Monday, May 2, 2016

கௌரவமாக ஒரு கொள்ளை – நகைச்சுவை நாடகம்


(இந்த நாடகம் முழுக்க முழுக்க கற்பனையானது. அதீதமான  கற்பனை என்னும் வடிவத்தில் எழுதப்பட்டது. 1992 ம் ஆண்டு மதுரைப் பகுதியில் மேடை நாடகமாக நடத்தப்பட்டது. சுமார் இரண்டுமணி நேரத்திற்குக் குறையாமல்  நடக்கும் இது முழுநீள நகைச்சுவை நாடகம். இந்த நாடகத்தை இந்த சுருக்கமான வடிவத்தில் வெளியிட்டது மதுரைமணி பத்ரிக்கைக்கு நன்றி).               

கல்வி என்பது கொழுத்த லாபம்தரும் தொழிலாக நடைபெறுகிறது. நர்சரி பள்ளிக்கூடமே நல்ல லாபம் தருகிறது. நர்சரி பள்ளிக்கூடத்தில், எல்.கே.ஜி.  வகுப்பிற்கு இடம் பிடிப்பதில். போதும் Nபுhதுமென்று ஆகிவிடுகிறது. இந்த சம்பவத்தை வைத்து சுவையாக  எழுதப்பட்ட நகைச்சுவை நாடகம்தான்  கௌரவமாக ஒரு கொள்ளை.

                                                            கதைச்சுருக்கம்

பகல் கொள்ளை அடிக்கும் ஒருவரின் 10 மாத பையனுக்கு எல்.கே.ஜி.  வகுப்பில் இடம் வேண்டும். அலையோ அலை என்று அலைகிறார்  பையனை சேர்ப்பதற்கு.  ஒண்ணரை லட்சம் செலவாகும் என்று தெரிகிறது. அந்தப் பணத்தையே முதலீடாகப்போட்டு  ஒரு நர்சரி பள்ளிக்கூடத்தையே ஆரம்பித்து விடுகிறார். பகல் கொள்ளையை நிறுத்திவிடப் போவதாகவும்,  நர்சர்p பள்ளிக்கூடம் நடத்துவது கொளரவமான கொள்ளை என்றும் கூறுகிறார்.
        
நாடகத்தை எழுதி இயக்கி இருப்பவர்  தே. ஞானசூரிய பகவான்.  மதுரை வானொலியில் பண்ணை ஒளிபரப்பு அதிகாரியாக பணியாற்றுகிறார். (23 02 1992.)  மதுரை  வானொலியில் பணியாற்றும் அலுவலர்கள் சூர்யா தியேட்டர்ஸ் என்ற நாடக மன்றம் வைத்துள்ளனர். இந்த மன்றத்திற்காக ஞானசூரியன் எழுதியுள்ள இந்த நாடகம் ஐந்து இடங்களில் நடைபெற்றுவிட்டது. சமீபத்தில்; மதுரை தியாகராயர் கல்லூரி நாட்டுத்தொண்டு திட்ட மாணவர்கள் அழகர் கோவிலுக்கு பொய்கைக்கரைப்பட்டி என்ற கிராமத்தில் பொதுத்தொண்டில் ஈடுபட்டனர். அப்போது  இந்த நாடகம் அந்த கிராமத்தில் நடைபெற்றது.

       
மரங்கள்  சூழ்ந்திருந்த வெட்ட வெளியில் சின்னஞ்சிறிய மேடை. ஒப்பனையோ உடை அலங்காரமோ கிடையாது.  எப்போதும் அணிகிற உடைதான் ஆனால் வசனம் வயிறு குலுங்கவைத்து விட்டது.  அந்த நாடகத்திலிருந்து சில பகுதிகளை இங்கு காணலாம். 

