தோட்டப்பயிர் சாகுபடி - PLANTATION CROP CULTIVATION
Image Courtesy: Thanks Google |
வெற்றிலை சாகுபடி
BETELWINE CULTIVATION
வாய் மணக்க வெற்றிலை போடலாம்.
நல்ல வருமானம் எடுக்கவும் வெற்றிலை போடலாம்.
1. நல்ல லாபம்தரும் ரகங்கள்
- வெள்ளைக்கொடி
- பச்சைக்கொடி
- கற்பூரிக்கொடி
2. வெற்றிலை சாகுபடிக்கு மண் எப்படி இருக்க வேண்டும் ..?
- வடிகால் வசதி.
- களிமண் பூமி.
- வண்டல் நிலம்.
- இருமண்பாடான செம்மண் நிலம்.
3. ஆடிப்பட்டம் தேடிவிதை
- ஆடிப்பட்டமும் தைப்பட்டமும் ஏற்ற பட்டங்கள்.
- 4. நிழல் கொடுக்க அகத்தி விதையுங்கள்.
- வெற்றிலை நிழலில் வளரும் பயிர்.
- நிழல் கொடுக்க அகத்தி, முருங்கை, செம்பை, சவுண்டல் ஆகிய மரங்களை நடலாம்.
5. கிடங்குகளை அமைப்பது எப்படி ..?
- கிடங்குகளை அமைத்து அதில் வெற்றிலைக் கொடிகளை நடவு செய்ய வேண்டும்.
- கிடங்குகள் 45 செ.மீ. நீளமும், 120 செ.மீ. ஆழமும் இருக்க வேண்டும்.
- ஒரு கிடங்கிற்கும் இன்னொரு கிடங்கிற்கும் 1 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
- ஒரு ஏக்கர் நிலத்தில் 75 கிடங்குகளுக்கு மேலும் வெட்டலாம்.
6. வெற்றிலைக் கொடியை பாத்திகளிலும் நடலாம்.
- இதற்கு 70 செ.மீ. அகலமும், 75 செ.மீ. ஆழமுமுள்ள பாத்திகளை வெட்ட வேண்டும்.
- பாத்திகள் மேட்டுப் பாத்திகளாக இருக்க வேண்டும்.
- ஒரு பாத்திக்கும் இன்னொரு பாத்திக்கும் 1 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
7. பராமரிப்பு
- கிடங்குப் பயிராக இரண்டரை வருடம் பராமரிக்கலாம்.
- பாத்திப்பயிர் அல்லது தோட்டக்கால் பயிராக நான்கு முதல் ஐம்பது வருடங்கள்வரை பராமரிக்கலாம்.
8. அகத்தி விதைப்பு
- கிடங்கின் இரு பக்கத்திலும் சிறிய குழிகளை அமைக்க வேண்டும்.
- ஒரு குழிக்கும் இன்னொரு குழிக்குமிடையே 15 செ.மீ. இடைவெளி இருக்க வேண்டும்.
- ஒவ்வொரு குழியிலும் நான்கு விதைகளை ஊன்ற வேண்டும்.
- ஒரு ஹெக்டருக்கு 10 கிலோ விதை தேவை.
- 30 நாட்கள் கழித்து ஒரு குழியில் இரண்டு நல்ல நாற்றுக்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- திடமில்லாத செடிகளை பிடுங்கி எடுத்து விட வேண்;டும்.
9. விதைக்கொடி தயாரிப்பது எப்படி ..?
- விதைக்கொடிகளாக ஒருவருடம் வயதுவுள்ள கொடிகளி லிருந்து எடுக்க வேண்டும்.
- விதைக்கொடிகள் , பூச்சிகள் மற்றும் நோய் தாக்காமல் இருக்க வேண்டும்.
- கொடிகளில் ஆறு கணுக்கள் இருக்க வேண்டும்.
- கிடங்கு முறையில் நட ஒரு ஏக்கருக்கு முப்பதாயிரம் விதைக் கொடிகள் தேவை.
- பாத்தி முறையில் நட ஒரு ஏக்கருக்கு முப்பத்தையாயிரம் விதைக் கொடிகள் தேவை.
10. விதைக்கொடிநடவு
- அரை சதவீத போர்டோ கலவையுடன் ஸ்ட்ரெப்டோ சைக்கிளின் கலவையை சேர்க்க வேண்;;டும்.
