Tuesday, May 31, 2016

இயற்கை விவசாயம் - பஞ்சகவ்யம் அமுதக்கரைசல் தயாரிப்பது எப்படி ? - HOW TO PREPARE PANCHAKAVYAM ?

இயற்கை விவசாயம்

பஞ்சகவ்யம்  

அமுதக்கரைசல் 

தயாரிப்பது எப்படி ?


HOW TO PREPARE

PANCHAKAVYAM &

AMUTHA KARAISAL ?


  • பஞ்சகவ்யம் ஒரு இயற்கை உரம்.
  • பசுவின் சாணம், கோமியம், பால், தயிர், நெய், ஆகிய ஐந்து பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவது.
  • உரமாகவும், பூச்சிக் கொல்லி மற்றும் பூசணக் கொல்லியாகவும், பயன்படுகிறது.
  • மண்ணிண் பௌதீக தன்மையை மேம்படுத்தி, நுண்ணுயிர் பெருக்கத்திற்கு உதவுகிறது.
  • இதை காசு கொடுத்து வாங்க  வேண்டாம். நாமே தயாரித்துக் கொள்ளலாம்.
பஞ்சகவ்யம் தயாரிக்க தேவையான பொருட்கள்.

  • பசுவின் சாணம் - 7 கிலோ
  • பசுவின் கோமியம் - 10 லிட்டர் 
  • பசு நெய்      -1 கிலோ 
  • பசும்பால் - 3 லிட்டர் 
  • பசுவின் தயிர் - 2 லிட்டர் 
  • தண்ணீர்        -10 லிட்டர் 
  • இளநீர் - 2 லிட்டர் 
  • வெல்லம் -3 கிலோ 
  • நன்கு கனிந்த பூவன் வாழைப்பழம்  - 12 
  • அகன்ற வாய் உள்ள பிளாஸ்டிக் (அ) மண் பாத்திரம் - 1 
  • பாத்திரத்தின் வாயை கட்டி மூடுவதற்கான துணி – 1 
  • பஞ்சகவ்யத்தை கலக்குவதற்கான கொம்பு (அ) குச்சி – 1

செயல்;முறை விளக்கம்.

  • பசும் சாணம் 7 கிலோவுடன் 1 கிலோ பசுநெய்யை ஊற்றி நன்கு பிசையவும்.
  • சாணம் நெய் கலவையை, அந்த பாத்திரத்தில் இட்டு, துணியினால் அதன் வாயினை கட்டி, 3 நாட்களுக்கு வைத்திருக்கவும்.
  • பாத்திரத்தை ஒரு நிழலான இடத்தில் வைக்கவும.;
  • அந்த பாத்திரத்தில், 4 வது நாள், 10 லிட்டர் கோமியம், 10 லிட்டர் தண்ணீர், ஆகியவற்றை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கரைக்கவும்.
  • பாத்திரத்தின் வாயினை துணியினால், வேடு கட்டி மூடவும்.
  • இந்த கலவையை 15 நாட்களுக்கு வைத்திருக்கவும்
  • ஓவ்வொரு நாளும். காலை (அ) மாலை வேளையில், ஒரு குச்சியைக் கொண்டு நன்கு கலக்கிவிட வேண்டும்.
  • பதினாறாவது நாள், பசுவின் பால் 3 லிட்டர், பசுவின் தயிர் 2 லிட்டர், இளநீர் 3 லிட்டர், வெல்லம் 3 கிலோ, கனிந்த பூவன் வாழைப் பழங்கள் 12, ஆகியவற்றை இந்த கலவையுடன் சேர்த்து, நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
  • மீண்டும் பாத்திரத்தை மூடி, நிழலில் 30 நாட்கள் வைத்திருக்கவும்.
  • ஒவ்வொரு நகளும் மறவாமல், கலவையை, நன்றாக கலக்கிவிட வேண்டும்.
  • முப்பத்தி ஒன்றாவது நாள், பஞ்சகவ்யம் தயாராகிவிடும்.
பயன்படுத்தும் விதம்
  • பெருந்துளிகளாக வீழ்வதற்கேற்ப, கைத்தெளிப்பானில் தெளி முனையை மாற்றிக் கொள்ளவும்.
  • ஒரு எக்டேர் பரப்பிற்கு, 50 லிட்டர் பஞ்சகவ்யா கரைசலை, பாசன நீரில் கலந்து பாய்ச்சலாம்;.
  • நடவு செய்யும் பயிர் நாற்றுக்களை, 3 சத பஞ்ச கவ்யம் கரைசலில் நனைத்து நடவு செய்யலாம்.
  • இஞ்சி, மஞ்சள், போன்றவற்றின் விதைக் கிழங்குகளையும், பஞ்ச கவ்யம் கரைசலில், நேர்த்தி செய்து, நடவு செய்யலாம்.
  • கரும்பு விதைக் கரணைகளை, 3 சத பஞ்ச கவ்யா கரைசலில், 30 நிமிடம் ஊற வைத்து நடவு செய்யலாம்.
  • சேமிக்கும் விதைகளை 3 சத பஞ்ச கவ்யா கரைசலில், நனைத்து,       உலர வைத்து, பாதுகாக்கலாம்.
  • பஞ்சகவ்யம் 3 சத கரைசல் தயார் செய்ய 300 மிலியை, 10 லிட்டர் நீருடன் கரைத்துக் கொள்ளவும்.

அமுதக்கரைசல்

  • மிகவும் சுலபமாக தயாரிக்கக் கூடிய இயற்கை உரம்.
  • பசும் சாணம், பசும் கோமியம், பயறு மாவு, வெல்லம் ஆகியவை இருந்தால் போதும்.
  • முக்கியமாக மண்ணில் நுண்ணுயிர்களைப் பெருக்கி பயிர் மகசூலை அதிகரிக்கும் திரவ உரம். 
  • 20 லிட்டர் அமுதக்கரைசல் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.


தேவைப்படும் பொருட்கள்

  • 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட பாத்திரம் -  1
  •  புதிய சாணம் - 2 கிலோ  
  • பசுவின் கோமியம் - 2 லிட்டர்  
  • கருப்பட்டி அல்லது வெல்லம் - 200 கிராம்,;, 
  • பயறு மாவு - 200 கிராம் 
  • தண்ணீர் - 20 லிட்டர்.

செயல்முறை விளக்கம்

  • 20 லிட்டர் தண்ணீரில் சாணம், கோமியம், பயறு மாவு, வெல்லம்,  அனைத்தையும் கரைக்கவும்.
  • மண் பாண்டம் அல்லது பிளாஸ்டிக் பாத்திரத்தில் இந்த கரைசலை தயாரிக்கவும்.
  • பாத்திரத்தின்; வாயினை ஒரு துணியினால் வேடுகட்டி மூடவும்.
  • பாத்திரத்தை நிழலான இடத்தில் 48 மணி நேரம் வைத்திருக்கவும்.
  • காலையும் மாலையும் ஒரு குச்சியினால் நன்கு கலக்கவும்.
  • மூன்றாவது நாள் அமுதக்கரைசல் தயார்.
  • இதனை ஒரு லிட்டர் அமுதக் கரைசலை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து பயிர்களின் வேர்ப்பகுதியில் ஊற்றவும்.
  • அல்லது பாசன நீரில் கலந்து விடலாம்.
  • தொடர்ந்து அமுதக் கரைசலை வேர்ப் பகுதி மண்ணில் ஊற்றுவதால் அதனை வளமானதாக மாற்ற முடியும்.
Image Courtesy; Thanks Google

இயற்கை விவசாயம் - பொக்காஷி கம்ப்போஸ்ட் தயாரிக்கும் முறை - ORGANIC POKASHI COMPOST PREPARATION

 

இயற்கை விவசாயம்

பொக்காஷி 

கம்ப்போஸ்ட் 

தயாரிக்கும் முறை

 

ORGANIC POKASHI 

COMPOST 

PREPARATION

  • நெல்உமி, மீன் தூள், மற்றும் புண்ணாக்குடன் இ.எம் சேர்த்து    தயாரிக்கும் உரத்தின் பெயர் “ பொக்காஷி கம்ப்போஸ்ட் “ 
  • இதனை 4 நாட்களில் தயாரித்து விடலாம்.
  • காற்றோட்டமான நிலையில்
தயாரிக்கப்படும் முறை இது.
  • தேவைப்படும்  பொருட்கள்.
  • நெல் உமி   100 கிலோ.
  • புண்ணாக்கு        25 கிலோ.
  • மீன் தூள்         25 கிலோ.
  • இ.எம்.           150 மில்லி.
  • ரசாயனம் சேர்க்காத வெல்லம்  150 கிராம்.
  • குளோரின் சேர்க்காத தண்ணீர்   15 லிட்டர்.
செயல்முறை
  • நெல் உமி, புண்ணாக்கு, மீன் தூள், வெல்லம் ஆகியவற்றை நன்றாக கலக்குங்கள்.
  • பின்னர் இ.எம். 150 மில்லி'ஐ அத்துடன் கலக்குங்கள்.
  • அடுத்து 15 லிட்டர் தண்ணீரையும், இ.எம். இரண்டாம்நிலை        கரைசலையும் ஊற்றி சீராக சேர்க்கவும்.
  • இந்தக் கலவையை நிழல் உடைய சிமெண்ட் தரையில் குவித்து    வைத்து ஈரச்சாக்கினால் மூடி வையுங்கள்.
  • சரியாக இது 4–வது நாள் கம்ப்போஸ்ட் உரமாக மாறிவிடும்.
  • கண் இமைக்கும் கால அளவில் (4 நாள்) தயாரிப்பதுதான் பொக்காஷி கம்ப்போஸ்ட்.
  • பொக்காஷி கம்ப்போஸ்ட் தயாரான பிறகு 14 -ஆம் நாள் இதனை    இடலாம்.
பொக்காஷி கம்ப்போஸ்ட் இடும் முறை.
  • இந்த கம்ப்போஸ்ட்  பொம்மை செய்யும் களிமண் பதத்தில் இருக்க வேண்டும்.
  • இதனை 1 ஏக்கருக்கு 100 கிலோ இட வேண்டும்.
  • சிறிய செடிகளுக்கு 0.5  கிலோ முதல் 2 கிலோ வரை இடலாம்.
  • பழ மரங்களுக்கு வயதுக்கு ஏற்ப 5 முதல் 10 கிலோ வரை இடலாம்.
  • இதற்கு பிரகாசமான  எதிர்காலம் உண்டு 
  • நம் நாட்டில் இப்போதுதான் இ.எம். பிரபலம் ஆகிவருகிறது.
  • பல துறைகளில் பயன்படுத்த ஏற்ற இ.எம். ஐ பயன்படுத்தினால் நமக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது.
  • விவசாயிகளுக்கும்  பேருதவியாக இருக்கும்.
பொக்காஷி கம்போஸ்ட் தயாரிப்பு 