நடிகர்கள் ஜோசப்  டிசௌசா, ஞானசூரியன், ஜோதி,  ஹரிகிருஷ்ணன்,  அண்ணாதுரை,  வெற்றிவேல். ஹரிஹரன், ஏ. சந்திரபுஷ்பம்,  ஃபாத்திமா,  தை – சையது பரூக்  இவர்கள் தவிர தியாக ராசர் கல்லூரி மாணவர்கள் கிருஷ்ணன்,  அரியநாயகம், பாலமுருகன் ஆகியோரும், ஒருகாட்சியில் தோன்றி நடித்தனர்.

                     கௌரவமாக ஒரு கொள்ளை – நகைச்சுவை  நாடகம்

                                                                     காட்சி 1

இடம்: ஜோதியின் வீடு

பாத்திரங்கள்: மீனா – ஜோதியின் தோழி மற்றும் பக்கத்து வீட்டுப்பெண். இரண்டு குழந்தைக்கு தாய்.

ஜோதி: மீனாவின் தோழி, ஒரு குழந்தைக்கு தாய்

நிலை: பரிட்சைக்கு படிப்பது போல் சீரியசாக புத்தகம் வைத்து படித்தபடி ஒரு நோடபுக்கில் குறிப்பும் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

நேரம்: காலை சுமார் 11 மணிவாக்கில்

-------------------------------------------------------------------------------------------------------------------------
மீனா:-- என்ன ஜோதி நர்சரி புஸ்தகத்தை வச்சி படிச்சிக்கிட்டிருக்கே ?

ஜோதி:-- பையனை நர்சரி பள்ளியில் போடலாம் ன்னு  முடிவு பண்ணி
யிருக்கோம். அதான் அவனுக்கு சொல்லி  குடுக்கணும்ல....?

மீனா:-- உங்க பையனுக்கு என்ன வயசாச்சு  ....?

ஜோதி:-- பத்து மாசம்தான் ஆச்சு.
 
மீனா:-- ஏன் இவ்ளோ நாள் என்னா பண்ணீங்க ...?   என் பையனை
நான் அஞ்சி மாசத்திலேயே  சேர்த்தேன்.

ஜோதி:-- குழந்தைங்கள  பத்துமாசத்துலதான  நர்சரியில சேக்கணும் ?

மீனா:-- அதெல்லாம் ஹைதர்காலம் ஜோதி.  இப்பல்லாம் பால் மறந்தா
போதும். எந்த ஸ்கூல்லயும் சேர்க்கலாம்.  ஆனால் பால்மறந்த குழந்தைன்னு டாக்டர்கிட்ட சர்ட்டிபிகேட் வாங்கணும். அதுசரி ஒம்பையன  எந்த ஸ்கூல்ல சேர்க்கப்போற ...?

ஜோதி:-- அதான் அந்த அரோகரா நர்சரி ஸ்கூல்ல சேர்க்கலாம்ன்னு
இருக்கேன்.

மீனா:-- அதுசரி  ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணி எவ்ளோ நாளாச்சி  ?

ஜோதி:-- என்னது ..? ரிஜிஸ்ட்ரேஷனா ..? எதுக்கு .... ? 

மீனா:-- ஆமாம் ஜோதி முதல்லயே ரிஜிஸ்ட்டர் பண்ணாத்தானே இப்போ அட்மிஷன் பண்ண முடியும். அப்போ ரிஜிஸ்ட்டரே பண்ணலையா ...? 

ஜோதி:-- இல்லையே 

மீனா:-- அப்போ வேற ஸ்கூல்ல ட்ரை பண்ணுங்க. ஏன்னா, நான் எனக்கு கல்யாணம் பண்ணி பத்தாவது நாளே ரிஜிஸ்டர்       பண்ணேன்.  அப்புறம் குழந்தை பிறந்தவுடனே கன்பர்ம் ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணேன்.. அப்புறம்தான் சீட் கெடைச்சது.

ஜோதி:-- அப்படியா  அதுசரி   இப்போ உன்பையன் என்னா படிக்கிறான் ..? 
மீனா:-- எல்.கே.ஜி.

