Image Guarentee: |
பள்ளிக்கூடத்தில்
தமிழ் வகுப்பு நடந்துகொண்டிருந்தது. ஆசிரியர் பையன்களை ஒரே ஒரு கேள்விதான்
கேட்டார். யாரும் பதில் சொல்லவில்லை. அப்படி என்னதான் கேள்வி கேட்டார் ?
கொஞ்சம் விவகாரமான கேள்விதான்.
'தமிழ்நாட்டில் ஜனத்தொகை அதிகமானதுக்குக் காரணம் ஒரு பழமொழிதான். அது என்ன பழமொழி ?'
இந்த கேள்விக்கு பதில் யாருக்கும் தெரியவில்லை. கடைசியாக அவரே அந்த பழமொழியைச் சொன்னார்.
'பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க அப்படீன்னு புதுசா கல்யாணமான ஜோடிகளை பெரியவங்க வாழ்த்துவாங்க. பதினாறு என்று சொன்னதை எல்லோரும் குழந்தைன்னு தப்பாக நினைச்சிட்டாங்க. அதன் விளைவுதான் என்று சொல்லி சிரித்தார்.
ஆனா உண்மையில் அதுக்கு அர்த்தம் பதினாறு செல்வங்கள்.
'அது என்ன சார்இ பதினாறு செல்வம் ?' அப்படீன்னு ஒரு பையன் கேட்டான். வாத்தியார் அந்த 16 செல்வங்களையும் படபடன்னு சொன்னார்.
'அறிவுஇ அழகுஇ இளமைஇ கல்விஇ துணிவுஇ நன்மக்கள்இ நல்லூழ்இ நுகர்ச்சிஇ நெல்இ நோயின்மைஇ புகழ்இ பொன்இ பொறுமைஇ வலிஇ வாழ்நாள்இ வெற்றிஇ
பெறவேண்டியது இந்த 16 செல்வங்கள்தான்'
அதுக்குப்பிறகு ரெண்டுநாள்கழிச்சு விவசாய பாடம் நடத்த இன்னொரு வாத்தியார் வந்தார். பாடம் நடத்த ஆரம்பிச்சார். சொல்லிவச்சமாதிரி அவரும் அதே கேள்விய கேட்டார்.
'பதினாறு செல்வங்கள் எவை எவை ?'
அறிவு அழகு என்று தொடங்கி வாழ்நாள் வெற்றி என்று பதினாறையும் வரிசையாக அடுக்கினான் ஒரு பையன்.
வாத்தியரே ஒரு கணம் ஆடிபோய்விட்டார். அந்த பையன் சொல்லுவான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. பிறகு அவர் சொன்னார்.
“இன்னொரு 16 இருக்கு அது தெரியுமா” என்றார் வாத்தியார்.
“தெரியும் சார் 16 வயதினிலே சார்.. கமல் சப்பாணியா நடிப்பார் சார்.. சூப்பரா இருக்கும் சார்..” என்று சொன்னான் இன்னொரு பையன்.
“இன்னொரு 16 இருக்கு அதை நான் சொல்றேன். பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் 16 தான்…நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ், கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன், அயன், மேங்கனீஸ், காப்பர், சிங்க், போரான், மாலுப்டினம், கால்சியம். மக்னீசியம், சல்ஃபர், குளோரின்..”
“நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ், இந்த மூணும் பிரதான சத்துக்கள்… கால்சியம், மக்னீசியம் சல்ஃபர் இது மூணும் இரண்டாவது முக்கிய சத்துக்கள்.. மேங்கனீஸ், காப்பர், சிங்க், போரான், மாலுப்டினம், குளோரின் இந்த ஆறும் நுண்சத்துக்கள்..அதாவது குறைவாக தேவைப்படும் சத்துக்கள்…” என்று வாத்தியார் சொல்லி முடித்ததும். ஒரு பையன் எழுந்து நின்றான். “என்னப்பா” என்றார். “ பயிர்சத்துக்கள் 16 பதினாறு முக்கியமா ? செல்வங்கள் 16 முக்கியமா ?” என்றான்.
“ 16 சத்துக்கள் இருக்குமாறு பாத்துகிட்டா வயக்காட்டுல பயிர்கள் உயரும். பயிர்கள் உயர்ந்தா குடிகள் உயரும். குடிகள் உயர்ந்தா அரசும் உயரும். இதை நாள் சொல்லல. நம்ம தமிழ்பாட்டி அதுக்காக ஒரு பாட்டே பாடி இருக்காங்க. என்ன பாட்டு யாராச்சும் சொல்றீங்களா? ” இதை சொல்லி முடிப்பதற்குள் ஒரு பையன் எழுந்து அந்த பாட்டை பாடிக்காட்டினான்.
“வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும்..”
“நீங்கள்ளாம் கற்புரம் மாதிரி இருக்கிங்க..உங்கள் எல்லோருக்கும் என் பாராட்டுக்கள் என்றார் ஆசிரியர்”

(Image Guarentee; Thanks to Google) |
No comments:
Post a Comment