Sunday, April 3, 2016

அணுக்கதிர்களை தடுத்து நிறுத்தும் ஒரே இந்திய மரம் - REDSANDER ONLY CAN BLOCK ATOMIC RAYS

அணுக்கதிர்களை 

தடுத்து நிறுத்தும் 

ஒரே இந்திய மரம் - 

REDSANDER ONLY 

CAN BLOCK 

ATOMIC RAYS

செஞ்சந்தனம்
அபிராஜ் தோட்டம்
தெக்குபட்டு 

செஞ்சந்தனம்

(சமீப காலத்தில் மிகவும் பிரபலமான மரம் செம்மரம். ஒரு காலத்தில் அதிகம் கடத்தப்பட்ட மரம் சந்தன மரம். இன்று கடத்தப்படும் அனவுக்கு சந்தன மரங்கள் இல்லை. “இதுதாம்பா சந்தன மரம். மியுசியத்துல மட்டும்தான் பாக்க முடியும”; என்றுதான் வரும் காலத்தில் நம் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்ய முடியும். செம்மரம் என்ற பெயரில் பத்திக்கைகளில் எழுதுவது உண்மையில் செம்மரம் அல்ல. அப்படி என்றால் கடத்தப்படுவது என்ன மரம் என்று சொல்வதுதான் இந்த கட்டுரை)


உண்மையாக கடத்தப்படும் மரம் செஞ்சந்தன மரம். சந்தனவேங்கை என்ற இன்னொரு பெயரும் உண்டு இதற்கு. நிச்சயமாக கடத்தப்படுவது செம்மரம் அல்ல. வேலூர் மாட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பெயர் தெரியாத மரங்களாக வளர்ந்திருக்கின்றன. உலகில் அதிக மரங்கள் உள்ள பகுதி பழைய வடாற்காடு மாவட்டம்(ஆந்திரா உட்பட வேலூர் மற்றும் திருவண்ணாமலை சுற்றுவட்டாரங்கள்). 

தற்போது ஆந்திர மாநில்த்தில் சித்தூர் வனப்பகுதிகளில் இந்த மரங்கள் அதிகம் உள்ளதாக சொல்லப்படுகிறது. சமூக விரோதிகள் இதை குறிவைத்துத்தான் கடத்தல் வேட்டை நடத்தி வருகிறார்கள். அப்பாவிகளான மலைவாழ் மக்களை முன்னிறுத்தி, இவர்களின் முதுகுக்குப் பின்னால்; பாதுகாப்பாக ஒளிந்து கொண்டிருப்பவர்;கள் சமூக விரோதிகள்.

            ஆனால் உண்மையான கடத்தல் சரக்காக ஏகப்பட்ட மலைவாழ் மக்களின் உயிரைக் குடித்தது செஞ்சந்தனமரம். செம்மரம் அல்ல. 

      இதற்காக கைது செய்யப்படும் கடத்தல்காரர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது. 

      அப்படி என்னதான் இருக்கிறது செஞ்சந்தன மரத்தில் ? 


      உலகத்திலேயே அணுக்கதிர்களை தடுத்து நிறுத்தும் ஆற்றல் உள்ள, ஒரே மரம் செஞ்சந்தன மரம்தான். அணுஉலைக்கூடங்களில் அணுக்கதிர்கள் வெளியேறிவிடாமல் தடுக்க செஞ்சந்தன மரத்தைப் பயன்படுத்துகிறார்கள். அதனால்தான் தங்கம் வெள்ளியைப் போல கடத்தல் சரக்காக மாறிவிட்டது என்கிறார் “வளம் தரும் மரம்” என்னும் அரிய நூல்களின் ஆசிரியர் மற்றும் வேளாண்மை அறிஞர் பி.எஸ். மணி.

சீனநாட்டில் அணுஉலைகளில் இதனை பயன்படுத்துகிறார்கள். 1500 முதல் 2000 ரூபாய்வரை ஒரு கிலோ செஞ்சந்தன மரத்தை விற்பனை செய்கிறார்கள் என பத்தி;ரிக்கைச் செய்திகள் வெளியாகி உள்ளன. அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இதன் தேவை அதிகரித்துள்ளது. அண்மைக் காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளும் இந்த மரத்திற்காக வலைவீசி வருகின்றன.