ஜோதி:-- எப்படி படிக்கிறான்  ?

மீனா:-- என்ன ஜோதி ஒண்ணுமே தெரியாத மாதிரி கேக்கற……?  அரோகரா ஸ்கூல்ல எல்லா கிளாஸ்லயும் எல்லா ஸ்டுடண்ட்சுமே ஃபர்ஸ்ட் மார்க்குதான்.

ஜோதி:-- அது எப்படி முடியும் ..?

மீனா:-- அதுதான் அரோகரா ஸ்கூலோட  ஸ்பெஷாலிட்டி.

ஜோதி:-- என்ன லேங்வேஜ்ல டீச்சங் ? இங்கிலீஷ்தானே  ..?

மீனா:-- அரோகரா நர்சரியில சோசியல சொமேலியா மொழியிலயும்,
சையன்ச சைபீரியன் மொழியிலயும், கணக்கை கஜகஸ்தான் மொழியிலயும், தமிழை இங்கிலீஷ்லயும்,  இங்கிலீஷை தமிழ்லயும் சொல்லித் தராங்க.

                                                                    காட்சி 2

இடம்: ஜோதியின் வீடு

பாத்திரங்கள்: ஜோதி சந்நியாசியின் மனைவி

சந்நியாசி: ஜோதியின் கணவன், மனைவியின் திருபதி செய்யவேண்டி பகல் கொள்ளைக்காரனாக மாறியவன்.

நிலை: எவ்வளவு சம்பாதித்தும் தனது குழந்தையை பள்ளியில் சரியான சமயத்தில் சேர்க்கவில்லை என சந்நியாசியை குறைசொல்லி சண்டைபோடும் ஜோதி  

நேரம்: இரவு சுமார் 8 மணிவாக்கில்

-------------------------------------------------------------------------------------------------------------------------
ஜோதி:-- எங்கப்பா அப்பவே  தலைப்பாடா அடிச்சிக்கிட்டார். எனக்கு
வேணாம்மா இந்த மாப்பிள்ளை. பேருதான் சந்நியாசின்னா, ஊருபேரு ஆண்டிப்பட்டின்னு சொல்றான். வேணாமான்னு சொன்னாரு.. அதை நான் கேட்டேனா..?  பேய்க்கு வாழ்க்கைப் பட்டா  புளியமரத்திற்கு புளியமரம்  ஏறணும்னு  பெரியவங்க சும்மாவா சொன்னாங்க..?

சந்நியாசி: தோ பாரு  ஜோதி.. ஒரு காலத்தல, சத்தியவந்தனா இருந்தேன்… கவர்மெண்ட்டு வேலையில வாங்குற சம்பளம் எனக்கு  கண் மை வாங்கக்கூட பத்தலைன்னு நீ சொன்ன… நான் அந்த வேலையை விட்டுட்டு உனக்காக கொள்ளையடிக்க ஆரம்பிச்சேன்..  சாதாரண கொள்ளை இல்ல.. அதுவும் பகல்கொள்ளை. நாய் வித்த காசு நாறாது.  பூ  வித்த  காசு  மணக்காதுன்னு சொல்லி என்னை சமாதானப்படுத்தினெ.  உனக்காக நான் பண்ண தியாகம் ஒண்ணா ரெண்டா ?

ஜோதி:-- பிச்சைக்காரன்கூட அவன் பையனை.. பொறந்த அஞ்சாவது
மாசத்திலேயே டான்னு பள்ளிக்கூடத்துல சேர்க்கிறான்…என் ஆம்படையான் லெச்ச லெச்சமாய் சம்பாதிக்கிறார்ன்னு சொல்ற.  குழந்தை பொறந்து பத்து மாசமாச்சி.  இன்னும் பள்ளிக்கூடத்துல சேர்க்கறதுக்கு வழி இல்லன்னு என் மூஞ்சயில காறித்துப்பிட்டு  போயிட்டா மீனா…... 

