Tuesday, April 5, 2016

WINSTON CHURCHIL THE GREAT OREATOR - ஓன்றுமில்லாததை வைத்து ஒன்றரைமணி நேரம் பேசுவது எப்படி ?



வின்ஸ்டன் சர்ச்சில்

 (ஓன்றுமில்லாததை வைத்து ஒன்றரைமணி நேரம் பேசுவது எப்படி ?)
“அவன் சொல்றதை நம்பாத. அவன் வெறும் வாயை மெல்றான்” 
அப்படீன்னு சொல்லுவாங்க. “வெறும் வாயை மெல்றவனுக்கு அவல் கிடைச்சமாதிரி” அப்படீன்னும் ஒரு பழமொழி இருக்கு. சும்மா மென்னுக்கிட்டு இருக்கறவன்கிட்ட அவல் கிடைத்தால் என்ன
ஆகும் …? மெல்றதை நிறுத்த மாட்டான்.

“காலியான இடத்தில் காலியான சமாச்சாரங்களை போட்டு நிரப்பும் அரியவகை கலைக்கு பேர்தான் மேடைப்பேச்சு” அப்படீங்கறார் ஒரு ஆங்கில மேதை ஜான் கென்னத் கால்பிரெய்த்.

அதுக்கு என்னா அர்த்தம்ன்னா ‘ஒண்ணுமில்லாத வச்சி  ஒண்ணுமில்லாததை நிரப்புவது’ என்று அர்த்தம்.

ஒண்ணுமில்லாத வச்சிகிட்டு  ஒண்ணரைமணி நேரம் பேசணும்  இதை சாதாரண ஆள் செய்ய முடியாது.  அதுக்கு திறமை வேணும். புத்திசாலித்தனம் வேணும்.

ஜான் கென்னத் அமெரிக்காவின் பொருளாதார நிபுணராக  கொண்டாடப் படுபவர். கன்னடா நாட்டுக்காரர்.

இவான்  இசார்

சமீபகாலத்தில்தான் இவான் இசாரின் எழுத்துக்கு நான் விசிறி ஆனேன்.
1899 முதல் 1995  வரை  வாழ்ந்த அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர். உலகத்தில் நகைச்சுவைக்கு டிக்ஸ்னரி போட்டவர் இவர்தான். ‘இசார் காமிக் டிக்ஸ்னரி , ஹ்யூமரஸ் இங்கிலீஷ்   இப்படி ஏகப்பட்ட நகைச்சுவை நூல்களை எழுதியுள்ளார்.

மேடைப்பேச்சுபற்றி இவான் இசார்’ன் கருத்து இது. மேடைப்பேச்சுபற்றி இவான் சொல்லுகிறார், “ஒரு மேடைப்பேச்சாளரைவிட ஒரு பால்காரர் நியாயமானவர். நேர்மையானவர். பேராசை இல்லாதவர். மனசாட்சி உள்ளவர்.” 
    
ஒரு பால்காரர் ஒரு லிட்டர் பாலில் அதிகபட்சம் 250 மில்லிக்கு மேல் கலந்து விற்க மாட்டார். ஆனால் ஒரு மேடைப்பேச்சாளரிடம் விட்டால்   ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி பால்தான் சேர்ப்பார்;.

மேடைப் பேச்சாளர் என்பவர் யார் ? இதற்கு இவான் இசார் சொல்லுகிறார்.

இரண்டு நிமிட சரக்கை வைத்துக் கொண்டு இரண்டுமணிநேரம் பேசக்கூடியவர்தான் மேடைப்பேச்சாளர். இப்படியும் சொல்லலாம். ஒரு மேடைப் பேச்சாளர் இரண்டுமணி நேரம் பேசினால் அதில் இரண்டு நிமிட சரக்குதான் இருக்கும். இந்த விளக்கத்தை நமக்குத் தந்தவர் இவான் இசார். 

                 வின்ஸ்ட்டன் சர்ச்சில்

மேடைப்பேச்சில்  வல்லவர்கள் என்று சர்வதேச அளவில், ஒரு பட்டியல்
போட்டால், அதில் கண்டிப்பாய் வின்ஸ்ட்டன் சர்ச்சில் பெயர் இருக்கும். சர்ச்சில் மிகச்சிறந்த பேச்சாளா.; உணர்ச்சி பொங்க பேசுவார்;. உற்சாகம் பொங்க பேசுவார். அறிவுப்பூர்வமாக பேசுவார். எளிமையாகப் பேசுவார்.. கிண்டலாகப் பேசுவார். கேலியாகப்பேசுவார். நையாண்டித்தனமாய் பேசுவார். நறுக்குத் தெரித்தார்போல் பேசுவார். நகைச்சுவையாகவும் பேசுவார்.

வெளிநாடுகளில் ஆஃப்டர் டின்னர் ஸ்பீச் என்பது ரொம்பவும் பிரபலம். சாப்பிடும்போது  அல்லது சாப்பாட்டிற்கு பின்னர் யாராவது ஒருத்தர் பேசுவார். இதுதான் ஆஃப்டர் டின்னர் ஸ்பீச். நடனம், இசை, பாடல் என அனைத்தும் ஆஃப்டர் டின்னர் நிகழ்ச்சிகளாக நடக்கும். இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் இப்போது இந்தியாவிலும் ஸ்டார் ஹோட்டல்களின் சகஜமாகிவிட்டன.    
 

     
      இந்த  ஆஃப்டர் டின்னர் ஸ்பீச் பற்றி வின்ஸ்ட்டன் சர்ச்சில் சொன்னது சுவையானது.

ஆஃப்டர் டின்னர் ஸ்பீச்’ஐ விட , உலகில் கடினமான காரியங்கள்
இரண்டே இரண்டுதான். ஓன்று நம்மை நோக்கி சாய்ந்திருக்கும் சுவற்றில்
ஏறுவது. இரண்டு நமக்கு எதிர்த் திசையில் சாய்ந்திருக்கும் பெண்ணை
முத்தமிடுவது.
                                           
சர்ச்சில் எவ்ளோ பெரிய ஆள்.  அனுபவம் இல்லன்னா  இப்படி
எல்லாம் சொல்ல முடியாது.
இவான் இஸார்
     


               


     


               


  



No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...