Tuesday, May 31, 2016

நுண் உயிர் உரங்களும் இயற்கை உரங்களே - BIO FERTILIZERS ALSO ORGANIC

நுண் உயிர் உரங்களும் 

இயற்கை உரங்களே 

BIO FERTILIZERS ALSO ORGANIC

  • பலகோடி நுண்ணுயிர்கள் மண்ணில் வாழ்கின்றன.
  • இவற்றுள் ஒரு சதம் மட்டுமே தீங்கு செய்யக்கூடிய நுண்ணுயிர்கள்.
  • கடைத் தேங்கயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கும் காரியத்தை சில நுண்ணுயிர் உரங்கள் செய்கின்றன.
  • காற்று கையில் வைத்திருக்கும் நைட்ரஜன் சத்தினை பிடுங்கி பயிருக்கு கொடுக்கின்றன,
  • சில நுண்ணுயிர் உரங்கள் வாழைப்பழத்தை உறித்துக் கொடுப்பது போல,  தயார்நிலை சத்துக்களாக மாற்றித் தருகின்றன.
  • எட்டாத தொலைவில் உள்ள சத்துக்களின் காதைப் பிடித்து இழுத்து வேர்களிடம் சேர்க்கின்றன.
  • அசட்டோ பேக்டர், அசிட்டோபேக்டர், அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போபேக்டீரியம், நீலப்பச்சைப்பாசி, அசோலா ஆகியவை இந்த அணியைச் சேர்ந்த நுண்ணுயிர்கள்.

நுண்ணுயிர் உரங்களால் கிடைக்கும் பயன்கள்

  •      மண்ணின் அங்ககச் சத்தினை அதிகரிக்கும்.
  •      மண் வளத்தை மேம்படுத்தும்.
  •      வறட்சியை தாங்கி வளரும் சக்தியைத் தரும்
  •      மண்ணின் நீர்பிடிப்புத் தன்மையைக் கூட்டும்
  •      பூச்சி நோய் தாக்குதலை மட்டுப்படுத்தும்
  •      களைகளை கட்டுப்படுத்தும்
  •      சாகுபடி செலவை குறைக்கும்
  •      பயிர் மகசூலை அதிகரிக்கும்
  •      விவசாயத்தை லாபகரமானதாக மாற்றும்
  •      சுற்றுச்சூழலை பாதுகாக்கும்
  •      பருவக்கால மாற்றத்திற்கு இவை பாதுகாப்பு

உயிர் உரங்களின் வகைகள்
  •  உயிர் உரங்களை 3 வகைகளாக பிரிக்கலாம் என்று பார்த்தோம்
  • சத்துக்களை நிலைப் படுத்துபவை.
  • சத்துக்களைக் கரைத்துக் கொடுப்பவை.
  • சத்துக்களை நகர்த்திக் கொடுப்பவை.
  • நிலைநிறுத்தும் உயிர் உரங்கள்;
  • காற்றில் உள்ள நைட்ரஜன்' ஐ  நிலத்தில் நிலை நிறுத்துபவை.      (NITROGEN FIXING BIO FERTILIZERS).
  • அசட்டோ பேக்டர்.  (AZATOBACTER).
  • அசோஸ் பைரில்லம். (AZOSPYRILLUM)
  • நீலப்பப்பை பாசி. (BLUE GREEN ALGAE)
  • அசோலா.   (AZOLLA) 
  • மணிச்சத்தை கரைத்து  நகர்த்திக் கொடுக்கும் உரங்கள்.
  • மணிச்சத்தை கரைத்துக் கொடுப்பவை.  பாஸ்போ பேக்டீரியம்.  (PHOSPOBACTERIUM)
  • மணிச்சத்தை நகர்த்திக் கொடுப்பவை.  (NUTRIENT MOVING BIO FERTILIZERS)
  • உதாரணம். –. மைக்கோரைசா
  • தொலைவிலுள்ள  சாம்பல் சத்தை வேர்களுக்கு அருகில் நகர்த்திக்   கொடுக்கும் உரங்கள். (Bio Fertilizers  - Moves the  distant  Potash   near to roots) 
  •  உதாரணம். –. புரூட்ரியா ஆரான்சியா.  (குசரவசயை யுசயnஉயை.)           
  • பயிர்களுக்கு ஏற்ற உயிர் உரங்களை உபயோகித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • பயிர்களுக்கு தழைச்சத்து அளிக்க ஏற்ற உயிர் உரங்கள்
  • அவரை இன பயிர்களுக்கு – ரைசோபியம்.
  • அவரை இனம் அல்லாத பயிருக்கு – அசிட்டொபேக்டர்,     அசொஸ்பைரில்லம்.
  • நெல் பயிருக்கு நீலப்பச்சை பாசி, அசோலா. மணிச்சத்து அளிக்க ஏற்ற உயிர் உரங்கள்.
  • எல்லா பயிர்களுக்கும்  பாஸ்பாட்டிகா  உயிர் உரத்துடன் ரைசோபியம், அசட்டோபேக்டர், அசோஸ்பைரில்லம், அசிட்டோ    பேக்டர்  சேர்த்து இட வேண்டும்.                       
பயன்படுத்தும் வழிமுறை