சந்நியாசி:-- நீ ஒண்ணுக்கும் கவலைப்படாத…….நான் உடனடியா நம்ம பையன ஒரு நல்ல ஸ்கூல்ல சேக்கறதுக்கு ஏற்பாடு பண்றேன்..

ஜோதி: அது எப்படிங்க முடியும் ?

சந்நியாசி: ஜோதி………அரோகரா ஸ்கூல் இல்லன்னா என்னா? கோவிந்தா த்ரீ இன் ஒன் ஸ்கூல் இருக்கு.. 

                                                                    காட்சி 4

இடம்: ஜோதி – சந்நியாசி வீடு

பாத்திரங்கள்: சந்நியாசி - ஜோதியின் கணவன், அய்யார்எட்டு – ஒரு பள்ளியில் பயிற்சி பெறாத பட்டதாரி ஆசிரியர். சந்நியாசியின் மனைவி ஜோதி. 

நிலை: சந்;நியாசியின் குழந்தையை பள்ளியில் சேர்க்க உதவுவதற்காக அவரை சந்திக்க வருகிறார் அய்யார் எட்டு. அவரிடம் குழந்தையை பள்ளியில் சேர்ப்பது பற்றி  ஆலோசனை பெறுகிறார் சந்நியாசி.

நேரம்: ஞாயிற்றுக்கிழமை கலை சுமார் 11 மணிவாக்கில்
-------------------------------------------------------------------------------------------------------------------------
அய்யார்எட்டு: வணக்கம் சார்…

சந்நியாசி: வா தம்பி வணக்கம்… நீ ..? 

அய்யார் எட்டு:-- அய்யார் எட்டுங்க. 

சந்நியாசி:-- அய்யார்  முப்பதுதானே வரும்  ? 

அய்யார்:-- அது இல்ல சார்.  எம்பேரு  அய்யார்  எட்டு.

சந்நியாசி:-- பி.ஏ. மெட்ராஸ் யுனிவர்சிட்டியில பண்ணிட்டு. எம்.ஏ. அண்ணாமலை யுனிவர்சிட்டியில் பண்ணிட்டு,  டாக்டரேட் மதுரை காமராஜர் யுனிவர்சிட்டியில் பண்ணிட்டு ஸ்கூல்ல வாத்தியாரா வேலைபாக்கற டாக்டர் அய்யார் எட்டா…? உக்காருப்பா.    

அய்யார்:-- ஆமா சார் அந்த டாக்டர் அய்யார் எட்டுதான்.

சந்நியாசி:-- ஏம்பா  உங்க ஸ்கூல்ல எவ்ளோ சம்பளம்  குடுக்கறாங்க ..? 

அய்யார்:;:-- பணமா குடுக்கறது இல்ல சார்.  பொருளா குடுத்துடுவாங்க.

சந்நியாசி:-- ஆச்சர்யமா இருக்கே...பொருளாவா குடுப்பாங்க….?

அய்யார்:;-- ஆமா சார்.  காலைல 11 மணிக்கு சிங்கிள்; டீ 1 மணிக்கு சத்துணவு. அப்புறம் 3 மணிக்கு சுண்டலும் டீயும். அப்புறம் ஸ்கூல்விட்டு வரும்போது ரெண்டு ஆழாக்கு பொரி அவல்கடலை ராத்திரிக்கும் அடுத்தநாள் காலைக்கும் அது.

சந்நியாசி:-- என்னய்யா  இது அநியாயமா இருக்கு ? அதுசரி ட்ரெய்ண்டு
டீச்சர்ஸ் ...அவங்களுக்கெல்லாம் எப்படி .?

அய்யார்: அவங்களுக்கெல்லாம் பரவால்ல சார்.  எங்களவிட கூடுதலாக 
ரெண்டுஆழாக்கு அவல் கடலை கொடுக்கறாங்களே. ;டுhடு; துர்னு;

சந்நியாசி: அதுசரிப்பா…  சிவசிவா  நர்சரிகூட நல்ல ஸ்டேண்டர்ட்hமே ?
அய்யார்: அதுவும் நல்ல ஸ்டேண்டர்;ட்தான்.  ஆனால் அதற்கு  ரெக்கமண்டேஷன் வேணும்.

