Thursday, April 28, 2016

இரவு முழுக்க இழுத்து விட வேண்டுமா குறட்டை ? இதப்படிங்க ! TO BREATH POLLUTION FREE AIR HAVE PLANTS


இரவு முழுக்க
இழுத்து விட
வேண்டுமா குறட்டை ?
இதப்படிங்க !



TO BREATH
POLLUTION FREE AIR
HAVE   PLANTS


பீஸ் லில்லி

(காற்று சீர்திருத்தச் செடிகள் என்றால் என்ன ? அவை காற்றை எப்படிசுத்தம் செய்கிறது ? என்னென்ன வாயுக்கள் சேர்ந்து காற்றை மாசுபடுத்துகின்றன ? அதற்கு துளசி மற்றும் மதர்இன்லாஸ்டங் என்ற இரண்டு செடிகளை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்த்தோம். இந்த கட்டுரையில் பீஸ் லில்லி, மூங்கில்பனை, ஸ்பைடர் பிளாண்ட், ஜெர்பரா    ஆகியவைபற்றி பார்க்கலாம்)

1. பீஸ் லில்லி (PEACE LILY)

இந்தச் செடிகளை குளியலறை மற்றும் சேமிப்பு அறைகளில் வைக்கலாம். பார்மால்டிஹைடு;,  ட்ரை குளோரோ  எத்திலீன், போன்றவற்றை காற்றிலிருந்து வடிகட்டி சுத்தம் செய்யும். இதன் இலைகள் பசுமையாக. பளபளப்பாக. கவர்ச்சியாக  இருக்கும். தரையிலிருந்து தண்டுகள் ஏதுமின்றி, இலைகளாகவே வெளிவரும் செடி இது. இதன் தாவரவியல் பெயர் (SPATHYPHYLLUM MAUNALOA ) ஸ்பேத்திபில்லம்  மவ்னலோவா. ஆரேசியே  குடும்;பத்தைச் சேர்ந்தது.

2. மூங்கில்பனை (BAMBOO PALM)

பேம்பு பாம்

ஆங்கிலத்தில் இதனை பாம்பூ பாம் என்று சொல்கிறார்கள். காற்றிலிருக்கும் அதிகப்படியான பார்மால்டிஹைடை பிரித்தெடுப்பதில் இது சிறந்தது.  இது தவிர கார்பன் மோனாக்சைடு  உட்பட பல நச்சுப்பொருட்களை வடிகட்டி காற்றைச் சுத்தப்படுத்துகிறது. இதன் தாவரவியல்பெயர்  ச்சாமிடோரியா   செஃபரிட்ஸி (CHAEMIDOREA SEFRITZII). அரிகாசியே  குடும்;பத்தைச் சேர்ந்தது.

3. ஸ்பைடர் பிளாண்ட் (SPIDER PLANT)  
ஸ்பைடர் பிளாண்ட்

இதற்கு சிலந்திச்செடி  என்றும் பெயர் சூட்டலாம். காற்று சீர்திருத்திச் செடிகள் என்று நாசா ஆராயச்சி நிலையத்தால், அடையாளம் காணப்பட்ட மூன்று செடிகளுள் இதுவும் ஒன்று. பார்மால்டிஹைடை காற்றிலிருந்து பிரித்தெடுப்பதில் சிறந்தது. இதுதவிர கார்பன் மோனாக்சைடு, உட்பட பல நச்சுப் பொருட்களை வடிகட்டி காற்றை சுத்தப்படுத்துகிறது. இதன் தாவரவியல்பெயர்  குளோரோபைட்டம்  காஸ்மோசம்(CHLOROPHYTUM COSMOSUM). அஸ்பராகாசியே  குடும்;பத்தைச் சேர்ந்தது.

4 . ஜெர்பரா (GERBERA)

படுக்கையறை ஜன்னலில் ஒரேஒரு  செடி வைத்துக் கொண்டால் போதும்.  இரவு முழுக்க குறட்டைவிட்டு அமைதியாக தூங்கலாம். இரவுமுழுக்க  கார்பன் டை ஆக்சைடை எடுத்துக் கொண்டு ஆக்சிஜனை வெளிவிடும் செடி இது. பார்மால்டிஹைடு, ட்ரை குளோரோ எத்திலீன், பென்சீன் ஆகியவற்றை நீக்கி காற்றை சுத்தப்படுத்துகிறது. இதன் தாவரவியல்பெயர் ஜெர்பெரா ஜேம்ஸ்சோனி(GERBERA JAMESONII). ஆஸ்ட்ரேசியே  குடும்;பத்தைச் சேர்ந்தது.
ஜெர்பெரா

இந்த செடிகள் எல்லாம் அழகுச்;செடிகளாகத்தான் நமக்குத் தெரியும்.  இப்போது அவை அற்புதமான செடிகளாக நமக்கு அறிமுகமாகி உள்ளன.

Images Courtesy: Thanks Google


24 மணி நேரமும் காற்றை மட்டும் சுவாசிப்பது எப்படி ? - TO BREATH 24 HOURS POLLUTION FREE AIR

Golden Pothos (Image Courtesy: Thanks Google)













24 மணி நேரமும்
காற்றை மட்டும்
சுவாசிப்பது எப்படி ?

TO BREATH
24 HOURS
POLLUTION
FREE AIR













Wednesday, April 27, 2016

HUMOUR QUOTATIONS BY EVAN ESAR - நகைச்சுவை எழுத்தாளர் இவான் இசார் நகைமொழிகள்



நகைச்சுவை எழுத்தாளர்
இவான் இசார்  நகைமொழிகள்

(HUMOUR QUOTATIONS BY EVAN ESAR)

மிருகக்காட்சி சாலை

மனிதர்களில் எத்தனை வகை என்று

பார்த்துத் தெரிந்துகொள்ள சிறந்த இடம்



நடத்தை

எதை எல்லாம் இழக்கமுடியுமோ

அத்தனையும் இழந்த பின்னால்

மிச்சமாய் ஒட்டியிருப்பது



கோபம்

உங்கள் மனதைவிட

வாயை வேகமாய் இயங்க வைக்கும்

உணர்ச்சி



அமெரிக்கா

கல்வியின் மீது மிகுந்த

மரியாதை வைத்துள்ளநாடு அமெரிக்கா.

ஏழு நாட்களில் ஒரு விளையாட்டு வீரர்

சம்பாதிப்பதைவிட ஒரு பேராசிரியர்

அதிகம் சம்பாதிக்கிறார் ஓர் ஆண்டில்



புள்ளியியல்



நம்பிக்கைக்குரிய புள்ளிவிவரங்களிலிருந்து

நம்பமுடியாத உண்மைகளை உற்பத்தி செய்யும்

விஞ்ஞானம்



கையெழுத்து

ஒருவனின் கையொப்பம்

எப்போதும் அவன் நடத்தையையும்

எப்போதாவது அவன் பெயரையும்

வெளிப்படுத்துகிறது.

Evan Esar Quotations translated -  By: Gnanasuria Bahavan, Editor, Vivasaya Panchangam, Expert in Agriculture, Conservation of Natural Resources, Development Communication & authoring books for the rural people.

Tuesday, April 26, 2016

படுக்கை அறையை சுத்தம் செய்யும் மாமியார் நாக்கு MOTHER-IN LAW'S TONGUE BED ROOM CLEANER


POLLUTION POLLUTION GO AWAY  - SERIAL

காற்றே காற்றே மாசு நீக்கி வா - தொடர்

படுக்கை அறையை 

சுத்தம் செய்யும்

மாமியார் நாக்கு


MOTHER-IN LAW'S 

TONGUE

BED ROOM

CLEANER

 

 Image Courtesy: Thanks Google

உங்கள் படுக்கை அறையை சுத்தம் செய்யவேண்டுமா ? படுக்கையறையில் காற்றோடு கலந்திருக்கும் நச்சு வாயுக்களை அகற்ற வேண்டுமா ? படுத்துத் தூங்கும்போது சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டுமா ? படுக்கையறையில் கூடுதலான ஆக்சிஜனை உற்பத்திசெய்ய வேண்டுமா ?  உருட்டல் புரட்டல் இல்லாமல் அமைதியாக தூங்க வேண்டுமா ? இந்த கட்டுரையை படியுங்கள்.

படுக்கை அறையில் வைக்க பாங்கான செடி இது. இரவு முழுவதும் ஆக்சிஜன் கொடுக்கும் செடி. நமது படுக்கை அறையில் காற்றில் இருக்கும் தீங்கு தரும் வாயுக்களை சுத்தம் செய்து தரும் செடி இது.  இதனால் நமக்கு சுவாசிக்க சுத்தமான காற்று கிடைக்கும.; கூடுதலாகக் கிடைக்கும் ஆக்சிஜன் நமக்கு நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகுக்கும்.

நம் ஊரில் பெரும்பாலான வீடுகளில் தொட்டியில் வளர்க்கும் செடியின் பிரபலமான பெயர்  மாமியார்நாக்கு. பேய்நாக்கு, பாம்புநாக்கு என்ற பெயர்களிலும் காசுச்செடி (ஆழநெல Pடயவெ) என்றும் இதனை அழைக்கிறார்கள். மாமியார்நாக்கை வீடுகளில் வளர்த்தால் பணம் சேரும்.

குற்றாழைவகைச்செடி இது. தரையிலிருந்து வளர்ந்து நிற்கும் கரும்பச்சை நிற நாக்குகள் பொல தென்படும். நேற்றியில் பூசை வைத்தது போல இலைகளின் குறுக்குவாட்டில் மஞ்சள் அல்லது வெள்ளை நிற வரிகள் காணப்படும். 
 
பொதுவாக அழகுச்செடியாக வளர்க்கிறார்கள். ஆஃப்ரிக்காவில் நார் எடுக்க பயன்படுத்துகிறார்கள். பரிசுப்பொருளாக முக்கிய விழாக்களில்  இதனை கொரிய நாட்டில் கொடுக்கும் வழக்கம் உள்ளது.

சான்சிவைரியா என்பது இதன் பொதுவான பெயர். இதன் தாவரவியல் பெயர் சான்சிவைரியா ஹையாசின்தாய்டஸ் (ளுயளெநஎநைசயை hலயஉiவொழனைநள). இதில் 70 வகையான செடிகள் உள்ளன. ஆஸ்பராகேசியே (யுளியசயபயஉநயந) என்னும் தாவர குடும்பத்தைச்சேர்ந்தது. இதன் சொந்த ஊர் மடகாஸ்கர் மற்றும் தெற்கு ஆசியா.

மாசு ஏற்படுத்தும் 107 வகையான நச்சுக்களை வளிமண்டலத்திலிருந்து நீக்கும் சக்தி படைத்தது. கார்பன்மோனாக்ஸைடு, கார்பன்டைஆக்சைடு, நைட்ரஜஜன் மோனாக்சைடு, ஃபார்மால்டிஹைடு, குளோரோஃபார்ம், பென்சீன், டிரைகுளோரோ எதிலீன் ஆகியவை இந்த 107 ல் அடக்கம்.
மாமியார்நாக்கு செடி (Image Courtesy: Thanks Google)

ஒரு வாரம்வரை தண்ணீர் காட்டாமல் இருந்தால்கூட “தாகம்” என்று வாய் திறந்து கேட்காது. கெட்டியான உயிர். குறைவான வெளிச்சமே போதும். அதிலேயே தனக்கு தேவையான உணவை தயாரித்துக் கொள்ளும். ரோம்ப சிக்கனமான ஜீவன். 

எல்லா தட்பவெப்ப சூழல்களுக்கு ஏற்ப அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளும். அடம்பிடிக்காது. நேரடி வெயிலில் வைத்தாலும் வளரும்.

இரவில் தூக்கம் வராதவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் இந்த மாமியார் நாக்கு.

ரூஸ்வெல்ட் இயற்கையை பாதுகாக்க இளைஞர் ராணுவம் அமைத்தார் ROOSEVELT FORMED TREE ARMY & SOIL SOLDIERS

மரங்கள் பாதுகாக்கும் ராணுவம் (சிசிசி)(Image Courtesy:Google)
ரூஸ்வெல்ட் 
இயற்கையை 
பாதுகாக்க 
இளைஞர் ராணுவம் அமைத்தார் 

ROOSEVELT FORMED
TREE ARMY & SOIL SOLDIERS

வேலையைத் தவிர வேறு எல்லா காரியங்களையும் செய்யும் இடம் எது என்று கேட்டால் நம்ம ஊர் “100 நாள் வேலைத்தளம்” என்று பச்சைக்குழந்தை கூட சொல்லும். அந்த அளவிற்கு அந்தத் திட்டம் ரொம்பவும் பிரபலமானது.
அங்கு என்னென்ன வேலைகள் நடக்கிறது என்று பார்க்கலாம்.

வேலைத் தளத்தில் சுணங்கி நிற்பது, நிழலில் ஒதுங்குவது, டெலிபோன் பேசுவது, கொஞ்சநேரம் கண்மூடி அமைதிகாப்பது, ஒரு குட்டித்தூக்கம் போடுவது, செல்போன்பேசுவது, வாட்ஸ்அப் பார்ப்பது, மெசேஜ் அனுப்புவது, எஃப் எம் கேட்பது, வீடியோ பார்ப்பது இது போக நேரம் கிடைக்கும்போது கொஞ்சம் வேலையும் செய்வது, இதுதான்; 100 நாள் வேலைத்தளங்களின் அஜண்டா. 

வெள்ளத்தில் சில திட்டுக்கள் மாதிரி அபூர்வமாக சில ஊராட்சிகளில்; சிலர் உபயோககரமாகவும் இதனை நடத்தலாம். அப்படிப்பட்டவர்களுக்காகத்தான் மழை என்னும் அதிசயம் இன்னும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
இப்போது நாம் சிசிசி க்கு வருவோம்.

