Monday, May 9, 2016

நடுவில கொஞ்சநாளா வீட்டுல நல்லகாத்த காணும் - பகுதி 9



காற்று மாசு (Image Courtesy: Thanks Google)

(இத்தினூண்டு காற்றையும் அதிகமான விஷ வாயுக்களையும் அன்றாடம் சுவாசிக்கிறோம். காற்று என்றால் என்ன ? பல வாயுக்களின் சங்கமம். இதில் அதிகம் இருப்பது நைட்ரஜன். அதாவது 70 சதவிகிதம். ஆக்சிஜன் 21 சதவிகிதம். ஆர்கான், கார்பன்டைஆக்ஸைடு, நியான், ஹீலியம், கிரிப்டான், சினான் இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம், ஒரு 9 சதவிகிதம் இருக்கும். ஆக காற்று என்பது வாயுக்களின் கூட்டமைப்பு. வாழ்க்கை பாதுகாப்பா இருக்கணும்னா மூன்று விஷயங்கள்ல நாம் கவனமாக இருக்கணும். நாம் சாப்பிடும் உணவு, குடிக்கும் தண்ணீர், சுவாசிக்கும் காற்று.)

‘நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணும’  இந்தத் தலைப்பில் வந்து சக்கைப்போடு போட்டது வித்தியாசமான ஒரு தமிழ்ப்படம். குறைந்த காலகட்ட மறதி (SHORT TERM MEMORY LOSS)என்ற ஒரு நோயை அடிப்படையாக வைத்து தயாரித்த படம் இது. ‘ட்ரை குளோரோ எதிலீன்’என்ற ரசாயனத்தால் மாசு அடைந்த காற்றினை சுவாசிப்பதாலும் இந்த நோய் வரும்.

நீண்ட நாட்கள் ‘ட்ரை குளோரோ எதிலீன்’ (TRI CHLORO ETHYLENE) ஐ சுவாசித்தால் தலைவலி, சாப்பிடும் அளவு குறைதல், குறைந்த காலகட்ட மறதி, தூக்கமின்மை, வெர்ட்டிகோ (VERTICO), அடாக்சியா (ATAXIA) போன்ற உடல் உபாதைகள் தோன்ற வாய்ப்பு உள்ளது. வெர்ட்டிகோ என்பது காதின் உட்புறம் தோன்றும் நோய்.

அடாக்ஸியா என்பதும் ஒரு வித்தியாசமான நோய். இந்த அடாக்ஸியா மூளையை பாதிக்கும். உடலின் தசையை  இயக்கக்கூடிய மூளைப்பகுதியை பாதிக்கும். பாதிக்கப்பட்டவர்களால் சரியாக பேச முடியாது. கண்களை இமைக்க முடியாது. சரிவர நடக்க முடியாது. ஒரு பொருளை சட்டென்று எடுக்கமுடியாது.

ட்ரை குளோரோ எதிலீன் என்னும்  நச்சு வாயுவை நீக்கி காற்றை சுத்தப்படுத்தும் அரிய குணம்கொண்ட கீழ்கண்ட 9 செடிகளை நாசா - அல்கா  ஆராய்ச்சி மூலம் தெரிந்தெடுத்துள்ளது.

1. இங்கிலிஷ்  ஐவி (ENGLISH  IVY)

2. பீஸ் லில்லி (PEACE  LILY)

3. வேர்கேட்டட் ஸ்நேக் பிளாண்ட் (MOTHERINLAW'S  TONGUE)
4. ரெட்எட்ஜ்டு டிரெசீனா (RED  EDGED  DRDAENA)

5. கார்ன் ஸ்டாக் டிரெசீனா (CORN  STOCK  DRACENA)

6. பார்பெர்ட்டன் டெய்சி (BARBERTON  DAISY)


7. ஃபுளொரிஸ்ட் கிரிசாந்திமம்; (FLORIST CHRYSANTHEMUM)

8. ஜேனெட் கிரெய்க் (JANET CRAIG)

9. வார்னெக்கி (WARNECKI)

ஒரு ஞாயிற்றுக்கிழமை வாணியம்பாடியலிருந்து ஒரு நண்பர் வந்திருந்தார். அவர், அவர் மனைவி, தங்கை தங்கையின் கணவர்,   இப்படி எல்லோரும் நெருங்கிய உறவினர்கள் குழந்தைகளுடன் கிட்டத்தட்ட 25 நபர்களுடன் வந்திருந்தார்.

என்வீடு ஆபீஸ் எல்லாம் ஒன்றுதான். எங்கள் வீட்டைச்சுற்றி ஒரு கிலோமீட்டர் தொலைவிற்குள் ஒரு வீடும் கிடையாது. எங்களைச் சுற்றி நிறைய மரங்கள் இருந்தன. பலவகை மரங்கள், செடிகளைப் பார்க்க அவர்கள் புதிய உலகைப் பார்த்த மாதிரி சந்தோஷப்பட்டார்கள். குழந்தைகள் பற்றி சொல்லவே வேண்டாம். பிக்னிக் வந்தமாதிரி விளையாடினார்கள்.

 “ரொம்ப நன்றி சார்;. மூணுமணிநேரம் நாங்க நல்ல காத்தை சுவாசிச்சோம்” என்று அவர்கள் விடைபெறும் போது என் நண்பர் சொன்னார்.

"நடுவில கொஞ்சநாளா வீட்டுல நல்லகாத்த காணும்" என்று மக்கள் ஏங்குகிறார்கள்.
காற்று மாசு (Image Courtesy:Thanks Google)

Thanks to: www.news.webmd.com
Images Courtesy: Thanks Google

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...