Thursday, April 7, 2016

ஒரு மெக்கானிக் மில்லியனர் ஆன கதை



ஹென்றி போர்ட்

டெட்ராய்ட் என்னும் ஊருக்கு அருகாமையில் ஒரு கிராமத்தில் ஒரு ஐரிஷ் சமூகத்தைச் சேர்ந்த விவசாயி வசித்து வந்தார்.

1863 ம் ஆண்டில் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு ஹென்றி போர்ட் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

ஹென்றியை பொறுப்பாக பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார் அவருடைய அப்பா.

ஹென்றிக்கு பள்ளிப்படிப்பு ஒத்துவரவில்லை. தனது 15 வது வயதில் வேறு ஏதாவது வேலை பார்க்கலாம் என்று முடிவு செய்து பள்ளியைவிட்டு வெளியேறினான்.

எங்காவது வேலை கிடைக்குமா என்று தேடினான். ஒரு மெக்கானிக் ஷெட் வைத்திருந்தவர் ஒரு நாளைக்கு 2.5 டாலர் கூலி தருவதாக ஹென்றியை வேலைக்கு வைத்துக் கொண்டார்.

மெக்கானிக் ஷெட்டின் கூலி ஆளாக சில ஆண்டுகள் ஓடியது. இந்த காலகட்டத்தில் ஹென்றி உள்ளுரிலேயே ஒரு லட்சணமான பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து கொண்டான்.

ஒரு நாள் உள்ளுர் செய்தித் தாளில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அந்த செய்திதான் ஹென்றியின் அதிர்ஷ்ட தேவதையாக அமையப் பொகிறது என்று யாருக்கும் தெரியாது.

'குதிரை இல்லாத வண்டி" என்ற தலைப்பில் அந்த செய்தி வெளியாகி இருந்தது.

மாட்டு வண்டி, ஒட்டக வண்டி, நாய் வண்டி இப்படி பல வகை வண்டிகள் அப்போது இருந்தாலும் பொதுவாக வண்டி என்றால் அது குதிரை வண்டியைத் தான் குறிக்கும்.

குதிரை இல்லாத வண்டி செய்தியை வாசித்தார் ஹென்றி. 

ஒரு முறை வாசித்தார். இரு முறை வாசித்தார். பலமுறை வாசித்தார். அந்த செய்தி அப்படியே மனப்பாடம் ஆனது.
 
ஏதோ தனக்காகவே அந்த செய்தியை வெளியிட்டது போலத் தோன்றியது.
அப்படி அந்த செய்தியில் என்னதான் இருந்தது. ஒரு பிரஞ்சுக்காரர் செய்து கொண்டிருக்கும் ஆராய்ச்சிபற்றிய செய்தி அது. குதிரை, ஒட்டகம் நாய் இப்படிப்பட்ட பிராணிகளுக்குப் பதிலாக ஒரு எஞ்சினைப் பயன்படுத்துவதற்காக அந்த பிரான்சு நாட்டுக்காரர் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இதுதான் செய்தி.

அந்த செய்தி அவர் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அன்று முதல் இவருக்கும் தூக்கம் வரவில்லை புரண்டு புரண்டு படுத்தார். 

ஹென்றியின் கனவிலும் நனவிலும் குதிரை இல்லாத வண்டியே கடிவாளம் போடாமல்; ஓடிக் கொண்டிருந்தது.

அடுத்த சில நாட்களில் அவருடைய பண்ணையில் பயன்படுத்தப்படாமல் பரணில் கிடந்த துரு ஏறி இருந்த எஞ்சின் ஒன்றை தூசுதட்டி எடுத்தார். உட்காருவதற்குத் தோதாக குதிரை வண்டி மாதிரியே ஒரு வண்டியை செட்அப் செய்தார்.