சிசிசி யில் ஒருகட்டுப்பாடு இருந்தது. ஒரு ஓழுங்கு இருந்தது. எதை எப்போது எப்படி செய்யவேண்டும் என்ற வழிகாட்டுதல் இருந்தது. சிசிசி கிட்டத்தட்ட ஒரு ராணுவம் மாதிரி.

நல்ல பழக்கவழக்கங்கள், நேரம் தவறாமை, தனிநபர் ஒழுக்கம், பாதுகாப்பாக Nலை பார்த்தல், செய்யும் தொழிலை தெய்வமாக மதித்தல்;, உற்பத்தித்திறனை கூட்டுதல், பொறுப்புணர்வு கொள்ளல், திறமை வெளிப்படுத்தல், விதிமுறைகளுக்கு கட்டுப்படுதல் போன்றவை இந்த வீரர்களின் அடையாளமாக இருந்தன.  

சரியாக காலை 6 மணிக்கு சீனியர் லீடர் விசில் அடிப்பார்;. விசில் சத்தம் கேட்டதும் எழுந்திருப்பார்கள்;. 6.15 க்குள் தங்கள் படுக்கையை சரிசெய்வார்கள். காலை சிற்றுண்டி காலை 6.30 க்கு மேஜையில் இருக்கும்.
இரண்டாவது விசில் 6.45 க்கு பறக்கும். அனைவரும் கொடிமரத்தடியில் கூடுவார்கள். அடுத்து வருகைப்பதிவு நடக்கும். அன்று செய்யவேண்டிய வேலைகளை அறிவிப்பார்கள். 

“யாருக்கெல்லாம் தலைவலி, வயிற்றுவலி வேறு உடல் உபாதைகள் இருக்கு..” என்று கேட்டதும் கைகளை உயர்த்தியவர்களை சிகிச்சைக்கு அனுப்பி வைப்பார்கள்.

சரியாக காலை 7.00 மணிக்கு டிரக் தயாராக இருக்கும், வீரர்களை ஏற்றிச்செல்ல. வேலை செய்யவதற்கான கருவிகள் மற்றும் உபகரணங்களை முதலில் ட்ரக்கில் ஏறும். அதன் பின்னர் சாப்பாட்டுப் பொட்டலங்கள் ஏறும். மூன்றாவதாக சிசிசி வீரர்கள் ஏறியவுடன் ட்ரக் புறப்படும்.

வேலைத்தளத்தில் இறங்கியவுடன் வீரர்கள் குழுக்களாகப் பிரிந்து வேலை பார்ப்பார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு ஃபோர்மேன். “இதைச்செய் அதைச் செய்யாதே” என்று குழுவை வழிநடத்துவார்; ஃபோர்மேன்.

“வேலை செய்தது போதும் எல்வோரும் சாப்பிட வாருங்கள்”; என்று கூப்பிடும், அடுத்த விசில் 11.45 மணிக்கு. சேண்ட்விச், பழங்கள், கேக், காபி போன்றவை தயாராக இருக்கும்.

நிம்மதியான சாப்பாட்டுக்குப்பின் கொஞ்ச நேரம் சிலர் நண்பர்களுடன் மொக்கை போடுவர். சிலர் சிகரெட் பிடிப்பார்கள். சிலர் சுருட்டு பிடிப்பார்கள். சிலர் உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு என மயங்கி இருப்பர். சிலர் அப்போதும் வேலைபற்றி ஃபோர்மேனிடம் கிண்டுவார்கள்.

“ரெஸ்ட் எடுத்து போதும் மக்களா வேலை பாக்கலாம் வாங்க” என்ற அடுத்த விசில் அவர்களைக் கூப்பிடும் சரியாக 12.45 மணிக்கு.

கோடையின் பிற்பகல் வெயில் வேலையை கடுமையாக்கும். மழைக்காலம் வேலை செய்யவிடாமல் அலைக்கழிக்கும். குளிர் காலத்தில் ஜில்லிப்பு எலும்பு மஜ்ஜைக்குள் இறங்கும். எப்படிப்பட்ட மோசமான பருவ நிலைகளையும் போர்வீரர்களுக்கு சமமாக எதிர்கொண்டார்கள்.

நான்கு மணிக்கு வேலை முடிய டிரக்குகள் தயாராக நிற்கும். முதலில் வீரர்கள் கருவிகளையும் பாத்திர பண்டங்களையும் ஏற்றுவார்கள். டிரக்குகள் முகாம்களுக்கு புறப்படும். வீரர்கள் கருவிகளை இறக்குவார்கள். கருவி கிடங்குகளில் இறக்கி வைப்பார்கள். அதன் பின்னர் இரவு உணவு வரை அது அவர்களுடைய நேரம்.

குளிப்பது, முகச்சவரம் செய்வது, துணிதுவைப்பது, வீட்டுக்கு நல்ல பிள்ளையாய் கடிதம் எழுதுவது போன்றவற்றில் ஈடுபடுவர்.

முகாமின் பொது இடத்தில் மாலை 5 மணிக்கு முகாமின் கமாண்டிங் ஆபீசர் வீரர்களை சந்திப்பார். அவர் முக்கியமான அறிவிப்புகளை செய்வார். வீரர்களின் தோற்றம், உடை, போன்றவை சரியாக உள்ளதா என்றும் கவனிப்பார். “மேல் சட்டையில பட்டன் என்னாச்சு ? எலி தின்னுடுச்சா? எவ்ளோ அவசரமா இருந்தாலும் பேண்ட் ஜிப்பை போடாம வரக்கூடாது புரிஞ்சிதா…?” இப்படியெல்லாம்கூட கேட்பார்கள். 

இரவு உணவு மாலை    5.45 மணிக்கெல்லாம் மேஜைக்கு வந்துவிடும். காலை சிற்றுண்டி, மதிய உணவு சாப்பிடும்போது இருக்கும் டென்ஷன் இருக்காது. நிதானமாக சாப்பிடுவார்கள். ரொம்ப நிதானமாக சாப்பிடுபவர்களுக்கென்று தனியாக ஒரு மேஜை போட்டிருப்பார்கள். அதில் உட்கார்ந்து விடியவிடிய சாப்பிடலாம்.

சிலர் சாப்பிடுவது ரொம்ப காமெடியாக இருக்கும். சிலர் சாப்பிடுவதைப் பர்த்தால் நாம் சாப்பிட முடியாது. சிலர் சாப்பிட்ட இடத்தை சுத்தம்செய்ய இரண்டு அக்ரோணி சேனை வேண்டும். இதற்கென உயர் அதிகாரிகள் “டேபிள் மேனர்ஸ்”பற்றி பயிற்சி; தருவார்கள்.
மண் பாதுகாப்பு ராணுவம் (Image Courtesy: Google)

சாப்பிட்டு முடித்த பின்னால்; சிலர் படிக்க நூலகம் போவார்கள். சிலர் விளையாடப் போவார்கள். இன்னும் சிலர் அங்கு நடைபெறும் பயிற்சியில் பங்குபெற போவார்கள். பயிற்சி வகுப்புகள் இரவு 7.45 க்கு தொடங்கும். 

பெரும்பாலோர் இரவு 9.30 மணிக்கெல்லாம் படுக்கைக்கு திரும்புவர். பத்து மணி வாக்கில் விளக்குகள் அணையும். இரவுநேர காவலர்கள் முகாமை சுற்றி வருவர். காலை சரியாக 4.30 மணிக்கு சமையல்காரர்களை காவலர்கள் உசுப்பிவிடுவர்.

காலை 6 மணிக்கு மீண்டும் விசில் சத்தம் அடுத்தநாள் வேலைகளுக்கு பிள்ளையார்சுழி போடும்.

(NOTE: I made a study on Civilian Conservation Corps during my short visit in USA in 2012.)

Monday, April 25, 2016

ஸ்வீட் சிக்ஸ்டீன்



Image Guarentee:
பள்ளிக்கூடத்தில் தமிழ் வகுப்பு நடந்துகொண்டிருந்தது. ஆசிரியர் பையன்களை ஒரே ஒரு கேள்விதான் கேட்டார். யாரும் பதில் சொல்லவில்லை. அப்படி என்னதான் கேள்வி கேட்டார் ? கொஞ்சம் விவகாரமான கேள்விதான்.

'தமிழ்நாட்டில் ஜனத்தொகை அதிகமானதுக்குக் காரணம் ஒரு பழமொழிதான். அது என்ன பழமொழி ?'

இந்த கேள்விக்கு பதில் யாருக்கும் தெரியவில்லை. கடைசியாக அவரே அந்த பழமொழியைச் சொன்னார்.

'பதினாறும் பெற்று பெரு  வாழ்வு வாழ்க அப்படீன்னு புதுசா கல்யாணமான ஜோடிகளை பெரியவங்க வாழ்த்துவாங்க. பதினாறு என்று சொன்னதை எல்லோரும் குழந்தைன்னு தப்பாக நினைச்சிட்டாங்க.  அதன் விளைவுதான் என்று சொல்லி சிரித்தார்.

ஆனா உண்மையில் அதுக்கு அர்த்தம் பதினாறு செல்வங்கள்.

'அது என்ன சார்இ பதினாறு செல்வம் ?' அப்படீன்னு ஒரு பையன் கேட்டான். வாத்தியார் அந்த 16 செல்வங்களையும் படபடன்னு சொன்னார்.

'அறிவுஇ அழகுஇ இளமைஇ கல்விஇ துணிவுஇ நன்மக்கள்இ நல்லூழ்இ நுகர்ச்சிஇ நெல்இ நோயின்மைஇ புகழ்இ பொன்இ பொறுமைஇ வலிஇ வாழ்நாள்இ வெற்றிஇ

பெறவேண்டியது இந்த 16 செல்வங்கள்தான்'

 அதுக்குப்பிறகு  ரெண்டுநாள்கழிச்சு  விவசாய பாடம் நடத்த இன்னொரு வாத்தியார் வந்தார். பாடம் நடத்த ஆரம்பிச்சார். சொல்லிவச்சமாதிரி  அவரும் அதே கேள்விய கேட்டார்.

'பதினாறு செல்வங்கள் எவை எவை ?'

அறிவு அழகு என்று தொடங்கி வாழ்நாள் வெற்றி என்று பதினாறையும் வரிசையாக அடுக்கினான் ஒரு பையன்.

வாத்தியரே ஒரு கணம் ஆடிபோய்விட்டார். அந்த பையன் சொல்லுவான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. பிறகு அவர் சொன்னார்.

“இன்னொரு 16 இருக்கு அது தெரியுமா” என்றார் வாத்தியார்.

“தெரியும் சார் 16 வயதினிலே சார்.. கமல் சப்பாணியா நடிப்பார் சார்.. சூப்பரா இருக்கும் சார்..” என்று சொன்னான் இன்னொரு பையன்.

“இன்னொரு 16 இருக்கு அதை நான் சொல்றேன். பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் 16 தான்…நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ், கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன், அயன், மேங்கனீஸ், காப்பர், சிங்க், போரான், மாலுப்டினம், கால்சியம். மக்னீசியம், சல்ஃபர், குளோரின்..”

“நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ், இந்த மூணும் பிரதான சத்துக்கள்… கால்சியம், மக்னீசியம் சல்ஃபர் இது மூணும் இரண்டாவது முக்கிய சத்துக்கள்.. மேங்கனீஸ், காப்பர், சிங்க், போரான், மாலுப்டினம், குளோரின் இந்த ஆறும் நுண்சத்துக்கள்..அதாவது குறைவாக தேவைப்படும் சத்துக்கள்…” என்று வாத்தியார் சொல்லி முடித்ததும். ஒரு பையன் எழுந்து நின்றான். “என்னப்பா” என்றார். “ பயிர்சத்துக்கள் 16  பதினாறு முக்கியமா ? செல்வங்கள் 16 முக்கியமா ?” என்றான்.

“ 16 சத்துக்கள் இருக்குமாறு பாத்துகிட்டா வயக்காட்டுல பயிர்கள் உயரும். பயிர்கள் உயர்ந்தா குடிகள் உயரும். குடிகள் உயர்ந்தா அரசும் உயரும். இதை நாள் சொல்லல. நம்ம தமிழ்பாட்டி அதுக்காக ஒரு பாட்டே பாடி இருக்காங்க. என்ன பாட்டு யாராச்சும் சொல்றீங்களா? ” இதை சொல்லி முடிப்பதற்குள் ஒரு பையன் எழுந்து அந்த பாட்டை பாடிக்காட்டினான்.

“வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும்..”

“நீங்கள்ளாம் கற்புரம் மாதிரி இருக்கிங்க..உங்கள் எல்லோருக்கும் என் பாராட்டுக்கள் என்றார் ஆசிரியர்”
(Image Guarentee; Thanks to Google)












Sunday, April 24, 2016

தாஜ்மஹாலை பாதுகாக்கும் துளசி செடிகள் THULASI PLANTS PROTECTS TAJMAGAL


POLLUTION POLLUTION GO AWAY  - SERIAL

காற்றே காற்றே மாசு நீக்கி வா - தொடர்

 

தாஜ்மஹாலை 

பாதுகாக்கும் 

துளசி செடிகள் 

 

THULASI PLANTS

PROTECTS 

TAJMAGAL

 

ஷாஜகான் - மும்தாஜ் (Image Courtesy: Google)

“எங்கள் காதல் சின்னத்தை தொழிற்சாலைப் புகையிலிருந்து பாதுகாத்துவரும் துளசி-ஆக்சிஜன் பாதுகாப்பு வளையத்திற்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்” -இப்படிக்கு  ஷாஜகான் - மும்தாஜ்.

எனக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் பெயர் மிஸ்டர் நியுஸ். அவர் வந்தால் ஒரு நியுசோடுதான் வருவார். அது போல ஒரு வித்தியாசமான செய்தியுடன் வந்தார். 

