Friday, May 13, 2016

ஆமையையும் அம்மோனியாவையும் உள்ள விடாதீங்க ! - ALLOW NOT AMMONIA POLLUTION

                                                                       


காற்று மாசு 

ஆமையையும் அம்மோனியாவையும் உள்ள  விடாதீங்க !

ALLOW NOT AMMONIA  POLLUTION


 (நமது உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை உருவாக்கும் வகையில் காற்றில் கரைந்தநிலையில் இருக்கும் அம்மோனியா நமது வீட்டில் இருக்கலாம்: கடையில் இருக்கலாம்: ஃபேக்டரியில் இருக்கலாம்;;;: பள்ளிக்கூட கல்லூரி வகுப்பறைகளில் இருக்கலாம்: தொழிற்சாலையில் இருக்கலாம். நமது ஆபீஸ் பில்டிங்கில் இருக்கலாம்.  இப்படி காற்றில் கரைந்த நிலையில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் அம்மோனியாவை சுலபமாக அதிக காசு செலவில்லாமல் நீக்கிவிடலாம்)

நாசா  அல்கா ஆராய்ச்சியின்படி நச்சு வாயு அம்மோனியாவை  வடிகட்டும் ஆற்றல் உள்ள 5 செடிகளை கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்த செடிகளை தெரிந்துகொள்வதற்கு முன்னால்  அம்மோனியா என்றால் என்ன என்று பார்க்கலாம்.

அம்மோனியா இயற்கையானது. மனிதனாலும் உற்பத்தி ஆகிறது. இது நெடியுடன் கூடிய அரிக்கும் தன்மை கொண்ட வாயு. அம்மோனியாவை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் ?

உரம், பிளாஸ்ட்டிக், மருந்துப்பொருட்கள், ரப்பர், மற்றும் பெட்ரோகெமிக்கல் தொழிலகங்களில் நிறம் நீக்கி (டீடுநுயுஊர்ஐNபு) யாகவும் சுத்தம் செய்யும்; (ஊடுநுயுNஐNபு) காரியங்களுக்கும் இதனை பயன்படுத்துகிறார்கள்.

இது எப்படி சுற்றுச்சூழலை பாதிக்கிறது ?

குறைவான அளவு அம்மோனியா காற்றில் கரைந்திருந்தாலும் அதன் அருவருப்பான நெடி அதனை காட்டிக் கொடுத்துவிடும். கூடுதலான அளவு கரைந்திருந்தால் அது மனிதர்கள், பிராணிகள் மற்றும் தாவரங்களுக்கு நோய்களை உண்டாக்கும். அம்மோனியாவை உரமாக அதிக அளவில் இடுவதால் மண்ணில் அமிலத் தன்மையை உருவாக்கும். அது கரைந்து குளம் குட்டைகள் மற்றும் கிணறுகளை அடைந்து நீரில் வாழும் தாவரங்கள் மற்றும் பிராணிகளை பாதிக்கும்.

காற்று, நீர், மண் ஆகிய அனைத்தையும் விஷத்தன்மை உடையதாக மாற்றிவிடும்.

அதிகப்படியான அம்மோனியா நமக்கு கண்எரிச்சல், மூக்கு மற்றும் தொண்டை எரிச்சல் மற்றும் உடல் தோலில் எரிச்சலை உண்டாக்கும்.

நமது உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை உருவாக்கும் வகையில் காற்றில் கரைந்தநிலையில் இருக்கும் அம்மோனியா நமது வீட்டில் இருக்கலாம்: கடையில் இருக்கலாம்: ஃபேக்டரியில் இருக்கலாம்;;;: பள்ளிக்கூட கல்லூரி வகுப்பறைகளில் இருக்கலாம்: தொழிற்சாலையில் இருக்கலாம். நமது ஆபீஸ் பில்டிங்கில் இருக்கலாம்.  இப்படி காற்றில் கரைந்த நிலையில் இருக்கும்  அம்மோனியாவை சுலபமாக அதிக காசு செலவில்லாமல் நீக்கிவிடலாம்.

நீங்கள் செய்யவேண்டியது ஒன்றுதான் கீழ்கண்ட செடிகளில் ஒன்றையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவைகளையோ கட்டிடத்திற்குள் வைக்கலாம். தோராயமாக 100 சதுர அடிக்கு ஒரு செடி வைக்கலாம். ஒரு செடி வாங்கி வைக்க அதிகபட்சமாக நூறு ரூபாய்கூட செலவாகாது. பிளாக்கில் ஒரு சினிமா டிக்கட் எடுக்கக்கூட இதைவிட அதிகம் செலவாகும்.


                                                     1.லில்லி டர்ஃப் (LILY TURF)
                                                                                


                                                      2.பீஸ்  லில்லி (PEACE LILY)
                                                                                    

                                      3.ஃபிளமிங்கோ லில்லி (FLAMINGO LILY)
                                                                                 
                              
                               4.பிராட் லீஃப் லேடி  பாம் (BROAD LEAF LADY PALM)

                                                                                   

                                                                                    
                           5.ஃபளோரிஸ்ட் கிரிசாந்திமம் (FLORIST CHRYSANTHEMUM)
                                                                                    
                                                              

இந்த செடிகள் நம்ம ஊரில் வருமா வராதா என்ற கவலையே வேண்டாம். சூடான பிரதேசங்களிலும் நன்றாக வளரும். வேலூர் மாதிரி வெயிலூர்களில் கூட நன்றாக வளரும். கம்மியான சூரிய ஒளியே இந்த செடிகளுக்கு போதுமானது. சிக்கனமாக ஒளியைக்கொண்டே அவை ஸ்டார்ச் தயாரித்துவிடும்.

நல்லா கவனிங்க ! ஆமையையும் அம்மோனியாவையும் வீட்டுக்குள்ள அண்டவிடக்கூடாது.


(Image Courtesy:Thanks Google)
Thanks to www.app.sepa.org.uk - pollutant Fact Sheet














No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...