மாடுகள் கட்டவும் அறுவடை செய்த தானியங்களை கொட்டிவைக்கவும் பயன்படுத்திய பண்ணை வீட்டை கார் ஆராய்ச்சிக் கூடமாக மாற்றி இருந்தார் ஹென்றி.

இப்போது குதிரை இல்லாத வண்டி ரெடி. ஆனால் அது ஓட வேண்டும். அதுவும் வேகமாக ஓட வேண்டும். அதுவும் குதிரையைவிட வேகமாக ஓட வேண்டும்.
 
பல சாதனையாளர்கள். அவர்கள் வெற்றி அடைவதற்கு முன்னால் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாவது என்பது வழக்கம்தான். ஆனாலும் ஹென்றி கேவலமாக அவமானப்பட்டார். 

'பேசாம எதாவது மெக்கானிக் ஷெட்டுக்குப் போ. அஞ்சிப்பத்து கிடைக்கும். 

அதைவிட்டுட்டு குதிரை இல்லா வண்டி கழுதை இல்லா வண்டி இதெல்லாம் வேண்டாம்" என்று ஹென்றி நண்பர்கள்; புத்திமதி சொன்னார்கள்.

மேலும் கேவலப்பட்டுப்போக விரும்பாமல் ஹென்றி ஒரு மெக்கானிக் ஷெட்டில்; செட்டில் ஆனான்;

ஆனால் பகல் பூராவும்; ஷெட்டில் வேலை பார்த்தார். இரவு பூராவும் கார் எஞ்சின் ஆராய்ச்சி.

இப்படியாக எட்டு ஆண்டுகள் உருத்தெரியாமல் ஓடியது. அப்பா, ஒருவழியாய், உலகத்தின் முதல் கார் ஹென்றியின் கைவண்ணத்தில் உருவானது. 

அந்த காலகட்டத்தில் இப்படிபட்ட கார்களை பலர் உருவாக்கி இருந்தனர். அவர்கள் அவ்வப்போது பந்தயங்களை நடத்தினார்கள். 

அப்படிப்பட்ட ஒரு பந்தயத்தில் எல்லா கார்களும் மண்ணைக் கவ்வின. ஹென்றியின் கார் அனைத்து கார்களையும் ஓரங்கட்டியது. 

ஹென்றியை பார்த்து வாய்விட்டு சிரித்தவர்கள் எல்லாம் வாய்வலிக்க பாராட்டினார்கள்.  

அடுத்து என்ன ? புதிய மோட்டார் கம்பெனி தொடங்க வேண்டும். அடுத்தகட்ட முயற்சியில் இறங்கினார். இப்போது ஹென்றி ஜெயிக்கும்  குதிரை. 

' நீ நான் " என்று பணத்தை மடியில் கட்டிக்கொண்டு ஹென்றியை சுற்றி வந்தார்கள் நிறையபேர். 
 
உலகின் பிரசித்தி பெற்ற முதல் கார் கம்பெனியை தொடங்கினார்.  ' போர்டு " என்று பெயர் வைத்து போர்டு மாட்டினார், ஹென்றி போர்ட்.

'ஊரான் பிள்ளையை ஊட்டி வளத்தால் தன் பிள்ளை தானாய் வளரும்" என்ற பழமொழிக்கு உதாரணமாக வளர்ந்தது, ஹென்றியின் போர்ட் கார் கம்பெனி.
தொழிலாளர்களையும் தொழிலாளர்களையும் ஊட்டி ஊட்டி வளர்த்தார்.  நவீன எந்திரங்களை பார்த்துப் பார்த்து இறக்கினார். நிர்வாகத்தில் மனிதாபமானத்தை கூட்டினார். ஆனையை உற்பத்தி செய்து பூனை விலைக்கு விற்றார். கோடிகள் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்ட ஆரம்பித்தது. 
ஹென்றி போர்ட்

ஒரு மெக்கானிக் மெகா மில்லியனர் ஆன கதை இதுதான்.






No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...