“நேற்று பேப்பர்ல ஒரு செய்திப் பார்த்தேன் சார். தாஜ்மகாலை பாதுகாக்க துளசிச்செடி நட்டு வச்சிருக்காங்களாம். துளசி எப்படி தாஜ்மகாலை பாதுகாக்கும் ?”

அதுபற்றி எனக்குத் தெரிந்த செய்திகளை அவருக்கு தொகுத்து சென்னேன்.

“தாஜ்மகாலுக்கு சுற்றிலும் உள்ள தொழிற்சாலைகள் நிறைய இருக்கு. இந்த தொழிற்சாலை புகை காற்றோட கலந்திருக்கு. இந்த புகைதான் அழகான   வெள்ளைநிற தாஜ்மகாலை கொஞ்சம் கொஞ்சமா காவி நிறமா மாத்திகிட்டு இருக்குன்னு ஒரு செய்தியை ஏற்கனவே படித்திருக்கேன்…” என்றேன்.

“பொதுவாக காற்றில் இருக்கும் விஷவாயுக்கள வடிக்கும் சக்தி மரங்களுக்கு இருக்குன்னு நானும் படிச்சியிருக்கேன்..ஆனா துளசிச்செடிகள் இதைத்தடுக்குமா ?” என்றார் அந்த நண்பர்.

நான் அவரிடம் துளசிச்செடிகள் பற்றி சொன்ன செய்திகளை தொகுத்துச் சொன்னால் உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்.

பகலில் மரங்கள் கார்பென்டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளிவிடுகின்றன. இரவில் அதே காரியத்தை மாற்றி செய்கின்றன. ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு கார்பென்டை ஆக்சைடை வெளியேற்றுகின்றன. அதனால்தான் ராத்திரி நேரத்தில்  மரத்தடியில் படுக்கக் கூடாதென்பார்கள்.

ஆனால் துளசி 20 மணிநேரம் ஆக்ஸிஜன் தருகிறது. 4 மணிநேரம் ஓசோன் தருகிறது. ஓசோன் என்பது ஆக்சிஜனின் 3 மடங்கு ஸ்ட்ராங் டோஸ் என்பது உங்களுக்குத் தெரியும். ஆக துளசி இருக்கும் இடத்தில் ஆக்சிஜன் நிறைந்திருக்கும். 

“பல லட்சக்கணக்கில் நட்டிருக்கும் துளசிச்செடிகள் தாஜ்மகாலை சுற்றி ஒரு ஆக்சிஜனால் செய்யப்பட்ட ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த ஆக்சிஜன் பாதுகாப்பு வளையம்தான் தாஜ்மகலை பாதுகாககும் வேலை பார்க்கிறது” என்று நான் சொன்னதும்இ அடுத்து ஒரு கேள்வியைக் கேட்டார்.

“வீட்டுலகூட நாம் சுவாசிக்கும் காற்று மாசுபட்டிருக்குன்னு சொல்றாங்க ? வீட்டுக்கு ஒரு துளசிச்செடி நட்டுவச்சா நம்மைச்சுற்றி ஆக்சிஜன் பாதுகாப்பு வளையம் போடலாம்ல..?” என்ற ஒரு உபயோகமான கேள்வியைக் கேட்டார்.

“நீங்க சொல்றது வாஸ்தவம்தான்… நாம் சுவாசிக்கும் காற்றில் ஏகப்பட்ட கெட்ட வாயுக்கள் கலந்திருக்கு. இதன் மூலம் பல நோய்கள் வரலாம்… கார்பன் மோனாக்ஸைடு, கார்பன்டை ஆக்ஸைடு,  சல்பர்டை ஆக்ஸைடு, பென்சீன் இப்படி பல மோசமான வாயுக்கள் கலந்திருக்கலாம்…இந்த நச்சு வாயுக்களை எல்லாம் வடிகட்டுது துளசி. வடிகட்டி சுத்தமான காற்றை நமக்கு சுவாசிக்கத் தருது..” 

“இந்தியாவில் இன்னும்கூட நிறைய வீடுகளில் துளசிமாடம் இருக்கு. இந்த துளசிமாடமே  ஆக்சிஜன் பாதுகாப்பு வளையம் கான்செப்ட்தான். துளசிமாடம் நடுநாயகமாக வீட்டுக்குள்ளயே இருக்கும். சில வீடுகளில் கொல்லைப்புறத்தில் இருக்கும். பெண்கள் விடியற்காலையில் குளித்து முடித்ததும்  ஈரப்புடவையுடன் துளசிமாடத்தை சுற்றி வந்து வணங்குவார்கள்;.
துளசிமாடம் வைப்பதும் துளசியை வணங்குவதும் ஆன்மிகக் காரணங்கள்  பல சொல்லுவார்கள். துளசிச்செடி காற்றை சுத்தம் செய்யும் இயற்கைக் கருவி"

"24 மணி நேரத்தில் கார்பன்டை ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு 20 மணிநேரம் ஆக்ஸிஜன் தரும். மீதமுள்ள நான்கு மணி நேரத்தில் ஓசோன் தரும். ஓசோன் என்பது ஆக்சிஜனின் ஸ்ட்ராங் டோஸ்"

"நிறைய செய்தி சொன்னிங்க நன்றி. நீ கொடுத்த துளசிச்செடிக்கும்  நன்றி"

"துளசி செடியா நான் எங்க கொடுத்தேன் ? 

"நேற்றே எடுத்துகிட்டு போயிட்டேன் உன் தோட்டத்திலருந்து யாரும் சொல்லலியா ? " என்று அலட்சியமாய் சொல்லிக்கொண்டே நடந்தான்.

நான் "இல்லையே" என்று நான் சொல்வதை அவன் கவனிக்கவில்லை.

--------------------------------------------------------------------------------------------------------------------------------
ஷாஜகான், மும்தாஜின் அழகிய காதல் சின்னம் தாஜ்மகாலை பாதுகாக்க லட்சக்கணக்கான துளசிச்செடிகளை தாஜ்மகாலைச்சுற்றி நடப்பட்டுள்ளது என்றும்  துளசிச்செடி வளையம்தான் நச்சுவாயுக்களை வெளியேற்றி தாஜ்மகாலைப் பாதுகாத்து வருகிறது என்றும்  சொல்லுகிறது. உத்தரப்பிரதேச அரசு – செய்தி
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

துளசி மாடம் (Image Courtesy: Google)


Tuesday, April 19, 2016

நம்ம ஊர்வரை வந்துவிட்ட டிராகன் பழ சாகுபடி DRAGON FRUIT FARMING A PRIFITABLE VENTURE

டிராகன் சீனாவின் காவிய அரவம்




நம்ம ஊர்வரை  
வந்துவிட்ட 
டிராகன்  பழ சாகுபடி 

DRAGON FRUIT 
FARMING  A 
PRIFITABLE 
VENTURE

(நல்ல நிலம் வேண்டாம்.  நிறைய தண்ணீர் வேண்டாம்.   சாகுபடி செய்ய நிறைய பணம் வேண்டாம். சிக்கலான தொழில் நுட்பம் வேண்டாம்.  அதிக உரம் வேண்டாம். பூச்சி மருந்து வேண்டாம். டிராகன் பழம்   சாகுபடி  செய்யலாம்)

இந்த டிராகனின் பிறப்பிடம் மத்திய அமெரிக்கா. மெக்சிகோ, தாய்லாந்து, வியட்நாம், மலேஷியா   ஆகிய நாடுகளில், அதிகம் அறிமுகமானது. டிராகன் இந்தியாவில் கால்வைத்து வாணியம்பாடி பழக்கடைவரை வந்துவிட்டது.

இந்த பழம் குணமும் மணமும் சுவையும் நிறைந்தது. கிவி  மற்றும்  பேரி  பழங்கள் இரண்டையும் ஒன்றாக சேர்த்த காக்டெயில் சுவைகொண்டது.  

டிராகன் பழத்தின் இன்னொரு பெயர் வெண்தசை பித்தாயா. லத்தீன் அமெரிக்காவின் சப்பாத்திவகை பழம் இது.  வெண்தசை கொண்டது. இளஞ்சிவபு;பும் வெண்மையும் கலந்த நிறத்தில் இருக்கும்.  சிலவகை மஞ்சளும் வெண்மையும் கலந்த நிறத்தில்  பைனாப்பிள்  மாதிரியும் தென்படும்.

தடிமனான தோல் உடையது. தோட்டுப்பார்த்தால் மெத்மெத்தென்று இருக்கும். டிராகன் போல  பழத்தின்மேல் செதில்கள் இருக்கும். பார்க்க “சரியாகத்தான் பெயர் வைத்திருக்கிறார்கள்” என்று சொல்லத்தோன்றும்.  பழத்தை வெட்டிப் பார்த்தால், ஒரு சர்க்கரைப்பொடி கொட்டிவைத்த குப்பிபோல தெரியும். கூடுதலான வெள்ளை நிறத்தில் இருக்கும். ஊடாக கடுகைவிட சிறிய கருநிற விதைகளைக் கொண்டது. கடித்துத்தின்ன கஷ்டம் தராது. 

வைட்டமின் சி, நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை சொல்லிக்கொளு;ளும் அளவில் உள்ளன.  

வைட்டமின் ‘சி’  காரட்டில் இருப்பதைக் காட்டிலும்  3  மடங்கு   அதிகம்.  100  கிராம் பழத்தில் அடங்கியுள்ளது,  21  மில்லி  கிராம்  ‘சி’வைட்டமின்.  

100  கிராம்  டிராகன் பழத்தில்  3  கிராம்  நார்ச்சத்தும் கொஞ்சம் கூடுதலாகவே  இரும்புச் சத்தும்  நீர்ச்சத்து 87 சதமும உள்ளன.  கொழுப்பு சத்து ‘மூச்’; விடக்கூடாது. கலோரிசத்து குறைவான அளவே  உள்ளது.


இதை சாகுபடி செய்ய அதிக தண்ணீர் தேவையில்லை.  மழை பெயரளவில் பெயய்தால் போதுமானது.    20 -- 50  அங்குல மழைபெறும் இடங்களில்கூட டிராகன் சக்கைப்போடுபோடும்;.  104  டிகிரி  வரை கொளுத்தும் வெயிலைக்கூடத் தாங்கும். முதல் ஆண்டே காய்க்கத்துவங்கும். 5 முதல் 6 டன் பழங்கள் ஒரு ஏக்கரில் கிடைக்கும். ஒரு கிலோ பழம் 200 முதல் 250 ரூபாய்வரை விற்பனை ஆகிறது.

ஹைலோசெரியஸ்  அண்டேட்டஸ் (Holocereus undatus) என்பது இதன் தாவரவியல் பெயர். கேக்டேசியே  தாவர குடு ம்பத்தைச் சேர்ந்தது.  ஒரு வகையான  கொடிவகை  சப்பாத்தி.  20 அடி கீளம் வரை கொடிகள்  ஓடும். நைட்  குயின் என்றும்,  மூன்பிளவர் என்றும்  அழைக்கும் இதன் பூக்கள் ரம்மியமான  மணம் கொண்டவை.  மலரும் முன் சமைக்கலாம்.

கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் நமது எலும்பு மற்றும் ரத்த  ஓட்டத்திற்கு மிகவும் நல்லது. இந்தப் பழம் சாப்பிடுபவர்களுக்கு மலச்சிக்கல் என்ற சிக்கலே இருக்காது. இதற்குக் காரணம் இதில் இருக்கும் உபரியான நார்ச் சத்து.  

டிராகன் பழத்தை தமிழில்  நறுகண்பழம்,  அகிப்பழம் என அழைக்கலாம்.(   வலைத்தமிழ்தளம்). இதனை சாகுபடி செய்ய விரும்புவோர் கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம். 

Keshav Didge, M/s Anilkumar S. Barmecha
ASB FARMS, Ghodnadi, Tal. Shirur, Dist. Pune - 412 210, Mobile: +91 98227 77466



Image Courtesy:en.vietdragon.com, 123rf.com
                           
பழங்களுடன்கூடிய டிராகன் கொடிகள் 

டிராகன் பழம் 

Monday, April 18, 2016

மரம் நடுவது பணம் சம்பாதிக்கும் உத்தி - பிராங்க்ளின் டிலானோ ரூஸ்வெல்ட் - TREE PLANTING A WAY OF EARNING ROOSEVELT




ரூஸ்வெல்ட்டின் சிசிசி (Image Courtesy:Google)













 மரம் நடுவது
பணம் சம்பாதிக்கும்
உத்தி -
பிராங்க்ளின்
டிலானோ
ரூஸ்வெல்ட்

TREE  PLANTING A WAY OF
EARNING
FD ROOSEVELT

(CIVILIAN CONSERVATION CORPS PROTECTED USA FROM GREAT DEPRESSIONS)
                                                               
முன்கதை சுருக்கம்

(கிரேட் டிப்ரஷன்’ல் உலக நாடுகள் அத்தனையும் பாய்மரம் இல்லாத படகு மாதிரி தத்தளித்துக் கொண்டிருந்தது. அந்த சமயம் அதிபர் தேர்தல் வந்தது. தேர்தலில் ஃபிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் (ரூஸ்) ஜெயித்தார். அமெரிக்காவின் ஜனாதிபதி ஆனார். அந்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சிவிலியன் கன்சர்வேஷன் கார்ப்ஸ் (சிசிசி) என்ற திட்டத்தை அறிமுகம் செய்தார். 1942 ம் ஆண்டில் அமெரிக்கா “அப்பாடா” என்று மாமூல் நிலைக்கு திரும்பியது)

கிரேட்டிப்ரஷன் சுனாமியாக சுழன்றடித்தது. ஸ்டாக் எக்சேஞ்ச், வங்கிகள், பெரும் வியாபார நிறுவனங்கள் எல்லாவற்றையும் வேரோடு பிடுங்கி எறிந்தது. அமெரிக்காவின் அதிபராக இருந்தும் கைகளை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஜனாதிபதி ஹ_வரின் பதவியையும் பிடுங்கி எறிந்தது.

