Monday, May 30, 2016

உயிரியல் முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்துதல் - BIOLOGICAL PEST CONTROL METHODS

 உயிரியல் முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்துதல்

 BIOLOGICAL PEST CONTROL METHODS

  • பூச்சிகள் அல்லது இதர உயிரினங்களைக் கொண்டு பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைக்கு உயிரியல் கட்டுப்பாடு என்று பெயர்.
  • பூச்சிகளில் நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகள் என இரண்டு வகை உண்டு
  • நன்மை செய்யும் பூச்சிகளைக் கொண்டு தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கும் முறைதான் உயிரியல் கட்டுப்பாட்டு முறை.
6.1. குளவிகள் (WASP)
  •  'செலோனஸ்  பினாகபானி 'என்னும் குளவி வகையை பயன்படுத்தி வெண்டையைத் தாக்கும் காய்ப்புழவில்   இளம் புழுக்களை அழிக்கலாம். 
  • இதற்கு ஒரு ஏக்கருக்கு 40000 வீதம் குளவிகளை வெளியிட வேண்டும்.
  • 6.2. டிரைக்கோகிரம்மா (TRICHOGRAMMA)
  • தக்காளி பச்சை காய்புழுக்களை முட்டை ஒட்டுண்ணிகள் சிறப்பாக கட்டுப் படுத்தும்.
  • பூக்கும் சமயத்தில் டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் (TRICHOGRAMMA CHILONIS)என்ற முட்டை ஒட்டுண்ணிகளை வயலில் விட வேண்டும்.
  • இந்த முட்டை ஒட்டுண்ணிகளை விட்டு தக்காளி பச்சைக் காய்ப் புழுக்களின்; முட்டைகளை அழிக்கலாம்.
6.3. என் பி வி  வைரஸ் (N P V  VIRUS)
  • என் பி வி  வைரஸ் தாக்கிய 300 புழுக்களிலிருந்து எடுக்கப்பட்ட சாரத்தை 200 கிராம் டினோப்பால், 500 கிராம் சர்க்கரை ஆகியவற்றை  200 லிட்டர் நீருடன் கரைத்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க தக்காளி, மிளகாயைத் தாக்கும் புரோடீனியா புழுக்கள் கட்டுப்படும்.
  • என் பி வி  தாக்கப்பட்ட 1000 புழுக்களின் சாரத்தை 300 கிராம் பருத்தி விதைக் கரைசல் ஆகியவற்றை 200 லிட்டர் நீருடன் நன்கு கலந்து கைத் தெளிப்பான் கொண்டு தெளிக்க, வெண்டை, தக்காளி மிளகாயைத்  தாக்கும் காய்ப்புழுக்கள் கட்டுப்படும்.
  • என் பி வி நச்சுயிரியால் தாக்கப்பட்ட 300 புழுக்களைத் தண்ணீரில் ஊர வைத்து  200 மில்லி நச்சுயிரி கரைசலுடன், 100 மில்லி ஒட்டும் திரவம் சேர்த்து அத்துடன் 100 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரத்தில் கைத் தெளிப்பான் மூலம் ஒரு ஏக்கர் வயலில் தெளித்து சிவப்புக் கம்பளிப்புழுவை கட்டுப்படுத்தலாம்.
  • என் பி வி   நச்சுயிரி  தாக்கப்பட்ட 300 புழுக்களை தண்ணீரில் ஊர வைத்து இதன் முலம் கிடைக்கும் 200 மில்லிநச்சுயிரி கரைசலுடன் ஒரு கிலோ வெல்லம், 100 மில்லி டீப்பால் மற்றும்  150 லிட்டர் தண்ணீர் கலந்து, ஒரு ஏக்கர் பரப்பில் மாலை வேளையில் கைத்தெளிப்பானால் தெளித்து நிலக்கடலை படைப்புழு (அ) வெட்டும் புழுவை (ARMY WORM OR CUT WORM) தடுக்கலாம்.
6.4. பேஸில்லஸ் துரிஞ்சியன்சிஸ் (BACILLUS THURINJIENCIS)
  • ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் பேஸில்லஸ் துரிஞ்கியன்சிஸ் பேக்டீரியாவைக் கரைத்து பயிரின்மீது தெளிக்க, கீரை இலைப்புழுக்கள் புகையிலைப்புழு மற்றும் வெண்டைக் காய்ப்புழு கட்டுப்படும்.

