Image Courtesy: Thanks Google |
இலந்தை சாகுபடி குறிப்புகள்
BER CULTIVATION HINTS
- வெப்ப பகுதிக்கு ஏற்றது.
- சாகுபடி செய்த மரங்களிலிருந்து கிடைக்கும் பழம் பெரிதாகவும் அதிக ருசியாகவும் இருக்கும்.
1. கொட்டைகளை நடலாம்
- இலந்தை செடிகள் அதிக ஆழமாக வேர் விடுவதால், இவற்றைத்தோண்டி எடுத்து வேறு இடங்களில் நடுவது கடினம்.
- ஆகவே நேரடியாகவே கொட்டைகளை நட்டு வளர்க்கவேண்டும்.
2. எத்தனை செடிகள் நடலாம் ?
- 5 மீட்டர் இடைவெளி
- வரிசைக்கு வரிசை 5 மீட்டர். செடிக்கு செடி 5 மீட்டர்.
- ஒரு ஹெக்டருக்கு 400 மரங்கள்.
3. குழி அளவு
- குழி எடுங்கள்
- நீளம் 0.6 மீட்டர். (60 செ.மீ.)
- அகலம் 0.6 மீட்டர். (60 செ.மீ.)
- ஆழம் 0.6 மீட்டர். (60 செ.மீ.)
4. குழிகளில் கொட்டை நடவு
- குழிக்கு ஒரு இலந்தை பழக் கொட்டையை நட்டு நீர் ஊற்றுங்கள்.
- விதைகளுக்கு பதிலாக ஒட்டு கட்டிய கன்றுகளை நடலாம்.
5. இன்னும் சில குறிப்புகள்
- தேவைக்கு ஏற்ப இயற்கை உரம் இடுங்கள்
- பழங்களை பறித்ததும், கிளைகளை கவாத்து செய்யுங்கள்.
- இவ்வாறு கவாத்து செய்தால் புதிய கிளைகள் தோன்றும்
- அதிக பழங்கள் கிடைக்கும்.
6. அறுவடை
- தை மாதத்திலிருந்து பங்குனி வரை பயன்தரும்.பதத்தில் பார்த்து அறுவடை செய்யுங்கள்.
- அழுகிய பழங்களை அகற்றுங்கள்.
- நல்ல பழங்களை கழுவி சுத்தம் செய்து மார்க்கெட்டுக்கு அனுப்புங்கள்.
Image Courtesy: Thanks Google |
No comments:
Post a Comment