- இந்தக்கலவையில், விதைக் கொடிகளை நனைத்து நடவேண்;டும்.
- ஒரு லிட்டர் கரை சலுக்கு அரை கிராம் ஸ்ட்ரெப்டோ சைக்கிளின் மருந்தைச் சேர்க்க வெண்டும்.
11. போர்டோ கலவை தயாரிப்பத எப்படி .. ?
- ஐந்து கிராம் மயில் துத்தத்தை ஒரு லிட்டர் நீரில் கரைக்க வேண்டும்.
- இன்னொரு பாத்திரத்தில் ஐந்து கிராம் நீர்த்த சுண்ணாம்பை ஒரு லிட்டர் நீரில் கரைக்க வேண்டும்.
- பின்னர் இரண்டு கலவையையும் ஒன்றாக கலக்க வேண்டும்.
- இதுதான் போர்டோ கலவை .
- கலவை தயார் செய்ய மண்பாண்டங்கள் அல்லது பிளாஸ்டிக் பாத்திரங்களை மட்டுமே பயன் படுத்த வேண்டும்.
- இந்தக்கலவையில் ஒரு பளபளப்பான கத்தியை நனைக்க வேண்டும்.
- துரு படியக் கூடாது . துரு படிந்தால் சுண்ணாம்புக்கரைசலை ஊற்றி சரி செய்ய வேண்டும்.
- துரு படியாதவரை சுண்ணாம்புக்கரைசலை ஊற்ற வேண்டும்.
12. கிடங்கு முறையில் நடவு
- இரண்டு விதைக் கொடிகளை ஒன்றாக சேர்த்து படுக்கவைத்து நடவு செய்யுங்கள்.
- கன்று நட்ட பிறகு கன்றின் அடிப்பாகத்தில் சேறு வைத்து மூடுங்கள்.
- பின்னர் நான்காவது கணுவில் ஒரு பிடி சேறு வையுங்கள்.
13. பாத்திமுறை நடவு
- ஒரு குழிக்கு ஒரு கொடியை நடவு செய்யுங்கள்.
- நடும்போது கொடியில் இரண்டு கணுக்கள் மண்ணிற்குள் இருக்க வேண்டும்.
14. பழுது நடவு
- கொடிகளை நடவு செய்து இருபது நாட்கள் கழித்து பட்டுப்போன செடிகளை நீக்குங்கள்.
- அந்த இடத்தில் புதிய செடிகளை நடுங்கள்.
15. கொடி கட்டுதல்
- கொடி நட்ட இரண்டு மாதத்தில் வளர்ந்த கொடிகளை அகத்தி மரத்தில் தூக்கிக் கட்ட வேண்டும்.
- கொடிகள் வளர வளர இப்படி கட்டிக் கொண்டே போக வேண்டும்.
16. வெளிச்சம் தேவை
- அகத்தி மரங்கள் ஆறடிக்கு மேலே வளர்ந்த பிறகு விட்டம்
- கட்ட வேண்டும்.
- மரத்தில் தழைகளைக் கழித்து அடர்த்தியை
- குறைக்க வேண்டும்.
- இதனால் சூரிய வெளிச்சம் பரவலாகக் கிடைக்கும்.
17.கொடிகளை இறக்கிக் கட்டுங்கள்
- நடவு செய்த பின்னர் ஒன்பது மாதங்கள் கழித்து கொடிகளை இறக்க வேண்டும்.
- அவற்றை வளையம் போல் மடித்து அகத்திக் கால்களின் அடிப்பகுதியில் கட்ட வேண்டும்.
- ஆறு மாதம் கழித்து மறுபடியும் இதைப்போல் கொடிகளை இறக்கிக் கட்ட வேண்டும்.
- பாத்தி முறையிலும் இதைப்போல ஒன்பது மாதம் செய்ய வேண்டும்.
- அதன் பின்னர் வருடத்திற்கு இரண்டு முறை இறக்கிக் கட்ட வேண்டும்.
- ரசாயன உரங்களுக்கு பதிலாக இயற்கை உரங்களை பயன்படுத்துங்கள்.
- ஆட்டுஎரு, மாட்டுஎரு, குப்பைஎரு , போன்றவற்றை அதிக அளவில் பயன்படுத்தலாம்.
- ஒரு ஏக்கருக்கு தொழு வுரம் 12 டன் வரை இடுங்கள்.