செஞ்சந்தன கடத்தலுக்கு தற்போது கிடுக்கிப்பிடி போடப்பட்டுள்ளது. கைப்பைகளில் சிறுஅளவில் கடத்த ஆரம்பித்துள்ளார்கள். சிறுதுளி பெருவெள்ளம் என்கிறார்கள். ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் செஞ்சந்தனத்தை பெரும் அளவில் வளர்த்து ஏற்றுமதி செய்தால் அரசு அந்நியச்செலாவணியை  அள்ளலாம் என்கிறார்கள, சில பொறுப்புள்ள வன அதிகார்கள். 

      ஜப்பான் நாட்டில் ‘ஷிமிசென் ‘ என்னும் இசைக்கருவி செய்ய ஏற்ற மரம் செஞ்சந்தனம்தான். திருமணத்தின் போது, பெண்களுக்குத் தரும் மதிப்பு வாய்ந்த சீதனம், இந்த ஷிமிசென் இசைக்கருவி.

ஒரு காலத்தில் இந்த மரத்திலிருந்து சிவப்புசாயம் எடுத்தார்கள். பாகு;குக்கு நிறம் கொடுக்க இந்த சாயத்தை பயன்படுத்தினார்கள். 

      கடைசல் சிற்பங்கள் செய்யவும், சித்த மருத்துவத்திற்காகவும், இதனை பயன்படுத்துகிறார்கள். சீதபேதி, மூலநோய், சொரிசிரங்கு, வீக்கம், கட்டிகள், கண்ணோய், தலைவலி ஆகிவற்றை குணப்படுத்தும் பண்புகள் இதில் உள்ளன.
இந்த செஞ்சந்தனமரத்தின் தாவரவியல் பெயர் டெரோகார்ப்பஸ் சென்ட்டாலினஸ்  (Pவநசழஉயசிரள ளயவெயடiரௌ) இது ஃபாபேசியே (குயடியஉநயந) தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. 


நம்ம ஊர் செம்மரம்



சமீப காலமாக கடத்தப்படுவது செம்மரம் என்றே செய்திகள் ஊடகங்களில் வெளியாகின்றன. ஆனால் உண்மை அதுவல்ல. செம்மரம் கடத்தப் படுவதற்குறிய அரிய குணங்கள் எதுவும் அதில் இல்லை. செம்மரம்  கட்டுமான வேலைகள் செய்ய, பிளைவுட் தயார் செய்ய, அமுர் என்னும் எண்ணெய் எடுக்க பயன் ஆகும் மரம். 

      சிலர் வேங்கை மரமும், செம்மரமும், ஒன்று என கருதுகிறார்கள். அதுவும் சரியான தகவல் இல்லை.

      வேங்கை மரம் வீடுகட்ட, சாயம் எடுக்க, தோல்பதனிட, கால்நடைகளுக்கு தீவனம் அளிக்க, மற்றும் சித்த மருத்துவத்தில் மருந்துகள் தயாரிக்கவும் உதவுகிறது. 

      வேங்கை மரமும் கடத்தல் சரக்குக்கான, பண்புகள் எதுவும் இல்லாதது. 

      கோவை, ஈரோடு, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, மாவட்டங்கள், வேங்கையின் கோட்டைகள் எனலாம். 

செம்மரத்தின் தாவரவியல் பெயர் டெரோகார்ப்பஸ் மாசுப்பியம்  (Pவநசழஉயசிரள அயசளரிரைஅ) இது லெகுமினேசியே (டுநபரஅiயெஉநயந) தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. 

பிரேசில் நாட்டின் செம்மரம்


தென்அமெரிக்காவிலும் ஒரு செம்மரம் உண்டு. இதுவும் மிகப்பிரபலமானது. ஆனால் நம்ம ஊர் செம்மரம் வேறு. தென்அமெரிக்க செம்மரம் வேறு.

அந்த செம்மரத்திற்கு செல்லபெயர் பிரேசிலியன்வுட். அந்த மரத்தின் பெயரால்தான் அந்த நாட்டிற்கு பிரேசில் என்று பெயர் வந்தது.

      இந்த மரத்தை ஏற்றுமதி செய்ததன் மூலம்தான்  இந்த நாட்டின் தொடக்ககால பொருளாதாரம் வளர்ந்தது. இந்த செம்மரங்களைச் ஏற்றிச்சென்ற கப்பல்களை வழிமறித்துசெய்த கொள்ளைச் சம்பவங்கள் எல்லாம் அரங்கேறின.