சந்நியாசி: எம். எல். ஏ.  வா ...எம். பி.  யா ...மந்திரியா ...?  யார் வேணும் ...?

அய்யார்: ரீகன் , சதாம் உசேன் ,  இடிஅமீன்  இவங்ககிட்ட வாங்க
முடியுமா ..?

ஜோதி: நீங்க சொல்றதை எங்களால நம்பவே  முடியல.


அய்யார்: இதாவது பரவால்ல. ராபரி  நர்சரி ஸ்கூல்ல  புலிப் பால்
கொண்டுவந்தால்தான் அட்மிஷன்.

(சந்நியாசியும் ஜோதியும் அய்யார்எட்டு சொன்னதைக்கேட்டு அதிர்ச்சிமேல் அதிர்ச்சி அடைந்து மௌனமாகிறார்கள்)
                                                                  
                                                                    காட்சி 5

இடம்: மதுரையில் ஒரு நர்சரி பள்ளிக்கூடம்.

பாத்திரங்கள்: சந்நியாசி, ஜோதி, அய்யார்எட்டு மற்றும் பள்ளியில் அட்மிஷனுக்காக வந்திருக்கும் பெற்றோர்கள் சிலர்.

நிலை: பிரபலமான ஒரு நர்சரி பள்ளியில் குழந்தைகள் அட்மிஷன் நடந்துகொண்டிருக்கிறது. முன்னதாக ரிஜிஸ்ட்ரேஷன் செய்யாததால் சந்நியாசி எப்படியாவது அட்மிஷன் வாங்க முடியுமா என்று சுற்றிசுற்றி வருகிறார். பள்ளியின் அட்மிஷன் போர்ட் முன்னால் நின்று சந்நியாசி அதை படித்துக்கொண்டிருக்கிறான். அவனுடன் ஜோதி மற்றும் அய்யார் 

நேரம்: காலை சுமார் 10 மணிவாக்கில்

-------------------------------------------------------------------------------------------------------------------------

ஒருவர்: போர்ட்ல  என்ன போட்டிருக்கு ...? ஆயாபீஸ் ஆயிரம் ரூபாய்,  
தாத்தா பீஸ்  ஆயிரம்ரூபாய் ...

சந்நியாசி: ஆமாங்க ஆயாபீஸ் சரி ...  அதுஎன்ன தாத்தா பீஸ்... ?

இரண்டாமவர்: இந்த பள்ளிக்கூடத்துலதான் பாடத்தை கதை மூலமா சொல்லித் தர்றாங்க.  இந்த மாதிரி கதை சொல்றதுக்கு 25 தாத்தா மார்களை பள்ளிக்கூடத்துல அப்பாயிண்ட்  பண்ணி  இருக்காங்க.      

முதலாமவர்: சாக்பீஸ்  பீஸ் சரி...  அது என்ன  சாக்லெட்பீஸ்  ...? 

இரண்டாமவர்: அதுங்க கொழந்தைகளுக்கு கண்ட கண்ட கடையில்  சாக்லெட்  வாங்கி குடுத்தா அதுங்களோட ஆரோக்கியம்  கொறைஞ்சிடும்.  அதனால  இவங்களே நல்ல சத்துள்ள சாக்லெட்டா தயார் பண்ணிக் கொடுக்கறாங்க. 

முதலாமவர்:பள்ளிக்கூடம்ன்னா  இப்படி இருக்கணும். மேல படிங்க.

இரண்டாமவர்: மேஜை நாற்காலி பீஸ்,  10 ஆயிரம் ரூபாய்.  வெளையாடற பீஸ் 10 ஆயிரம் ரூபாய்.  டிராக்டர் பீஸ் ஒரு லட்சம் ரூபாய். 