 Image Courtesy: Thanks Google

இயற்கை விவசாயம் தென்னை நார்க்கழிவு உரம் தயாரிப்பு ORGANIC COIR WASTE COMPOST


இயற்கை விவசாயம்

தென்னை நார்க்கழிவு

உரம் தயாரிப்பு

 

ORGANIC

COIR WASTE 

COMPOST


  • நீளம் 10 அடி, 3.5 அடி அகலமுள்ள பாத்தியினை நிழலான இடத்தில் அமையுங்கள்.
  • மரத்தடி நிழலில் இதைச் செய்யலாம்.
  • பாத்தியில் அரை அடி உயரத்திற்கு தென்னை நார்க்கழிவு    அல்லது ஆலைக்கழிவை பரப்பவும்.
  • கழிவுகள் நன்கு நனையுமாறு இரண்டாம் நிலை இ.எம். கரைசலை வாசல் தெளிப்பது மாதிரி, தெளிக்கவும்.
  • இப்படி 5 அல்லது 6 அடுக்கு, கழிவுகளை மீண்டும் மீண்டும் பரப்புங்கள்.
  • ஓவ்வொரு அடுக்கின் மேலும் இ.எம். இரண்டாம் நிலை கரைசலை     தெளியுங்கள்.
  • கடைசியாக இந்த குவியலின் மீது, சாக்கு, தென்னை மட்டை, பனை மட்டை போன்றவற்றை போட்டு மூடவும்.
  • கழிவுக் குவியலில் ஈரம் தொடர்ந்து இருக்க வேண்டும்.;
  • 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் தெளித்து வரவும்.
  • கழிவினை கையில் எடுத்துப் பிழிந்தால், விரல் இடுக்குகளில் தண்ணீர் வடிய வேண்டும்.
  • இ.எம். கரைசலை பயன் படுத்தும் போது, யூரியா மற்றும் புளுரோட்டஸ் காளான் விதை தேவை இல்லை.
  • தென்னை நார்க்கழிவு அல்லது ஆலைக் கழிவுடன் கால் பங்கு ஆட்டெரு அல்லது மாட்டெருவை  கலந்து கொள்ளவும்.
  • கழிவு 750 கிலோவுடன் 250 கிலோ ஆட்டெரு அல்லது மாட்டெருவை  கலந்துக் கொள்ள வேண்டும்.
  • இது ஒரு வாரத்திற்குள் உரமாக மாறிவிடும்.
  • யூரியா மற்றும் புளுரோட்டஸ் காளான் உபயோகப் படுத்தும்போது     உரமாக மாற குறைந்த பட்சம் 60 நாட்களாவது ஆகும்.
இ.எம். தாய் திரவத்தை பெருக்குவது எப்படி?
  • இ.எம். தாய் திரவத்தை பெருக்கினால், செலவு குறையும்.
  • இதற்கு 1 லிட்டர் தாய் திரவம் தேவை.
  • இத்துடன் 100 லிட்டர் தண்ணீர் மற்றும் 5 கிலோ வெல்லத்தையும்     சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும்.
  • இத்துடன் சேர்க்கும் வெல்லம்  சுக்ரோஸ், சந்தனம் அல்லது வேறு ரசாயனம் சேராததாக இருக்க வேண்டும்.
  • இப்படி கூடுதலாக பெருக்கிய தாய் திரவத்தை 30 நாட்களுக்குள் காலி செய்துவிடவேண்டும்
27. இ.எம். இரண்டாம் நிலை திரவம் தயாரிக்கும் முறை
  •  ஒரு லிட்டர் இ.எம். தாய் திரவத்தை  எடுத்துக் கொள்ளுங்கள்.
  • ரசாயனம் சேர்க்கப்படாத ஒரு கிலோ வெல்லத்தை, பொடி செய்யுங்கள்.
  • வெல்லப் பொடியை ஒரு லிட்டர் தண்ணீரில் கட்டி முட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளுங்கள்.
  • வெல்லக் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீரை கலக்குங்கள்.
  • தண்ணீர் குளோரின் இல்லாததாக இருக்க வேண்டும்.
  • இ.எம். தாய் திரவம் 1 லிட்டர் –ஐ ஊற்றி கலக்குங்கள்.
  • இதற்கு சுத்தமான பிளாஸ்டிக் பாத்திரம் வேண்டும்.
  • பிளாஸ்டிக் பாத்திரத்தை காற்றுப் புகாமல் மூடி வைக்கவும்.
  • இதனை நிழலான இடத்தில் ஒரு வாரம் வைத்திருக்கவும்.
  • ஓவ்வொரு நாளும் மூடியை திறந்து வைத்து, வெளியேறும் வாயுவை அனுமதிக்க வேண்டும்.
  • இல்லையென்றால் அந்த பிளாஸ்டிக் பாத்திரம் வெடித்து விடும் வாய்ப்பு உண்டு.
  • இனிப்பும் புளிப்பும் கலந்த வாசனையுடன் இரண்டாம் நிலை இ.எம்.     கரைசல்  ஒரு வாரம் முடிவில் தயாராகிவிடும்.
  • தயாரான இரண்டாம் நிலை இ.எம். கரைசலின் மீது வெண்மையான நுரை மூடியிருக்கும்.
இ எம் 
Image Courtesy: Thanks Google

இயற்கை விவசாயம் வேம் மற்றும் இஎம் உயிர் உரங்கள் - ORGANIC VAM & EM BIO MANURES

 

இயற்கை விவசாயம்

வேம் மற்றும் இஎம் 

உயிர் உரங்கள் 

 

ORGANIC

VAM & EM

BIO MANURES


வேம் - வெஸிக்குலர் அர்பஸ்குலர் மைக்கொரைசா 
  • தாவரங்களின் வேர்ப் பகுதியில் உண்டு உறங்கி உருப்படியான காரியங்களை ஆற்றுகிறது.
  • வேம்(VAM) என்பது இதன் சுருக்கமான பெயர்.
  • வெஸிக்குலர் அர்பஸ்குலர் மைக்கொரைசா (VESICULAR ARBUSCULAR MYCORHIZA)
  • தாவரங்களின் வேர்களுக்கும் மண்ணிற்குமிடையே பாலமாக பணி செய்கிறது.
  • பயிர்சத்துக்களை எடுத்துக் கொள்ள உதவியாக இருக்கிறது.
  • மணிச்சத்து தரக்கூடிய – பாஸ்பரஸ் என்னும்; கந்தக சத்தை எடுத்துக் கொள்ள உதவுகிறது.
  • பாஸ்பரஸ் சத்து குறைவாக உள்ள நிலங்களில் பசுமைப் பொருட்களை  ( BIOMASS )   மேம்படுத்த உதவுகிறது.
  • மண்ணின் கட்டமைப்பை  மேம்படுத்த  “  வேம் “ உதவுகிறது.
  • வேர்களைத் தாக்கும்  பூசண நோய்களைக் கட்டுப்படுத்துகிறது.
  • நூற்புழுக்களின் தாக்குதலைக் குறைக்கிறது.
  • வேர்த் தூவிகளின் எண்ணிக்கையைக் கூட்டுகிறதுஇ 
  • வேர்ப் பரப்பினை அதிகரிக்கிறது.
  • வறட்சியைத் தாங்கும் சக்தியை அளிக்கிறது.   
  • இவை அடுத்தடுத்த பயிர்களுக்கும் தொடர்ந்து கிடைக்கும்.
  • நெல் போன்றஇ தேங்கி நிற்கும் தண்ணீரில் வளரும் பயிர்களுக்கு இது உதவாது.
  • இரும்பு மற்றும் துத்தநாக சத்துக்களையும் இது பயிர்களுக்கு எடுத்துத் தருகிறது. 
இ.எம். வீரிய நுண்ணுயிர் கூட்டுரம் (EFFECTIVE MICRO ORGANISM)
  • வீரிய நுண்ணுயிர் கூட்டுரம் 
  • நுண்ணுயிர்களின் சகல கலா வல்லவன்.
  • நமக்கு அறிமுகம் ஆன மற்றும் அறிமுகம் ஆகாத –நுண்ணுயிர்களின் கூட்டு இது.
  • விவசாயம் கால்நடை வளர்ப்பு மீன் வளர்ப்பு கழிவுநீர்க் குழாய்களை சுத்தம் செய்ய குப்பைக் கூலங்களை விரைவாக     மக்க வைக்க இது ஒரு வரப்பிரசாதம்.
  • இஃபெக்டிவ் மைக்ரோ ஆர்கானிசம்(EFFECTIVE MICRO ORGANISM )    இதன் ஆங்கிலப் பெயர்.
  • இதனை ஒரு முறை காசு கொடுத்து வாங்கினால் போதும்.
  • நாமே பெருக்கிக் கொள்ள முடியும்.
  • மிகக் குறைவான செலவில் மண்வளத்தைக் கூட்டி விவசாயத்தை   லாபகரமாக மாற்றும்.
  • சுற்றுச்சூழலுக்கும்  பருவ நிலை மாறுபாட்டுக்கும்     பாதுகாப்பானது.



இ.எம். தரும் பயன்கள்

  • விதை நேர்த்தி முளைப்புத் திறனை கூட்டும்.
  • தொடர்ந்து 3 ஆண்டுகள் நிலத்தில் இட்டால் மண்கண்டம் பொன்கண்டமாக மாறும்.
  • தீமை செய்யும் நுண்ணுயிர்களை மண்ணிலிருந்து விரட்டும்.
  • நோய்கள் தாக்காதவாறு பயிர்களை கேடயமாக பாதுகாக்கும்.
  • பூச்சிகளை பயிர்களிடம் அண்ட விடாது.
  • சுவையான உணவுப் பொருட்களை உத்திரவாதம்;.
  • குப்பைகளை விரைவாக மக்க வைத்து உரமாக மாற்றிவிடும்.
  • விதை நேர்த்தி. 
  • ஒரு மில்லி இ.எம். திரவத்தை 1 லிட்டர் தண்ணீருடன் கலக்குங்கள். 
  • இந்த கரைசலில் விதைகளை ஊற வைத்து விதையுங்கள்.
  • விதையின் கடினத்தன்மைக்கு ஏற்ப அரை மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை ஊர வைக்கலாம். 
  • ஊறவைத்த விதைகளை நிழலில் உலர்த்துங்கள்.
  • உலர்த்திய விதைகளை எடுத்து விதையுங்கள் 
  • கரும்புக் கரணைகளை இந்த கரைசலில் 5 நிமிடம் ஊர வைத்து நடலாம்.

