ஒற்றை மனிதர்
GEORGE F JOHNSON -
BUILT TWO CITIES
GEORGE F JOHNSON -
BUILT TWO CITIES
1930 - என்டிகாட் ஜான்சன் ஷூ பேக்டரி |
ஒரு சராசரி தொழிலாளராக தன் வாழ்க்கையைத் தொடங்கிய ஒருவரின் முயற்சியால் ஒரு ஷூ பேக்டரியும் இரண்டு நகரங்களும் உருவான கதையை உங்களுக்கு நான் சொல்லப் போகிறேன்.
அமைதியும் அழகும் கொலுவிருக்கும் அந்த இரு நகரங்கள், நியூயார்க்கிலிருந்து சுமார் 100 மைல் தொலைவில், உள்ளன.
ஜான்சன் மற்றும் எண்டிகாட் என்ற பெயரில் அமைந்த அந்த இரட்டை நகரங்கள் 'ஃபேர்பிளே” என்னும் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளன.
வெற்றிகரமான ஷூக்கள் உற்பத்தி செய்யும் ஒரு கம்பெனியைத் வளர்த்து அதன் பணியாளர்கள் வசிப்பதற்காகவே இந்த இந்த நகரங்களை உருவாக்கியவர் ஜார்ஜ் எஃப் ஜான்சன் (ஜார்ஜ்)
ஒவ்வொரு நாளும்; 81000 ஜோடி ஷ{க்கள் தயாரித்து சாதனை படைத்தது ' ஜான்சன் -எண்டிகாட் " கம்பெனி. உலகத்தின் மிகப் பெரிய ஷூ _கம்பெனியாக உருவெடுத்தது.
50000 பேர் வசித்த அந்த நகரங்களிலிருந்து 15000 பேர் 'ஜான்சன் -எண்டிகாட்'ல் வேலை பார்த்தனர்.; வேலைபார்த்த அத்தனை பேருக்கும் ஆளுக்கொரு வீடு. பளிச்சென்று கண்ணைக் கவரும் வண்ணம் பூசப்பட்ட மரங்களினால் கட்டப்பட்ட வீடுகள்.
பரந்து விரிந்திருக்கும் புல்வெளி, நடுவே ஒரு கிளப் ஹவுஸ், ஊடாக ஒரு பார்க், நீச்சல் குளம், குழந்தைகளுக்கென ஆழம் குறைந்த குளம், குழந்தைகள் நூலகம், சாரணச் சிறுவர்களுக்கு தனி அறை, கட்டணம் செலுத்தி பொழுது போக்க நடன அரங்கம், சனிக்கிழமை தோறும் சுமார் ஒரு லட்சம் பேர் திரண்டு வந்து கண்டுகளிக்கும் குதிரைப் பந்தய மைதானம், அதற்காக அமைக்கப்பட்டிருக்கும் பந்தயச் சாலைகள்;. இப்படி அந்த இரண்டு நகரங்களையும் ஒரு சிற்பத்தைப் போல செதுக்கி வைத்திருந்தார் ஜார்ஜ்.
சமூக ஒழுங்கு, கல்வி, விளையாட்டு, இசை, மகிழ்ச்சி, ஆகியவை இந்த இரட்டை நகரங்களின் அடையாளங்களாக விளங்கின.
இயந்திரங்கள், நிலக்கரி, வியர்வை ஆகியவை பேக்டரிக்கு உள்ளேயும் அன்பும், அரவணைப்பும், மகிழ்ச்சியும், உற்சாகமும், நகரங்களுக்கு உள்ளேயும் நிரம்பி வழிந்தன.
இந்த மக்களின் மகிழ்ச்சிக்கும், கவலை இல்லா சிரிப்பிற்கும் காரணமாக இருந்தவர் ஜான்;. ஆனால் எல்லோரும் உச்சிரிக்கும் பெயர் ஜார்ஜ் எஃப். குழந்தைகள் கூட அவரை அப்படித்தான் அழைக்கும்.
ஜார்ஜ் ஒரு எளிமையான மனிதர். உத்தரவின்றி உள்ளே வா டைப். எந்த ஒரு தொழிலாளியும் அவரை சிரமமின்றிப் பார்க்கலாம்.
ஃபேக்டரி அலுவலகத்தில் இல்லை என்றால் கூட்டமான குழந்தைகள் அல்லது தொழிலாளிகள் மத்தியில் அவரைப் பார்க்கலாம்.
பெரியவர்கள் அவரை குடும்பத் தலைவர் என்றார்கள். குழந்தைகள் அவரை ஜார்ஜ் எஃப்.; என்று பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள்.