6.5. டிரைகோடெர்மா விரிடிஸ் (TRICHODERMA VIRIDIS)
  • டிரைகோடெர்மா விரிடிஸ்  (அ)  சூடோமேனாஸ் ப்ளுரசன்ஸ்(PSEUDOMONAS FLUOROSECENS)   2.5 கிலோவை 50 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து வயலில் தூவி மல்லிகை வாடல் நோயைத் தடுக்கலாம்.
6.6. சூடோமோனாஸ் ஃப்ளுரசென்ஸ்
  • சூடோமோனாஸ் ஃப்ளுரசென்ஸ்  (அ)  டிரைகோடெர்மா விரிடி 25 கிலோவை 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து, விதைத்த 30 நாட்களுக்குள் மண்ணில் இட்டு எள் வேரழுகல்நோயைத் தடுக்கலாம்.
  • சூடோமோனாஸ் ஃபுளுரஸ்சன்ஸ் 1.5 கிலோவுடன்  20 கிலோ  தொழுஉரத்தைக் கலந்து ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் இட நிலக்கடலை வேரழுகல் நோயை  கட்டுப்படுத்தலாம்.
  • எக்டருக்கு 5 கிலோ சூடோமோனாஸ் ஃப்ளுரசன்ஸ் என்ற பாக்டீரியா மருந்தை 250 கிலோ தொழுஉரத்துடன் கலந்து இட்டு கோலியஸ் பயிரைத் தாக்கும் பாக்டீரியல் வாடல் (BACTERIAL WILT)நோயை தடுக்கலாம்.

6.7. பிவேரியா பேசியானா (BIVERIA BACIANA)
  • “பிவேரியா பேசியானா“  என்னும் பூசணத்தை ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து தெளித்து செங்காந்தள் இலைப்பேனைக் கட்டுப் படுத்தலாம்.

6.8 இதர நன்மை செய்யும் ஒட்டுண்ணிகள்
எண்    ஓட்டுண்ணி    கட்டுப்படுத்தப்படும் பூச்சிகள்; ஃ பயிர்    வெளியிடும் அளவு ஃ ஏக்கர்    குறிப்புகள்.
முட்டை  ஓட்டுண்ணிகள்

1. டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் - முட்டைஓட்டுண்ணி.  
2. செலோனஸ் பினகாபானி -      முட்டைஓட்டுண்ணி.
3. கிரைசோபொலவின் இளம்புழுக்கள் - முட்டைஓட்டுண்ணி
.4. டிரைக்கோகிரம்மா கைலோனி    -    முட்டைஒட்டுண்ணி.
5.    டெரினோமஸ்;  பெனிபிசியன்ஸ்    - முட்டைஒட்டுண்ணி
6    டைப்பா சாறுண்ணிப்புழு - சாறுண்ணி
7.    மைக்ரோடிஸ்  சாறுண்ணிப்புழு    
8.    சிம்னஸ்- பொறி       வண்டு.
9    கிரிப்போரிமஸ் மாஸ்ட்ரோலி - பொறி     வண்டு
10.   சுகிரோபேஸிஸ்      பப்பாயே - பொறி    வண்டு
11.    சைக்கோகிரம்மா   பைக்கலரேட்டா - வண்டுகள்
12    இனக்கவர்ச்சிப் பொறி    
13.    அசிரோபேகஸ்     பப்பாயே - ஓட்டுண்ணிகள்
14.    இனக்கவர்ச்சிப் பொறி   
15.    பிரக்கான்    - குளவி       ஒட்டுண்ணி.
16.    தொழு வெட்டுக்கிளிகள் - வெட்டுக்கிளி
17.    பொறிவண்டு (அ)    கூனல்வண்டு, கரிப்டோவீமஸ்     ஸ்கைமினஸ்   தவாடாலியா - வண்டுகள்    குளவி     ஒட்டுண்ணி.

6.9. வேம் என்னும் வேர் உட்பூசணம்
  • ஒரு சதுர மீட்டருக்கு 100 கிராம் வேர் உட்பூசணத்தை (வெசிக்குலர் ஆர்பஸ்குலர் மைக்கோரைசா )  இட்டு காய்கறி பயிர்களைத் தாக்கும் வேர்முடிச்சு நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.     
Image Courtesy: Thanks Google



No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...