1.    விதை நேர்த்தி செய்யும் முறை.
  • ஒரு ஏக்கருக்கு சிபாரிசு செய்யும் உயிர் உரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அதனை ஆறிய அரிசிக் கஞ்சி அல்லது கூழுடன் சேர்த்துக்          கலக்குங்கள்.
  • இந்தக் கலவையுடன் ஒரு ஏக்கருக்கான விதைகளைப் போடுங்கள்.
  • விதைகளின் மீது -இந்த கலவை படியுமாறு கலக்குங்கள்.
  • அப்படியே 30 நிமிடம் விட்டு விடுங்கள்.
  • இப்படி தயார் செய்த விதைகளை, 24 மணி நேரத்திற்குள் விதையுங்கள்

நாற்றங்காலில் தூவும் முறை
  • ஒரு ஏக்கருக்கு சிபாரிசு செய்யும் உயிர் உரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அதனை மண்புழு உரம் அல்லது தொழு உரத்துடன் நன்கு கலக்கவும்.
  • கலக்கிய உயிர் உரத்தை நாற்றங்காலில் சீராகத் தூவுங்கள்.

வேர் நனைக்கும் முறை.
  • ஒரு ஏக்கருக்கு சிபாரிசு செய்யும் உயிர் உரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அத்துடன் 10 லிட்டர் தண்ணீரில், கரைத்துக் கொள்ளுங்கள்.
  •  நாற்றுpன் வேரினை, இந்தக் கரைசலில் 30 நிமிடம் முக்கி வைத்து நடவும்.

மண்ணில் கலக்கும் முறை.
  • ஒரு ஏக்கருக்கு சிபாரிசு செய்யும் உயிர் உரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அத்துடன் போதுமான அளவு, தொழு உரம் அல்லது மண்புழு     உரத்தை கலக்கவும்.
  • இதனை நிலத்தில் சீராகத் தூவி, மண்ணில் கலக்க வேண்டும்.
  • ஜாக்கிரதை.
  • ரசாயன உரங்களை, இத்துடன் சேர்க்கக் கூடாது.
  • பூச்சிப் பூசனை மற்றும் களைக் கொல்லிகளுடன் கலக்கக்கூடாது.
  • காலாவதியான உயிர் உரப் பாக்கட்டுகளா ? என்று பார்த்து வாங்கவும்.
  • எந்த தேதிகு;குள் அதைப் பயன்படுத்த வேண்டும், --என்ற விவரம் பாக்கட்டின் மேல் எழுதி இருக்கும்.
  • நீங்கள் இடும் உயிர் உரம், நேரடி வெயில்பட்டு காய்ந்து விடக் கூடாது.
  • உரம் உலர்ந்து போனால், அது உரமாக பலன் தராது.
  • கிழிந்துப் போன பாக்கெட்டுகளை வாங்க வேண்டாம்



No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...