மண்ணில் தெளிக்கும் முறை.
  • ஒரு மில்லி இ.எம். திரவத்தை 1 லிட்டர் நீரில் கலக்குங்கள். 
  • கரைசலை பயிரின் மீது அல்லது மண்ணிலும்   தெளிக்கலாம்.
  • மண்ணில் தெளிக்கும் போது கைத்தெளிப்பானை பயன்படுத்துவது நல்லது.
  • கைத் தெளிப்பான் விசைத் தெளிப்பான் இரண்டையும்       பயிர்களுக்குத் தெளிக்க பயன்படுத்தலாம்.   

குப்பைகளை மக்கச் செய்வது எப்படி? 
  • நீளம் 10 அடி  அகலம் 3.5 அடி உடைய பாத்தியில் குப்பைகளை அரை அடி உயரத்திற்கு அடுக்காக போடவும்.
  • இ.எம்.  இரண்டாம் நிலைக் கரைசலை, குப்பை நன்கு நனையுமாறு  தெளிக்கவும்.
  • மீண்டும் அரை அடி உயரத்திற்கு. குப்பையினை பரப்பவும்.
  • இவ்விதம் குப்பைகளை 5 அல்லது 6 அடுக்குகள் பரப்பலாம்.
  • ஓவ்வொரு அடுக்கின் மீதும் குப்பைகள் நன்கு நனையுமாறு,        இ.எம். கரைசலை தெளிக்கவும்.
  • பத்து சதுர அடிக்கு 2 லிட்டர் இ.எம். கரைசல் தேவைப்படும்.
  • குப்பைக் குவியலின் உயரம் 3 முதல ;4 அடி உயரம் இருக்கலாம். 
  • குப்பைக் குவியலின் மீது தென்னை ஓலை, பனை மட்டை, வாழைச் சருகு, மற்றும் கோணிப்பைகள்; கொண்டு மூடவும். 
  • குவியலில் ஈரம் தொடர்ந்து இருக்க வேண்டும்.
  • இதற்கு 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் தெளிக்க   வேண்டும். 
  • குப்பையில் 2 பங்கு பண்ணைக் கழிவுகளும் ஒரு பங்கு சாணக் கழிவும் இருக்க வேண்டும் 
  • பசுந்தழைகள் அதிகம் இருந்தால் மக்கிய குப்பையில்   தழைச்சத்து அதிகம் இருக்கும். 
  • இ.எம். கரைசல் தெளிப்பதால் குப்பைகள் விரைவாக மக்கி உரமாகும்.         
  • முழுவதும் உரமாக மாறிய பின் இதனை பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.
  • 2 முதல் 3 டன்னை  1 ஏக்கர் வயலில் இடலாம்.
  • காய்கறி, பூப்பயிர் மற்றும் பழச் செடிகளுக்கு செடிகளின் வயதுக்;கு ஏற்ப 2 முதல் 5 கிலோ வரை இடலாம்.
  • வயதுக்கு ஏற்ப பழ மரங்களுக்கு 5 முதல் 10 கிலோ வரை     போடலாம்.
இ எம் - நுண்ணுயிர் கூட்டுரம் 
(Image Courtesy: Thanks Googlea)


----------------------------------------------------------------------------------------------------------------

அசட்டோ பேக்டர் & அசோஸ்பைரில்லம் உயிரியல் உரங்கள் - USE AZATOBACTOR AND AZOSPYRILLUM


அசட்டோ பேக்டர் & அசோஸ்பைரில்லம் 

உயிரியல் உரங்கள்

AZATOBACTOR AND AZOSPYRILLUM 

LEARN TO USE BIO FERTILIZERS -

 

  • அசட்டோ பேக்டர் ஒரு விதமான நுண்ணுயிர்.
  •     காற்றிலுள்ள நைட்ரஜன் சத்தை நிலைப் படுத்துகிறது.
  •      பயிர்கள் எடுத்துக் கொள்ளுமாறு   நைட்ரஜனை மாற்றித்      தருகிறது.
  •      மண்ணின் வளத்தை கூட்டுகிறது.
  •      பயிரின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
  •      அமில மண்ணைத் தவிர இதர மண் வகைகளில் நல்ல பயனைத் தரும்.
  •      மானாவாரி நிலங்களில்  24  ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கும்.
  •      தனித்து வாழும்  தன்மை உடையது.
  •      என்சைம்கள் உதவியுடன் நைட்ரஜன் -ஐ  நிலைப்படுத்துகிறது.
  •      காட்மியம், மெர்க்குரி, லெட், ஆகியவற்றிலிருந்து      மண்ணைப்       பாதுகாக்கிறது.  
  •      மருந்து தயாரிப்பு மற்றும் உணவு தயாரிப்பில், உதவுகிறது.
  •      அறிவியல் பெயர்: அசட்டோபேக்டர் குருகாக்கம்.
  •      தாவரகுடும்பம்: அசட்டோபேக்ட்டரேசியே
  •      டச்  நாட்டின் விஞ்ஞானி –மார்ட்டீனஸ் பீஸரின்த் என்பவர் முதன்முதலாக இதனைக் கண்டுபிடித்தார்.
  •     விவசாயிகளிடையே பிரபலமாக விளங்கும் உய்pர் உரம்.
  •     காற்றில் உள்ள நைட்ரஜன்; சத்தை கிரகித்துக் கொடுக்கும் அற்புதம்.
  •      மானாவாரி மற்றும் புழுதிகால் பயிர்களுக்கு       வறட்சியை தாங்கும் சக்தியைக் கொடுக்கும்.
  •     இந்த நுண்ணுயிர் பயிரின் வேர் மீது தனது வீட்டை அமைத்துக் கொள்ளும்.
  •    அங்கிருந்தபடி நைட்ரஜனை இழுத்துப் பிடித்து பயிர்களுக்கு தரும்
  •    விதை நேர்த்தி
  •   அரிசி கஞ்சி 3 லிட்டர் ஐ  தயார் செய்யுங்கள்.
  •    தயார் செய்த அரிசி கஞ்சியை ஆற வையுங்கள்.
  •    ஒரு எக்டருக்கான 3 பாக்கெட் ( 600 கிராம். ) அசோஸ்பைரில்லம் தேவை.
  •  ஆறிய அரிசி கஞ்சியுடன் 600 கிராம் அசோஸ்பைரில்லம் சேர்த்துக் கலக்குங்கள்.
  •  இந்த கலவையுடன்  ஒரு ஏக்கருக்கான  100 கிலோ நெல் விதைகளைப் போடுங்கள்.
  • விதைகளின் மீது இந்தக் கலவை நன்கு பூசிக்கொள்ளும் வகையில் கலக்குங்கள்.
  • இப்படி விதை நேர்;த்தி செய்த விதைகளை 30 நிமிடம் நிழலில் உலர்த்துங்கள்.
  • நிழலில் உலர்த்திய பின்னர் உடனடியாக விதையுங்கள்.
  • இதனால்; பயிர்கள் வறட்சியைத் தாங்கும்.
  • மேலும் தழைச்சத்தையும் நிலைப்படுத்தும்.
  • நெல் நடவு வயலில் இடும் முறை
  • ஒரு எக்டருக்கான 600 கிராம் அசோஸ் பைரில்லத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அதனை தொழு உரத்துடன் கலந்து ஒரு எக்டர் நிலப்பரப்பில்        சீராகத் தூவுங்கள்.
  • பாக்கெட்டுகளை பார்த்து வாங்குங்கள்.  
  • அசோஸ்பைரில்லம் பாக்கெட்டுக்களை வாங்கும்போது   காலாவதி ஆனதா ?  என்று பார்க்கவும்.
  • எந்த தேதிவரை அதனை உபயோகிக்கலாம்? –என்பதை பாருங்கள்.
  • கிழிந்துபோன, நைந்துபோன பாக்கெட்டுக்களை வாங்காதீர்கள்.
  • இதர பயிர்களுக்கு
  •  காய்கறி பயிர்களுக்கும் விதைநேர்த்தி செய்யலாம்.
  •   நாற்றின் வேரில் நனைத்து நடலாம்.
  •   நடவு வயலில் இடலாம்.
  •   பழமரக் கன்றுகளுக்கு 2 முதல் 5 கிலோ இடலாம்.
  •   வளர்ந்த மரங்களுக்கு 5 முதல் 10 கிலோ இடலாம்.
  •   அசோஸ்பைரில்லத்தை இதர நுண்ணுயிர் உரங்களுடன் சேர்த்து இடலாம்.
  •    மறந்தும் ரசாயன உரங்களுடன் சேர்த்து இடக்கூடாது.

22. அசிட்டோபெக்டர்  (யுஉநவழடியஉவநச) அல்லது கருப்பு யூரியா
  • இது தனித்து செயல்படும்.
  • கருப்பு யூரியா என்பது இதன் செல்லப் பெயர்.
  • இது கரும்பு மகசூலை 3 முதல் 5 டன் கூடுதலாக்கும்.
  • இது கரும்புக்கு மட்டுமே சிபாரிசு செய்யப் படுகிறது. 
  • கரணை நேர்த்தி
  •   அசிட்டோபேக்டர் 5 கிலோ எடுத்துக் கொள்ளுங்கள்.
  •    அதனை 100 லிட்டர் தண்ணீருடன் கலக்குங்கள்.
  •    இந்த கரைசலில் ஒரு ஏக்கருக்கான கரும்புக் கரணைகளை முக்கி எடுக்கவும்.
  •  முக்கி எடுத்த கரணைகளை; உடன்  நடவு செய்யலாம்.

  • கரும்பு நடவு வயலில்
  • ஒரு ஏக்கருக்கு 5 கிலோ அசிட்டோபேக்டரை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அதனை 10 லிட்டர் நீரில் கரைத்துக் கொள்ளுங்கள்.
  • இந்த கரைசலை 70 முதல் 80 கிலோ தொழு உரத்துடன்     நன்கு கலக்குங்கள்.
  • இந்தக் கலவையை கரும்புக் கரணைகளின் மீது நட்டபின் தூவுங்கள். 

