு உரத்துடன் குழியிலிருந்து எடுத்தமேல் மண்ணைக்கலந்து குழியை நிரப்புங்கள்.
- பின்னர் நாற்றுக்களை நடுங்கள்.
- மழைக்காலத்தில் நடுங்கள்.
3. இயற்கை உரம் இடுங்கள்
4. உங்கள் கவனத்திற்கு சில குறிப்புக்கள்
- மழைக்காலத்தில் மரங்களுக்கு இடையே உழவு செய்யுங்கள். தட்டைப்பயறு, உளுந்து போன்றவற்றை பயிரிடலாம்
- சணப்பு, கொளிஞ்சி , பசுந்தாள் உரப் பயிர்களை மரங்களுக்கிடையே பயிரிடலாம்.
- பசுந்தாள் உரப்பயிர்கள் பூக்கும் முன் மடக்கி உழவு செய்யலாம்.
5. என்ன பூச்சி தாக்கும் ..?
- தேயிலைக்கொசு
- தண்டு துளைப்பான்
- வேர் துளைப்பான்
- துளைப்பான்; புழு
- இலைகளையும் பூங்கொத்துக்களையும் தாக்கும் புழுக்கள்
6. என்ன நோய் தாக்கும் ?
- பிங்க் நோய்
7. எப்போது அறுவடை செய்யலாம் ..?
- காய்கள் பச்சை நிறம் மாறி முழுச்சிவப்பாகவோ அல்லது முழு
- மஞ்சளாகவோ அல்லது மஞ்சள் சிவப்பு கலந்த நிறமாகவோமாறியபின் அறுவடை செய்யவேண்டும்.
- சிவப்பு மஞ்சள் பழத்தின்மீது ஒட்டியிருக்கும் முந்தரிகொட்டையை திருகி தனியே பிரித்து அறுவடையை முடிக்க வேண்டும்.
8. மரம் எப்போது அறுவடைக்கு வரும் ?
- நான்காம் ஆண்டிலிருந்து காய்க்கத் தொடங்கும்.
- எட்டாம் ஆண்டிலிருந்து அதிகமாக காய்க்கும்.
- நூறு ஆண்டுகளுக்கு பிறகு பழைய மரங்களை வெட்டிவிட்டு பதிய மரங்களை நடவேண்டும்.
Image Courtesy: Thanks Google |
No comments:
Post a Comment