ஒரு மாவீரனைப்போல கிரேட்டிப்ரஷனை எதிர்கொண்ட ரூஸ்;’ஐ ஆசிர்வதித்தது. யார் இந்த ரூஸ் ? எந்த ஊர் ? எப்படி இந்த பதவியை எட்டிப் பறித்தார் ? சிவிலியன் கனசர்வேஷன் கார்ப்ஸ் (சி சி சி) என்னும் சகலரோக நிவாரணி அவர் கைக்கு கிடைத்தது எப்படி?

“கட்டிய வீட்டுக்கு நொட்டு சொல்றது ஏராளம்” என்பது போல பலர் பலவிதமாக பேசினார்கள். அடால்ஃப் ஹிட்லரின் ஜெர்மன் லேபர் போர்ஸ்’தான் இதற்கு வேர் என்றும் சொன்னார்கள். ஆனாலும் ரூஸ்’ன் சொந்த மூளையில் உதித்ததுதான் சி சி சி.

ரூஸ்வெல்ட்’ன் குடும்பத்துக்கு சொந்தமானது “ஸ்பிரிங்வுட்; எஸ்டேட்”. அது வைறட்பார்க் (ர்லனந Pயசம) என்னும் இடத்தில் ஹட்சன் ஆற்றின் கிழக்குக் கரையில் 1200 ஏக்கரில் பரந்து விரிந்திருந்தது. நியூயார்க்கிலிருந்து அல்பேனி செல்லும் வழியில் இருந்தது வைறட்பார்க். ரூஸ்வெல்ட்டின் 18 வயதில், அவர் அம்மா சாரா அந்த எஸ்டேட்டின் நிர்வாகப் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார்.

அந்த எஸ்டேட்டின் பழைய ரெக்கார்டுகள் அதன் பெருமைகளை எடுத்துச்சொன்னது. அதிக மக்காச்சோளம் விளைவித்ததற்கு 1840 ல் பரிசும் பாராட்டும் பெற்றிருந்தது. 70 ஆண்டுகளுக்குப்பின் எஸ்டேட் இவர் கைக்கு வந்தது. ஆனால் அப்Nபுhது எடுத்த மகசூலில் பாதியைக்கூட இவரால் எடுக்க முடியவில்லை.

காரணம் என்ன என்று ஆய்வு செய்தார். மேடான பகுதியில் இருந்த எஸ்டேட்டில்  ஏராளமான ஓடைகள் உருவாகி இருந்தன. இந்த ஓடைகள் எஸ்டேட்டிலிருந்து ஏகப்பட்ட மண்ணை ஹட்சன் ஆற்றுக்கு ஏற்றுமதி செய்வதைப்பார்த்து கொண்டு சென்றதை கவனித்தார். எஸ்டேட்டில் ஒரு இடமும் பாக்கி இல்லாமல் அனைத்து பகுதிகளிலும் மண்அரிப்பை பார்க்கமுடிந்தது.

சிறு வயதில் 1891 ல் ஏற்பட்ட அனுபவம் ஒன்றும் அப்போது நினைவுக்கு வந்தது.

ரூஸ் அப்போது 9 வயது சிறுவன். அவர் குடும்பம் அப்போது ஐரோப்பாவில் இருந்தது. தனது ஊருக்கு அப்பால் இருந்த ஒரு கிராமத்திற்கு சைக்கிளில் சென்றார். அங்கு 200 ஆண்டுகளாக அந்த மக்களால் பராமரிக்கப்பட்ட காடு ஒன்றினை பார்த்தார். அந்த கிராமத்து மக்களுக்கு வருமானம் அதிலிருந்துதான் கிடைத்தது. அது இவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த மக்களின் வரியைக்கூட கட்ட பணம் தந்தது அந்த காடுகள்தான். காடுகள் என்றால் அது பணம் தரும் என்று அவர் மனதில் பதிந்திருந்தது.

1910 ம் ஆண்டு தன் சொந்த நிலத்தில் காடு வளர்த்தால் என்ன எனத் தோன்றியது. 1911 ல் சிராகுஸ் பலகலைக்கழகத்திலிருந்து வனத்துறை வல்லுநர்களை அழைத்துவந்தார். தனது எஸ்டேட்டை சுற்றிக்காட்டினார். “இதை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டார், ரூஸ்.

“முதலில் ஓடைகளை அடையுங்கள்… மண்அரிப்பை தடுங்கள்.. மரங்களை நடுங்கள்...உங்கள் நிலங்கள் தானாக வளம்பெறும்…நிலவளம்; நீர்வளம் வனவளம் மூன்றையும் சரிசெய்யுங்கள்…” என்று கூறினார்கள் அந்த நிபுணர்கள்.

1912 ல் சில ஆயிரம் மரங்களை நட்டார். சுமார் அரை மில்லியன் மரங்களை தான் இறக்கும் வரை 556 ஏக்கர் பரப்பில் நட்டு முடித்தார். சுமார் 32 வகை மரங்களை நட்டார். ஸ்புரூஸ், ஸ்காட்ச், நார்வேபைன், ஒயிட்பைன், டியூலிப்பாப்ளார் போன்றவை இவற்றில் முக்கியமானவை.

லார்ச், சிட்காஸ்புரூஸ், டவுக்ளஸ்பிர்;, வெஸ்டன் எல்லோ பைன், போன்ற அயல்நாட்டினங்களையும் தனது எஸ்டேட்டில் நடவு செய்தார். தான் மரம் நடுவதை பெருமையாகக் கருதினார். மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது “உங்கள் தொழில்” என்று கேட்டதற்கு “என் தொழில் மரம் நடுவதே” என்று கூறினாh ரூஸ்வெல்ட்.;

 “ரூஸ்வெல்ட் அழகுக்காக மரம் நடவில்லை. விளம்பரத்திற்காக மரம் நடவில்லை. அது ஒரு பணம் சம்பாதிக்கும் உத்தி” என்று கூறினார், நெல்சன்பிரவுன், சிராகுஸ் பல்கலைக்கழக வனத்துறை நிபுணர்.
பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்  (Image Courtesy: Google)

கிரேட் டிப்ரஷன் உலக நாடுகளை அத்தனையையும் பாதித்தது - GREAT DEPRESSION DAMAGED THE WHOLE WORLD


கிரேட் டிப்ரஷன்

உலக நாடுகளை 

அத்தனையையும் 

பாதித்தது 


GREAT DEPRESSION 

DAMAGED THE 

WHOLE  WORLD


கிரேட்டிப்ரஷன் (Image Courtesy;Google)

                                                                      
முன்கதை சுருக்கம்

(கிரேட் டிப்ரஷன்’ல் உலக நாடுகள் அத்தனையும் பாய்மரம் இல்லாத படகு மாதிரி தத்தளித்துக் கொண்டிருந்தது. அந்த சமயம் அதிபர் தேர்தல் வந்தது. தேர்தலில் ரூஸ்வெல்ட் ஜெயித்தார். அமெரிக்காவின் ஜனாதிபதி ஆனார். அந்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சிவிலியன் கன்சர்வேஷன் கார்ப்ஸ் (சிசிசி) என்ற திட்டத்தை அறிமுகம் செய்தார்.)

கிரேட் டிப்ரஷன் எப்படி அமெரிக்க மக்களை அலைக்கழித்தது ? அவர்கள் எப்படி துன்பப்பட்டார்கள் ? எப்படி துயரப்பட்டார்கள் ? இதைப்பற்றி கொஞ்சமாவது தெரிந்துகொண்டால்தான் சிசிசி யின் மகத்துவம் புரியும். இயற்கை வளங்களை சீர்செய்யும் வேலை எப்படி இதற்கு உதவியாக இருந்தது ? இதை புரிந்துகொள்ள முடியும்.

கற்பாறையின்மீது விழுந்த கண்ணாடி ஜாடி மாதிரி ஆனது 1929 ம் ஆண்டு அமெரிக்காவின் ஸ்டாக் எக்சேஞ்ச.; இதுதான் கிரேட் டிப்ரஷனின் முதல் அட்டாக். வேலைவாய்ப்பு தந்த கம்பெனிகளும், தொழிலகங்களும் பகுதிபகுதியாகவும் முழுவதுமாகவும் காணாமல் போயின.

13 முதல் 15 மில்லியன்பேர் வேலையின்றி சாலைகளில் அலைந்தனர்.

வாங்குவோரிடம் டப்பு இல்லாததால் கடைகண்ணிகள் வெறிச்சோடிக் கிடந்தன. பொருட்கள் மட்டும் குவிந்திருந்தன. சராசரி மக்களின் வீட்டு அடுப்புகளில் பூனைகள் தஞ்சமடைந்தன. பஞ்சமும் பசியும் தலைவிரித்தாடின. வறுமையில் மக்கள் தற்கொலை செய்துகொள்வது பத்திரிக்கைகளில் அன்றாட தலைப்புச் செய்திகளாயின.

இந்த ராட்சச பொருளாதார வீழ்ச்சி அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பாம்பின் விஷமாகப் பரவியது. முக்கியமாக ஐரோப்பிய நாடுகளை சின்னாபின்னமாக்கியது. 

வேலையில்லாமல் மக்கள் சாலையில் அலைந்தனா.; அது 1930 களில் 4 மில்லியனாக இருந்தது. அடுத்த ஆண்டே 6 மில்லியனாக ஆனது. தொழிற்சாலைகளின் உற்பத்தி பாதாளத்தை நோக்கி பயணம் செய்தது. 

நம்ம ஊர் மோர் வினியோகம் மாதிரி; இலவச ரொட்டியும் சூப்பும் விநியோகம் செய்தார்கள் பசையுள்ளவர்கள். நகரம் கிராமம் என்ற வித்தியாசம் இன்றி இலவசங்களுக்கு நீண்ட வரிசைகள் நின்றன.

ஒரு முரட்டு சூறாவளியில் பிடுங்கி எறியப்பட்ட மரங்களாய் விவசாயிகளை முற்றிலுமாக சாய்த்தது கிரேட்டிப்ரஷன்.

விளைபொருட்களின் விலை அறுவடைக் கூலயைக்கூட ஈடுசெய்வதாக இல்லை. அவை எல்லாம் வயலோடு வயலாக அழுகி மக்கிப்போயின. சராசரி குடும்பங்களில்  பசியும் பட்டினியும் நிரந்தர விருந்தாளியாகக் குடியேறின.
“100 டாலருக்கு 2 டாலர் தரட்டுமா ? சரின்னா சொல்லுங்க. இன்னும் கொஞ்சநாள் போச்சின்னா அதுகூட கிடைக்காது” என்று வங்கிகள் வாடிக்கையதளர்களிடம் பேரம் நடத்தின.

1933 ல் ஆயிரக்கணக்கான வங்கிகள் தங்கள் வியாபாரத்தையும் கதவுகளையும் இழுத்து மூடின. ஜனாதிபதி ஹ_வர் அரசு தள்ளாடிய வங்கிகளைத் தாங்கிப்பிடிக்க முயன்று தோற்றுப்போனது. “இதெல்லாம் எங்க வேலை இல்லப்பா.. ஆளை விடுங்கப்பா” என்று பிரச்சினைகளை கூட்டிவாரி குப்பைக் கூடையில் கொட்டியது அரசாங்கம்.

கொஞ்நாடகளில் அதிபர் தேர்தல் வந்தது. “நீங்க அதிபரா இருந்து கிழிச்சது போதும் போயிட்டு வாங்க..அப்புறமா பாப்பொம்..” என்று  மக்கள் ஹ_வரை கூட்டிபெருக்கி குப்பத்தொட்டியில் வீசினர். 

1933 மார்ச் 4 ம்நாள் ரூஸ்வெல்ட் அமெரிக்க அதிபர் நாற்காலியில் அமர்ந்தார். அவருடைய முழுபெயர் ஃபிராங்க்ளின் டிலானோ ரூஸ்வெல்ட். சுருக்கமாக மக்கள் அவரை ‘எஃப்டிஆர்’ என அழைத்தனர். இனி நாம் அவரை இன்னும் சுருக்கமாக ‘ரூஸ்’என்று அழைக்கலாம்.

‘ரூஸ்’ அடிப்படையில் ஒரு விவசாயி. ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு விவசாயம்தான்; அடிப்படை. விவசாயத்திற்கு அடிப்படை இயற்கை வளங்கள்தான். இயற்கை வளங்களை பாதுகாக்காமல் பராமரிக்காமல் மேம்படுத்தாமல்; ஒரு ஆணியையும் கழற்ற முடியாது என்று நம்பினார் ‘ரூஸ்’.

அரசு கட்டிலில் ஏறிய உடன் எஃப்டிஆர் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் மாதிரி அடித்து ஆடினார். தினமும் ஜனங்களோடு ரேடியோவில் பேசினார். அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார். பிரபலமான இந்த ரேடியோ பேச்சுக்கு “ஃபைர் சைட் சேட்ஸ்” என்று பெயர். நெருப்பு கணப்பின் அருகில் அமர்ந்து பேசுவது என்பது ஒரு பழக்கம். நாம்; டீக்கடையில் உட்கார்ந்து பேசுவதுபோல.
ரூஸ் பதவியேற்று 100 நாட்கள் ஆனது. தொழிற்சாலைகளில் சக்கரங்கள் சுழன்றன. வங்கிகள் கதவுகளை மெல்லத் திறந்தன. விவசாயிகள் தைரியமாய் அறுவடை செய்தனர். கடைகண்ணிகளில் ஜனங்கள் நடமாட ஆரம்பித்தது. தேங்கிக்கிடந்த  பொருட்கள் வியாபாரம் ஆகத்;தொடங்கின. தினம்தினம் பல ஆயிரக் கணக்கில்; இளைஞர்களுக்கு வேலை தந்து பெற்றோர்களின் வயிற்றில் பாலை வார்த்தார், ‘ரூஸ்’. சி சி சி பிரபலமானது.
அதன் பின்னர் அமெரிக்காவின் ஜி டி பி ஒவ்வொரு ஆண்டும் 9 சதம் துள்ளி குதித்தது. ஆனால் 1938 ல் மீண்டும் ஒருமுறை பொருளாதார வீழ்ச்சி தனது தனது புத்தியைக் காட்டியது. 