ஒரு ஆண்டில் 140 மில்லியன் டாலர் வியாபாரம் பார்க்கும் ஜார்ஜ் க்கு குழந்தைகளுடன் பட்டம் விடவும் அவர்களுடைய பொம்மையை பழுது பார்க்கவும் நேரம் இருந்தது.
அவர் ஒன்றும் வாரிக் கொடுக்கும் வள்ளல் அல்ல. பெரிய அறிவாளியும் அல்ல. சூப்பர் மேனும் அல்ல. வேறு யார்தான் அவர் ?
இதயம் முழுக்க அன்பை நிரப்பியபடி மகிழ்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும் மனிதர்கள் மத்தியில் சுற்றுலா வரும்; ஒரு சராசரி மனிதர்.
ஒரு சராசரி மனிதர் ஜான் எப்படி இரண்டு நகரவாசிகளுக்கு தந்தை ஆனார் என்று பார்க்கலாம்.
நாற்பது வருஷத்துக்கு முன்னால் திவால்; ஆன ஒரு குட்டி ஷ{ கம்பெனியில் ஃபோர் மேனாக இருந்தார்.
அந்த கம்பெனிக்கு கடன் கொடுத்த எண்டிகாட், என்ற பணக்காரர் ' அந்த பணத்தை திரும்ப எடுப்பதற்கு ஏதாச்சும் வழி இருக்கா " என்று ஜார்ஜிடம்; கேட்டார்.
' என்னை பார்ட்னராக சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த கம்பெனியை ஓஹோ என்று மாற்றிக் காட்டுகிறேன். அப்படி மாற்றிய பின்னால் ஒண்ணரை லட்சம் டாலர் என் பங்காகத் தருகிறேன். இப்போது என்னிடம் பத்து பைசாகூட நகி என்றார், ஜார்ஜ்.
ஜார்ஜின் முகத்தை உறு;றுப் பார்த்தார், எண்டிகாட். அந்த முகத்தில் எந்தவிதமான வில்லங்கமும் தெரியவில்லை. இவர் வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவார் என்ற நம்பிக்கை தெரிந்தது. அந்த நம்பிக்கையோடு எண்டிகாட் ' ஓகே " சொன்னார்.
எண்டிகாட் தன் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு பங்கம் வராமல் பைசா நகர்க் கோபுரம் மாதிரி சாய்ந்துக் கிடந்த கம்பெனியை தனது உண்மையான உழைப்பால் தூக்கி நிறுத்தினார்.
தான் வெறுங்கையில் முழம் போட்டதைப்; போல தனது தொழிலாளிகள் அத்தனைப் பேரையும் ஃபேக்டரியின் பங்குதாரர்களாக மாற்றி முதலாளிகளாக்கினார்.
ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளிகளின் கூலியில் பாதி அளவு லாப போனஸ் என்று அறிவித்தார்.
தொழிலாளிகளே முதலாளிகளாக மாறி வேலை பார்த்ததால் வேலை நிறுத்தம் இல்லை, முதலாளி தொழிலாளி பிரச்சினை இல்லை. கம்பெனியின் வேலைத் திறன் குறையவில்லை உற்பத்தி குறையவில்லை. கம்பெனியின் லாபம் கண்மண் தெரியாமல் அதிகரித்தது. இதுதான் ஜர்ஜ்'ன் வெற்றி சூத்திரம்.
'நீங்கள்தான் எனது நம்பிக்கைக்கு உரியவர்கள். இந்த உலகில் உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை. நாம் பெறும் கூலியை குறைக்காமலே நமது பொருட்களை மலிவாக தயாரிக்க முடியும். ஆனால் நம்மில் எதற்கும் உதவாத உதவாக்கரைகளை வெளியேற்ற நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டும்." என்று அடிக்கடி சொல்லுவார்.
அப்படி அவர் சொல்லும் போது ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் போல நம்பிக்கை அவர்களின் நாடி நரம்புகளில் பாயும். ஆந்த மின்சாரம் அவர்களின் உழைப்பிலும் உற்பத்தியிலும் பிரதிபலித்தது.
ஜார்ஜ் எப் ஜான் |
தொழிலாளிகளின் மீது ஜார்ஜ் வைத்திருந்த நம்பிக்கையும், அன்பும்தான் அவர்; வெற்றிக்கு தந்த விலை.; ஜார்ஜ் ன் கதை நமக்கு சொல்லும் பாடம் இதுதான்.
Image Courtesy: Thanks to Country of Broom county Historical Society &
Special Collections Research Centre / Syracuse University.
No comments:
Post a Comment