பில்லோடெண்ரான் |
இந்த
6 செடிகளப் பார்த்தா
காற்று மாசு
காணாமப்போகும்
AIR POLLUTION
CONTROLING
SIX PLANTS
டாய்லெட்டிலிருந்து வரும் அம்மோனியா, குப்பைத்தொட்டியிலிருந்து வரும் ஃபார்மால்டிஹைட், அடுப்பு மற்றும் ஸ்டவ்விலிருந்து வரும் கார்பன் மோனாக்சைடு, டிடெர்ஜன்ட்டுகளிலிருந்து வரும் பென்சீன், சர்ஃபேஸ் கிளீனிங் பொருட்களிலிருந்து வரும் ஜைலீன், மரச்சாமான்களிலிருந்து வரும் டிரைகுளோரோ எதிலீன் அத்தனையும் காற்றோடு சேர்த்துத்தான் சுவாசிக்கிறோம்.
இந்த “காற்று சீர்திருத்தச் செடிகள்”; என்ற கட்டுரைத்தொடரில் இதுவரை பல செடிகளை பர்ர்த்திருக்கிறோம்.
இந்த கட்டுரையில் பில்லோடெண்ட்ரான் , எலிபெண்ட்ஈயர் பில்லோடெண்ட்ரான், ரெட்எட்ஜ்டு டிரசீனா, பாட்மம் சைனீஸ் எவர் கிரீன்ஸ,; ஆரோவீட் வைன் ஆகிய செடிகளைப் பார்க்கலாம்.
1 . பில்லோடெண்ட்ரான். ( PHILODENDRON ) இதய இலைச்செடி
பில்லோடெண்ட்ரான் பைபினாட்டிஃபிடம் ( PHILODENDRON BIPINNATIFIDUM) என்பது இதன் தாவரவியல் பெயர். இது ஆராசியே குடும்பத்தின் ஓர் உறுப்பினர். அழஅழகான இதய வடிவம் கொண்டவை இதன் இலைகள். இந்தச்செடிகள் “உனக்கு நான் இதைச்செய்யறேன்….பதிலுக்கு எனக்கு நீ இதைச்செய்’ என்று எறும்புகளுடன் இவை கொடுக்கல் வாங்கல் உறவு வைத்துள்ளது பில்லோடெண்ட்ரான். இவை எறும்புகளுக்கு தேன் அமுது அளிக்கும். பில்லோடெண்ட்ரான் மகரந்த சேர்க்கைக்கு இது மகத்தான உதவி புரியும். மேலும் எறும்புகளின் கூடுகள், மற்றும் சுற்று வெளிகளில் அதன் உணவை எடுத்துக்கொள்கிறது பில்லோ (சுருக்கம்). வேறு பூச்சிகள் பில்லோவை செடிகளை தாக்காமல், இருக்க இந்த எறும்புகள் பாதுகாப்பு வளையம் அமைக்கின்றன. இதன் இலைகள் பல்வேறு வகையில் வேறுபட்டிருந்தாலும், பொதுவாக அவை இதய வடிவில் இருக்கும். இது கொடிவகைச்செடி.
யானைக்காது பில்லோடெண்டரான் |
2.எலிபெண்ட்ஈயர் பில்லோடெண்ட்ரான் (ELEPHANT EAR PHILODENDRON) அல்லது யானைக்காது பில்லோடெண்டரான்
பல்வேறு வண்ணங்களில், பல்வேறு அளவுகளில், கவர்ச்சிகரமான இலைகளை உடையவை இந்த எலிபெண்ட்ஈயர்; பில்லோடெண்ட்ரான். இதன் இலைகள் பச்சை வர்ணம் பூசிய யானைக்காது மாதிரி இருக்கும்.