சந்நியாசி: அது என்னங்க டிராக்டர் பீஸ்  ?

இரண்டாமவர்: எல்கேஜி புஸ்தகம் மட்டும் ஒரு டன்.  நோட்டு முக்கால் டன், ஹோம் ஒர்க் கால் டன். அதனாலதான் அத எடுத்துட்டுப் போகத்தான் டிராக்டர் பீஸ்.

சந்நியாசி: பணம் ஒண்ணரை லட்சம்  எதுக்கு ?

அய்யார்: அதுதான் அட்மிஷன் சார்.

சந்நியாசி: அய்யார்எட்டு சார்…..நல்லா கவனிங்க ...  இன்னும் ஒரு மாசத்துல  நானே தொடங்கறேன் சந்நியாசி  த்ரி இன் ஒன் மெட்ரிகுலேஷன் ஸ்கூல்.. முதல்  அட்மிஷன்  என் பையனுக்குத்தான்…. 

ஜோதி: (ஆச்சரியத்துடன்) என்னங்க சொல்றீங்க நீங்க..?

சந்நியாசி: ஜோதி நீ தான் கரஸ்பாண்டண்ட்…

அய்யார்: சார் என்ன சார்  இது  ?

சந்நியாசி: நான் முடிவு பண்ணா பண்ணதுதான்…அய்யார்எட்டு சார் …நீங்கதான் ஹெட்மாஸ்ட்டர்.

ஜோதி: என்னங்க இதெல்லாம்  ?

சந்நியாசி: (தன் மனைவிக்கு மட்டும் கேட்கும் குரலில் காதில் சொன்னான்) இன்னையோட என்னோட கொள்ளையடிக்கிற தொழிலை தலை முழுகிட்டேன்… ஆனா இது…ஒரு கௌரவமான கொள்ளை….

                                                                  காட்சி 6

இடம்: சந்நியாசியின் இன்கம் வெல்கம் திரீ இன் ஒன் நர்சரி பள்ளி

பாத்திரங்கள்: சந்நியாசி, ஜோதி, அய்யார்எட்டு மற்றும் பள்ளியில் அட்மிஷனுக்காக வந்திருக்கும் பெற்றோர்கள் பெருந்திரளாக.

நிலை: சந்நியாசியின் இன்கம் வெல்கம் திரீ இன் ஒன் நர்சரி பள்ளியின் முதலாண்டு விழா. ஆண்டுவிழாவில் கல்வி அமைச்சர் கலந்துகொண்டு சந்நியாசியை பாராட்டி பேசுகிறார்.

நேரம்: காலை 11 மணி
-------------------------------------------------------------------------------------------------------------------------


அமைச்சர்:தாய்க்குலங்களே தந்தைக்குலங்களே ஆசிரியக் குலங்களே  மாணவக்குலங்களே...இந்த சந்நியாசி இன்கம் வெல்கம்   திரி இன் ஒன்   பள்ளியின் ஆண்டுவிழாவினை  சீரோடும் சிறப்போடும் கொண்டாடுகின்ற
இந்த சமயத்திலே  இந்திய துணைக் கண்டத்திலேயே  இந்த இன்கம் வெல்கம் பள்ளி மிச்சிறந்த பள்ளியாக தேர்ந்தெடுக்ப்பட்டுள்ளது  என்ற மகிழச்;சியான செய்தியை தெரிவிக்கின்ற வேளையிN;ல இந்த பள்ளியின் நிறுவனர்  அய்யா சந்நியாசி அவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதில் நான் பெருமைப்படுகிறேன்.

( வெகுநேரம் ஆனது, பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் கைத்தட்டல் அடங்க)

Authored By: Gnanasuria Bahavan, Editor, Vivasaya Panchangam, Expert in Agriculture, Conservation of Natural Resources, Development Communication & authoring books for the rural people.

                             



















No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...