Tuesday, May 31, 2016

ஆட்டு எரு அம்சமான இயற்கை உரம் - ATTU ERU AWESOME ORGANIC MANURE


Image Courtesy: Thanks Google


ஆட்டு எரு  அம்சமான இயற்கை உரம் - 

ATTU ERU AWESOME ORGANIC  MANURE


  • நடமாடும் வங்கி என்பது  விவசாயிகள் ஆடுகளுக்கு வைத்திருக்கும் செல்லப் பெயர்.                                         
  • ரசாயன  உரங்கள் வருவதற்கு முன் நமக்கு குப்பை உரமும், ஆடு மாடுகளின் சாணமும், மரங்களின் தழைகளும், உரப்பயிர்களும்தான்  நம் விவசாயத்தின் உயிர் மூச்சு.                                          
  • அதிலும் குறிப்பாக ஆட்டுக்கிடை போடுதல் நமக்கு பாரம்பரியமான வழிமுறை.
  • ஆடுகளின் சாணம் சிறுநீர் ஆகியவற்றை நிலங்களில் சேகரிப்பதற்கான        எற்பாடுதான்  இது.
  • ஆட்டுரம் நிலத்தில் அங்ககச்சத்தை அதிகரிக்கிறது.
  • நுண்ணுயிர்களின்  செயல்பாட்டினை  ஊக்குவிக்கிறது.                      
  • ஆட்டுரம் உற்பத்தி செய்யும் விளைபொருட்கள் நம் ஆரோக்கியத்திற்கு           பாதுகாப்பானவை.                                                   


கிடையினால் கிடைக்கும் சத்துக்கள்

  • வயலுக்கு இயற்கையாக ஆடுகளின் சாணமும் சிறுநீரும் கிடைக்கிறது.    
  • ஆட்டுசாணத்தில் தழைச்சத்து  0.9 சதமும்,  மணிச்சத்து  0.6 சதமும்,           சாம்பல் சத்து  1.00 சதமும்  உள்ளன.                                 
  • ஆட்டு சிறுநீரில் தழைச்சத்து 1.7 சதமும்,  சாம்பல்சத்து  2 சதமும்          உள்ளன. 
  • இவை தவிர சுண்ணாம்புசத்து போன்ற நுண்சத்துக்களும் இதில்          அடக்கம்.                                                        
  • ஆட்டு சாணத்தில்  30 சதம்  சத்துக்கள் முதல் ஆண்டும்  70 சதம்             சத்துக்கள்  இரண்டாம் ஆண்டும் கிடைக்கும்.                               
  • ஆட்டு சிறுநீரில் உள்ள சத்துக்கள் முதல் ஆண்டே கிடைக்கும்.   

 ********************************************************************************   ஆடு தீனியும் தின்கிறது –அதற்கான பணத்தையும் அது செலுத்தி விடுகிறது. ஆல்பேனியன் பழமொழி                                                    


No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...