ரூஸ்வெல்ட்டின் சிசிசி (Image Courtesy:Google) |
மரம் நடுவது
பணம் சம்பாதிக்கும்
உத்தி -
பிராங்க்ளின்
டிலானோ
ரூஸ்வெல்ட்
TREE PLANTING A WAY OF
EARNING
FD ROOSEVELT
(CIVILIAN CONSERVATION CORPS PROTECTED USA FROM GREAT DEPRESSIONS)
முன்கதை சுருக்கம்
(கிரேட் டிப்ரஷன்’ல் உலக நாடுகள் அத்தனையும் பாய்மரம் இல்லாத படகு மாதிரி தத்தளித்துக் கொண்டிருந்தது. அந்த சமயம் அதிபர் தேர்தல் வந்தது. தேர்தலில் ஃபிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் (ரூஸ்) ஜெயித்தார். அமெரிக்காவின் ஜனாதிபதி ஆனார். அந்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சிவிலியன் கன்சர்வேஷன் கார்ப்ஸ் (சிசிசி) என்ற திட்டத்தை அறிமுகம் செய்தார். 1942 ம் ஆண்டில் அமெரிக்கா “அப்பாடா” என்று மாமூல் நிலைக்கு திரும்பியது)
கிரேட்டிப்ரஷன் சுனாமியாக சுழன்றடித்தது. ஸ்டாக் எக்சேஞ்ச், வங்கிகள், பெரும் வியாபார நிறுவனங்கள் எல்லாவற்றையும் வேரோடு பிடுங்கி எறிந்தது. அமெரிக்காவின் அதிபராக இருந்தும் கைகளை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஜனாதிபதி ஹ_வரின் பதவியையும் பிடுங்கி எறிந்தது.
ஒரு மாவீரனைப்போல கிரேட்டிப்ரஷனை எதிர்கொண்ட ரூஸ்;’ஐ ஆசிர்வதித்தது. யார் இந்த ரூஸ் ? எந்த ஊர் ? எப்படி இந்த பதவியை எட்டிப் பறித்தார் ? சிவிலியன் கனசர்வேஷன் கார்ப்ஸ் (சி சி சி) என்னும் சகலரோக நிவாரணி அவர் கைக்கு கிடைத்தது எப்படி?
“கட்டிய வீட்டுக்கு நொட்டு சொல்றது ஏராளம்” என்பது போல பலர் பலவிதமாக பேசினார்கள். அடால்ஃப் ஹிட்லரின் ஜெர்மன் லேபர் போர்ஸ்’தான் இதற்கு வேர் என்றும் சொன்னார்கள். ஆனாலும் ரூஸ்’ன் சொந்த மூளையில் உதித்ததுதான் சி சி சி.
ரூஸ்வெல்ட்’ன் குடும்பத்துக்கு சொந்தமானது “ஸ்பிரிங்வுட்; எஸ்டேட்”. அது வைறட்பார்க் (ர்லனந Pயசம) என்னும் இடத்தில் ஹட்சன் ஆற்றின் கிழக்குக் கரையில் 1200 ஏக்கரில் பரந்து விரிந்திருந்தது. நியூயார்க்கிலிருந்து அல்பேனி செல்லும் வழியில் இருந்தது வைறட்பார்க். ரூஸ்வெல்ட்டின் 18 வயதில், அவர் அம்மா சாரா அந்த எஸ்டேட்டின் நிர்வாகப் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார்.
அந்த எஸ்டேட்டின் பழைய ரெக்கார்டுகள் அதன் பெருமைகளை எடுத்துச்சொன்னது. அதிக மக்காச்சோளம் விளைவித்ததற்கு 1840 ல் பரிசும் பாராட்டும் பெற்றிருந்தது. 70 ஆண்டுகளுக்குப்பின் எஸ்டேட் இவர் கைக்கு வந்தது. ஆனால் அப்Nபுhது எடுத்த மகசூலில் பாதியைக்கூட இவரால் எடுக்க முடியவில்லை.