3 . ரெட்எட்ஜ்டு டிரசீனா (RED EDGED DRACAENA) சிவப்பு பெண் டிராகன் பாம்பு
ரெட்எட்ஜ்டு டிரசீனா |
இதன் தாவரவியல் பெயர்; டிரசீனா டிராக்கோ (DRACAENA DRACO). ஆஸ்பராகேசி(ASPARAGACEAE) குடும்பத்தைச் சேர்ந்தது. டிரசீனா என்றால் கிரேக்க மொழியில் பெண் டிராகன் பாம்பு என்று அர்த்தம். இதில் மரங்களும் செடிகளும் உள்ளன. இந்த குடும்பத்தைச்சேர்ந்த மரங்களை டிராகன் மரங்கள் என பெயர்சூட்டியுள்ளனர். காற்று சுத்தப்படுத்தும் காரியம் ஆற்றுவதில் முதன்மையானது என்று நாசா ஆராய்ச்;சி நிலையம் பட்டயம் வழங்கியுள்ளது. இந்த குடும்பத்தைச் சேர்;ந்த புதர்ச் செடிகள் வசிப்பறை செடிகளாகப் பயன்படுத்தவென்றே பிறவி எடுத்தவை.
4 . பாட்மம் (POT MUM) அல்லது சாமந்தி
சாமந்தி |
ஆஸ்ட்ரேஸியே (ASTRACEAE) குடும்பத்தைச் சேர்ந்த இதன் தாவரவியல் பெயர் கிரிசாந்திமம் இண்டிகம். ( ஊசளையனெiஅரஅ ஐனெiஉரஅ )இ இதன் பிறப்பிடம் ஆசியா. கிரைசாஸ் (CHRYSOS) என்றால் கிரேக்க மொழியில் தங்கம். அந்திமான் (ANTHEMON) என்றால் மகளிர் அல்லது மங்கை. ஜப்பான் இந்த மலர்களுக்கு பெஸ்டிவல் ஆஃப் ஹேப்பினெஸ் (FESTIVAL OF HAPPINESS) ஒரு திருவிழாவையே கொண்டாடுகிறது. நீலம் தவிர எல்லா நிறத்திலும் சக்கைப்போடு போடும் பூ,
5. சைனீஸ் எவர் கிரீன்ஸ் (CHINESE EVERGREENS) பசுமைமாறா சீனச்செடிகள்
சைனீஸ் எவர் கிரீன்ஸ் |
அக்லோனிமா கம்யூடேட்டம் (AGLONEMA COMMUTATUM) என்ற தாவரவியல்பெயர் கொண்ட இது, அரேசியே (ARACEAE) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. எப்போதும் பசுமையுடன் காட்சிதரும்; பல்லாண்டு செடி வகை. “ பசுமையான இதன் இலைகள்மீது வெள்ளித் துகள்களால் கோலம்போட்டது யார் ?”; என்று கேட்கத் தோன்றும். இவை செடிகளாகவும் கொடிகளாகவும் உள்ளன. உடனடியாக ஒருசெடியை வாங்கி வையுங்கள். “கல்யாணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம் ஆகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்”;. நினைத்தது நடக்கும் என்கிறார்கள்…” சில நாடுகளில்; இதனை அதிர்ஷ்ட்ட தேவதை என்றும் அழைக்கிறார்கள்.
6 . ஆரொவீட் வைன் (ARROWWHEAD VINE)
ஆரொவீட் வைன் |
சின்கோனியம் போடோபில்லம் (SYNCONIUM PODOPHYLLUM) என்பது இதன்தாவரவியல் பெயர். அராசியே (ARACEAE) குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் இலைகள், வெள்ளை,பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய நிறங்களில் காணப்படும். இதன்இலைகள் மற்றும் இதர பகுதிகளும் நச்சுத்தன்மை உடையன. இதன் கொடிகள் 20 – 30 மீட்டர் உயரம்வரை மரங்களில் படரும் தன்மை உடையது, வெட்டி விட்டால் உடன் வளரும்.
No comments:
Post a Comment