1939 ல் ஹிட்லரின் நாடுபிடிக்கும் ஆசையால் 2 ம் உலகப்போர் வெடித்தது. போரில் ஹிட்லருக்கு எதிரான முடிவை எடுத்தது அமெரிக்கா. “அவ்ளோ திமிரா உனக்கு என்ன செய்யறோமுன்னு பார்” என்று அமெரிக்காவின்  பேர்ள்ஹார்பரில் மூர்க்கமாக குண்டுகளை வீசியது ஜப்பான். “நீங்க வீசினது வெறும் கோலிக்குண்டு நாங்க போடறோம் பாரு அதுதான் குண்டு” என்று பதிலடி கொடுக்க அமெரிக்கா போரில் குதித்தது. 

போரின் விளைவாக தொழிற்சாலைகளில் உற்பத்தி முடுக்கிவிடப்பட்டது. உற்பத்தி மளமளவென அதிகரித்தது. விளைவு 1942 ல் அமெரிக்கா மாமூல் நிலைமையை எட்டியது. கிரேட்டிப்ரஷன் போயே போச்சி.
கிரேட் டிப்ரஷேன் (Image Courtesy:Google)

கிரேட்டிப்ரஷனும் உலகம் முழுவதையும் சீரழித்தது. அதனால் அதையும் உலகப்போரின் பட்டியலில் சேர்ப்பதில் எந்தத் தவறும் இல்லை. அப்படிப்பார்த்தால் உலகை உலுக்கியவை மூன்று உலகப்போர்கள்.

Thursday, April 14, 2016

மனுஷண்டா நீ - சிறுகதை


மனுஷண்டா நீ -  சிறுகதை 


பஸ்ஸில் உட்கார்ந்திருப்பவர்களைவிட நின்றிருப்பவர்கள் கூட்டம் ஜாஸ்தியாக இருந்தது. மதுரை புராதனமான நகரம். அந்த தோஷம். பஸ் குதிரை மாதிரி துள்ளிச் சென்றது. இந்தத் துள்ளலுக்கு என்னைத் தவிர, இதர பிரயாணிகள் பழக்கப் பட்டிருந்தனர். தினம் ஏறும் குதிரை.

      நான் மதுரைக்கு புதுசாய் வந்த குமாஸ்தா.

      ஜனத்தொகையில் இடம்பெறும் ஓரு சராசரி.

      மேலும் என்னைப்பற்றி சொன்னால் - யூகேஜி’ல் ஒரு பெண்,    எல்கேஜி’ல் ஒரு பையன். மேல்அதிகாரிக்கும் மேலாக மிரட்டும் மனைவி. இன்றும் பி எஃப்.--ல் இருக்கும் லோன். அப்புறம் மார்வாடி கடையில் அடகிலிருக்கும் சொற்ப நகை. சாரி இதெல்லாம் கதைக்கு சம்மந்தப்படாதவை. ஆனாலும் இது உணர்ச்சிபூர்வமான கதை. தேவைப்படலாம்.

      ஒருநிமிஷம். குமாஸ்தாவுக்கு துப்பறிய ஒரு சந்தர்ப்பம்.

      பஸ்ஸில் என் கண்ணுக்கு முன்னாலேயே ஒரு பிக் பாக்கெட் ஆசாமி. அகத்தின் அழகு முகத்தில் தெரிந்தது. ஒவ்வொருத்தர் பாக்கெட்டாக நோட்டம் பார்த்தபடி முன்னேறிக் கொண்டிருக்கிறான். பலரும் அவனை கவனிக்கவில்லை. என்னை அவனால் ஏமாற்ற முடியவில்லை.

      என் பாக்கெட்டை ஒருமுறை தொட்டுப் பார்த்துக் கொண்டேன். வாங்கிய சம்பள பணத்தில் வாங்கிய அல்வா. மதுரை  ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரில் இருந்த கடையில் வாங்கியது. திருநெல்வேலி இருட்டுக்கடை ஃபார்முலாவில் செய்த ஒருகிலோ சூடான அல்வா,      இரண்டு கேட்பரீஸ,; இரண்டு முழம் மல்லிகைப்பூ, இது போக மீதி பணம், எல்லாம் பத்திரமாக இருந்தது,

      இப்போது அந்த பிக் பாக்கெட், ஒரு கண் தெரியாத ஆசாமி பக்கத்தில் போய் நின்றான். அடுத்த நிமிடம் கத்தையாய் அந்த ஆளிடமிருந்து ரூபாய் நோட்டுக்களை உருவிவிட்டான்.

      “பிக்பாக்கெட் அடிச்சிட்டான்… பிக்பாக்கெட் அடிச்சிட்டான் … டிரைவர் வண்டியை நிறுத்துங்க” என்றபடி ஓடிப்போய் அவன் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டேன். திமிறினான். உடும்புப்பிடியாய் பிடித்தேன். இரண்டு குலுக்கும் ஒரு பெருமூச்சும் விட்டு பஸ் வைகை பாலத்தின் மீது நின்றது. எல்லோரும் பஸ்ஸைவிட்டு இறங்கினோம். டிரைவர், கண்டக்டர், பிரயாணிகள் -- எங்களைச்சுற்றி வியூகமாய் றின்றனர்.

      “ இந்த கண்ணு தெரியாத ஆளுகிட்ட இவன் பிக் பாக்கெட் அடிச்சிட்டான். செக்கப் பண்ணிப் பாருங்க…” – என்று உணர்ச்சி வசப்பட்டேன நான்.

     “ யோவ் மொதல்ல கையை விடுய்யா…” அதிகாரமாய் என்னை அதட்டினான் பிக்பாக்கெட்.

      விட்டேன்.

      “ஏம்பா நான் ஒம்பணத்தை நானா எடுத்தேன் ? சொல்லுப்பா…” பிக்பாக்கெட் குருட்டு ஆசாமியை அரட்டினான்.

    “உங்க பணம் இருக்குதான்னு பாருங்க… கண்டிப்பா இருக்காது” நான் அவசரப்பட்டேன்.

     “நீங்க கொஞ்சம் சும்மா இருங்க…அவரு பார்த்து சொல்லட்டுமே…” என்றார் சக பிரயாணி ஒருத்தர்.

    “எங்கிட்ட எல்லாமே சரியா இருக்கு… ”

    “யோவ் சரியா பாருய்யா…” நான்.

    “  பாத்துட்டங்க எல்லாம் சரியா இருக்கு. ”

    “  சார் ஏதாவது கனவு கண்டிருப்பார். ”  ஒருத்தர்.

    “  அவன் அவனுக்கு கனவு காண பஸ்தான் கெடைச்சதா…? இன்னொருத்தர்.
    “  செல பேரு வேணுமின்னே இந்த மாதிரி ரகள பண்ணி, ஏதாவது பெரிசா லூட் பண்ணிடுவானுங்க… இந்த மாதிரி ஒரு கூட்டமே இருக்கு…”  என்று பின்னாலிருந்து ஒரு குரல்.

      அதைத் தொடர்ந்து ஒருகை வேகமாக வந்து, என் முகத்தில் “நங்” –கென்று இறங்கியது. வாயில் உப்புக் கரித்தது.  ரத்தம்.

      அப்பொறம் சரமாரியாக முகம் மார்பு முதுகு இன்னபிற பிரதேசங்களிலும்  தருமஅடி.

      “யோவ் இருங்கய்யா…  எதுக்குய்யா இந்த ஆளை இப்படி அடிக்கறீங்க? விடுங்கய்யா…” என்மீது அடையாயு; அப்பியிருந்த  கூட்டத்தை ஒருத்தர் வழித்துத் தள்ளினார்.

      ஒருவழியாய் எல்லோரும் ஒதுங்கிப்போனார்கள். உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண் களைந்தவன் யார் ? யார் அந்த எம்ஜியார் ? தலையை உயர்த்திப் பார்த்தேன்.  “ஆ ..அம்மாடி…” வலி. கழுத்தைத் திருப்ப முடியவில்லை. அவன்தான். பிக்பாக்கெட் அடித்தானே அவன்தான். பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்.

ஏன் காதுபட அவனை நிறை பேர் பாராட்டினார்கள். காட்டிக்கொடுத்தவனை காப்பாற்றிய கருணாமூர்த்தி என்றார்கள். எல்லோராலும் அவனை மாதிரி செய்யமுடியாதாம். “இன்னா செய்தாரை ஒருத்தல்….” என்று திருக்குறளை மேற்கோள் காட்டி பாராட்டினர்.

என்னை பார்த்துக் கொண்டே சொன்னான் ஒருத்தன்“ இந்தமாதிரி சண்டையை மூட்டி விட்டுட்டு நைசா நகை பணணம்னு அடிச்சிடுவானுங்க” அவனைத் தொடர்ந்து, ரயில்வே ஸ்டேஷனில், பஸ்ஸ்டேண்டில், வங்கிகளில் இதுமாதிரி நடந்த சம்பவங்களை சொல்லிக்கொண்டே என்னையும் ஒருமுறை பார்த்தனர். ஒருவேளை என்முகம் அசல் பிக்பாக்கட் மாதிரி இருக்கலாம்.

என்னை புழுமாதிரி கேவலமாகப் பார்த்தார்கள்.
அந்தபிக்பாக்கட் நல்லபிள்ளையாக ஒரு புன்சிரிப்பை முகத்தில் அணிந்திருந்தான். சாத்தான் !
 
      இப்போதுங்கூட அவன் தடுத்திராவிட்டால் நார்நாராக கிழித்திருப்பார்கள். என் சட்டை ரிப்பன்களாக மாறியிருந்தது. கழற்றி எறிந்தேன். டிரைவர் சீட்டுக்கு அருகாமையில் உருண்டு கிடந்த டிபன்பாக்சை கொண்டு வந்து கொடுத்தான். அவன்தான் சாத்தான் !

      பஸ் கிளம்பியது.

      பெரியவர் ஒருத்தர், ஆதரவாய் பக்கத்தில் உட்காரச் சொல்லி இழுக்க, அவமானத்தால் குன்றி சிறுத்து, உட்கார எல்லோருடைய கண்களும் என் முதுகில். என் முகத்தில்.

      எல்லோருடைய பேச்சிலும் நான்.

      இரண்டு சீட்டுக்கு முன்னால் அவன,; யோக்யன்.

      “காட்டுப் பிள்ளையார் கோயில். எறங்குங்க சார்….” கண்டக்டர்.

      விசில் திடுக்கிட்டு எழுந்தேன்.

      நான் இறங்க வேண்டிய இடம்.

      என் மானம் மரியாதை, சூடு சொரணை எல்லாம் அந்த பஸ்ஸில் நொருங்கிக் ;கிடந்தது. நான்மட்டும் தனி ஆளாய் பஸ்ஸிலிருந்து இறங்கினேன்.

      இன்னும் பத்து நிமிஷ நடையில் என் வீடு.

      சாலையில் விளக்குகள் அணைந்திருந்தது. நிம்மதியாய் இருந்தது நடக்க. அந்த சாலையில் அப்போது போக்கும் இல்லை. வரத்தும் இல்லை.

      “அண்ணாச்சி ஒருநிமிஷம்” பின்னாலிருந்து குரல்.

      திரும்பிப் பார்த்தேன்.  சாத்தான்.  பிக்பாக்கெட்.

      நான் அங்கேயே நின்றேன்.

      அவன் இருட்டில் நிழலாய் வந்தான்.

      “சாரி… அண்ணாச்சி… பாவம் நீங்க….  ஒரு தப்பும் செய்யாத உங்கள எல்லோரும் அடிச்சது… உண்மையிலேயே நான் எதிர்பார்க்கல”
    “நீ அவ்ளோ யோக்கியனாட்டம் பேசறியே… அந்த குருட்டு ஆளோட பணத்தை நீ பிக்பாக்கெட் அடிக்கலேன்னு சொல்லு பாப்போம்…”

      “நான் அவங்கிட்ட பிக்பாக்கெட் அடிச்சது வாஸ்தவம்தான். ஆனா அவன் குருடன் இல்ல. பிச்சை எடுக்க அவன் போடும் வேஷம். வேஷம் தெரியாம அவன் என்னை பல தடவை ஏமாற்றி இருக்கான். அதுக்கு நான் குடுத்த ஷாக் டிரீட்மெணட்தான் அது…”

“எனக்கு அவன் ரொம்பநாளா அறிமுகம். செய்யற தப்புக்கு பிராயசித்தமாக அவனுக்கு நூறு இருநுறுன்னு அப்போ அப்போ குடுத்திருக்கேன்…. அவன் குருடு இல்ல பிராடுன்னு இன்னக்கித்தான் தெரிஞ்சிக்கிட்டேன். அது அவனுக்கும் தெரியும்”

                                               “        “அதான் இன்னக்கி அவங்கிட்டயே அடிச்சேன்…. அவனும் பாத்துட்டான். வெளிய சொன்னா நீ குருடன் இல்லேன்னு – சொல்லிடுவேன்னு சொன்னதும் அடங்கிட்டான்…நீங்க என்னடான்னா அது தெரியாம,…”

    “கண்ணால் காண்பதும் பொய்” தத்துவம் புரிந்தது.

             “எது எப்பிடி இருந்தாலும் நாம உண்டு நம்ப காரியம் உண்டுன்னு போகணும் சார்…” சாத்தான் வேதம்.

