Saturday, May 14, 2016

அழகு எப்போதுமே ஆபத்துக்களின் மெகாமார்ட் - BEWARE OF POISONOUS INDOOR PLANTS



அழகு எப்போதுமே 

ஆபத்துக்களின்  
மெகாமார்ட் 



BEWARE OF

POISONOUS
INDOOR PLANTS



(யுத்தத்தில் செத்துப் போனவர்களை பிழைக்கவைக்க அனுமன் சஞ்சீவி மலையை பெயர்த்து தூக்கிக்கொண்டு போனார். சஞ்சீவி மூலிகை   அடையாளம் தெரியாததால் அது இருந்த மலையையே தூக்கிக்கொண்டு போனார் அனுமன். சஞ்சிவி மூலிகையின் காற்று யுத்தகளத்தில்  பரவியது.

 அவ்வளவுதான். “நான் எங்கே இருக்கிறேன் ? நான் இன்னும் சாகவில்லையா ?” என்று கேட்டபடி செத்துப்போன அத்தனைபேரும் எழுந்து மறுபடியும் சண்டை போட்டார்கள் என்பது சரித்திரம். அதில் ஒரு ‘ச்சிப் மாதிரி’ இத்தினூண்டு உடைந்து கீழே விழுந்தது. அதுதான் சிறுமலை என்பது போனஸ் செய்தி)  
 
இந்த தொடரில் இதுவரை பார்த்த அத்தனை செடிகளும் சஞ்சீவி மாதிரியான மூலிகைகள்தான். வீட்டுக்கு அழகு தரும். கூடுதலான ஆக்சிஜனை உற்பத்தி செய்யும். விஷவாயுக்களை கபளிகரம் செய்து காற்றை சுத்தப்படுத்தும். மனதுக்கு மஸாஜ் செய்து மகிழ்ச்சியைக் கூட்டும். இவை எல்லாமே ஓசி. எல்லாமே இலவசம் ! எல்லாமே சும்மா !

இந்த செடிகளை வாங்க நாம் எந்த மெகா சைஸ் மலையையும் தூக்க வேண்டாம். எந்த ஒரு மைக்ரோ சைஸ் ஆணியைக்கூட அசைக்க வேண்டாம். செடிகள் விற்பனை செய்யும் நர்சரிக்குப் செடியின் பெயரைச் சொன்னால் போதும். அனுமன் மாதிரி மலைத்தூக்கிகள் யாரும் தேவையில்லை. பர்ஸில் பணத்தை மட்டும் காட்டுங்கள்; போதும். சஞ்சீவி மலையைக்கூட ஒரு சட்டியில் போட்டு கொடுத்துவிடுவார்கள்.

வீட்டிற்குள் வைக்கும் செடிகளின் பிரபலமான பெயர் இண்டோர் பிளாண்ட்ஸ் (INDOOR PLANTS). உறைவிடச்செடிகள் (LIVING ROOM PLANTS) என்று தமிழில் சொல்லலாம். வசிப்பிடச் செடிகள் என்றும் பகரலாம். தங்குமிட தங்கச் செடிகள் என்று செல்லப்பெயரிட்டும் அழைக்கலாம். 

இவற்றின் இலைகள் அழகானவை. கிளைகள் அழகானவை. தண்டுகள் அழகானவை. கொடிகள் அழகானவை. பூக்கள் அழகானவை. மொட்டுக்கள் அழகானவை. காய்கள் அழகானவை. பழங்கள் அழகானவை. உதிரும் சருகுகள்கூட அழகானவை.

அழகு எப்போதுமே ஆபத்துக்களின் மெகாமார்ட் என்கிறார்கள், அழகை அனுபவித்தவர்களும் ஆராதித்தவர்களும். இந்த கட்டுரைத்தொடரில் இதுவரை ஏறத்தாழ 30 க்கும் மேற்பட்ட அழகழகான செடிகளைப் பார்த்தோம்;. ரசித்தோம். தாவரவியல் அறிஞர்கள் இந்த செடிகள்பற்றி சில எச்சரிக்கைகளையும் விடுத்திருக்கிறார்கள். அவற்றையும் நாம் கவனிக்க வேண்டும். 

“விஷம் ! இலைகளைத் தொடாதீர்கள் ! உங்கள் குழந்தைகளை அருகே விளையாட விடாதீர்கள்..உங்கள் பூனை நாய்கள் ஜாக்கிரதை” இந்த இலைகள் நச்சுத்தன்மை உடையது என்று 17 செடிகளுக்கு  டேஞ்சர் விளக்கு மாட்டியிருக்கிறார்கள், ஆராய்ச்சிவல்லுநர்கள். 

அப்படி டேஞ்சர்விளக்குமாட்டப்பட்ட 17 செடிகள் என்னென்ன ?

                                                           1.இங்கிலிஷ் ஐவி


                                                               2.டெவில்ஸ் ஐவி


                                                                    3.பீஸ் லில்லி

                                                           4.ஃபிளமிங்கோ லில்லி


                                                           5.சைனீஸ் எவர்கிரீன் 


                                                     6.வேரிகேட்டட் ஸ்நேக்பிளாண்ட்

                                              7.ஹார்ட்லீஃப் பிலோடெண்ட்ரான்



                                             8.செல்லோம் பிலோடெண்ட்ரான்


                                     9.எலிபெண்ட்ஈயர் பிலோடெண்ட்ரான்


                                                       10.ரெட்எட்ஜ்டு டிரெசீனா


                                                      11.கான் ஸ்டாக் டிரெசீனா


                                                                  12.வீப்பிங் ஃபிக்

                                                   13.ஃபுளொரிஸ்ட் கிரிசாந்திமம்


                                                                14.டம்ப்கேன்ஸ்


                                                            15.கிங் ஆப் ஹார்ட்ஸ்


                                                             16.சோற்றுக்கற்றாழை

                                                            17.ஜேனெட் கிரெய்க்

                                                            Images Courtesy:Thanks Google

எச்சரிக்கை: உங்கள் வீட்டில் வைக்கும் செடிகள் நச்சுத்தன்மை இல்லாத செடிகளா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.
                            


No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...