பார்மாலிடிஹைட்
மாசுவை
கட்டுப்படுத்தும்
26 செடிகள்
FORMALDEHYDE
POLLUTION CONTROL
PLANTS
கீழ்கண்ட 26 செடிகளை வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் வளர்க்க முடியும். காற்றில் கலந்திருக்கும் பார்மால்டிஹைட்டை வடிகட்ட முடியும். நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். இது நாசா அல்கா ஆராய்ச்சியின் முடிவு
காற்றினை மாசுபடுத்துவதில் முன்னணி ரசாயனங்களில் ஒன்றுதான் பார்மால்டிஹைட்.
நிறமில்லாத, விரைவில் தீப்பிடிக்கும் கடுமையான நெடியுடைய ஒரு ரசாயனப்பொருள் ஃபார்மால்டிஹைட். இதனை கட்டடத்தொழில் சம்மந்தமான பொருட்கள், வீட்டுச்சாமான்கள் பலவற்றின் உற்பத்தியிலும் பயன்படுத்துகிறார்கள்.
நீங்கள் பிளைவுட் வாங்கிவந்து இறக்கினால் ஒரு நெடியுடன் கூடிய வாடை வரும் அது ஃபார்மால்டிஹைட்தான். பார்ட்டிகிள்போர்ட் மற்றும் ஃபைபர்போர்டுகள் அருகில் சென்றால் கூட ஃபார்மால்டிஹைட் நம்மை வரவேற்கும். நம் நாசிக்கு அறிமுகமான நெடிதான் அது.
பூசணக்கொல்லி, கிருமி நாசினியாக தொழிற்சாலைகளில், பிணக்கிடங்களிலும் மற்றும் ஆய்வகங்களிலும் பிரிசர்வேட்டிவாக உதவுகிறது ஃபார்மால்டிஹைட்.
கண், மூக்கு, தொண்டை ஆகியவற்றில் எரிச்சல், இருமல், இழுப்பு, சுவாசம் தொடர்பான நோய்கள், மார்புவலி ஆகிய நோய்கள் ஃபார்மால்டிஹைட் கலந்த காற்றை சுவாசிப்பதால் ஏற்பட வாப்புகளுண்டு.
ஆனாலும் கீழ்கண்ட 26 செடிகளை வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் வளர்க்க முடியும். காற்றில் கலந்திருக்கும் பார்மால்டிஹைட்டை வடிகட்ட முடியும். நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். இது நாசா அல்கா ஆராய்ச்சியின் முடிவு
1.டுவார்;ஃப் டேட்பாம் (Dwarf Date palm)
2.அரிக்கா பாம் (Areka palm)
3.பாஸ்டன் ஃபெர்ன் (Boston Fern)
4.இங்கிலிஷ் ஐவி (English Ivy)
5.லில்லி டர்ஃப் (Lilly Turf )
6.ஸ்பைடர் ஃபிளாண்ட் (Spider Plant)
7.டெவில்ஸ் ஐவி (Devils Ivy)
8.பீஸ் லில்லி ( Peace Lilly)
9.ஃபிளமிங்கோ லில்லி (Flamingo lilly)
10.சைனீஸ் எவர்கிரீன் (Chineese EverGreen)
11.பேம்பு பாம் (Bamboo Palm)
12.பிராட் லீஃப் லேடிபாம் (Broad Leaf Lady Palm)
13.வேரிகேட்டட் ஸ்நேக் பிளாண்ட் (Mother in laws tongue)
14.ஹார்ட் லீப் பிலோடெண்ட்ரான் (Heartleaf philotendron)
15.செல்லோவம் பிலோடெண்ட்ரான் (Selloum philotendron)
16.எலிபெண்ட்ஈயர்; பிலோடெண்ட்ரான் (ElephantEar philotendron )
17.ரெட் எட்ஜ்டு டிரசீனா (Red Edged Dracena)
18.கார்ன் ஸ்டாக் டிரசீனா (Corn Stock Dracena)
19.வீப்பிங் பிஃக் (Weeping Fig )
20.பார்பெர்ட்டன் டெய்சி (Barberton Daisy)
21.புளோரிஸ்ட் கிரைசாந்திமம் (Flowrist Chrysanthimum)
22.ரப்பர் பிளாண்ட் (Rubber Plant)
23.சோற்றுக் கற்றாழை (Aloe vera)
24.ஜேனெட் கிரெய்க் (Janet craig)
25.வார்னெக்கி (Warnecki)
26. வாழை (Banana Oriana)
27.கிம்பர்லி குயின் (Kimberley Queen)
இந்த செடிகளில் எந்தெந்த செடிகள் உங்கள் பகுதியில் கிடைக்கிறது என்று பாருங்கள். பெயர்தான் கொஞ்சம் கரடுமுரடாக இருக்கும். பெரும்பாலான செடிகள் கிடைக்கும். நர்சரி வைத்திருப்பவர்கள் எல்லோருக்கும் இந்தப் பெயர்கள் தெரிந்திருக்க நியாயமில்லை. உள்ளுரில் வேறு பெயர்கள் கூட வழங்கலாம். இல்லையென்றால் இருக்கவே இருக்கு வாட்ஸ்அப். ஜமாயுங்கள் ! ஃபார்மால்டிஹைட் இல்லாத காற்றை சுவாசியுங்கள் .
நன்றி: https://www3.epa.gov/airtoxics/hlthef/formalde.html, www.wikipaedia.com
Image Courtesy: Thanks Google.
No comments:
Post a Comment