      எனக்கு எரிச்சல்.

      சரி சரி உன்னோட அட்வைஸ் உங்கமாதிரி ஆளுங்களோட நிக்கட்டும். நான்திரும்பி நடந்தேன்.

      “அவம் பாக்கெட்ல எடுத்ததை கவனமா பாத்தீங்க…  உங்கப் பாக்கெட்ல எடுத்தத பாக்கல பாருங்க…”

      பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்தேன். சொரேர் !

      “மனசு கஷ்டமா இருந்திச்சி…  அதான் உங்க பின்னாலேயே எறங்கிட்டேன். இந்தாங்க உங்க பணம்”

      அவன் இரு கைகளையும் இறுகப் பற்றினேன்.
            
  “மனுஷண்டா நீ..”
 
  

அட்மிஷன் வாங்கலையோ அட்மிஷன் - சிறுகதை


அட்மிஷன் வாங்கலையோ  அட்மிஷன் - சிறுகதை

எல்.கே.ஜி.  அட்மிஷன் பீஸ் விவரம்

1. ஆயா பீஸ்                     ரூ. 1,00,000
2. தாத்தா பீஸ்                    ரூ. 1,00,000
3. மேசை நாற்காலி பீஸ்             ரூ. 3,00,000
4. கட்டிட பீஸ்                     ரூ 5,00,000
5. சாக் பீஸ் பீஸ்                   ரூ 1,00,000
6. விளையாட்டுபீஸ்                  ரூ. 3,00,000

      இதைத்தொடர்ந்து வெள்ளையடிக்கும் பீஸ். சுவர் கட்டும் பீஸ், செருப்பு பீஸ், துடைப்பம் பீஸ், என்று நீண்டிருந்த பட்டியல் பத்தொன்பது லட்சத்து தொண்ணூராயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது என்று முடிந்திருந்தது.

மார்த்தாண்டன் த்ரி இன் ஒன் பள்ளியின் எதிரில் இருந்த கரும்பலகையில் ஒட்டியிருந்தது அந்த பட்டியல்தான் மேலே இருப்பது.

      மதுரையில் மீனாட்சி அம்மனுக்கு அடுத்தபடியாக  த்ரி இன் ஒன் பள்ளி  பிரபலமானது.

      நர்சரி பள்ளியாக துவங்கிய மார்த்தாண்டன் பள்ளி இப்போதுஆரம்பப்பள்ளி,  மெட்ரிக்குலெஷன் பள்ளி,  என்று பெருகியதால் இதற்கு மார்த்தாண்டன் த்ரி இன் ஒன் பள்ளி என்று பெயர் வந்தது.

      மதுரை மாவட்டத்திலேயே மாணவர்களை இலவசமாக சேர்த்துக் கொள்ளும் ஒரேபள்ளி மார்த்தாண்டன் பள்ளிதான். ஆனால் மேலே குறிப்பிட்ட பிரத்தியேகமான பீஸ்கள் மட்டும் கட்ட வேண்டும். ஆனால் அட்மிஷன் இலவசம்தான்.

      அந்த விவரம்தான் நோட்டீசாக கரும்பலகையில் ஒட்டியிருந்-- தது.  பெற்றோர்கள் இங்கும் அங்குமாக தங்கள் குழந்தைகளுடன் ஆலாய் பறந்து கொண்டிருந்தனர்;. அவர்களின் விரல்களைப் பிடித்தபடி, குழந்தைகள் ஒற்றைப்பெட்டி சரக்கு ரயில் பெட்டி போல வரிசையாக போய்க் கொண்டிருந்தனர்.

      அட்மிஷன் ஆரம்பித்தால் போதும். அழகர் ஆற்றில் இறங்கிய  மாதிரி மார்த்தாண்டன் பள்ளி மக்கள் வெள்ளத்தில் மூழ்கிவிடும். அட்மிஷனுக்கு முன்னால் முதலில் தங்கள் குழந்தைகளுடன் பள்ளி முதல்வரை சந்திக்க வேண்டும். அதன்பின்னர்தான் அட்மிஷன்.

      எனவே தல்லாகுளத்தில் முதல்வர் அறையில் ஒன்று. அட்மிஷன் கவுண்டரில் ஒன்று என இரண்டு வரிசைகள் மலைப்பாம்பாய் மெல்ல ஊர்ந்துக் கொண்டிருந்தன.

      ஒருவரிசை தல்லாக்குளத்திலிருந்து தத்தனேரி வரையிலும் இன்னொன்று ஒத்தக்கடை வரையிலும் நீண்டிருந்தது.

      வரிசையைக் கண்டு மலைத்துப் போன சில பெற்றோர்கள் இங்குமங்குமாக உதிரியாக அலைந்து கொண்டிருந்தனர். க்யூவரிசைச் சீட்டுகள் சினிமா டிக்கட்டுகள் மாதிரி பிளாக்கில் ஒருபக்கம் விற்பனை நடந்துகொண்டிருந்தது.

      சிலர் வரிசையைப் பிடிக்க அவசரம் அவசரமாக ஆட்டோ பிடித்து தத்தனேரிக்கும் ஒத்தகடைக்கும் புறப்பட்டனர்.

      கூட்டத்தை சமாளிக்க ஏகப்பட்ட ஆயுதம் தாங்கிய  போலீஸ்காரர்கள் வரவழைக்கப் பட்டிருந்தனர்.

      போலீஸ்காரர்கள் கண்ணீர்ப்புகை குண்டுகளை கையிலேந்தியபடி விழிப்புடன் நின்று கொண்டிருந்தனர்.

      “இந்த பள்ளிக்கொடம் கூட இல்லைன்னா  நம்மமாதிரி ஏழை பாழைங்க ….  என்னா பண்ணா  முடியும் ?” என்றார் அட்மிஷன் வரிசையில் நின்றிருந்த ஒருத்தர்.

      “எனக்குத் தெரிஞ்சி, இந்த மாதிரி இலவசமா அட்மிஷன் செய்யற பள்ளிக்கூடம் இந்த வட்டாரத்துல எதுவுமே இல்லை….”  என்றார் வரிசையில் அவருக்கு பின்னால் நின்றவர்.

      இந்த பள்ளிக்கூடத்தை “ஒரு தர்ம ஸ்தாபனம் மாதிரி நடத்துறாரு…. நல்ல மனுஷன் … மார்த்தாண்டன் மாதிரி ஒரு மனுஷனை பார்க்க முடியாது…..”  என்றார் இன்னொருத்தர்.

      ஆமா….. “ ஆனை’ய    சும்மா தர்ரேன்… அங்குசம் ஆயிரம்பொற்காசு”ன்னு  சொன்ன கதையா இருக்கு. அட்மிஷன் இலவசமாம்.   ஆனா  ஆயா பீஸ் தாத்தா பீஸ்  ன்னு லட்சத்துல அடுக்கறாங்க….” என்றார் வரிசைக்கு வெளியே நின்றிருந்த ராஜசிம்மன்.

      “ஏய்யா … குழந்தைகள சேத்துட்டு நம்ம போயிடறோம். அதை பாத்துக்க ஆயா வேணாமா ? அதுக்குத்தான் ஆயா பீஸ்…” என்று சூடாக பதில் சொன்னார் ஒருத்தர்.

      ஆயா பீஸ் சரி… என்னய்யா அது தாத்தா பீஸ்…? என்றார் எரிச்சலாக ராஜசிம்மன்.

      “குழந்தைங்களுக்கு ஒரு பாடத்தை கதை மூலமா சொன்னாத்தான் புரியும். அதுக்காகத்தான் இந்த பள்ளிக்கூடத்துல கதை சொல்றதுக்காக முப்பது தாத்தாமார்களை வாத்தியாராக போட்ருக்காங்க… நம்ம இதை பாராட்டணும்… அதை விட்டுட்டு” என்று சலித்துக் கொண்டார் இன்னொருத்தர்.

      “அவருக்கு வரிசையில நிக்க எடம் கெடைக்கல. அந்த வயிற்றெரிச்சல். சீச்சீ  இந்தப்பழம் புளிக்கும் கதை சொல்றார்” என்றார் அடுத்து நின்றவர்.

      “எடம் கெடைக்கலன்னா…? சும்மா கிடைச்சிடுமா ? நாமெல்லாம் ஒரு வாரமா துண்டு போட்டு வரிசையில எடம் புடிச்சி இருக்கோம்”

      “அடுப்பு எரிஞ்சாத்தானப்பா பொரி பொரியும்…?  வெறுங்கையில முழம்போட முடியுமா ? பணங்காசு செலவு பண்ணாம பசங்கள பள்ளிக்கூடத்துல சேத்து படிக்க வைக்க முடியுமா…?  என்று ஆளுக்கு ஆள் பேசிக் கொண்டிருக்க, ராஜசிம்மன் வெறுப்பால் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்.

      ராஜசிம்மனுக்கு தன்னுடைய பையனை எல்.கே.ஜி’ல் சேர்த்தாக வேண்டும். அவனுக்கு இந்த மாதிரி பள்ளிக்கூடம் அட்மிஷன் இதுபற்றி ஒன்றும் தெரியாது.

      ஆனால் யாரும் தன்னை ஏமாற்றிவிட அனுமதிக்க மாட்டான்  ராஜசிம்மன். அவன் பையனுக்கு அட்மிஷனே கிடைக்காவிட்டால் கூட பரவாயில்லை. ஆனால் அவன் ஏமாற தயாராக இல்லை.

      இதற்கு ஒரு சரியான காரணம் இருந்தது. அதைத் தெரிந்துக் கொள்ள இன்னும் கூடுதலாக ராஜசிம்மனைப்பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும்.

      ராஜசிம்மன் பார்த்தது  வெளியில் சொல்ல முடியாத தொழில். மற்றவர் பலவீனத்தை முதலீடாக கொண்ட தொழில். கொள்ளை. அதுவும் பகல் கொள்ளை. நிறைய பணம் வந்தது. ஆனால் பையனுக்கு அட்மிஷன் வாங்குவது எப்படி என்றுதான் தெரியவில்லை.

      காலியாக இருந்த பள்ளிக்கூட கட்டிடங்களின் ஊடாக ஏதோ சிந்தனை  வயப்பட்டவனாய் நடந்தான் ராஜசிம்மன்.

      “சார்… எங்க சார் போறீங்க….?” என்று கேட்டபடி  பள்ளிக்கூட வாட்ச்மேன் எதிரில் வந்தான்.

      “சும்மா … உங்க பள்ளிக்கூடத்தை சுத்திப் பார்க்கலாம்ன்னுதான் …. நீ என்னப்பா வாட்ச்மேனா ?”

      “ஆமா  சார் ….”

      “அதுசரி  உங்க மொதலாளி  மார்த்தாண்டன் இதுக்கு மொதல்ல என்னா தொழில் பாத்தாரு….?”

      “எங்க மொதலாளி இதுக்கு மொதல்ல புறாவும், முயலும், வளத்தாரு சார்… அந்தப் புறாக் கூண்டை வச்சித்தான் சார் நர்சரி ஸ்கூல் ஆரம்பிச்சாரு”

      “முயல் கூண்டு….?”

      அதை வச்சித்தான் சார் மெட்ரிக்குலேஷன் ஸ்கூலை ஆரம்பித்தார்.

“உங்க மொதலாளி குரங்கு பண்ணை ஒண்ணும் வைக்கலயா…?” கேட்டான் ராஜசிம்மன் எரிச்சலாக.

      “அது இருந்திருந்தா எப்பவோ காலேஜ்” ஆரம்பிச்சிருப்பார் சார் என்று சொல்லி சிரித்தான்.

      “ஆனாலும் நீங்க வாங்கற பீஸ் ஜாஸ்தி…..”

      “என்ன சார் இதைப்போய் ஜாஸ்தின்னு சொல்றீங்க…?

      “பணம்ன்னா குடுத்திடலாம் சார்…  ஆனா காட்டுராணி ஸ்கூல்ல புலிப்பால் கொண்டு வந்தால்தான் அட்மிஷன்….தெரியுமா…? "

மார்த்தாண்டன் ஸ்கூல் மாதிரி காட்டுராணி ஸ்கூலும் பிரபலமானது.

      ராஜசிம்மன் என்ன சொல்வதென்று புரியாமல் வாயடைத்து நின்றான்.

      “அவ்ளோ ஏன் சார்…?  நம்ம மெரிட் நர்சரி ஸ்கூல்ல      “ஒபாமாகிட்ட சிபாரிசு லெட்டர்  வாங்கிட்டு வந்திருக்காங்க. அவருக்கு 10 சீட்டு ஒதுக்கி இருக்காங்களாம்”

      “என்னப்பா உண்மையாவா சொல்ற…?” என்று கேட்டுவிட்டு ஈ நுழைவது தெரியாமல் வாயைப் பிளந்துக் கொண்டு  நின்றான் ராஜசிம்மன்.

      “ஸ்கூல்ன்னா என்னா…?  கத்தரிக்காய் வியாபாரமா….?  ஆரம்சிச்சு நடத்துனுமே சார்… எல்லோராலும் நடத்த முடியுங்களா….?”

      உறைந்து போய் நின்றிருந்த ராஜசிம்மன் மூளையில்,       ஏதோஒன்று சுரீர் என்று தைத்தது.

      “நீ  என்ன சொன்னே…?  இன்னொருதரம் சொல்லு”

      வாட்ச்மேன்  இன்னொருதரம் சொன்னான். இன்னொருதரம் அது அதே இடத்தில் அதேமாதிரி இன்னொருதரம் தைத்தது.

      “ஸ்கூல்’ன்னா என்னா…?  கத்தரிக்காய் வியாபாரமா…? ஆரம்பிச்சி நடத்தணுமெ சார்….  எல்லோராலும் நடத்த முடியுங்களா…?”