அசிடொபேக்டர் (Image Courtesy: Thanks Google)


நீலப்பச்சை பாசி - அசோலா -USE NEELAPPACHAI PASI & AZOLLA



நீலப்பச்சை பாசி - அசோலா 

USE NEELAPPACHAIPASI & AZOLLA

  • நீலமும் பச்சையும் கலந்த கலவையான பாசி நீலப்பச்சைப்பாசி.
  •  சயனோ பாக்டிரியா – என்னும் பாக்டீரியா குடும்பத்தின் ஒரு அங்கத்தினர்.
  • நைட்ரோஜினேஸ்  (NITROGENASE)  என்னும் என்சைம் தூண்டிலைப் போட்டு,     வானவெளி நைட்ரஜனை, வளைத்துப் பிடிக்கிறது.
  • பிடித்த நைட்ரஜனை அப்படியே மண்ணில் சேர்க்கிறது.
  • மண்ணில் சேர்ந்த நைட்ரஜனை பயிர்கள்  பகுமானமாய் உணவாகக் கொள்ளுகின்றன.
  • நைட்ரஜன் நிலைப் படுத்துதல்  (NITROJEN FIXATION)    என்று இதைத்தான் சொல்லுகிறோம்.
  • நெல் நடவு செய்த வயலில் 10 நாட்களுக்குள் 4 கிலோ நீலப்பச்சை பாசியை இடுங்கள்.
  • அது ஒரு எக்டரில்  25 கிலோ நைட்ரஜனை மண்ணில் சேர்க்கும்.
  •  நீ.பா இட்ட வயலில் எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்க வேண்டும்.
  • இது ஒரு பாசியினால் பின்னிய பாய் போல வயல் நீரில் மிதந்து கொண்டிருக்கும்.
  • சுள்' ளென்று வெயில் அடிக்கும் பருவத்தில் நீலப்பச்சை பாசி போஷாக்காய் வளரும்.
  • நெல் விவசாயிகளுக்கு நீலப்பச்சைப் பாசி ஒரு பாதுகாப்பான இயற்கை உரம்.
     அசோலா
  • அசோலா ஒரு இரட்டைவால் குருவி
  • நெல் வயலில் போட்டால் அசோலா ஒரு இயற்கை உரம்
  • கறவை மாட்டுக்கு போட்டால் அசோலா ஒரு அசத்தலான தீவனம்
  • கையளவு நிலமும் கைப் பிடியளவு அசோலாவும்இ இருந்தால்  நாமே   அசேலாவை தயாரிக்கலாம்.
  • இதற்காக கடைக்குப்போய் காசு கொடுத்து கைநீட்ட வேண்டாம்.
  • வியட்நாம் நாட்டில் முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது அசோலா.
  • உரமாக அறிமுகமான அசோலா இன்று உலகம் முழுவதும் பிரபலமான கால்நடைத் தீவனம்.

உனக்கு நான் எனக்கு நீ
  • இருபது நாட்கள் வளர்ந்த அசோலாவை வயலில் மிதித்து விட வேண்டும்.
  • முதல் களையெடுப்பின் போது இதனைச் செய்யலாம்
  • அசோலா தண்ணீரில் வளரும் பெரணி.
  • அனாபீனா என்னும் நீலப்பச்சை பாசி தங்கி இருக்க அசோலா இடம் தருகிறது.
  • அனாபீனாவும் அசோலாவும் உனக்கு நான் எனக்கு நீ என வாழ்கின்றன.
  • அனாபீனாவுக்கு வாடகை வாங்காமல் இருக்க இடம் தருகிறது. அசோலா.
  • அது மட்டுமின்றி அறுசுவை தாது உப்புக்களும் வழங்குகிறது.
  • இதற்கு கைமாறாக அனாபீனா காற்றில் இருக்கும் நைட்ரஜன் சத்தை அமுக்கிப் பிடித்து அசோலாவுக்குத் தருகிறது.
  • தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறட்டும் என்று அசோலா      நைட்ரஜன் சத்தை பயிர்களுக்கு வழங்குகிறது.
  • சத்துக்கள் விவரம்
  • தழைச்சத்து  5 – 6 சதம்.
  • மணிச்சத்து 0.5 –0.9 சதம்.
  • சாம்பல்சத்து 2.0 – 4.5 சதம்
  • கால்சியம் 0.4 –1.0 சதம்.
  • மக்னீசியம் 1.5 – 0.65 சதம்
  • இரும்பு  0.06 –0.26 சதம்.
  • மாங்கனீசு 0.11 0.26 சதம்.
  • கொழுப்பு 3.3 –3.6 சதம்.
  • புரதம் 35 –50 சதம்.
  • மாவுப்பொருள் 6.54 சதம்
  • கரையும் சர்க்கரை 3.5 சதம்.
  • சாம்பல் 5.4 10.5 சதம்
  • பச்சையம் 0.4 - 0.75
  • இதில் உள்ள சத்துக்களை கவனித்தால் கால்நடைத் தீவனமாக பிரபலமான ரகசியம் புரியும்.
  • கறவை மாடுகளுக்கு அளித்தால் 15 முதல் 20 சதம்  பால் உற்பத்தியை அதிகரிக்கும்
  • ஒரு முறை உபயோகப்படுத்தினால் போதும்  பிறகு யாரும் மறக்க மாட்டார்கள் அசோலாவை மறக்கமாட்டார்கள்.        
நீலப்பைசைப்பாசி (Image Courtesy: Thanks Google)

நுண் உயிர் உரங்களும் இயற்கை உரங்களே - BIO FERTILIZERS ALSO ORGANIC

நுண் உயிர் உரங்களும் 

இயற்கை உரங்களே 

BIO FERTILIZERS ALSO ORGANIC

  • பலகோடி நுண்ணுயிர்கள் மண்ணில் வாழ்கின்றன.
  • இவற்றுள் ஒரு சதம் மட்டுமே தீங்கு செய்யக்கூடிய நுண்ணுயிர்கள்.
  • கடைத் தேங்கயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கும் காரியத்தை சில நுண்ணுயிர் உரங்கள் செய்கின்றன.
  • காற்று கையில் வைத்திருக்கும் நைட்ரஜன் சத்தினை பிடுங்கி பயிருக்கு கொடுக்கின்றன,
  • சில நுண்ணுயிர் உரங்கள் வாழைப்பழத்தை உறித்துக் கொடுப்பது போல,  தயார்நிலை சத்துக்களாக மாற்றித் தருகின்றன.
  • எட்டாத தொலைவில் உள்ள சத்துக்களின் காதைப் பிடித்து இழுத்து வேர்களிடம் சேர்க்கின்றன.
  • அசட்டோ பேக்டர், அசிட்டோபேக்டர், அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போபேக்டீரியம், நீலப்பச்சைப்பாசி, அசோலா ஆகியவை இந்த அணியைச் சேர்ந்த நுண்ணுயிர்கள்.

நுண்ணுயிர் உரங்களால் கிடைக்கும் பயன்கள்

  •      மண்ணின் அங்ககச் சத்தினை அதிகரிக்கும்.
  •      மண் வளத்தை மேம்படுத்தும்.
  •      வறட்சியை தாங்கி வளரும் சக்தியைத் தரும்
  •      மண்ணின் நீர்பிடிப்புத் தன்மையைக் கூட்டும்
  •      பூச்சி நோய் தாக்குதலை மட்டுப்படுத்தும்
  •      களைகளை கட்டுப்படுத்தும்
  •      சாகுபடி செலவை குறைக்கும்
  •      பயிர் மகசூலை அதிகரிக்கும்
  •      விவசாயத்தை லாபகரமானதாக மாற்றும்
  •      சுற்றுச்சூழலை பாதுகாக்கும்
  •      பருவக்கால மாற்றத்திற்கு இவை பாதுகாப்பு

உயிர் உரங்களின் வகைகள்
  •  உயிர் உரங்களை 3 வகைகளாக பிரிக்கலாம் என்று பார்த்தோம்
  • சத்துக்களை நிலைப் படுத்துபவை.
  • சத்துக்களைக் கரைத்துக் கொடுப்பவை.
  • சத்துக்களை நகர்த்திக் கொடுப்பவை.
  • நிலைநிறுத்தும் உயிர் உரங்கள்;
  • காற்றில் உள்ள நைட்ரஜன்' ஐ  நிலத்தில் நிலை நிறுத்துபவை.      (NITROGEN FIXING BIO FERTILIZERS).
  • அசட்டோ பேக்டர்.  (AZATOBACTER).
  • அசோஸ் பைரில்லம். (AZOSPYRILLUM)
  • நீலப்பப்பை பாசி. (BLUE GREEN ALGAE)
  • அசோலா.   (AZOLLA) 
  • மணிச்சத்தை கரைத்து  நகர்த்திக் கொடுக்கும் உரங்கள்.
  • மணிச்சத்தை கரைத்துக் கொடுப்பவை.  பாஸ்போ பேக்டீரியம்.  (PHOSPOBACTERIUM)
  • மணிச்சத்தை நகர்த்திக் கொடுப்பவை.  (NUTRIENT MOVING BIO FERTILIZERS)
  • உதாரணம். –. மைக்கோரைசா
  • தொலைவிலுள்ள  சாம்பல் சத்தை வேர்களுக்கு அருகில் நகர்த்திக்   கொடுக்கும் உரங்கள். (Bio Fertilizers  - Moves the  distant  Potash   near to roots) 
  •  உதாரணம். –. புரூட்ரியா ஆரான்சியா.  (குசரவசயை யுசயnஉயை.)           
  • பயிர்களுக்கு ஏற்ற உயிர் உரங்களை உபயோகித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • பயிர்களுக்கு தழைச்சத்து அளிக்க ஏற்ற உயிர் உரங்கள்
  • அவரை இன பயிர்களுக்கு – ரைசோபியம்.
  • அவரை இனம் அல்லாத பயிருக்கு – அசிட்டொபேக்டர்,     அசொஸ்பைரில்லம்.
  • நெல் பயிருக்கு நீலப்பச்சை பாசி, அசோலா. மணிச்சத்து அளிக்க ஏற்ற உயிர் உரங்கள்.
  • எல்லா பயிர்களுக்கும்  பாஸ்பாட்டிகா  உயிர் உரத்துடன் ரைசோபியம், அசட்டோபேக்டர், அசோஸ்பைரில்லம், அசிட்டோ    பேக்டர்  சேர்த்து இட வேண்டும்.                       
பயன்படுத்தும் வழிமுறை

1.    விதை நேர்த்தி செய்யும் முறை.
  • ஒரு ஏக்கருக்கு சிபாரிசு செய்யும் உயிர் உரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அதனை ஆறிய அரிசிக் கஞ்சி அல்லது கூழுடன் சேர்த்துக்          கலக்குங்கள்.
  • இந்தக் கலவையுடன் ஒரு ஏக்கருக்கான விதைகளைப் போடுங்கள்.
  • விதைகளின் மீது -இந்த கலவை படியுமாறு கலக்குங்கள்.
  • அப்படியே 30 நிமிடம் விட்டு விடுங்கள்.
  • இப்படி தயார் செய்த விதைகளை, 24 மணி நேரத்திற்குள் விதையுங்கள்

நாற்றங்காலில் தூவும் முறை
  • ஒரு ஏக்கருக்கு சிபாரிசு செய்யும் உயிர் உரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அதனை மண்புழு உரம் அல்லது தொழு உரத்துடன் நன்கு கலக்கவும்.
  • கலக்கிய உயிர் உரத்தை நாற்றங்காலில் சீராகத் தூவுங்கள்.