- இரண்டாவது முறை -- கொடி கட்டிய 55 வது நாள்.
- மூன்றாவது முறை -- கொடிகட்டிய 100 வது நாள்.
18. நீர் இறைத்தல்
- வெய்யில் காலத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள்.
- குளிர் காலத்தில் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒரு
- முறை.
19. அறுவடை
- கொடிநட்ட 140 ஆம் நாள் முதல் அறுவடை.
- பின்னர் 20 நாட்களுக்க ஒரு முறை.
- கற்பூரி ரகம் ஒரு வருடத்தில் 140 இலைகள் தரும்.
- மற்ற ரகங்கள் 70 இலைகள்தரும்.
20. சந்தேகம்
- வெற்றிலை சாகுபடியில் உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் அனுபவமான விவசாயிகளைக் கேளுங்கள்.
- உங்கள் ஊருக்கு வரும் தோட்டக்கலைத்துறை அல்லது விவசாயத்துறை அலுவலர்களைக் கேளுங்கள்.
21. வெற்றிலையைத் தாக்கும் பூச்சிகள்
செதில் பூச்சி
- ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை தாக்கும்.
- இலைகள் கிண்ணம் போல் சுருளும்.
- கொடிவளர்ச்சி குறையும்.
22. சிவப்பு சிலந்தி (செவட்டை)
- பிப்ரவரி முதல் ஜுலை வரை.
- இலையின் அடியில் தாக்கும்.
- பளபளப்பான நூலாம் படை தென்படும்.
- இலையின் மேல்பகுதியில் மஞ்சள் திட்டுக்கள் இருக்கும்.
- கற்பூரிக் கொடிகளை அதிகம் தாக்கும்.
23. வேர்முடிச்சு நூற்புழு
- இலைகள் காம்புகள் இடைக்கணுப் பகுதிகள் சிறுக்கும்.
- வளர்ச்சி குன்றும்.
- வேரில் காயங்களை உண்டாக்கும்.
- காயங்களில் பூசனங்கள் தாக்கும்.
- வேரில் முடிச்சுக்களை உண்டாக்கும்.
- வேரிலிருந்து கொடிக்குச் செல்லும்.
24. வெற்றிலையைத் தாக்கும் நோய்கள்
- வாடல்நோய் அல்லது பச்சை வாட்டம்;
- அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம்வரை தாக்கும்.
- இலைகள் பளபளப்பை இழக்கும்.
- வேர்கள் அழுகும்.
- தண்டுகள் நாராக கிழியும்.
- இலைகளில் சுட்ட கத்திரிக்காய் போன்ற புள்ளிகள் தோன்றும்.
25. தீச்சல் அல்லது இலைக் கருகல்
- ஏப்ரல் முதல் ஜுலை மாதம் வரை தாக்கும்.
- இலையின் ஓரங்களில் கருப்பு நிற புள்ளிகள் தோன்றும்.
- புள்ளிகள் இணைந்து தீய்ந்ததுபோல் காணப்படும்.
- கற்புரி ரகத்தை அதிகமாகத் தாக்கும்.
26. கருந்தாள் அல்லது பாக்டீரியல் கணு அழுகல் நோய்
- செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை தாக்கும்.
- இலையில் ஈரம் கசிந்த பழுப்பு நிற புள்ளிகள் தோன்றும்.
- இடைக்கணுவில் கருப்பு நிறமான திட்டுக்கள் உண்டாகும்.
- திட்டுக்கள் கணு முழுவதும் பரவும்.
- நாளடைவில் கணுக்கள் அழுகி ஒடிந்து விடும்.
27. பூச்சிகளை நோய்களைக் கட்டுப்படுத்த இயற்கை முறைகளைக் கையாளுங்கள்.
28. கொடிக்காலை சுத்தமாக வைப்பது எப்படி …?
- நோய் பூச்சி தாக்கிய கொடிகளை அப்புறப்படுத்தி எரித்து
- விடுங்கள்.
- அதிகமான ரசாயன உ ரங்களை பயன்படுத்தக்கூடாது .
- அதிகமான கடலை பிண்ணாக்கை பயன்படுத்தக்கூடாது .
- குளிர் காலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
- அகத்தி மரங்களில் தழைகளை கழித்து சூரிய ஒளி படும் படியாக செய்யுங்கள்..
Image Courtesy:Thanks Google |
No comments:
Post a Comment