      குப்பென்று ஒரு சந்தோஷம்  ராஜசிம்மன் முகத்தில். பாக்கெட்டில் கையை விட்டு, கையில்எடுத்தான். மொடமொடவென நூறு ருபாய் நோட்டு. அதனை அவன் கையில் திணித்துவிட்டு வேகமாய் நடந்தான்.

      வாட்ச்மேன் நூறு ரூபாய் நோட்டை கையில் வைத்துக் கொண்டு பேய் முழி முழித்தார். ஒரு தடவைகூட கேட்காமல் இப்படி யாரும் கொடுத்தது கிடையாது. ஒருவேளை பைத்தியமாக இருப்பானோ ?

      ராஜசிம்மன் நேராக மீனாட்சிஅ ம்மன் கோயில் எதிரே இருந்த புதுமண்டபத்துக்கு போனான். “அண்ணாச்சி ஆயிரம் புறாக் கூண்டு வேணும் அவசரம்” என்று ஆர்டர் கொடுத்தான்.

      புதுமண்டபத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பினான். தனது வீட்டில் ஐந்துக்கு நாலு அளவிலிருந்த சமையலறையை காலி செய்தான்.

      ராஜசிம்மன் இலவச அட்மிஷன் நர்சரிப் பள்ளி என்ற பெயர்ப் பலகையை புறாக்கூண்டின்மீது மாட்டினான்.

      அடுத்த வாரம் ராஜசிம்மன் நர்சரிப் பள்ளியில் இலவச அட்மிஷனுக்கு பெற்றோர்களின் கூட்டம், அழகர் ஆற்றில் இறங்கியது மாதிரி பெற்றோர் கூட்டம்  அலைமோதியது.

(Image Courtesy: Google)

இயற்கையை மேம்படுத்த இளைஞர் ராணுவம் தொடங்கியது ஹிட்லரா ? ரூஸ்வெல்டா ? WHO CREATED YOUTH ARMY TO RESTORE NATURE ?

Image Courtesy: Thanks to Google


இயற்கையை 
மேம்படுத்த   
இளைஞர் ராணுவம் 
தொடங்கியது
ஹிட்லரா ? 
ரூஸ்வெல்டா ?

ADOLF HITLER OR
ROOSVELT 
WHO CREATED
YOUTH ARMY
TO RESTORE
NATURE ?

விவசாய நிலத்தின் வயலில் வரப்பு போடுங்கள். வரப்பு போட்டால் வயலில் நீர் நிறைய நிக்கும். நீர் நிறைய நின்றால் பயிர் நிறைய விளையும்  பயிர் நிறைய விளைந்தால் மக்களின் வாழ்க்கை உயரும். மக்களின் வாழ்க்கை உயர்ந்தால் குடி உயரும். குடி உயரும் என்றால் “போன எலெக்ஷன்ல வாங்கின சீட்டைவிட அதிகமா சீட் வாங்கலாம்” னு அர்த்தம். இது தமிழ்ப்பாட்டி ஒளவையின் வாக்கு.                                                                                                                                                                                                                                                                                                            
 “வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும் ” மேலே சொன்ன அர்த்தம் இந்த பாட்டுக்குத்தான்.

நான்கு வரிகளில் அரசியல் பற்றி பேசுகிறார். அறிவியல் பற்றி பேசுகிறார். தொழில்நுட்பம் பற்றி பேசுகிறார். இயற்கையைப்பற்றி பேசுகிறார். விவசாயம்பற்றி பேசுகிறார். விவசாயிபற்றி பேசுகிறார். மக்கள்பற்றி பேசுகிறார். அரசுபற்றி பேசுகிறார். அரசின் கடமைபற்றி பேசுகிறார்.

அமெரிக்காவில் சி சி சி என்று ஒன்பதேகால் ஆண்டுகள் செயல்படுத்திய இயற்கைவள பாதுகாப்பு திட்டமும் இதுதான். இன்று நாம் இந்தியாவில் செயல்படுத்தும் டபிள்யு டி எஃப் (W D F), ஐ டபிள்யு எம் பி (IWMP), என் டபிள்யு டி பி ஆர்  ஏ (N W D P R A), ஐ டபிள்யு டி பி ( I  W D P), டி பி ஏ பி (D P A P), டி ஏ டி பி (D P A P) என்று சொல்லப்படும் அனைத்து வாட்டர்ஷெட் திட்டங்களும் (WATERSHED DEVELOPMENT PROJECT) ஒன்றுதான்.

இவை எல்லாவற்றிற்கும் ஒரே குறிக்கோள்தான்.

இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். அதாவது மண்ணைப் பாதுகாக்க வேண்டும். நீரைப்பாதுகாக்க வேண்டும். காடுகளைப் பாதுகாக்க வேண்டும். அதன்மூலம் விவசாய உற்பத்தியை பெருக்க வேண்டும். மக்களின் பொருளாதார வளத்தைப் பெருக்க வேண்டும். 

இது உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்.

இவை எல்லாவற்றையும் அடக்கியதுதான் அவ்வையாரின் பாட்டு. அவ்வையாரை அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஃபிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் படித்தாரா? தெரியாது. ஆனால் அவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதும் இரண்டு ராணுவத்தை உருவாக்கினார். ஓன்று சாயில் சோல்ஜர்ஸ் (SOIL SOLDIERS) என்னும் மண்வள பாதுகாப்பு ராணுவம். இரண்டு, டிரீ ஆர்மி (TREE ARMY) . அதாவது மரங்கள் பாதுகாப்பு ராணுவம்.

இந்த இரண்டிலும் இடம் பெற்றவர்கள் முழுக்கமுழுக்க இளைஞர்கள். 18 முதல் 25 வயதைத் தாண்டாத அக்மார்க் இளைஞர்கள். இந்த இரண்டு ராணுவங்களுக்கும் பொதுப்பெயர்தான் சிவிலியன் கன்சர்வேஷன் கார்ப்ஸ் (CIVILIAN CONSERVATION CORPS).  அதாவது சுருக்கமாக சி சி சி ( C C C). தமிழில் இயற்கைவள பாதுகாப்பு படைவீரர்கள்.

கிரேட் டிப்ரஷன் (GREAT DEPRESSION) என்று வருணிக்கப்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து அமெரிக்கவை மீட்டது, இந்த படைவீரர்கள்தான். அவாகளுடைய பெரும் நிலப் பரப்பை மண் அரிப்பிலிருந்து மீட்டது இந்த படைதான். கட்டாந்தரையாக இருந்தவற்றை காடுகளாக மாற்றியது இந்த படைதான். காட்டுத்தீயின் கொடுங்கரங்களிலிருந்து காடுகளை காப்பாற்றியது இந்த படைதான். பூச்சிகளின் தாக்குதலிலிருந்து மரங்களை பாதுகாத்தது இந்த படைதான். பூசண நோய்களிலிருந்து மரங்களைக் காப்பாற்றியதும் இந்த படைதான். வெறும் புதர்க்காடுகளாக இருந்தவற்றை நிஜக்காடுகளாக மாற்றியதும் இந்த படைதான். ஆறுகள் மற்றும் ஓடைகளை மறித்து பாலங்கள் கட்டியதும் இந்த படைதான். மாநில அளவிலான வனப்பூங்காக்களை அமைத்ததும் இந்த படைதான். கால்நடைகளுக்கு பெரும் பரப்பில் தீவனப்பண்ணைகளை அமைத்ததும் இந்தப் படைதான்.

“இந்த ஐடியா அடால்ஃப் ஹிட்லருக்கு சொந்தம்னு சொல்றாங்க உண்மையா ?” என்று சில பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, இல்லை என்று மறுத்துள்ளார் ரூஸ்வெல்ட். 

வேலையில்லா திண்டாட்டத்தை நகரங்களில் போக்க “ஜெர்மன் லேபர் சர்வீசஸ்” (GERMAN LABOUR SERVICES) என்ற ஒரு படையை   தொடங்கினார் ஹிட்லர். அது பின்னாளில் விவசாய வேலையாட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டபோது அது உதவியது என்றும் சொல்லுகிறார்கள். அதிலும் 18 முதல் 25 வயதுடைய இளைஞர்களே அமர்த்தப்பட்டார்கள். ஆனால் அவர்களுக்கு ராணுவப்பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர்  அவர்கள் நாஜி படைகளில் சேர்க்கப் பட்டார்கள். விவசாய வேலை பார்க்க முதன்முதலாக ராணுவத்தை பயன்படுத்தியது ஹிட்லர்தான் என்கிறார்கள். இயற்கை வளங்களை பாதுகாக்க ரூஸ்வெல்ட் அமைத்த இளைஞர் படைக்கும் முன்னுதாரணம் 'ஜெர்மன் லேபர் போர்ஸஸ்' தான் என்று சொல்லுவோரும் உண்டு. நமது நூறு நாள் வேலைத்திட்டம் கூட இந்த திட்டங்களின் நீர்த்த வடிவம்தான் என்றும் சொல்லுகிறார்கள்.

மனித உடல்களிலிருந்து எடுக்கப்பட்ட கொழுப்பிலிருந்து ஹிட்லர் சோப்பு தயாரித்தார் என்ற ஒரு செய்தி உண்டு. ஆனால் அவர்கூட இயற்கைவளங்கள்பற்றி உயர்வான கருத்து வைத்திருந்தார் என்பது ஆச்சரியம் தருவதாக உள்ளது.  'மனிதர்களுக்கு பாடம் சொல்லித்தருவதில் இயற்கையை மிஞ்சிய ஆசிரியர் இல்லை' என்று சொன்னார் ஹிட்லர்.
 
உலகிலேயே இயற்கை வளங்களையும் விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற படைகளை அமைத்தது ரூஸ்வெல்ட் மட்டும்தான். 

பல எதிர்ப்புகள் முளைத்தபோதும் இயற்கைவளங்களை பாதுகாப்பதன் மூலம் வேலை வாயப்பை பெருக்கமுடியும் என நிரூபித்துக் காட்டினார் ரூஸ்வெல்ட் .
       

அஞ்சலை - சிறுகதை ANJALAI- SHORT STORY



Image Courtesy: Thanks to allfreedownload.com

அஞ்சலை  - சிறுகதை

ANJALAI- SHORT STORY



உங்களுக்கெல்லாம் ஒரு பொண்டாட்டி…  பிள்ளைங்க… பேசாம நீங்க ஆபீஸையே கல்யாணம்;  பண்ணிக்கிட்டு அங்கயே செட்டில் ஆகியிருக்கலாம்.  ஆபீஸாம்…  ஆபீஸ்…. என்றாள் மேரி ஜோஸ்பின்.

இப்படிப்பட்ட தன் மனைவியின் அர்ச்சனைகள் பால்ராஜ் ஜோசப்புக்கு ரொம்ப காலமாய் பழகிப் போயிருந்தது. இன்று கொஞ்சம் டோஸ் ஜாஸ்தி. ஆனாலும் அவர் அமைதி காத்தார். புயலே அடித்தாலும் அதை புன்னகையுடன் எதிர்கொள்ள பழகி இருந்தார். எதுவுமே நடக்காததைப்போல அமைதியாக ஆபீசுக்கு கிளம்பினார். 

பா.ஜோ’ வைப் பொருத்தவரை வீட்டின் மேல்அதிகாரி மே ஜோதான். இனி பா.ஜோ என்றால் பால்ராஜ் ஜோசப், மே.ஜோ என்றால் மேரி ஜோஸ்பின்.

ஆயிரம் பேருக்கு மேல் வேலை செய்துக் கொண்டிருக்கும் ஒரு அரசு ஆபீசில்; மேனேஜர் பா.ஜோ. 

ஆந்த ஆபீசுக்குப் போய் கோபத்துக்கு இன்னொரு பெயர் சொல்லுங்கள் பார்ப்போம்  என்று கேட்டால் பட்டென்று சொல்வார்கள் 'பா.ஜோ" என்று. அவர் அடுப்படியில்தான் மியாவ். ஆபீஸ் அவர் கர்ஜனைக்கு கிடுகிடுக்கும்.

இதற்குப் பலகாரணங்கள் உண்டு. ஆனால் அவை பா.ஜே‘வுக்கும் மேஜோ’வுக்கும் அந்தரங்கமான சமாச்சாரங்கள்;. அதில் மூக்கை நுழைத்தல் அதிகப்பிரசங்கித்தனம். 

அவை நமக்கும் கதைக்கும் சம்பந்தமில்லாதவை. புயலுக்கு முன்னால் தென்படும், கடலைப் போல், அமைதியாக பாஜோ சூட்கேசும் கையுமாக வீட்டை விட்டு வெளியேவந்தார். வழக்கம் போல் ஆபீஸ்காருடன் டிரைவர் பாலகுரு காத்திருந்தார்.

காரில் ஏறி உட்கார்ந்தார். பாலகுருவிடம் ஒரு வார்த்தையும் பேசிக்கொள்ளவில்லை. கையிலிருந்த அன்றைய நியூஸ்பேப்பரை பிரித்து முகத்தை மூடிக்கொண்டார். இன்று வீட்டில் அர்ச்சனை அமோகம் என்பது பாலகுருவுக்கு புரிந்தது. இன்று இந்த அர்ச்சனை ஆபீசில் புயலாக வீசப்போகிறது என்பதும் தெரிந்தது. 

பாலகுரு மதுரைக்காரர். நல்ல மனுஷன். எல்லோருக்கும் ஓடிஓடி உதவுவார். இல்லை என்று சொல்லமாட்டார். முடியாது என்றும் சொல்லமாட்டார். பா.ஜோ கூட பாலகுருவிடம் மரியாதை காட்டுவார். பா.ஜோவைவிட வயதில் பெரியவர்.