வேர் நனைக்கும் முறை.
  • ஒரு ஏக்கருக்கு சிபாரிசு செய்யும் உயிர் உரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அத்துடன் 10 லிட்டர் தண்ணீரில், கரைத்துக் கொள்ளுங்கள்.
  •  நாற்றுpன் வேரினை, இந்தக் கரைசலில் 30 நிமிடம் முக்கி வைத்து நடவும்.

மண்ணில் கலக்கும் முறை.
  • ஒரு ஏக்கருக்கு சிபாரிசு செய்யும் உயிர் உரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அத்துடன் போதுமான அளவு, தொழு உரம் அல்லது மண்புழு     உரத்தை கலக்கவும்.
  • இதனை நிலத்தில் சீராகத் தூவி, மண்ணில் கலக்க வேண்டும்.
  • ஜாக்கிரதை.
  • ரசாயன உரங்களை, இத்துடன் சேர்க்கக் கூடாது.
  • பூச்சிப் பூசனை மற்றும் களைக் கொல்லிகளுடன் கலக்கக்கூடாது.
  • காலாவதியான உயிர் உரப் பாக்கட்டுகளா ? என்று பார்த்து வாங்கவும்.
  • எந்த தேதிகு;குள் அதைப் பயன்படுத்த வேண்டும், --என்ற விவரம் பாக்கட்டின் மேல் எழுதி இருக்கும்.
  • நீங்கள் இடும் உயிர் உரம், நேரடி வெயில்பட்டு காய்ந்து விடக் கூடாது.
  • உரம் உலர்ந்து போனால், அது உரமாக பலன் தராது.
  • கிழிந்துப் போன பாக்கெட்டுகளை வாங்க வேண்டாம்


பசுந்தாள் உரங்களை பயன்படுத்தி மண்ணின் அங்ககச்சத்தினை கூட்டுங்கள் - USE GREEN MANURES TO INCREASE HUMUS


பசுந்தாள் உரங்களை 

பயன்படுத்தி மண்ணின் 

அங்ககச்சத்தினை 

கூட்டுங்கள் 

 - USE GREEN MANURES

TO INCREASE

HUMUS IN SOIL

  • தன்னை முழுவதுமாக இன்னொரு பயிருக்கு உரமாக தரும் பயிர்களுக்கு பசுந்தாள் உரங்கள் என்று பெயர், 
  • தனது வேர், தண்டு, இலை தழை என்று தன்னையே தியாகம் செய்கின்றன இவை.
  • இவை முக்கியமாக இரண்டு காரியங்களைச் செய்கின்றன.
  • ஒன்று, பயிர்களுக்கு தேவையான அங்ககச் சத்தையும் ஊட்டச்சத்துக்களையும் அளிக்கிறது. 
  • இரண்டு, பயிருக்கு கிடைக்காத நிலையில் உள்ள சத்துக்களை கிடைக்கும்படி செய்யும் நுண்ணுயிர்களுக்கு உறங்க இடமும் ஊண்ண உணவும் அளிக்கின்றன.
  • இந்த பசுந்தாள் உரங்கள் அனைத்தும் வேர்களில் வேர்முடிச்சுகளை உருவாக்கும் அவரை குடும்பத்தைச் சேர்ந்தவை. 
11. மணிலா அகத்தி ( SESBANIA ROSTRATA)
  •      மணிலா அகத்தி ஒரு பசுந்தாள் உரப்பயிர்.
  •      வேர், தண்டு என இரண்டிலும் வேர் முடிச்சுக்களை உடையது.
  •      குறைவான காலத்தில் அதிகமான பசுந்தாள் உரத்தை தரக்கூடியது.
  •      பல நாடுகளில் இதனை பசுந்தாள் உரமாக பயன்படுத்துகின்றனர்.
  • இதன் தாவரவியல் பெயர் செஸ்பேனியா  ரோஸ்ட்ரேட்டா( SESBANIA        ROSTRATA)
  •      இதனை தமிழில் மணிலா அகத்தி என்றழைக்கிறார்கள்.
  •      களர், உவர் நிலங்கள் இதற்கு ஏற்றதல்ல.
20 டன் பசுந்தாள் உரம்
  • பருவம்: வெப்பமான பகுதிகளுக்கு ஏற்றது.
  • விதைப்பு: விதைகளை சுடுநீரில் முக்கி எடுத்து கடினத் தன்மையை போக்கி விதைக்கலாம்.
  • சீராக நெருக்கமாக விதைகளை விதைக்க வேண்டும
  • விதை அளவு: பசுந்தாள் உரமாக பயன்படுத்த, எக்டருக்கு 40 கிலோ விதை தேவை.
  • கரணைகள்: குச்சிகளை கரணைகளாகவும் நடவு செய்யலாம்.
  • மறுதாம்பு: மறுதாம்பாகவும்; பயிரிடலாம்.
  • 10 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
  • மகசூல: ஒரு எக்டரில்; 20 டன் பசுந்தாள் உரம.


சிறப்புகள்:
  • கூடுதலான வேர் முடிச்சுக்களை உருவாக்குகிறது.
  • கூடுதலான தழைச்சத்தை நிலைப் படுத்துகிறது.
  • இதிலுள்ள கச்சாப்புரதம் (RAW PROTEIN).
  • பயன்படுத்தத் தயார் நிலையில் உள்ளது. 
  • உபரி தகவல்கள்
  • முதன் முதலாக –பசுந்தாள் உரமாக கண்டறிந்தவர்கள செனிகல். நாட்டினர்.
  • பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள சர்வதேச நெல் ஆராய்ச்;சி நிலையம், 1980 ஆம் ஆண்டு இதனை வெளியிட்டது.
  • இதன் சொந்த ஊர்  ஆப்பிரிக்காவிலுள்ள செகல்.
சித்தகத்தி

12. சித்தகத்தி (SESBANIA SPECIOSA)
  • பருவம்: எல்லா பருவங்களும்
  • மண்வகை: எல்லா மண்வகைகளும்.
  • விதை அளவு: 20 முதல் 40 கிலோ.
  • தாவரவியல் பெயர்: செஸ்பேனியா ஸ்பீஸியோசா. (SESBANIA SPECIOSA )

  • இடைவெளி: சீராக நெருக்கமாக விதைக்க வேண்டும்.
  • பாசனம்: 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை.
  • அறுவடை: பசுந்தாள் உரமாக பயன்படுத்த 40 முதல் 60 நாள்.
  • மகசூல: பசுந்தாள் உரம் 1 வெறக்டருக்கு  15 முதல் 18 டன்.
தக்கைப்பூண்டு
13. தக்கைப்பூண்டு  (DAINCHA)
  • ஏற்ற பருவம்:  எல்லா பருவங்களிலும் பயிரிடலாம்.
  • மண்வகை: எல்லாவிதமான மண் வகைகளும் ஏற்றவை.
  • விதைப்பு: சீராக நெருக்கமாக விதைக்க வேண்டும.;                                       
  • பாசனம்: 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை.
  • அறுவடை: 40 முதல் 60 நாட்களில்.
சணப்பை
14. சணப்பை (SESBANIA)
  •  பருவம்: எல்லா பருவங்களிலும் பயிரிடலாம்.
  • மண்வகை: இருமண் பாடான மண் மிகவும் ஏற்றது.
  • தாவரவியல் பெயர்: குரோட்டலேரியா ஜன்சியா.  (CROTALARIA JUNCEA)
  • விதையளவு: 1 எக்டருக்கு 25 – 35 கிலோ.    
  • விதை நேர்த்தி: 5 - பாக்கெட ரைசோபியம் நுண்ணுயிரை விதையுடன்     கலந்து விதைக்க வேண்டும்.
  • இடைவெளி: நெருக்கமாக மற்றும் சீராக .   . விதைக்க வேண்டும்.
  • பாசனம்: 30 நாட்களுக்கு ஒரு முறை.
  • அறுவடை: விதைத்த 45 – 60 வது நாள் மடக்கி உழவு செய்ய     வேண்டும்.
  • மகசூல்: ஒரு எக்டருக்கு 13 – 15 டன்.
பில்லிபயறு

     15. பில்லி பயறு. (PILLEPHESERA)
  • அற்புதமான பசுந்தாள் உரம். அருமையான கால்நடை தீவனம்.
  • இது கொடி வகை பசுந்தாள் உரம.;
  • தாவரவியல் பெயர்:பேசியோலஸ் ட்ரைலோபஸ்( PHASEOLUS TRILOBUS )
  • பருவம்: எல்லா பருவங்களிலும் 
  • மண்: நெல் தரிசு மற்றும் களிமண் 
  • விதையளவு: ஒரு எக்டருக்கு 10 – 15 கிலோ.   
  • இடைவெளி: சீராக நெருக்கமாக விதைக்க வேண்டும்.
  • பாசனம்:25 – 30 நாட்களுக்கு ஒரு முறை.
  • அறுவடை: விதைத்த 60 ஆம் நாள் மடக்கி உழவு செய்வதற்கு முன் 2 அல்லது 3 முறை கொடிகளை வெட்டி பயன்படுத்தலாம்.
  • மகசூல:1 எக்டருக்கு  6  முதல் 7 டன்.
அவுரி

16. அவுரி (WILD INDICO)
  • கால்நடைகளால் மேயாதது.
  •  இரண்டு முதல் நான்கு பருவங்களில் விதைத்தால் போதும். 
  •  பிறகு தானாக முளைத்துவிடும்.
  •  இது வறட்சியை தாங்கும்.
  •  கோடை தரிசில் விதைக்கலாம்.
  •  தாவரவியல் பெயர்:  டெப்ரோசியா பர்புரியா (TEPROSIA PURPUREA)
  •  பருவம்: எல்லா பருவங்களும்.
  • மண் வகை: மணற்பாங்கான மண்ணைத்தவிர மற்ற எல்லா மண் வகைகளும்.
  • விதையளவு: எக்டருக்கு 15 – 20  கிலோ.     
  • விதை நேர்த்தி: வெது வெதுப்பான நீரில் 15 – 20 நிமிடம் விதைகளை ஊறவைத்து விதைக்க வேண்டும்.
  • இடைவெளி: நெருக்கமாகவும் சீராகவும் விதைக்கவும்.
  • பாசனம்: 30 நாட்களுக்கு ஒரு முறை.
  • அறுவடை: விதைத்த 60 நாட்களுக்குள்.
  • மகசூல்: ஒரு எக்டருக்கு 6 – 7 டன்.  
 Images Courtesy: Thanks Google

பசுந்தழை உரங்கள் மண்வளம் பாதுகாக்கும் - GREEN LEAF MANURES IMPROVE SOIL HEALTH


பசுந்தழை உரங்கள்  மண்வளம் பாதுகாக்கும் - GREEN LEAF MANURES IMPROVE SOIL HEALTH

  • உரத்திற்காக உபயோகப்படுத்த மரங்கள் மற்றும் செடிகளிலிருந்து கழிக்கும் தழைகள்தான் பசுந்தழை உரங்கள். 
  • தழை அதிகம் தரும் எந்த மரத்திலிருந்தும் தழைகளை வெட்டிப் பயன்படுத்தலாம்.
  • ஆனால் சில மரங்கள்தான் வெட்ட வெட்ட துளிர்க்கும் மரங்களாக இருக்கும்வெட்டிக் கெட்டது வேம்பு, வெட்டாமல் கெட்டது பூவரசு என்று பழமொழி உண்டு.
  • வயல் வரப்புகளிலேயே சில விவசாயிகள் மரங்களை வளர்க்கிறார்கள்.
  • உள்ளுரில் கிடைக்கும் தழைகளை வெட்டி இதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.உதாரணத்திற்கு சிலவற்றைப் பார்க்கலாம்.
1. பொன்னாவாரை (அ) மஞ்சள் கொன்றை (CASSIA SCIAMEA)
•    சிறந்த தழை தரும், நிறைய தழை தரும., வெட்ட வெட்ட துளிர்க்கும்.