            1500ஆம் ஆண்டில் ஏப்ரல் 21 ஆம்நாள், கடற்பயணம் மேற்கொண்ட போர்ச்சுக்கீசியர்கள்தான் பிரேசில் நாட்டில் இந்த செம்மரத்தை முதன் முதலாகப் பார்த்தனர். அந்த மரத்திலிருந்து எடுக்கும் சிவப்பு சாய்த்திற்கு ஏகப்பட்ட கிராக்கி இருந்தது. உலம் பூராவும் விற்பனை செய்யலாம். கோடிகோடியாய் சம்பாதிக்கலாம். நாவில் நீர் வடியவடிய பார்த்தார்கள். என்ன செய்யலாம் ? விடியவிடிய யோசித்தார்கள். விளைவு,  பிரேசில் நாட்டு செம்மரம் அந்த நாட்டின் தலைஎழுத்தையே மாற்றியது.

போர்ச்சுக்கீசியர்கள் பழங்குடி அரசர்களின்மீது போர் தொடுத்தார்கள். துண்டும் துக்காணியுமாய் இருந்த பழங்குடி அரசுகள் அடக்கிய சீட்டுக்கட்டுகள் மாதிரி சரிந்தன. உலகிலேயே மரங்களுக்காக நடந்த போர் இதுவாகத்தான் இருக்கும். 
பாரம்பரிய வேட்டை ராஜாக்களை  வேட்டையாடி விரட்டிவிட்டு ஆட்சியைப் பிடித்தனர். பின்னர் அந்த மரங்களை எல்லாம்வெட்டி பணம்; செய்தார்கள். இன்று பாதுகாக்கவேண்டிய மரங்கள் என்ற பட்டியலில் வந்துவிட்டது பிரேசிலின் ரெட்வுட்.

இந்த பிரேசில்நாட்டு செம்மரத்தின் தாவரவியல் பெயர் சீசால்பைனியா எக்கினேட்டா. (ஊயநளயடிiநெய நுஉhiயெவய) இதுவும் செஞ்சந்தன மரத்தைப்போலவே ஃபேபேசியே தாவர குடும்பத்தைத்தான் சேர்ந்தது. 


உலகின் உயரமான மரம் 
வட அமெரிக்காவின் ராட்சச மரம் 
செம்மரம்


   உலகத்திலேயே மிகவும் உயரமான மரவகை என்ற பெருமையைக் கொண்டது இந்த செம்மரம். தற்போது வட அமெரிக்காவில் கலிபோர்னியாவில் அதிகம் உள்ளன. ஒருகாலத்தில் 8500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருந்தன இந்த மரங்கள் கலிபோர்னியாவில்.

இப்போது உலகின் உயரமான மரம் இங்குதான் உள்ளது. இந்த மரத்தின் உயரம் 2006 ம் ஆண்டு எடுத்த அளவின்படி 379.1 அடி.

இதுவரை அதிகபட்சமாக ரெக்கார்ட் செய்யப்பட்ட ஒரு மரத்தின் உயரம் 379.1 அடி, மரத்தின் குறுக்களவு 29.5 அடி. இதன் வயது அதிகமில்லை. வெறும் 1800 வருஷம்தான்.

                  சிவப்பழகு, நெருப்பினை தாங்கும் சக்தி, அழுகாதது என்ற பல சிறப்புகளை உடையது. கலிபோர்னியா முழுவதும் எல்லா மர வேலைகளுக்கும் இதனை பயன்படுத்துகிறார்கள். 

இதன் தாவரவியல் பெயர் செக்கோயா செம்ப்பர்வைரன்ஸ்(ளுநஙரழயை ளநஅpநசஎசைநளெ). இது குப்ரேசியே (ஊரிpசநளளயஉநயந) தாவர குடும்பத்தைச் சேர்ந்தது.

ஆனாலும் நம்ம ஊர் செஞ்சந்தனம் மாதிரி அணுக்கதிகளை எல்லாம் தாங்கும் சக்தி இந்த ராட்சச செம்மரத்திற்கு கிடையாது.

செஞ்சந்தனம்
இலக்கொப்பு 

               












  
           

   

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...