சென்னை பீச்ரோடில் லைட்ஹவுஸ் தாண்டி காந்தி, கண்ணகி, உழைப்பாளர் சிலைகள் தாண்டி இடதுகைப்பக்கம் திரும்பி இரண்டாவது கட்டிடத்தின் வாசலில் காரை நிறுத்தி, பாஜோ இறங்க தோதாக காரின் கதவைத் திறந்து பிடித்தபடி  பவ்யமாக நின்றார் பாலகுரு. 

காரிலிருந்து இறங்கினார் நடந்தார். ராஜா காலத்து அரண்மனை மாதிரி இருந்த பழங்காலத்து பில்டிங்கில் இருந்தது அந்த ஆபீஸ். நவாப்பு காலத்தில் சிமென்ட் இல்லாமல் செங்கல் தெரியும்படி கட்டியது. இரண்டே இரண்டு தளம்தான். ஆனால் கடல் மாதிரி விசாலமானது. அதில் எட்டுபத்து அரசு ஆபீஸ்களை அங்கு வளைத்து போட்டிருந்தார்கள். இன்னும்கூட ஐந்தாறு ஆபீஸ்களை அதில் மடக்கிப் போடலாம்.  அதில் ஒன்றுதான் பா.ஜோ வேலை பார்ப்பது. 28 படிக்கட்டுகள் ஏறிச்செல்ல வேண்டும். லிஃப்ட் எதுவும் கிடையாது. இரண்டாவது மாடியில் இருந்தது ஆபீஸ். தினமும் இதில் ஏறி இறங்கினால் டயபெட்டஸ் வராது. ஹார்ட் அட்டாக்கும் வராது. 

ஆபீஸின் மெயின் ஹாலையும் கடந்து, இருபுறமும் எழுந்து நின்ற வணக்கம் செய்த ஊழியர்களையும் அலட்சியம் செய்தபடி பா.ஜோ தனது ஏசி அறைக்குள் நுழைந்தார். பெரிய ஆபீசர் என்றால் இப்படித்தான் போகவேண்டும்.

இன்னும் சிறிது நேரத்தில் ஏதாவது ஒரு டேபிளில் இண்டர்காம் அலறும்.  அவர் பா.ஜோ அறைக்கு செல்வார். அவர் தலை உருளும்.

இன்று இவர் நல்ல மூடில் இருக்காரா…..?  இல்லையா…?  என்பதை அவர்  நடக்கும் நடையைவைத்து கண்டுபிடித்து விடுவார்கள். 'இன்றைக்கு அவர் நடை சரியில்லை" என்றார்கள். அளவுக்குமீறி அமைதி காத்தார். அதுவும் அபாயகரமான அறிகுறி என்றார்கள்.

இன்றைக்கு அவரிடம் அகப்படும் அபாக்கியவான் யார் என்ற சிந்தனையில் ஆபீஸே மயான அமைதி காத்தது.

மார்க்கெட்டிங் மேனேஜர் மாரியப்பன் டேபிளில் இண்டர்காம் அலற, 'அப்பனே ஆதிமூலா என்னைக் காப்பாத்துப்பா…!" என்றபடி நாற்காலியை விட்டு எழுந்தார். அவரை மேனேஜர் மாரியப்பன் என்பதைவிட சாமியார் என்றால்தான் தெரியும். 

சுழல் நாற்காலியில் பாஜோ அப்படியும் இப்படியுமாக அரைவட்டத்தில் அசைந்துக் கொண்டிருக்க எதிரில் ரொம்ப நேரமாய் நின்றிருந்தார்.  காலியாய் இருந்த நாற்காலியில் உட்காரச்சொன்னது முட்டிவலி. பெரிய அதிகாரி சொல்லாமல் உட்காரக் கூடாது. கால் மாற்றி மாற்றி நின்று சமாளித்தார். சாமியாருக்கு ஏசி  அறையிலும்     வியர்த்துக் கொட்டியது.  

'ஐ  வாண்ட் திங்ஸ்  டன்….   ஐ   டோண்ட்  வாண்ட்  டெட்வெயிட்ஸ் …இன் மை ஆபிஸ் ….”

'சார்…  வந்து…"

'ஐ   டோண்ட்  வாண்ட்  எனி மோர் ப்ளடி எக்ஸ்பிளனேஷன்ஸ்…”

அதற்குப்பிறகு அவர்பேசியவற்றை அனைத்தையும் எழுதினால் இந்த சிறுகதை நெடுங்கதை ஆகிவிடும். அதை எழுதவும் முடியாது.
 
அரைமணி நேரத்தக்குப் பிறகு கரும்புஆலையில் சாறுபிழிந்த பிறகு சக்கையை துப்புவது போல மாரியப்பனை வெளியே துப்பினார் பா.ஜோ. 

அவர் நெற்றியில் எப்போதுமிருக்கும் எவர்கிரீன் விபூதிப் பட்டை வியர்வையில் கரைந்து காதோரமாய் வழிந்தது. 

எல்லோரும் அவருக்காக ரகசியமாய் அனுதாபப் பட்டார்கள். 

சாமியார் தனது நாற்காலியில்; தொப்பென்று விழுந்தார்.  ஃபேன் வேகத்தைக் கூட்டினார். சட்டை பட்டன்களைக் கழட்டி விட்டுக் கொண்டார். 

மணியடித்து பியூனை வரவழைத்தார். மெதுவாகச்  சொன்னார், 'ஒரு “ஜக்"  ஐஸ் வாட்டர்".

வந்த ஒரு ஜக்கையும் முழுசாய் குடித்தார். படபடப்பு நீங்க ஒரு பீப்பி மாத்திரையை விழுங்கினார். சாமியாருக்கு ரெட்டை நாடி சரீரம். இரண்டு எட்டு எடுத்து வைத்தால்கூட சீத்துபூத்தென்று இறைக்கும். 

படபடப்பு கொஞ்சம் அடங்கியது. இண்டர்காமை எடுத்தார். ' மிஸ்டர் கணேசன் கொஞ்சம் வறீங்களா ?. அவர் அசிஸ்டெண்ட் மார்க்கெட்டிங் மேனேஜர். 

இவருக்கு கீழே வேலை பார்ப்பவர். அவர் ஒழுங்காய் வேலை பார்த்திருந்தால் பாஜோ இவரை கட்டிஏறி இருக்கமாட்டார். 'அவனை என்ன செய்கிறேன் பார்..." என்று  கருவியபடி இண்டர்காமை வைத்தார்.

பாஜோ வுக்கு கீழே சாமியார்; வேலைபார்ப்பது மாதிரி, மாரியப்பனுக்குக் கீழே கணேசன். 

அடுத்தசில நிமிடங்களில் கணேசன், மாரியப்பன் எதிரில் உட்கார்ந்திருந்தார்.

'சார் உங்கள் நாற்காலிக்கு அடியில் ஒரு வெடிகுண்டு இன்னும் அஞ்சி  நிமிஷத்திற்குள்ள வெடிக்கப் போகுது.” என்று யாராவது வந்து சொன்னால்கூட  'ஒரு அப்ளிகேஷன் எழுதிக் கொடுத்திட்டுப் போங்க… வெடிச்சபிறகு என்னை வந்து பாருங்க..." என்று சாவாதானமாகச் சொல்லக்கூடியவர் சாமியார். அப்படிப்பட்ட சாமியாரே தடுமாறினார்;. சாது மிரண்டுவிட்டது. 

'ஐ  வாண்ட் திங்ஸ் டன். ..   ஐ டோண்ட் வாண்ட் டெட் வெயிட்ஸ்….  இன் மை ஆபிஸ்….”

'சார் … வந்து…." 

'ஐ  டோண்ட் வாண்ட்  எனி  மோர்  ப்ளடி  எக்ஸ்ப்ளனேஷன்ஸ்…”

'சார் … வந்து…"

'நான்  சென்ஸ்….கெட்  அவுட்…"

'ஐ வாண்ட்  ரிசல்ட்ஸ்….”

வெயிலில் பீடுங்கிப்போட்ட கீரைத்தண்டாய் வாடிவதங்கி வெளியே வந்தார் கணேசன் . இது ஒன்றும் புதிதில்லை. அடிக்கடி அரங்கேறும் காட்சிதான்.

இன்றைக்கு மாலை ஐந்து மணிக்குள்ளாக அந்த பைல் சாமியார் டேபிளுக்குச் செல்ல வேண்டும். இல்லையென்றால் கணேசன் சாமியாராக செல்ல வேண்டியிருக்கும்.

கணேசன் அவசரமாக சில காரியங்கள் வெளியில் முடிக்க வேண்டியிருந்தது.  டிரைவர் பாலனை கூப்பிட ஆள் அனுப்பினார். அவன் எங்கிருப்பான் என்று கணேசனுக்கு தெரியும்.

ஆபீசுக்கு வெளியே மரத்தடியில் பீடி குடித்துக் கொண்டிருந்த பாலன் கணேசன் கூப்பிடுகிறார் என்றதும் பீடியை காலுக்கடியில் போட்டு நசுக்கி திரும்பி எதிர்த்திசையில் மீதிப்புகையை ஊதி வாயை சுத்தப்படுத்திக்கொண்டு புறப்பட்டான்.

கணேசன்சார் அறைக்குள் நுழைந்து வணக்கம் வைத்தான், பாலன். 

'வண்டி ரெடியா…?" என்றார் கணேசன். 

'ரெடி சார்  … ஆனா…"

'என்னைய்யா…?    ஆனா …?"   
                         
'ஸ்டெப்னி  இல்ல  சார்… "

'என் …?  எங்க போச்சுது…. ?"

'பஞ்சர் ஒட்றதுக்குப் போயிருக்குதுங்க…”

'என்னய்யா இது … ? பஞ்சர்ஒட்டப் போயிருக்குது…  பொடலங்கா ஒட்டப் போயிருக்குதுன்னு சொல்லிக்கிட்டு …”

'சார்  …  வந்து …"

'ஐ ; வாண்ட் திங்ஸ் டன். … ஐ  டோண்ட் வாண்ட் டெட் வெயிட்ஸ் இன் மை  ஆபிஸ்…" 

'சார்  வந்து…"

'ஐ   டோண்ட் வாண்ட எனிமோர் ப்ளடி எக்ஸ்ப்ளனேஷன்ஸ்…”
'சார்  …  வந்து …”

'நான்சென்ஸ்…. ஐ  வாண்ட்  ரிசல்ட்ஸ்…"

அதற்குப்பிறகு சாமியார் திட்டியதை எல்லாம் ஞாபகத்தில் கொண்டு வந்தார். அவருக்கே வாய் வலிக்கும்வரை அவனை மரியாதைக்  குறைவாக திட்டினார். 

'இனிமே ஒனக்கு மரியாதை இல்லை.. நீ மரியாதை குடுத்தாதான் நான் மரியாதை குடுப்பேன்.. ஜாக்கிரதை" இப்படி கேட்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் வார்த்தைகள் தொண்டைகுழியைவிட்டு வெளியே வர மறுத்தது.

பாலன் வாயைத் திறக்காமல் தலையை குனிந்தபடி பேசாமல் நின்றான். அவரே ஓய்ந்துபோனதும் 'கெட் அவுட்" என்றார். 

அன்று சுமார் நாலரை மணிக்கு டிரைவர் பாலனுக்கு தற்காலிக வேலை நீக்கம் உத்தரவு வழங்கப்பட்டது. 

அன்று இரவு அவன் மனைவி அஞ்சலை கேட்டாள் “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு… நல்ல மனுஷாளுக்கு ஒரு சொல்லு….குடிக்கவே மாட்டேன்னு சத்தியம்  பண்ணிட்டு இப்படி வயிறுமுட்ட குடிச்சிட்டு வந்திருக்கியே பாவி….”

இப்படி அவள் கேட்டதுதான் பாக்கி, பாலன் எட்டி அவள் தலை மயிரைக் கொத்தாக பிடித்து இழுத்து ஓங்கிஅவள் கன்னத்தில் அறைந்தான். பிறகு முகம் மார்பு முதுகு என்று பார்க்காமல் மூர்க்கமாக அடித்தான்.


“ரெண்டு போடுடி அப்பொதான் அவன் போதை தெளியும். அடி உதவுறமாதிரி அண்ணன்தம்பி உதவமாட்டான் ” என்று மகனை உதைக்க தன் மறுமகளுக்கு சொல்லிக் கொடுத்தாள், பாலனின் அம்மா.

“வேணாம் வேணாம் சொன்னா கேளு. அப்புறம் மரியாதை கெட்டுடும்” என்று சொல்லிக்கொண்டே அவன் சட்டையைப் பிடித்து கீழே தள்ளினாள் அஞ்சலை. ஆவேசம் வந்தவளாக அவனை மொத்மொத்தென மொத்தினாள். 

அஞ்சலையின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் கீழே சாய்ந்தான பாலன்;. அவனை அங்கேயே விட்டுவிட்டு அவள் வீட்டுக்குள் போனாள்.

பாலன் தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்தான். ஆபீசில் இருந்த அத்தனை ஆபீசரையும் வண்டைவண்டையாகப் பேசினான். கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தவனைப்போல 'அஞ்சலை உன்னை இல்லன்னா வேற யாரடி நான் அடிப்பேன் ?” என்ற வார்த்தையை திரும்பத்திரும்ப சொல்லிக்கோண்டே வெகுநேரம் வரை அழுதுகொண்டிருந்தான்.

அஞ்சலை அவனை சமாதானப்படுத்தி வீட்டிற்குள் அழைத்துக்கொண்டு போனாள். “உன் கோபத்தை எதுக்குய்யா எங்கிட்ட காட்டறே” என்று சொல்லியபடி அவனுக்கு சோறு ஊட்டிவிட்டாள். அவன் மறுப்பேதும் சொல்லாமல் சாப்பிட்டான்.

அஞ்சலை சொன்னதை அவன் போதையிலும் யோசித்துக்கொண்டிருந்தான்.

Image courtesy: clipart.com

  

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...