2. சீத்தா (ANNONA SQUAMOSA)
•    சிறந்த தழை தரும், நிறைய தழை தரும், வெட்ட வெட்ட துளிர்க்கும்,
      இதன் தழை பூச்சி தாக்குதலை குறைக்கும்.

3. வேம்பு (AZADIRACHTA INDICA)

•    சிறந்த தழை தரும், நிறைய தழை தரும், வெட்ட வெட்ட துளிர்க்கும்,
இதன் தழை பூச்சி தாக்குதலை குறைக்கும்.

4. புங்கன் (PONGAMIA GLABRA)
•    சிறந்த தழை தரும், நிறைய தழை தரும், வெட்ட வெட்ட துளிர்க்கும்,
இதன் தழை பூச்சி தாக்குதலை குறைக்கும்.

5. எருக்கு (CALOTROPIS GIGANTEA)
•    சிறந்த தழை தரும், நிறைய தழை தரும், வெட்ட வெட்ட துளிர்க்கும்,
இதன் தழை பூச்சி தாக்குதலை குறைக்கும்.

6. தூங்குமூஞ்சிமரம் (SAMANIA SAMAN)
• சிறந்த தழை தரும், நிறைய தழை தரும், வெட்ட வெட்ட துளிர்க்கும்,வளர்ந்த ஒரு மரம் ஓர் ஆண்டில் 0.5 டன் தழை தரும்;.

7. வாகை மரம் (ALBIZIA LABBECK)
•  சிறந்த தழை தரும், நிறைய தழை தரும், வெட்ட வெட்ட துளிர்க்கும்.

8. வாதநாராயணன் மரம் (DELONIX ELATA)
•  சிறந்த தழை தரும், நிறைய தழை தரும், வெட்ட வெட்ட துளிர்க்கும், மற்ற தழைகளைவிட சீக்கிரம் மக்கும்.

9. சூபாபுல் மரம் (LEUCAENIA LEUCOCEPHALA)

• ஆறு மூட்டை தழை ஒரு மூட்டை அம்மானியம் சல்பேட்டுக்கு சமம், வேகவேகமாக வளர்ந்து நிறைய தழை தரும:, வெட்ட வெட்ட துளிர்க்கும், கொரிய நாட்டில் இந்த தழையில் கம்போஸ்ட் தயாரிக்கிறார்கள்.
Image Courtesy: Thanks Google

தென்னை நார்க்கழிவு உரம் நீங்களே தயாரிக்கலாம் - COIR WASTE COMPOST -DO IT YOURSELF

தென்னை நார்க்கழிவு உரம் நீங்களே தயாரிக்கலாம்

COIR WASTE COMPOST -DO IT YOURSELF


  • மண்ணின் நீர்பிடிப்புத் தன்மையை அதிகரிக்கிறது.
  • மண்ணின் பௌதீகத் தன்மையை மேம்படுத்துகிறது.
  • இறுக்கமான மண் கண்டத்தை லேசாக மாற்றுகிறது.
  • மண்ணில் அங்கக சத்தினை அதிகரிக்கிறது.
  • பயிர் ஊட்டச்சத்துக்களை மண்ணிற்கு வழங்குகிறது.
  • தென்னை நார் கழிவை உரமாக மாற்றி விடுவதால் சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்கிறது.
  • தட்பவெப்பநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளை குறைக்க உதவுகிறது.

தேவைப்படும் பொருட்கள்

  • நிழலுடைய ஒர் இடம்                  
  • தென்னை நார் கழிவு 1000 கிலோ
  • விதைக்காளான் -புளுரோட்டஸ்-  5 பாட்டில்.    
  • யூரியா  5 கிலோ.        .           
  • போதுமான அளவு தண்ணீர்.  (15 முதல் 20 குடம்)


செயல்முறை விளக்கம்
       .                  
  • நிழலான ஓர் இடத்தை தேர்ந்தெடுங்கள்;
  • அது ஒரு மரத்தடியாகவோ கொட்டகையாகவோ இருக்கலாம்.    .       
  • நீளம்  15 அடி   அகலம்  மூன்றறை அடி  அளவுள்ள நிலப்பரப்பை தெரிவு செய்யுங்கள்.
  • இந்த அளவுள்ள பாத்தியினை 4 முனைகளிலும் 4 குச்சிகளை அடித்து  அடையாளம் செய்யுங்கள்.  
  • தென்னை நார்க்கழிவு 1000 கிலோவை  பத்து  சமமான பகுதிகளாக பிரித்துக் கொள்ளுங்கள்.
  • அதில் ஒரு பகுதியை பாத்தியில் பரப்புங்கள்.
  • அதன்மீது சுமார் 3 குடம் தணணீர்; தெளியுங்கள்.
  • ஈரமான தென்னைநார் கழிவின்மீது பாட்டிலில் இருக்கும் விதைக்காளானை வெளியிவ் எடுத்து சீராகத் தூவுங்கள்.       
  • இப்போது இரண்டாவது பங்கு தென்னைநார் கழிவை-  (100 கிலோ)  பாத்தியில் சீராக பரப்பவும்.
  • அதன் மீது தேவையான அளவு தண்ணீர் தெளியுங்கள்.
  • இரண்டாவது அடுக்கு ஈரமான தென்னை நார்க்கழிவின் மீது ஒரு கிலோ யூரியாவை பரவலாக தூவவும்.
  • இப்போது 2 அடுக்கு தென்னை நார்க்கழிவை பரப்பி ஒரு அடுக்கில் விதைக் காளானையும்  இன்னொரு அடுக்கில் யூரியாவையும்  போட்டுள்ளோம்.
  • இதுபோல இருக்கும் தென்னை நார்க்கழிவை 10 அடுக்குகள் போடவும்.
  • இறுதியாக 5 அடுக்குகளில் விதைக்காளானையும் 5 அடுக்குகளில்  யூரியாவையும் போடவும். 
  • இவற்றை போட்டு  முடித்தப் பின் அதன்மீது கொஞ்சம் தென்னை நார்க்கழிவைப் பரப்பி மூடவும்.
  • மேலாக 2 அல்லது 3 குடம் தண்ணீரை தெளிக்கவும்.
  • அதன் பிறகு தினமும் போதுமான அளவு தண்ணீரை தெளிக்கவும்.
  • இந்த தென்னை நார்க்கழிவு 60 வது நாள் வாக்கில்  முழுவதுமாக  உரமாக மாறி இருக்கும்.
  • பார்ப்பதற்கும் காப்பித்தூள் போல கருப்பு மற்றும் காவி நிறக்கலவையாக மாறி விடும்.

தென்னை நார்க்கழிவு உரம் இப்போது தயார்.
  • நிலப்பரப்பு ஒரு ஏக்கரில்  தென்னைநார் கழிவு உரத்தை  5 டன் -வரை போடலாம்.

அப்பார்ட்மெண்ட் மற்றும் வீடுகளில் மண்புழு உரம் தயாரித்தல் - VERMI COMPOSTING IN APARTMENTS



Image Courtesy: Thanks Googl

அப்பார்ட்மெண்ட்களில் மண்புழு உரம் தயாரித்தல்

  

VERMI COMPOSTING 

IN APARTMENTS


தென்னை நார்க்கழிவு உரம் - COIR WASTE COMPOST
சமையலறைக் கழிவுகளைக் கொண்டு வீடுகளில் மற்றும் அப்பார்ட்மெண்ட்களில் கூட மண்பழு உரம் தயாரிக்கலாம். 
  • உற்பத்தி செய்த மண்புழு உரத்தை தொட்டிகளிலும், பெட்டிகளிலும்; வளர்க்கும் செடிகளுக்கு போடலாம்.
  • இதனால் நச்சுத் தன்மை இல்லாத காய்கறிகளும் பழங்களும் சமையலுக்கு கிடைக்கும்.
  • இதனால் உடல் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பான காய்கறிகள் மற்றும் பழங்களை நீங்களே உற்பத்தி செய்யலாம். 
  • என்னென்ன பொருட்கள் தேவை?
  • சுமார் 10 முதல் 15 கிலோ கம்போஸ்ட் ;தயாரிப்பதற்கு எற்ற ஓரு பிளாஸ்டிக் பாத்திரம். 
  • 2 பாத்திரத்திற்கு ஒரு மூடிபாத்திரத்தின் அடியில் வடியும் நீரை சேகரிக்க ஓர அகன்ற தட்டு. 
  • ஓரு அங்குல அகலத்திற்கு கிழிக்கப்பட்ட அல்லது நறுக்கப்பட்ட நியூஸ் பேப்பர் காகிதங்கள். 
  • (பாத்திரத்தில் 3-ல் ஒரு பங்கு நிரம்பும் அளவிற்கு.)போதுமான அளவு தண்ணீர். 
  • மண்புழுக்கள்  (50 புழுக்களுக்கு குறையாமல்)
  • தேவையான அளவு தோட்டத்து மண்.

