Sunday, May 1, 2016

கண்ட கண்றாவியெல்லாம் காற்று என்று சுவாசிக்காமல் இருக்க 4 செடிகள் ! AIR POLLUTION CONTROL PLANTS AT HOMES

இங்க்லீஷ் ஐவி

கண்ட கண்றாவியெல்லாம்
காற்று என்று
சுவாசிக்காமல் இருக்க
4 செடிகள்  !


AIR POLLUTION CONTROL 

PLANTS AT HOMES


டிவி சீரியல் மாதிரி ஜலதோஷம், அலர்ஜி, கண்அரிப்பு, கண்எரிச்சல், இன்னும் பலவிதமான நோய்நொடிகள் நம்மை தொடர்வதற்கு என்ன காரணம் ?  

எல்லாவற்றிற்கும் காரணம்; சுவாசிக்கும் காற்றுதான். நாம் சுவாசிக்கும் காற்று வெறும் காற்று அல்ல. 
                                                                                                         (Images Courtesy: Thanks Google)
டாய்லெட்டிலிருந்து வரும் அம்மோனியா, குப்பைத்தொட்டியிலிருந்து வரும் ஃபார்மால்டிஹைட், அடுப்பு மற்றும் ஸ்டவ்விலிருந்து வரும் கார்பன் மோனாக்சைடு, டிடெர்ஜன்ட்டுகளிலிருந்து வரும் பென்சீன், சர்ஃபேஸ் கிளீனிங் பொருட்களிலிருந்து வரும் ஜைலீன், மரச்சாமான்களிலிருந்து வரும் டிரைகுளோரோ எதிலீன் அத்தனையும் காற்றோடு சேர்த்துத்தான் சுவாசிக்கிறோம்.

இப்போது சொல்லுங்கள் நாம் சுவாசிக்கும் காற்று வெறும் காற்றா ? இல்லை நண்பா. கண்ட கண்றாவியெல்லாம் காற்று என்ற பெயரில் சுவாசிக்கிறோம்.
இந்த “காற்று சீர்திருத்தச் செடிகள்” என்ற கட்டுரைத்தொடரில் இதுவரை பல செடிகளை பர்ர்த்திருக்கிறோம்.
 
 இந்த கட்டுரையில் இங்கிலிஷ் ஐவி, வீப்பிங்ஃபிக்,  டு;வார்ஃப்  டேட் பாம்,  லேடி பாம் ஆகிய செடிகளைப் பார்க்கலாம். 

1 . இங்கிலிஷ் ஐவி  (ENGLISH IVY )
   
பார்மால்டிஹைடைவடிக்கும் அற்புதமான கொடிவகைத் தாவரம்.  இடத்தைக்கொடுத்தால் மடத்தைப் பிடிக்கும் கொடி. ஒர் இடத்தில் வைத்தால்போதும். அதே முழு இடத்தை ஆக்கிரமித்து விடும். கட்டிடங்களில் மரங்களில் சுற்றிவிட்டால் போதும். அதன் கழுத்துவரை ஏறிச்செல்லும். ஈரமான மண்கண்டம் ஏற்றது. ஆனால் ஒருநாளில் குறைந்தது 4 மணிநேரமாவது அதற்கு வெய்யில் குளியல் வேண்டும். இதன் தாவரவியல் பெயர்  ஹெடிரா ஹீலிக்ஸ் ( Hedera helix) அராலியேஸி  (ARELIACEAE ) என்பது குடும்பப்பெயர்.
வீப்பிங்ஃபிஃக் 

2 . வீப்பிங்ஃபிஃக்  (WEEPING FIG) அல்லது அழுது வடியும் அத்தி மரம்

இதன் தாவரவியல் பெயர் (Ficus benjamina) ஃபைகஸ் பென்ஜமினா. மோரேஸியே (MORACEAE) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. இதைத் தமிழில் மொழிபெயர்த்தால அழுதுவடியும் அத்தி என்று பெயர். “இது எங்க ஊர் மரம்” என்று பாங்காங் நாட்டு அரசினால், அங்கீகரிக்கப்பட்ட மரம.; இந்த வீப்பிங்பிஃக்  என்னும் அத்திமரம் புறாக்களுக்கு ரொம்ப பிடிக்கும். காரணம் அதன் சுவைமிகு பழங்கள.; பார்க்குகள், நகர பொது இடங்கள், அகலமான சாலை ஓரங்களில், நடலாம். ஏங்கு வைத்தாலும் பார்மால்டி ஹைட்; நச்சினை உண்டு இல்லை என்று செய்துவிடும். பளபளப்பான பசுமையான இலைகளைக் கொண்டது. இதன் வேர்கள் நிறைய இடங்களை ஆக்கி;ரமிக்கும் தன்மை கொண்டது. வீட்டு தோட்டங்ககளைத் தவிர்ப்பது நல்லது.
டு;வார்ஃப் டேட் பாம்


3.டு;வார்ஃப்  டேட் பாம் (DWARF DATEPALM) அல்லது குட்டை ஈச்ச மரம்

இதன் தாவரவியல் பெயர். ( Poenix robelenii )  பீனிக்ஸ் ரோபெலெனி.  அரிக்கேஸியே(ARECACEAE) குடும்பத்தைச் சேர்ந்தது.  இதில் கிட்டத்தட்ட 260 வகை செடிகள் உள்ளன. வெப்பமானது முதல் மித வெப்பமான பகுதிகளில் 6 முதல் 10 அடி உயரம் வரை மணல் மற்றும் வடிகால் வசதியுள்ள மண்வயணங்களில் வளரும்.

4 . லேடி பாம் (LADY PALM)  அல்லது மங்கைப்பனை

ராக்கிஸ் எக்செல்சா  ( Rackis exelsa) என்பது இதன் தாவரவியல் பெயர். அரிக்கேசியே (யுசநஉயஉநயந) குடும்பத்தைச் சேர்ந்தது. டைவான் மற்றும் சீன தேசம் இதன் சொந்தமண்;. நான்கு மீட்டர் வரை  உயரமாக வளரும். இளம்செடிகளில் ஒற்றை இலைகளாகவும் முதிர் செடிகளின் இலைகள் 10 முதல் 12 பிரிவுகளைக் கொண்டதாக இருக்கும். ஒரு செடி நட்டால் போதும். பல தண்டுகளாக வெளிக்கிளம்பி மகிழ்வூட்டும் அழகான மரம் மங்கைப்பனை.
வீப்பிங்  ஃபிஃக்

லேடி பாம் 













No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...