காரணம் என்ன என்று ஆய்வு செய்தார். மேடான பகுதியில் இருந்த எஸ்டேட்டில் ஏராளமான ஓடைகள் உருவாகி இருந்தன. இந்த ஓடைகள் எஸ்டேட்டிலிருந்து ஏகப்பட்ட மண்ணை ஹட்சன் ஆற்றுக்கு ஏற்றுமதி செய்வதைப்பார்த்து கொண்டு சென்றதை கவனித்தார். எஸ்டேட்டில் ஒரு இடமும் பாக்கி இல்லாமல் அனைத்து பகுதிகளிலும் மண்அரிப்பை பார்க்கமுடிந்தது.
சிறு வயதில் 1891 ல் ஏற்பட்ட அனுபவம் ஒன்றும் அப்போது நினைவுக்கு வந்தது.
ரூஸ் அப்போது 9 வயது சிறுவன். அவர் குடும்பம் அப்போது ஐரோப்பாவில் இருந்தது. தனது ஊருக்கு அப்பால் இருந்த ஒரு கிராமத்திற்கு சைக்கிளில் சென்றார். அங்கு 200 ஆண்டுகளாக அந்த மக்களால் பராமரிக்கப்பட்ட காடு ஒன்றினை பார்த்தார். அந்த கிராமத்து மக்களுக்கு வருமானம் அதிலிருந்துதான் கிடைத்தது. அது இவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த மக்களின் வரியைக்கூட கட்ட பணம் தந்தது அந்த காடுகள்தான். காடுகள் என்றால் அது பணம் தரும் என்று அவர் மனதில் பதிந்திருந்தது.
1910 ம் ஆண்டு தன் சொந்த நிலத்தில் காடு வளர்த்தால் என்ன எனத் தோன்றியது. 1911 ல் சிராகுஸ் பலகலைக்கழகத்திலிருந்து வனத்துறை வல்லுநர்களை அழைத்துவந்தார். தனது எஸ்டேட்டை சுற்றிக்காட்டினார். “இதை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டார், ரூஸ்.
“முதலில் ஓடைகளை அடையுங்கள்… மண்அரிப்பை தடுங்கள்.. மரங்களை நடுங்கள்...உங்கள் நிலங்கள் தானாக வளம்பெறும்…நிலவளம்; நீர்வளம் வனவளம் மூன்றையும் சரிசெய்யுங்கள்…” என்று கூறினார்கள் அந்த நிபுணர்கள்.
1912 ல் சில ஆயிரம் மரங்களை நட்டார். சுமார் அரை மில்லியன் மரங்களை தான் இறக்கும் வரை 556 ஏக்கர் பரப்பில் நட்டு முடித்தார். சுமார் 32 வகை மரங்களை நட்டார். ஸ்புரூஸ், ஸ்காட்ச், நார்வேபைன், ஒயிட்பைன், டியூலிப்பாப்ளார் போன்றவை இவற்றில் முக்கியமானவை.
லார்ச், சிட்காஸ்புரூஸ், டவுக்ளஸ்பிர்;, வெஸ்டன் எல்லோ பைன், போன்ற அயல்நாட்டினங்களையும் தனது எஸ்டேட்டில் நடவு செய்தார். தான் மரம் நடுவதை பெருமையாகக் கருதினார். மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது “உங்கள் தொழில்” என்று கேட்டதற்கு “என் தொழில் மரம் நடுவதே” என்று கூறினாh ரூஸ்வெல்ட்.;
“ரூஸ்வெல்ட் அழகுக்காக மரம் நடவில்லை. விளம்பரத்திற்காக மரம் நடவில்லை. அது ஒரு பணம் சம்பாதிக்கும் உத்தி” என்று கூறினார், நெல்சன்பிரவுன், சிராகுஸ் பல்கலைக்கழக வனத்துறை நிபுணர்.
பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் (Image Courtesy: Google) |
No comments:
Post a Comment