செயல்முறை
  • தனி வீடுகளில் (அ) அப்பார்ட்மெண்ட்-களில் கம்போஸ்ட் தயாரிக்க ஏற்ற பிளாஸ்டிக் தொட்டியினை வாங்கிக் கொள்ளுங்கள்.
  • பிளாஸ்டிக் தொட்டி அகன்ற வாயுடையதாக இருக்கட்டும்.தொட்டியை மூடுவதற்கு மூடி கிடைத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்.
  • அந்த மேல் மூடியில் ஓட்டைகளைப் போட்டு காற்றோட்டத்திற்கு வழி செய்யுங்கள்.
  • அதிகப்படியான நீர் வடிவதற்கு ஏற்ப தொட்டியின் அடிப்பகுதியிலும் ஓட்டைகளைப் போடுங்களகிழிக்கப்பட்ட (அ) நறுக்கப்பட்ட காகிதத் துண்டுகளை நனைத்து hட்டியில் போடவும். 
  • நீர் வடியும் அளவிற்கு நனைக்க வேண்டாம்.மேலாக பரப்பப்;பட்டிருக்கும் காகிதங்களை விலக்கி அதில் மண்புழுக்களை விடுங்கள்.
  • மண்புழுக்களோடு கொஞ்சம் தோட்டத்து மண்ணையும் சேர்த்து போடுங்கள்.சிறிது நேரம் வெயிலில் வையுங்கள். 
  • மேலாக இருக்கும் மண்புழுக்கள் காகிதக் குவியலைத் துளைத்துக் கொண்டு உள்ளே செல்லும்.அடுத்து சேகரித்து வைத்திருக்கும், காயகறி; கழிவுகள், பழத்தோல்கள், சமையலறைக் கழிவுகள், அனைத்தையும்; தொட்டிக்குள் பரப்புங்கள்.
  • கழிவுகளுக்கு மேல் நியூஸ் பேப்பர்  துண்டுக்காகிதங்களைப் பரப்புங்கள்.
  • பிளாஸ்டிக் தொட்டி நிரம்பும்வரை சமையலறைக் கழிவுகளையும், தோட்டத்து மண்ணையும் போட வேண்டும்.பின்னர் தினமும் தண்ணீர் தெளியுங்கள். 
  • தொட்டியில் உள்ள கழிவுகள் முழுமையாக மண்புழு உரமாக மாறிவிட்டதா?  என்று பாருங்கள்.
  • மாறிய பின் தண்ணீர் தெளிப்பதை நிறுத்திவிட்டு, 2 (அ) 3  நாட்கள் கழித்து மேலாக மண்புழு உரத்தை மேலாக சேகரிக்கலாம்.
  • தொட்டியின் அடியில் அதிக எண்ணிக்கையில் மண்புழுக்கள் இருப்பதனால்,  தொட்டியினை மீண்டும் மீண்டும் சமையலறைக்  கழிவு மண்புழு உரம் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.
சமையல் கழிவுடன் போடக்கூடாதவை
•    இறைச்சி
•    எலும்புகள்.
•    பால் பொருட்கள் (மோர் தவிர)
•    வளர்ப்பு பிராணிகளின் கழிவுகள்.
•    ரசாயனப் பொருட்கள்.
•    பிளாஸ்டிக் பொருட்கள்.
•    நாறத்தை வகைப்பழக் கழிவுகள்.
•    காய்களின் கழிவுகள்.

சமையல் கழிவுகள் பட்டியல்
  • சாதாரண நியூஸ் பேப்பர் காகிதங்கள்.
  • தேநீர் பைகள். (பிளாஸ்டிக் அல்ல)
  • முட்டை ஓடுகள்.
  • பழத்தோல்கள்
  • மிச்ச சொச்சமான உணவுப் பொருட்கள்.
  • காய்கறிக் கழிவுகள்.
  • உலர்ந்த இலைகள். (சருகுகள்)

சில முக்கிய குறிப்புக்கள்
  • புழுக்கள் அதிகம் இருந்தால்  விரைவில் உரமாக மாற்றிவிடும்.
  • தோராயமாக  10 முதல் 12  வாரங்களில் கழிவுகள் உரமாக மாறிவிடும். 
  • புழு வளர்ப்புத் தொட்டீயின் மூடியின் மேல் போடும் ஓட்;டைகள் காற்றோட்டத்தை அளிக்கும்.
  • தொட்டியின் அடிப்பக்கம் போடும் ஓட்டைகள் அதிகப்படியான நீரை வடிக்கும்.தொட்டியின் பக்கவாட்டிலும்  போடும் ஓட்டைகள் தொட்டியில் உருவாகும் வெப்பத்தை தணித்து காற்றோட்டத்தை ஏற்படுத்தும்.
  • இந்த உரம் தயாரிக்க தொடங்கும்போது மட்டும் மண்புழுக்களை விலை கொடுத்து வாங்கவேண்டும்.
  • மண்புழு உரம் தயாரிப்பவர்கள்  ஒரு புழு ஒரு ரூபாய் என விற்பனை செய்கிறார்கள்.
  • எந்த வகை மண்புழுவை வளர்க்கலாம்?
  • ரெட் விரிக்லர்ஸ் (RED WRIGGLERS) என்று சொல்லப்படும் மண்புழுக்கள் சமையலறைக் கழிவுகளை உரமாக மாற்றுவதில் திறமைசாலிகள்.
  • ஐசினியு  ஃபெட்டிடா (EISENIA FETIDA)என்பது இதன் அறிவியல் பெயர்.
  • இந்த 90 நாட்களில் புழுப்படுக்கையில் விடும் புழக்கள் இரண்டு மடங்காக பெருகி;விடும்.
FOR FURTHER READING
ON RELATED TOPICS

1. உலகச் சந்தையின்   கதவுகள்   திறந்தே   கிடக்கின்றன -   WORLDWIDE SCOPE FOR VERMI COMPOST – Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/worldwide-scope-for-vermi-compost.html

2. திறந்த வெளிகளில்   மண்புழு உரத் தயாரிப்பு  -  VERMI COMPOSTING   IN OPEN SPACE – Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-composting-in-open-space.html

3. மர நிழலில்   மண்புழு உர   உற்பத்தி  -   VERMI  COMPOSTING  UNDER  TREE SHADE – Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-composting-under-tree-shade.html

4. தொட்டி முறை மண்புழு உர உற்பத்தி - VERMI COMPOSTING IN TANK METHOD  – Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-composting-in-tank-method.html

5. வீடுகளில்   மண்புழு உரம்   தயாரிக்கும் முறை  -   VERMI COMPOSTING   IN HOUSEHOLD   PREMISES – Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-composting-in-household-premises.html

6. மண்புழு   உர உற்பத்தியில்   கவனிக்க வேண்டியவை ஆறு  -   SIX STEPS IN VERMICOMPOSTING  – Date of Posting; 17.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/six-steps-in-vermicomposting.html
7. மண்புழு   உரம் தயாரிப்பில்    என்ன சந்தேகம் ?  -  CLEAR YOUR DOUBTS IN VERMI COMPOSTING  – Date of Posting; 17.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/clear-your-doubts-in-vermi-composting.html


8. உரம் தயாரிப்புக்கு ஏற்ற   மண்புழு வகைகள்    SUITABLE  EARTHWORM  BREEDS FOR  COMPOSTING – Date of Posting; 15.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/suitable-earthworm-breeds-for-composting.html

9. மண்புழு உரத்தின்   ஊட்டச் சத்துக்கள்   ஒரு ஒப்பீடு - VERMI COMPOST  NUTRIENTS STUDY  – Date of Posting; 14.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-compost-nutrients-study.html
10. மண்புழுபற்றி   முதல் புத்தகம்  எழுதிய  மேரி அப்பொலெப் - THE FIRST BOOK ON EARTHWORM BY MARRY APPOLEP – Date of Posting; 13.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/first-book-on-earthworm-by-marry-appolep.html

11. மண்புழு  உரம்   சுற்றுச்சூழலுக்கு   பாதுகாப்பானது    VERMI COMPOST  IS SAFE TO  ENVIRONMENT – Date of Posting; 13.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-compost-is-safe-to-environment.html

12. மண்புழு   உங்கள் மண்ணுக்கு   உயிர் தருகிறது    EARTH WORMS  MAKE  SOIL ALIVE – Date of Posting; 13.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/earth-worms-make-soil-alive.html

13. மண்ணைப்   பொன்னாக்கும்   மந்திரம்     மண்புழுக்கள்   EARTHWORM   ALCHEMISTS  MAKE SOIL  GOLD – Date of Posting; 12.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/earthworm-alchemists-make-soil-gold.html


14. கோழிக்கழிவில்    மண்புழு உரம்  தயாரிப்பது எப்படி ?    MAKE POULTRY  WASTE AS VERMI COMPOST – Date of Posting; 31.05.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/05/make-poultry-waste-as-vermi-compost.html



கோழிக்கழிவில் மண்புழு உரம் தயாரிப்பது எப்படி ? MAKE POULTRY WASTE AS VERMI COMPOST



Image Compost: Thanks Google

கோழிக்கழிவில்  
மண்புழு உரம்
தயாரிப்பது எப்படி ?

MAKE POULTRY 

WASTE AS

VERMI COMPOST


  • கோழிக் கழிவைக் கொண்டும் மண்புழு உரம் தயரிக்கலாம்
  • பசும் சாணத்திற்கு பதிலாக மக்கிய கோழிக் கழிவை உபயோகிக்கலாம்.
  • பொட்டாசியம் கால்சியம் மக்னீசியம் போன்ற நுண்;சத்துக்கள் இதில் உள்ளன.
  • நைட்ரஜன், பாஸ்பரஸ், கால்சியம் ஆகியவை மற்ற இயற்கை எருக்களில்  இருப்பதைவிட அதிகம் உள்ளது.                                                           
  • மண்ணில் கரிம சத்தை அதிகரிக்கிறது.
  • நீர் உறிஞ்சும் தன்மை மேம்படுகிறது.
  • பிராணவாயுவைக்  கூட்டுகிறது..
  • உவர் மற்றும் களர்  நிலங்களை  சீர்திருத்துகிறது.

தேவைப்படுபவை                 

  • மரத்தடியில் நிழல் உடைய ஒரு இடம் அல்லது ஒரு சிறு கொட்டகை
  • 1000 முதல் 1500 மண்புழுக்கள், மக்கிய கோழி எரு                                   
  • போதுமான தண்ணீர்.
  • பசுந்தழைகள, புற்கள் மற்றும் இலைச்சருகுகள்.

