அப்துல்கலாம் -
கனவு காணுங்கள்
தூங்காதீர்கள்
ABDUL KALAM -
DREAM BUT
DO NOT SLEEP
அறிவியல் காந்தி மகான் |
" டிக்கட் டிக்கட்........ எங்க போகணும் சார் ? " பஸ்ஸில் ஏறி உட்கார்ந்ததும் கண்டக்டர் கேட்கும் முதல் கேள்வி ?
எந்த ஊருக்குப் போக வேண்டும் என்று சொன்னால்தான் அவர் டிக்கட் தருவார். அப்போதுதான் உங்கள் பஸ் பயணம் உறுதி ஆகும்.
"தெரியாது" என்று நீங்கள் சொன்னால், கண்டக்டர் டபிள் விசில் ஊதிவிடுவார். நீங்கள் பஸ்ஸை விட்டு இறங்க வேண்டிவரும். உங்கள் பயணம் 'பணால்' ஆகிவிடும்.
பயணம் செய்யும்போது போகும் ஊரை சரியாக சொல்லும் நாம், வாழ்க்கையில் மட்டும் போய்ச் சேரும் இடத்தை பாதி வாழ்க்கை முடியும்வரை கூட தீர்மானிக்க முடியாமல் திண்டாடுகிறோம்.
எந்த கோட்டையைப் பிடிக்க இந்த பயணம் என்று தெரியாததால்தான் நிறையபேர் வாழ்க்கையையே கோட்டை விடுகிறார்கள்.
எதை நோக்கி நமது வாழ்க்கைப் பயணத்தை தொடர்கிறோம் என்பதை திட்டமிட வேண்டும். நாளைக்கு என்ன செய்யப் போகிறோம் என்று நாம் ஒவ்வொருவரும் யோசிக்கிறோம்.
இதுவும் திட்டமிடுவதுதான்.
உங்கள் மனம்தான் உங்கள் வாழ்க்கைப் பயணத்தை நடத்தும் கண்டக்டர்;. எதை நோக்கி உங்கள் பயணம் என்பதை கண்டக்டரிடம்; சொல்ல வேண்டும்.
பைபிள் கூட அதைத்தான் செல்லுகிறது.
"தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும";
அதன் பொருள் என்ன ?
உங்கள் மனதிடம் கேட்க வேண்டும். உங்களுக்கு என்னென்ன தேவை, என்று பட்டியல் போட்டு சொல்ல வெண்டும். அது அப்படியே தன் மூளையில் பதிவிறக்கம் செய்து கொள்ளும். அடிக்கொரு தடவை அது உங்களுக்கு நினைவு படுத்திக் கொண்டே இருக்கும்.
உங்களுக்கு தேவையானதை உங்களிடம் கொண்டுவந்து சேர்க்கும்வரை அது உங்களைத் தூங்கவிடாது, சீண்டிக்கொண்டே இருக்கும்.
அதைத்தான் நமது அறிவியல் காந்தி மகான் அப்துல்கலாம் அவர்கள் சொன்னார்.
"கனவு காணுங்கள்", கனவு என்பது தூங்கும்போது காண்பதல்ல. உங்களை தூங்க விடாமல் செய்வதுதான் கனவு.
தூங்காமல் கனவு காண்பது எப்படி என்று நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
மனதிடம் சொல்லுங்கள் உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு உயரத்தைத் தொட வேண்டும் என்று. அது உங்களுக்கு சொல்லித் தரும், தூங்காமல் கனவு காண்பது எப்படி என்று.
உங்கள் கடிகாரத்தில் அலாரம் வைத்துவிட்டால் போதும். உங்கள் வேலை முடிந்தது. சரியான நேரத்திற்கு அது உங்களை எழுப்பி விட்டுவிடும். தூங்க விடாது.
மனது என்னும் கடிகாரத்திற்கு சாவி கொடுத்துவிட்டால் போதும். வெற்றி இலக்கை அடையும் வரை அது உங்கள் பிடறியைப் பிடித்து தள்ளிக்கொண்டே போகும்.
மனம் என்பது உங்களின் நம்பிக்கையான ஜீபூம்பா வேலைக்காரன் என்கிறார், அர்னால்ட் பென்னட் அமெரிக்காவின் அசத்தலான எழுத்தாளர்.
"ஹவ் டு லிவ் 24 அவர்ஸ் எ டே" என்ற புத்தகத்தை எழுதியவர், சர்வ தேச அளவில் விற்பனையில் சக்கைப்போடு போட்ட புத்தகம்.
நீங்கள் விரலசைத்தால்; போதும், செய்து முடிக்க சித்தமாயிருக்கிறது உங்கள் மனம் என்னும் ஜீபூம்பா.
மாதம் ஒரு லட்சம் வருமானம் வேண்டும், கேளுங்கள்.
படகு மாதிரி கார் வேண்டும், கேளுங்கள்.
கடல் மாதிரி வீடு வேண்டும், கேளுங்கள்.
ரதி மாதிரி பெண் வேண்டும், கேளுங்கள்.
மிகவும் எளிமையான தமிழ்ப் பழமொழி கூட இதைச் சொல்லுகிறது.
அழுத பிள்ளை பால் குடிக்கும்.
குழந்தைகள் பேசத் தொடங்கும் முன் கேட்பதன் அடையாளம்தான் அழுகை.
No comments:
Post a Comment