செயல் விளக்கம்

  • மூன்றரை அடி அகலம் 10 அடி நீளமும் கொண்ட இடத்தில் புழுப்படுக்கை அமையுங்கள். 
  • புழுப்படுக்கை என்பது மண்புழுக்களுக்கு உண்ணவும் உறங்கவுமான இடம்.     
  • மூன்றரை அடி அகலம் 10 அடி நீளத்திற்கு  அரை அடி ஆழுத்திற்கு பள்ளம் எடுக்கவும்.
  • அந்த அரை அடி ஆழமான பள்ளத்தில் 2 அங்குல உயரத்திற்கு மணலை பரப்புங்கள்.
  • மணல் பரப்பின் மீது  தேங்காய் உறி மட்டைகளை அதன் முதுகுப்புறம் கீழே இருக்குமாறு அடுக்கவும்.
  • இப்படி அடுக்குவதற்கு 400 முதல் 500 உறிமட்டைகள் தேவைப்படும்.
  •  உறி மட்டைகளின் மீது 6 அங்குல உயரத்திற்கு மக்கிய கோழி உரத்தினை பரப்புங்கள்.
  • அதன்மீது  2 அல்லது 3 குடம் தண்ணீர் தெளியுங்கள்.
  • தண்ணீரை தெளித்தப் பின்  சேகரித்து வைத்திருக்கும் பசுந்தழைகளை ஒரு அடி உயரத்திற்கு பரப்பவும்.
  • இலை தழைகளைப் போடும்போது  பெரிய கிளைகளைத் தவிர்க்க வேண்டும்.
  • இலை தழை மற்றும் சருகுகளை பரப்பிய பின்னால் அதன்மீது சாணக் கரைசலை  சோரத் தெளிக்க வேண்டும்.
  • அதன்மீது மறுபடியும் 6 அங்குலம் மக்கிய கோழிக்கழிவை  போடவும்.
  • மீண்டும் 1 அடி பசுந்தழை  மற்றும் சருகுகள்  சாணக்கரைசல் தெளிப்பு   என்று இரண்டாவது  அடுக்கையும்  போடவும். 
  • இப்படியாக 2 அல்லது 3 அடுக்குகள் போட்டு போதுமான தண்ணீர் தெளிக்கவும். 
  • சுமார் 3 அல்லது 4 அடி உயரம்வரை    புழுப் படுக்கையை தயார் செய்த பின்னால்  மண்புழுக்களை விடவும். 
  • கடைசியாக  புழுப்படுக்கையை  ஈர சாக்கு கொண்டு மூடி வைக்கவும்.
  • பின்னர் தினசரி புழுப்படுக்கையின் மீது போதுமான தண்ணீர் தெளிக்கவும்.
  • ஐம்பது முதல் 60 நாட்களில் புழுப்படுக்கையில்  இடப்பட்ட கழிவுகளை முழுமையான உரமாக மாற்றிவிடும்.
  • பின்னர் தண்ணீர் தெளிப்பதை நிறுத்திவிட்டு  புழுப்படுக்கையின் மேல்பகுதியில் இருக்கும் மண்புழு உரத்தை  மட்டும் சேகரிக்கலாம். 
  • மண்புழுக்கள் புழுப்படுக்கையின் அடிப்பகுதிக்குச் சென்றுவிடும்.
  • இப்போது புழுப்படுக்கையில் கிட்டத்தட்ட 2 மடங்கு மண்புழுக்கள் அதிகரித்திருக்கும்.
  • அதே புழுப்படுக்கையை பயன்படுத்தி மீண்டும் மீண்டும் மண்புழு உரம்          தயாரிக்கலாம்.                                             

கவனிக்க வேண்டியவை

•    புழுப்படுக்கையில் ஈரம் இவ்லையென்றால் புழுக்கள் இறந்துவிடும்.
•    ஈரம் அதிகம் இருந்தாலும் புழுக்கள் இறந்துவிடும்.
•    புழுப்படுக்கையின் அடியில் போடப்பட்டிருக்கும் தேங்காய் உறி மட்டைகளும் மணலும் அதிகப்படியான நீரை உறிஞ்சிக் கொள்ளும்.
•    புழுப்படுக்கைக்கு நிழல் அவசியம் வேண்டும்.
•    அதிகப்படியான வெப்பத்தை புழுக்கள் தாங்காது.
•    பாம்பு, பறவைகள,; எலி, எறும்புகள,; பிள்ளைப்பூச்சி போன்றவை மண்புழுவை உணவாகக் கொள்ளும்.
அவற்றிலிருந்து நாம் இவற்றை பாதுகாக்க வேண்டும்.

FOR FURTHER READINGON RELATED TOPICS


1. உலகச் சந்தையின்   கதவுகள்   திறந்தே   கிடக்கின்றன -   WORLDWIDE SCOPE FOR VERMI COMPOST – Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/worldwide-scope-for-vermi-compost.html

2. திறந்த வெளிகளில்   மண்புழு உரத் தயாரிப்பு  -  VERMI COMPOSTING   IN OPEN SPACE – Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-composting-in-open-space.html

3. மர நிழலில்   மண்புழு உர   உற்பத்தி  -   VERMI  COMPOSTING  UNDER  TREE SHADE – Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-composting-under-tree-shade.html

4. தொட்டி முறை மண்புழு உர உற்பத்தி - VERMI COMPOSTING IN TANK METHOD  – Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-composting-in-tank-method.html

5. வீடுகளில்   மண்புழு உரம்   தயாரிக்கும் முறை  -   VERMI COMPOSTING   IN HOUSEHOLD   PREMISES – Date of Posting; 21.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-composting-in-household-premises.html

6. மண்புழு   உர உற்பத்தியில்   கவனிக்க வேண்டியவை ஆறு  -   SIX STEPS IN VERMICOMPOSTING  – Date of Posting; 17.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/six-steps-in-vermicomposting.html
7. மண்புழு   உரம் தயாரிப்பில்    என்ன சந்தேகம் ?  -  CLEAR YOUR DOUBTS IN VERMI COMPOSTING  – Date of Posting; 17.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/clear-your-doubts-in-vermi-composting.html


8. உரம் தயாரிப்புக்கு ஏற்ற   மண்புழு வகைகள்    SUITABLE  EARTHWORM  BREEDS FOR  COMPOSTING – Date of Posting; 15.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/suitable-earthworm-breeds-for-composting.html

9. மண்புழு உரத்தின்   ஊட்டச் சத்துக்கள்   ஒரு ஒப்பீடு - VERMI COMPOST  NUTRIENTS STUDY  – Date of Posting; 14.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-compost-nutrients-study.html
10. மண்புழுபற்றி   முதல் புத்தகம்  எழுதிய  மேரி அப்பொலெப் - THE FIRST BOOK ON EARTHWORM BY MARRY APPOLEP – Date of Posting; 13.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/first-book-on-earthworm-by-marry-appolep.html

11. மண்புழு  உரம்   சுற்றுச்சூழலுக்கு   பாதுகாப்பானது    VERMI COMPOST  IS SAFE TO  ENVIRONMENT – Date of Posting; 13.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/vermi-compost-is-safe-to-environment.html

12. மண்புழு   உங்கள் மண்ணுக்கு   உயிர் தருகிறது    EARTH WORMS  MAKE  SOIL ALIVE – Date of Posting; 13.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/earth-worms-make-soil-alive.html

13. மண்ணைப்   பொன்னாக்கும்   மந்திரம்     மண்புழுக்கள்   EARTHWORM   ALCHEMISTS  MAKE SOIL  GOLD – Date of Posting; 12.06.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/06/earthworm-alchemists-make-soil-gold.html

14. அப்பார்ட்மெண்ட் மற்றும் வீடுகளில் மண்புழு உரம் தயாரித்தல் - VERMI COMPOSTING IN APARTMENTS – Date of Posting; 31.05.2016 / https://vivasayapanchangam.blogspot.com/2016/05/vermi-composting-in-apartments.html



10. முக்கிய இயற்கை எருக்கள் - (IMPORTANT NATURAL MANURES)

Image Courtesy: Thanks Google


1. கோழி எரு
  • மற்ற இயற்கை உரங்களை ஒப்பிடும்போது இது கூடுதலான சத்துக்களைக் கொண்டது.
  • ஆழ்கூள முறையில் சேகரிக்கும் கோழி எருக்கள் இன்னும் சிறப்பானவை.
  • அதில் உள்ள சத்துக்கள் விவரம்.
  • தழைச்சத்து: 3.03 சதம்.
  • மணிச்சத்து: 2.63 சதம்.
  • சாம்பல் சத்து 1.40 சதம்.
  •  மக்காத புதிய கோழி எருக்களை பயிருக்கு போடக் கூடாது.
  • அல்லது 4 மாதங்கள் நன்கு மக்கிய பிறகே போட வேண்டும்.
    2.பிண்ணாக்கு வகைகள்
    • எண்ணெய்வித்துக்களிலிருந்து எண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கும் சக்கையின் பெயர் பிண்ணாக்கு. 
    • சாப்பிடக் கூடியவை, சாப்பிடக் கூடாதவை என இரண்டு வகை இதில் உண்டு.
    • இரண்டையுமே பிண்ணாக்காக பயன்படுத்தலாம்.
    • பிண்ணாக்கின் விலை ஆனைவலை குதிரைவிலை ஆகிவிட்டதால் இதனை உபயோகிப்பதில் சிரமம் உள்ளது.
    • பொதுவாக பிண்ணாக்குகளில் கீழ்கண்ட அளவில் சத்துக்கள் உள்ளன.
    • தழைச்சத்து: 2.5 முதல் 7.5 சதம் வரை மணிச்சத்து: 0.8 முதல்  4.0 சதம் வரை.
    • சாம்பல் சத்து: 1.2 முதல் 2.2 சதம் வரை.
    3. மக்கு உரம் அல்லது கம்போஸ்ட் உரம்
    • முறையாக மக்க வைத்த அங்கக உரத்தின் பெயர் கம்போஸ்ட் 
    • மக்க வைக்கும் பொருட்களுக்கு ஏற்ப சத்துக்கள் வேறுபடும்.
    • எல்லா இயற்கை எருக்களைப் போலவும் இது பயிர்களுக்கு தாய்ப்பால் மாதிரி.
    • தாவரக் கழிவுகள், கால்நடைகக் கழிவுகள், மனிதக் கழிவுகள், கிராமக் குப்பை, நகரக் குப்பை, இப்படி எல்லாவற்றையும் மக்கவைக்கலாம்.
    • மக்கவைத்து இயற்கை உரமாக மாற்றலாம்.அங்ககப் பொருட்களை மக்க வைக்க சில நுண்ணுயிர்களும், பேருயிர்களும் முக்கிய பங்காற்றுகின்றன.
    • மண்புழுக்கள், சாணக்கரைசல், அமுதக்கரைசல், புளுரோட்டஸ் காளான் வித்துக்கள், இ.எம். நுண்ணுயிர்க்கரைசல் ஆகியவை மகத்தான உதவி செய்கின்றன மக்கு உரம் தயாரிக்க.
    • மக்கு உரங்களை எல்லா பயிர்களுக்கும் இடலாம்.
    • மண்புழு உரம், தென்னை நார்க்கழிவு உரம் போன்றவை அனைத்தும் இந்த வகைகளே.
    Image Courtesy:Thanks Google

    INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

      ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...